தொடரும் தோழர்கள்

திங்கள், நவம்பர் 21, 2011

தலயா,தளபதியா?அதுதான் கேள்வி!

தொலைபேசி மணி ஒலித்தது.

எடுத்தேன்.

“ஹலோ!சென்னை பித்தன் பேசுகிறேன்”

மறுமுனையிலிருந்து குரல்”ஹலோ!நான் ஏபிசி ஃபில்ம்ஸிலிருந்து மாக்கான்   பேசுகிறேன்.நான் தயாரிப்பாளர்.நம்ம டைரக்டர் உங்க “அங்கதன் காத்திருக்கிறான்” படிச்சுட்டு ,அதை டெவலப் பண்ணி ஒரு    நல்ல திரைப் படமாக்கலாம்னு  நினைக்கிறார்.பழி வாங்கும் மெயின் லைனுடன்,காதல்,சென்டிமெண்ட்,சண்டை எல்லாம் சேர்த்து ஒரு ஸ்க்ரீன்ப்ளே அவுட்லைன் ரெடி பண்ணி நாளை மாலை 4 மணிக்கு எங்க ஆஃபீசுக்கு வாங்க.முடிச்சுடலாம்.”


“சரி” சொல்லி விட்டுத் தொலை பேசியை வைத்தேன்.தலைகால் புரியவில்லை.மக்கு இப்படி ஒரு ஆஃபரா? இப்பவே தொடங்கிடலாம்.


தனியாக உட்கார்ந்து யோசிக்க ஆரம்பித்தேன்.5 மணி நேர வேதனைக்குப் பின், பிறந்தது ஒரு அவுட்லைன்!


மறுநாள் போனேன்.மாக்கான்,இயக்குனர் பள்ளம் மண்டு ,இரண்டு உதவியாளர்கள் இருந்தனர்.


நேரத்தை வீணாக்காமல் தொடங்கினேன்.


//ஒரு கிராமம்.அங்கு கோவில் திரு விழா.பெண்கள் பொங்கல் வைக்கிறார்கள்.     குலவையிடுகிறார்கள்.ஆட்டம் ஆரம்பம்.ஒரு       வாலிபன்  பாடுகிறான்  அய்யனார் சாமி வந்து எங்களைக் காப்பாத்து நீ” என்று,தொகையறாவாக”.


இப்போ ஹீரோ எண்ட்ரி.”நான் ஜெயிக்கப் பிறந்தவண்டா ”என்று பாடியபடி.


பாட்டு முடியும்போது சில ரவுடிகள் வந்து கலாட்டா செய்ய,ஹீரோ  எல்லாரையும் உதைத்து அனுப்புகிறார்.

கோவிலில் கிராமத் தலைவனான சித்தப்பாவுக்கு முதல் மரியாதை நடக்க,ஹீரோ மனம் புழுங்குகிறார்.


வீட்டுக்குத் திரும்பிய பின் அம்மாவிடம் பொருமுகிறான்.நான் நடந்ததை   யெல்லாம் மறக்கவில்லை. என்று சொல்ல ஃப்ளாஷ் பேக்கில் அவன் சிறுவனாயிருந்தபோது,ஒரு நகர அரசியல்வாதி துணையுடன்  சித்தப்பா அவன் தந்தையைக்கொன்று தலைவைனான காட்சி மனதில் விரிகிறது.


இது முடிந்ததும்,ஹீரோவுக்கு சென்னை அப்போலோ மருத்துவ மனையிலிருந்து  பணி நியமன உத்தரவு வருகிறது.


ஆம் .ஹீரோ ஒரு டாக்டர்.லண்டனில் போய்ப் படித்தவர்.


அவர் அம்மா முறுக்கு சுட்டு விற்று பணம் சம்பாதித்து அவரைப் படிக்க வைத்தார்.ஹீரோவும் இந்தியாவிலேயும்,பின் லண்டனிலும் பகுதி நேர ஊழியம் செய்து சம்பாதித்தார்---(இதுவும் ஃப்ளாஷ் பேக்.)


லண்டனில் ஒரு சக தமிழ் மாணவியுடன் காதல் ஏற்படுகிறது.

(லண்டன் பாரிஸ்,ஸ்விட்சர்லாந்து இங்கெல்லாம் டூயட் பாட்டு).எல்லாம் ஃப்ளாஷ்பேக்.


சென்னை செல்லும்முன் சித்தப்பாவுக்கு உடல் நிலை சரியில்லாததால், ஹீரோ போய்ப் பார்த்து ஒரு ஊசியும் போடுகிறான்.


பின் சென்னைப் பயணம்.அங்கு காதலி கொடுத்த விலாசத்தில் போய்ப் பார்த்தால் அவள் அப்பாதான் ஹீரோவின் தந்தையைக் கொன்றவர். காதலா?கடமையா?

(இங்கே ஒரு பாட்டு வச்சிக்கலாம்)


ஹீரோ ஒரு முடிவுடன் காதலைத் தொடர்கிறான்.


ஒரு முறை பீச்சில் காதலியுடன் இருக்கும்போது,ரவுடிகளுடன் ஒரு சண்டை!

ஒரு சமயம் காதலி அவள் அப்பா இருவருக்கும் டெங்கு வந்து விட,ஹீரோ வந்து ஊசி போடுகிறான்.


இதற்கிடையில் சித்தப்பா மாரடைப்பால் மரணம் என்று செய்தி வர ஹீரோ ஊருக்குப் போகிறார்.அங்கு அவர் தலைவராகிறார். இனிக் கிராமத்திலேயே பணி புரிவேன் எனச் சொல்லிச் சென்னை திரும்புகிறார்,வேலையை ராஜினாமா செய்ய.


சென்னைக்கு வந்து பணியிலிருந்து விலகக் கடிதம் கொடுத்துச் சில நாட்கள் இருக்கும்போது காதலியின் தந்தை மாரடைப்பால் இறந்து விடுகிறார். காதலியைத் தேற்றி  ஊருக்குச் சென்று அன்னையிடம் பேசி விட்டு வருவதாகச் சொல்லிப் போய்,அன்னையைக் கண்டு.தான் கண்டுபிடித்த மருந்தால் இருவரையும் கொன்ற விஷயத்தைச் சொல்கிறார்அந்த மருந்து மெல்ல வேலை செய்து ஒரு மாதம் கழித்து மாரடைப்பை ஏற்படுத்தும், எதுவும் கண்டு பிடிக்க முடியாது என்றும் கூறுகிறார்.


அவரைத்தேடி வந்த காதலி அதைக் கேட்டு விட்டு,அவரைக் கொலை காரன்  என்று சொல்லி அழ.ஹீரோவின் தாய் அவளிடம் பழைய நிகழ்ச்சிகளை எடுத்துச் சொல்லிச் சமாதானப்படுத்தி இருவர் கைகளையும் இணைத்து வைக்கிறார்!

டாக்டர் தொழிலை பயன்படுத்தி இரு கொலைகள் செய்த தான் இனி அத் தொழிலைச் செய்யப்போவதில்லை என்றும்,விவசாயத்தில் ஈடுபடப் போவதாகவும்  ஹீரோ சொல்கிறார்.

முடிவில் அவர் தந்தை பெயரில் ஒரு மருத்துவ மனை  நிறுவி அதை ஹீரோயின் கவனித்துக் கொண்டிருக்க,ஹீரோ டிராக்டர் ஒட்டி வயலை உழுதிடும் காட்சியோடு படம் முடிகிறது.

சுபம்----//

எல்லோரும் பாராட்டுகிறார்கள்.

“படத்துக்கு டைட்டில் “அங்கதன் F.R.C.S” என்று வைக்கலாம்” நான்.

அதுவும் பிடித்துப் போகிறது.

”பதிவர்கள் கவிதை வீதிசௌந்தரையும்,அம்பாளடியாளையும் பாட்டெழுதச் சொல்லலாம்”நான்.

எந்த ரோல் யார் யார் என்பதும் முடிவாகிறது.
ஹீரோயின் த்ரிஷா!(செங்கோவி மன்னிக்க)ஹீரோ?

இயக்குனர் பள்ளம் சொல்கிறார்” யோசிக்கலாம், அஜீத் அல்லது விஜய்--யார்?”

”அதுதான் கேள்வி!!”

63 கருத்துகள்:

 1. கதை சூப்பர் டுப்பர் எப்படியும் 250நாள் ஓடும்

  பதிலளிநீக்கு
 2. Data Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது !

  http://bestaffiliatejobs.blogspot.com/2011/07/earn-money-online-by-data-entry-jobs.html


  Data Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது !

  http://bestaffiliatejobs.blogspot.com/2011/07/earn-money-online-by-data-entry-jobs.html

  பதிலளிநீக்கு
 3. நீங்க தளபதி படத்தோட கதையை வைச்சுகிட்டு தலையா தளபதியான்னு குழப்பிகிட்டு/குழம்பிகிட்டு இருக்கீங்க, தளபதி தான் இதுக்கெல்லாம் சரிப்பட்டு வருவாரு... இளைய தளப்தி வாழ்க..

  பதிலளிநீக்கு
 4. //ஹீரோயின் த்ரிஷா!(செங்கோவி மன்னிக்க)ஹீரோ?//

  அந்த ஊசியை ஹீரோயினுக்குப் போடற மாதிரி கதையை மாத்துங்க ஐயா..

  பதிலளிநீக்கு
 5. நல்ல கதை தான் அருமையாச் சொல்லியிருக்கீங்க..அப்புறம் இது அந்த ஸ்பேனிஷ் படத்தோட காப்பி தானே?

  பதிலளிநீக்கு
 6. இதில என்ன சந்தேகம்..? இந்த மாதிரி ‘அருமை’யான கதைகளில் நடிக்க இளைய(?) தளபதி தான் பொருத்தமானவர். படம் வெளிவரும் போது நான்தான் கதை என்று மட்டும் யாரிடமும் சொல்லிவிடாதீர்கள்...

  பதிலளிநீக்கு
 7. ஸெம விருவிரு நைனா கதெ!

  //அவள் அப்பாதான் ஹீரோவின் தந்தையைக் கொன்றவர். காதலா?கடமையா?
  (இங்கே ஒரு பாட்டு வச்சிக்கலாம்)//

  சூப்பர் ட்விஸ்டுபா இது!

  நம்ம பவர் ஸ்டாருக்கு இது வொரு பெர்ஸா பிரேக் கொடுக்கும்பா. அவரும் பாவம் நல்ல படம் கெடக்காம ரொம்ப லோல்பட்ரார்பா. என் வோட்டு பவர்ஸ்டார்க்குதான்.

  பவர்ஸ்டாருக்கு பிரேக் கொடுத்த நீ நல்லாகீனோம்பா

  பதிலளிநீக்கு
 8. பித்தரே!
  சூப்பர் கதை
  தாங்கள் சொல்லிய விதமே
  எனக்குப் படம் பார்த்த நிறைவைத் தந்தது!

  சின்ன வேண்டுகோள்!
  பாட்டெழுத எனக்கு வாய்பு
  வாங்கித் தாருங்கள்

  புலவர் சா இராமாநுசம்

  பதிலளிநீக்கு
 9. ஜயா மெசா மொக்கை பதிவு இப்ப ஒரு நகைச்சுவை பதிவை உங்களிடம் முதல் தடவையாக படிக்கின்றேன்....சூப்பர்

  பதிலளிநீக்கு
 10. ஜயா இது டாகுதர்(விஜய்)படத்திற்கான கதைதான் ஆனால் அந்த ஹீரோ அறிமுகப்பாடலை நான் தான் எழுதுவேன்

  இப்படி வைச்சுக்குவோம்

  உங்கள் வரியை தொடர்கின்றேன்

  நான் ஜெயிக்க பிறந்தவண்டா டா...டா

  எதிரியை மிதிக்க வந்தவன் டா.டா

  நீயும் இல்லை நானும் இல்லை
  நாமதான் டா டா

  வாடா நண்பவே நாமதான் மன்னனே...

  நான் தான் பார் போற்றும் கண்ணே...டா.டா.

  இப்ப சொல்லுங்க இந்த பாட்டு டாகுதருக்குத்தான்(விஜய்) பொருந்தும்

  பதிலளிநீக்கு
 11. இராமாயண கதைக்கு நல்ல ‘Treatment’ கொடுத்து, திரைப்பட விதிகளை மீறாமல் கதை சொல்லியிருக்கிறீர்கள். ஒருவேளை பதிவிடுவது அலுப்பு தந்தால், தாங்கள் திரைப்படத்திற்கு கதை எழுதலாம். வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 12. தளபதியை வைச்சு எடுத்தால் வெற்றி பெருமா என்பது டவுட்டு......அவரின் வழமையான படமாக அமையும் எனவே அவரது கேரக்டரை கொஞ்சம் மாற்றி இன்னும் மெருகூட்டி எடுக்கவேண்டும்

  பதிலளிநீக்கு
 13. சின்ன வேண்டுகோள்!
  பாட்டெழுத எனக்கு வாய்பு
  வாங்கித் தாருங்கள்
  ////

  இவரும் பாட்டெழுத நல்ல தேர்வாக இருக்கும்..

  பதிலளிநீக்கு
 14. நிறைய தமிழ் படத்தை பார்த்த அனுபவம் இந்த கதையில தெரியுது.

  பதிலளிநீக்கு
 15. மனசாட்சி கூறியது...

  //சரியான உள்குத்து//
  :) அப்படியா?

  பதிலளிநீக்கு
 16. மனசாட்சி கூறியது...

  //கதை சூப்பர் டுப்பர் எப்படியும் 250நாள் ஓடும்//
  ஹா,ஹா.
  நன்றி.

  பதிலளிநீக்கு
 17. Heart Rider கூறியது...

  //நீங்க தளபதி படத்தோட கதையை வைச்சுகிட்டு தலையா தளபதியான்னு குழப்பிகிட்டு/குழம்பிகிட்டு இருக்கீங்க, தளபதி தான் இதுக்கெல்லாம் சரிப்பட்டு வருவாரு... இளைய தளப்தி வாழ்க..//
  இயக்குனர் கிட்ட சொல்றேன்.
  நன்றி.

  பதிலளிநீக்கு
 18. செங்கோவி கூறியது...

  //ஹீரோயின் த்ரிஷா!(செங்கோவி மன்னிக்க)ஹீரோ?//

  //அந்த ஊசியை ஹீரோயினுக்குப் போடற மாதிரி கதையை மாத்துங்க ஐயா..//
  அவ்வளவுதான்;படம் ஊத்திக்கும்! (இப்ப மட்டும் என்னவாம்!)

  பதிலளிநீக்கு
 19. செங்கோவி கூறியது...

  //நல்ல கதை தான் அருமையாச் சொல்லியிருக்கீங்க..அப்புறம் இது அந்த ஸ்பேனிஷ் படத்தோட காப்பி தானே?//
  இல்லை செங்கோவி. ஃபெல்லினி,பெர்க்மேன் இரண்டு பேர் படத்தையும் கலந்து உல்டா பண்னின கதை! ஹா,ஹா!
  நன்றி.

  பதிலளிநீக்கு
 20. கணேஷ் கூறியது...

  //இதில என்ன சந்தேகம்..? இந்த மாதிரி ‘அருமை’யான கதைகளில் நடிக்க இளைய(?) தளபதி தான் பொருத்தமானவர். படம் வெளிவரும் போது நான்தான் கதை என்று மட்டும் யாரிடமும் சொல்லிவிடாதீர்கள்...//
  டைட்டிலில் கூடப் போட வேண்டாம் என்று சொல்லி விடுகிறேன். ஹா.ஹா.
  நன்றி.

  பதிலளிநீக்கு
 21. நண்டு @நொரண்டு -ஈரோடு கூறியது...

  //ம் ...//
  ஓ!
  நன்றி.

  பதிலளிநீக்கு
 22. சைதை அஜீஸ் கூறியது...

  //ஸெம விருவிரு நைனா கதெ!

  //அவள் அப்பாதான் ஹீரோவின் தந்தையைக் கொன்றவர். காதலா?கடமையா?
  (இங்கே ஒரு பாட்டு வச்சிக்கலாம்)//

  சூப்பர் ட்விஸ்டுபா இது!

  நம்ம பவர் ஸ்டாருக்கு இது வொரு பெர்ஸா பிரேக் கொடுக்கும்பா. அவரும் பாவம் நல்ல படம் கெடக்காம ரொம்ப லோல்பட்ரார்பா. என் வோட்டு பவர்ஸ்டார்க்குதான்.

  பவர்ஸ்டாருக்கு பிரேக் கொடுத்த நீ நல்லாகீனோம்பா//

  டைரக்டர் கிட்ட சிபாரிசு செய்யறேன்!இன்னா?
  டாங்க்ஸ்!

  பதிலளிநீக்கு
 23. புலவர் சா இராமாநுசம் கூறியது...

  // பித்தரே!
  சூப்பர் கதை
  தாங்கள் சொல்லிய விதமே
  எனக்குப் படம் பார்த்த நிறைவைத் தந்தது!

  சின்ன வேண்டுகோள்!
  பாட்டெழுத எனக்கு வாய்பு
  வாங்கித் தாருங்கள்//

  //அவள் அப்பாதான் ஹீரோவின் தந்தையைக் கொன்றவர். காதலா?கடமையா?

  (இங்கே ஒரு பாட்டு வச்சிக்கலாம்)//
  இங்கே ஒரு தத்துவப்பாட்டு, நீங்கதான் எழுதணும்!ஹா,ஹா.

  நன்றி.

  பதிலளிநீக்கு
 24. K.s.s.Rajh கூறியது...

  // ஜயா மெசா மொக்கை பதிவு இப்ப ஒரு நகைச்சுவை பதிவை உங்களிடம் முதல் தடவையாக படிக்கின்றேன்....சூப்பர்//
  நன்றி.

  பதிலளிநீக்கு
 25. K.s.s.Rajh கூறியது..
  //ஜயா இது டாகுதர்(விஜய்)படத்திற்கான கதைதான் ஆனால் அந்த ஹீரோ அறிமுகப்பாடலை நான் தான் எழுதுவேன்

  இப்படி வைச்சுக்குவோம்

  உங்கள் வரியை தொடர்கின்றேன்

  நான் ஜெயிக்க பிறந்தவண்டா டா...டா

  எதிரியை மிதிக்க வந்தவன் டா.டா

  நீயும் இல்லை நானும் இல்லை
  நாமதான் டா டா

  வாடா நண்பவே நாமதான் மன்னனே...

  நான் தான் பார் போற்றும் கண்ணே...டா.டா.

  இப்ப சொல்லுங்க இந்த பாட்டு டாகுதருக்குத்தான்(விஜய்) பொருந்தும்//
  சூப்பர் பாட்டு!

  பதிலளிநீக்கு
 26. வே.நடனசபாபதி கூறியது...

  // இராமாயண கதைக்கு நல்ல ‘Treatment’ கொடுத்து, திரைப்பட விதிகளை மீறாமல் கதை சொல்லியிருக்கிறீர்கள். ஒருவேளை பதிவிடுவது அலுப்பு தந்தால், தாங்கள் திரைப்படத்திற்கு கதை எழுதலாம். வாழ்த்துக்கள்.//
  :) நன்றி.

  பதிலளிநீக்கு
 27. K.s.s.Rajh கூறியது...

  // தளபதியை வைச்சு எடுத்தால் வெற்றி பெருமா என்பது டவுட்டு......அவரின் வழமையான படமாக அமையும் எனவே அவரது கேரக்டரை கொஞ்சம் மாற்றி இன்னும் மெருகூட்டி எடுக்கவேண்டும்//
  மசாலா கைவசம் நிறைய இருக்கு!சேர்த்துடலாம்.

  பதிலளிநீக்கு
 28. சி.பி.செந்தில்குமார் கூறியது...

  // த ம - 7

  ட்ராஃபிக் ராங்க் 3

  வாழ்த்துகள்//
  நன்றி சிபி.

  பதிலளிநீக்கு
 29. !* வேடந்தாங்கல் - கருன் *! கூறியது...

  சின்ன வேண்டுகோள்!
  பாட்டெழுத எனக்கு வாய்பு
  வாங்கித் தாருங்கள்
  ////

  // இவரும் பாட்டெழுத நல்ல தேர்வாக இருக்கும்..//
  ஒரு தத்துவப்பாடல் அவருக்கே!

  நன்றி.

  பதிலளிநீக்கு
 30. !* வேடந்தாங்கல் - கருன் *! கூறியது...

  // நிறைய தமிழ் படத்தை பார்த்த அனுபவம் இந்த கதையில தெரியுது.//
  இப்பல்லாம் எந்தப் படமும் பார்க்கிறதில்லை.பதிவர்களின் விமரிசனம் படிப்பதோடு சரி,:)

  பதிலளிநீக்கு
 31. பன்னிகுட்டிதான் சின்ன டாகுட்டரை வாரு வாருன்னு வாருராருன்னு பார்த்தா, தல நீங்களும் கிளம்பியாச்சா அவ்வ்வ்வ்வ்.....

  பதிலளிநீக்கு
 32. வில்லனை விஷம் வைத்து கொல்லுறது வித்தியாசமா இருக்கு, ஆனால் கிளைமேக்ஸ்'ல் சண்டை போட ஆளில்லையே...?

  பதிலளிநீக்கு
 33. கதை சும்மா பட்டைய கிளப்புது ஐயா...
  தளபதிதான் கதாநாயகனுக்கு நல்லா இருக்கும்....

  பதிலளிநீக்கு
 34. Ean pirachanai 1 off ajithukum(forign)
  2 off vijaykum(vilage) potrunga athil villan rolla kavunda mani'um shanthanamum than nadikanum :) :)

  பதிலளிநீக்கு
 35. Ean pirachanai 1 off ajithukum(forign)
  2 off vijaykum(vilage) potrunga athil villan rolla kavunda mani'um shanthanamum than nadikanum :) :)

  பதிலளிநீக்கு
 36. திருட்டு vcd உரிமை எனக்குதான்

  பதிலளிநீக்கு
 37. கதை சூப்பர்... பிச்சுட்டு ஓடும்...-:)

  பதிலளிநீக்கு
 38. படம் பல நூறு நாட்கள் ஓடட்டும்.

  பதிலளிநீக்கு
 39. ராஜி கூறியது...

  //Thalapathythan crt choice//
  ஓகே.நன்றி.

  பதிலளிநீக்கு
 40. MANO நாஞ்சில் மனோ கூறியது...

  /பன்னிகுட்டிதான் சின்ன டாகுட்டரை வாரு வாருன்னு வாருராருன்னு பார்த்தா, தல நீங்களும் கிளம்பியாச்சா அவ்வ்வ்வ்வ்...//
  நான் கதைதான் சொல்லியி ருக்கிறேன்.யாரையும் வாரவில்லை!

  பதிலளிநீக்கு
 41. MANO நாஞ்சில் மனோ கூறியது...

  // வில்லனை விஷம் வைத்து கொல்லுறது வித்தியாசமா இருக்கு, ஆனால் கிளைமேக்ஸ்'ல் சண்டை போட ஆளில்லையே...?//
  கொஞ்சம் வித்தியாசமாத்தான் இருக்கட்டுமே!
  நன்றி.

  பதிலளிநீக்கு
 42. மகேந்திரன் கூறியது...

  //கதை சும்மா பட்டைய கிளப்புது ஐயா...
  தளபதிதான் கதாநாயகனுக்கு நல்லா இருக்கும்....//
  நன்றி.

  பதிலளிநீக்கு
 43. கதையில் தான் எத்தனை twists .தமிழ் பட இலக்கணத்திற்கு சரியான மரியாதை ... கடைசி காட்சியில் ஹீரோ டிராக்டர் ஒட்டி வயலை உழும் காட்சியில் ஒரு சிறு திருத்தம் .. கையில் தனக்கு பிறந்த குழந்தையின் புன்னகையை ரசித்தவண்ணம் " தவம் புரிந்து மருத்தவம் கற்றேன் உயிரை காக்க , இப்போ வயலை உழுது உயிர் காக்கிறேன் , காக்கிறேன்,காக்கிறேன் ..." என்று பாடுவது போல் இருந்தால் எப்படி இருக்கும் ..வாசு

  பதிலளிநீக்கு
 44. s.jaffer.khan கூறியது...

  // Ean pirachanai 1 off ajithukum(forign)
  2 off vijaykum(vilage) potrunga athil villan rolla kavunda mani'um shanthanamum than nadikanum :) :)//
  ஹா,ஹா!நன்றி.

  பதிலளிநீக்கு
 45. விக்கியுலகம் கூறியது...

  //வாழ்த்துகள்//
  நன்றி.

  பதிலளிநீக்கு
 46. M.R கூறியது...

  // நல்ல கதைதான் ஐயா//
  நன்றி.

  பதிலளிநீக்கு
 47. "என் ராஜபாட்டை"- ராஜா கூறியது...

  //திருட்டு vcd உரிமை எனக்குதான்//
  இதுக்கு உரிமை வேறா?

  பதிலளிநீக்கு
 48. ரெவெரி கூறியது...

  // கதை சூப்பர்... பிச்சுட்டு ஓடும்...-:)//
  நன்றி!

  பதிலளிநீக்கு
 49. FOOD கூறியது...

  //படம் பல நூறு நாட்கள் ஓடட்டும்.//
  நன்றி.

  பதிலளிநீக்கு
 50. Vasu கூறியது...

  // கதையில் தான் எத்தனை twists .தமிழ் பட இலக்கணத்திற்கு சரியான மரியாதை ... கடைசி காட்சியில் ஹீரோ டிராக்டர் ஒட்டி வயலை உழும் காட்சியில் ஒரு சிறு திருத்தம் .. கையில் தனக்கு பிறந்த குழந்தையின் புன்னகையை ரசித்தவண்ணம் " தவம் புரிந்து மருத்தவம் கற்றேன் உயிரை காக்க , இப்போ வயலை உழுது உயிர் காக்கிறேன் , காக்கிறேன்,காக்கிறேன் ..." என்று பாடுவது போல் இருந்தால் எப்படி இருக்கும் ..வாசு//
  சூப்பர்!திரைக்கதயில் மாற்றிவிடலாம்!
  நன்றி.

  பதிலளிநீக்கு
 51. ஹே..ஹே...படம் சூப்பர் ஹிட்டாயிடும்.

  பதிலளிநீக்கு
 52. .மாக்கான்,இயக்குனர் பள்ளம் மண்டு ,இரண்டு உதவியாளர்கள் இருந்தனர்./

  அருமையான் டீம் சென்னைப்பித்தன் சார்!

  பதிலளிநீக்கு
 53. இராஜராஜேஸ்வரி சொன்னது…

  .மாக்கான்,இயக்குனர் பள்ளம் மண்டு ,இரண்டு உதவியாளர்கள் இருந்தனர்./

  //அருமையான் டீம் சென்னைப்பித்தன் சார்!//
  நன்றி இராஜராஜேஸ்வரி.

  பதிலளிநீக்கு
 54. shanmugavel கூறியது...

  //ஹே..ஹே...படம் சூப்பர் ஹிட்டாயிடும்.//
  நன்றி சண்முகவேல்.

  பதிலளிநீக்கு