தொடரும் தோழர்கள்

வெள்ளி, ஆகஸ்ட் 19, 2022

கண்ணன் என்னும் ஆனந்தம்

 

கிருஷ்ணன் என்றாலே ஆனந்தம்தான்.

அது அனுபவித்தால்தான் புரியும்.

கிருஷ்ணா விழிப்புணர்வின்,கிருஷ்ணானுபவத்தின் ஆனந்தமே அலாதி

1993 என நினைவு.

மதுராவில் வங்கி ஆய்வு தொடர்பாக ஒரு மாதம் இருக்க நேர்ந்தது.

சில நாட்களிலேயே நான் என்னுள் ஒரு மாற்றத்தை உணர்ந்தேன்.

சாதாரணமாகப் பல நேரங்களில்.தனியாக இருக்கும்போது கூட எதன்/எவர் மீதாவது கோபம்/வெறுப்பு ஆகியவை தோன்றும்.என்ன வாழ்க்கை என்ற சலிப்பு ஏற்படும்.ஆனால் அத்தகைய எதிர்மறை எண்ணங்கள் குறைந்து மனம் ஒரு வித ஆனந்ததில் லயித்தது.இங்கு மகிழ்ச்சி என்று நான் சொல்லவில்லை.அது ஏனோ ஆனந்தம் என்பதே பொருத்தமாக இருக்கிறது.யாரைப் பார்த்தாலும் ஒரு நட்புணர்வு,நல்லெண்ணமே மேலிட்டது.

இதன் விளைவுதான் கிருஷ்ணன் பழகிய பல ஊர்களைப் பார்க்கும் ஆவல் மேலோங்கியது.ஒரு ஞாயிறன்று அதி காலை புறப்பட்டேன்.

 

கோகுல்,கோவர்த்தன், நந்தகாவ், பல்தேவ்,பர்சானா(ராதாவின் பிறப்பிடம்) என்று கண்ணனுடன் தொடர்புடைய பல ஊர்களுக்குச்  சென்று முழுமையான கிருஷ்ணானுபவத்தில் அமிழ்ந்தேன்.

 காலை உணவு எதுவும் சாப்பிடாமல் இருந்தாலும்,கண்ணனே என்னை ஆட்கொண்டிருந்ததால் பசியை உணரவில்லை

 

பிற்பகல் 3 மணிக்கு மதுரா திரும்பினேன்.அப்போதுதான் கண்ணன் என்னைப் பசியை உணர வைத்தான்.கோவில் அருகிலேயே ஒரு உணவகம். தரைமீது அமர்ந்து ஒரு பலகை மீது தட்டு வைத்து சுவையான சாப்பாடு.வயிறு புடைக்க உண்டேன்.

கிருஷ்ணானுபவத்தின் மற்றொரு நிகழ்வு எனது “பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்” (http://chennaipithan.blogspot.com/2013/03/blog-post_19.html )என்ற பதிவில்.

 

முடிக்கும்முன்…..

அலமாரியைத் திறந்து சட்டை எடுக்கும்போது,மூலையில் சுருட்டி வைக்கப்பட்டிருந்த சட்டையைப் பார்த்தேன்.எவ்வளவு பிரியமுடன் வாங்கிய சட்டை?எத்தனை முறை விருப்பமாக அணிந்த சட்டை?இப்போது மூலையில்….

 

இதைத்தான் கண்ணன் சொல்கிறான்….

”வாஸாம்ஸீ ஜீர்ணானி யதா விஹாய

          நவாநி கிருஹ்ணாதி நரோபராணி

ததா சரீராணி விஹாய ஜீர்ணானி

           அந்யாநி ஸம்யாதி நவானி தேஹீ”

 

எப்படி மனிதன் நைந்துபோன பழைய உடைகளை நீத்து விட்டு,புதிய உடைகளை அணிகிறானோ,அவ்வாறே ஆத்மா நைந்துபோன பழைய உடல்களை நீத்து விட்டுப் புதிய உடைகளை அணிகிறது

ஆத்மா அழிவற்றது.

கண்ணனை வணங்குகிறேன்.

12 கருத்துகள்:

  1. இந்தவித ஆன்மீக அனுபவங்கள் எல்லோருக்கும் கிடைப்பதில்லை.

    பதிலளிநீக்கு
  2. கிடைத்தாலும் பலர் அதை உணர்வதில்லை
    நன்றி ஸ்ரீராம்

    பதிலளிநீக்கு
  3. அருமை ஐயா தங்களது ஆன்மீக அனுபவங்கள் எங்களுக்கும் பாடமாகட்டும்.

    பதிலளிநீக்கு
  4. பதிவு வெளியானதிலிருந்து (சுமார் ஏழு மணி நேரம்) முயன்று இப்போதுதான் கருத்துரை சென்றது ஐயா.

    பதிலளிநீக்கு
  5. எனது கருத்துரையை காணோம் ? இது நான் இரண்டாவதாக போட்டது...

    பதிலளிநீக்கு
  6. செபி சார் இது அழகான ஆன்மீக அனுபவம்....கிடைப்பது அரிது. கிடைத்தாலும் அதை உணர்வது என்பது தனி....

    மதுரா சென்றதுண்டு. ஆனால் உங்கள் அனுபவம் நல்ல அனுபவம் சார். மதுராவில் பால் அருமையா இருக்கும் அதுவும்குட்டி மண் பானையில்...சுவையாக இருக்கும்,

    கீதா

    பதிலளிநீக்கு
  7. ஐயா! நானும் 197௪ ஆம் ஆண்டு கோசிகலான் என்ற ஊரில் இருந்த கிளையில் வேளாண் கடன்கள் பற்றி ஆய்வு செய்ய சென்றிருந்தபோது மதுரா, கோவர்த்தன், நந்தகாவ்,போன்ற இடங்களுக்கு சென்று தாங்கள் அடைந்த அனுபவத்தை நானும் அடைந்தேன். மதுராவில் கிருஷ்ணா ஜன்ம பூமியில் ஒரு வாரம் தங்கியிருந்தேன். அப்போது வங்கியிலிருந்து சென்றதால் ஒருவாரம் தங்க அனுமதிதார்கள். அறை வாடகை ஒரு நாளைக்கு வெறும் 5 ரூபாய் தான். அங்கு தங்கியிருந்து பெற்ற அனுப்பவத்தை சொற்களில் வடிக்க இயலாது. கண்ணனைப்பற்றி எழுதி என்னை கால் இயந்திரத்தில் ஏறி பழைய நாட்களுக்கு சென்று வார உதவியமைக்கு தங்களுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பழைய நிகழ்வுகளை எண்ணிப் பார்ப்பது ஒரு சுகம்தான்.நீங்களும் அவ்விடங்களைத் தரிசித்து வந்தீர்கள் என்று அறிய மகிழ்ச்சி.

      நீக்கு