தொடரும் தோழர்கள்

திங்கள், நவம்பர் 14, 2011

நெஞ்சை உருக்கும் வழக்கு!

நீதிபதி ,அந்த வழக்கில்,ஜாமின் பற்றிய தன் முடிவைச் சொன்னார்.

”இந்த வழக்கு சட்டத்துக்கும் ,தர்மத்துக்கும் இடையே ஏற்பட்ட ஒரு மோதல்.நீதிமன்றம் என்பது சட்டத்தின் வழி நின்று நீதி வழங்க வேண்டும்.ஆனால் அதே நேரத்தில், நீதிமன்றம் அசைவுகளற்ற ஒரு இயந்திரமும் அல்ல.அதற்கும் உள்ளம் உண்டு.மக்களின் நாடித்துடிப்பை அறியும் திறனுண்டு.இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவரே காவல் துறையிடம் வழக்கு பற்றிய எல்லா விவரங்களையும் சொல்லியிருக்கிறார். எனவே சாட்சிகளை அவர் கலைப்பார் எனச் சொல்ல இடம் இல்லை. எனவே ஜாமீன் வழங்கப்படுகிறது”.

இது என்ன வழக்கு?என்ன நடந்தது,நீதித்துறையின் உள்ளத்தைத் தொட?

38 வயதான கணவன்.29 வயது மனைவி.10 வயது மகன்.3 வயது மகள்.பிரச்சினை மகள்தான்.அவளால் நடக்க இயலாது,பேச இயலாது, கேட்க இயலாது.இப்படிப்பட்ட ஒரு பெண் வளர்ந்து பெரியவளாகி  எப்படி வாழ முடியும்?அவர் மனைவியை கலந்தாலோசித்தார்.

ஒருநாள் ஒரு விடுதியல் அறை எடுத்தார்.குடும்பத்துடன் அங்கு சென்றார்.

 குழந்தைகள் இருவருக்கும் தூக்க மாத்திரைகள் கொடுத்தார்,மனைவியும் அவரும் விஷமருந்தினர்.அனைவரும் படுத்தனர்-------

காலை மணி 5.30.பையன் விழித்துக்கொண்டான்.அவனுக்கு மூச்சை யடைத்தது. அப்பா,அம்மா,தங்கை அனைவரையும் எழுப்பிப் பார்த்தான். யாரும் எழுந்திருக்க வில்லை.  பயமாக இருந்தது.தன் மாமாவுக்கு ஃபோன்  செய்து தகவல் சொன்னான். அவர் வந்தார் பார்த்து அதிர்ந்தார்.

அனைவரையும் மருத்துவ மனைக்கு எடுத்துச்  சென்றார். சிறுமி வழியிலேயே இறந்து போனாள்.

அந்தத் தந்தை பின் போலீசில் சரணடைந்து நடந்தது அனைத்தையும் சொன்னார்.

வழக்குப் பதிவு செய்யப் பட்டது.

அதுதான் வழக்கு.

(எந்தப் பிரிவுகளில் வழக்கு எனத் தெரியவில்லை-)

செய்தி:டைம்ஸ் ஆஃப் இந்தியா  13-11-2011.27 கருத்துகள்:

 1. அண்ணே எனக்கு சரியா புரியல ஹிஹி!

  பதிலளிநீக்கு
 2. அண்ணே எனக்கு சரியா புரியல ஹிஹி!

  பதிலளிநீக்கு
 3. அவர்கள் செய்தது
  சரியல்ல!

  புலவர் சா இராமாநுசம்

  பதிலளிநீக்கு
 4. விஷமருந்திய தாயும் தந்தையும் பிழைத்துக்கொண்டார்களென்று நினைக்கிறேன். இனி, அவர்களுக்கு வாழ்க்கையே நரகம்தான்.

  பதிலளிநீக்கு
 5. அன்னாத்தே, கொஞ்சம் மேட்டர் நம்ம அறிவுக்கு எட்டாது. இந்த மேட்டரும் அப்படித்தான்பா. ஆனா பாரு அந்தாளு, டபக்குன்னு பாய்சன் சாப்டான். இப்ப பாரு... வாய்நால் பூரா கஸ்டகாலமா பூயிடுச்சி. இவனுக்கு அஞ்சலி படத்த தபா தபா பார்க்க சொல்லணும்பா! ஆனா பாருபா, அவங்க மன கஸ்டம் நமக்கு பிரியாதுபா.
  அல்லாம் கடவுல் இஸ்டம்பா

  பதிலளிநீக்கு
 6. எந்த அளவுக்கு அந்த தந்தையால், அவரது மகள் படும் பாட்டை தாங்கமுடியவில்லை என்றால், குடும்பத்தோடு தற்கொலை செய்துகொள்ள முயற்சித்திருப்பார்? அந்த செயல்தான், நீதியரசரின் மனதைத்தொட்டு, அந்த குற்றம் சாட்டப்பட்டவருக்கு பிணை(Bail) வழங்க காரணமாயிருந்திருக்கிறது என நினைக்கிறேன்.
  உண்மையில் உள்ளத்தை உலுக்கிய செய்தி இது.

  பதிலளிநீக்கு
 7. அந்த தாய் தந்தை செய்தது சரியல்ல மிகவும் தவறு.
  வாழ்க்கையுடம் போராட துணிவில்லாதவர்கள்

  பதிலளிநீக்கு
 8. ம்ம்ம்....இதற்கு பொத்தம் பொதுவாக கருத்துக்கூற முடியாது! அந்தத் தந்தை இப்படியொரு முடிவுக்கு வருமுன் எவ்வளவு வேதனைகளை அனுபவித்திருப்பார்...தாய் தந்தையருக்குப் பின் அந்தப் பெண்ணின் நிலை? :-(

  பதிலளிநீக்கு
 9. உண்மையில் அந்தத் தந்தைக்கு அதியுச்சபட்ச தண்டனை என்பது அவரை விடுதலை செய்வதே!

  பதிலளிநீக்கு
 10. இனி அவர் வாழ்க்கையே அவருக்கு தண்டனைதான். என்ன இருந்தாலும் அடுத்தவர் உயிரை பறிக்கும் உரிமை நமக்கு கிடையாதல்லவா?

  பதிலளிநீக்கு
 11. என்னதான் இருந்தாலும் ஒரு உயிருள்ள குழந்தையை கொள்ள எப்படி மனசு வந்தது ச்சே என்னடா உலகமிது...???

  பதிலளிநீக்கு
 12. இனி இந்த தம்பதியினருக்கு நிம்மதி இருக்குமா...???

  பதிலளிநீக்கு
 13. புரியலையா? என்ன ஆச்சு!!
  நன்றி விக்கி

  பதிலளிநீக்கு
 14. வெங்கட் நாகராஜ் கூறியது...

  // தவறானதோர் முடிவு... :(//
  நன்றி வெங்கட்.

  பதிலளிநீக்கு