தொடரும் தோழர்கள்

திங்கள், நவம்பர் 14, 2011

மழலை உலகம் மகத்தானது!


இன்று குழந்தைகள் தினம்.

சில நாட்களாகப் பதிவுலகில்  ஓய்ந்திருந்த ஒரு விளையாட்டை இன்று நண்பர் கணேஷ் மீண்டும் துவக்கியிருக்கிறார்.தொடர் பதிவைத்தான் சொல்கிறேன். குழந்தைகள் தினத்தை முன்னிட்டு ”மழலை உலகம் மகத்தானது” என்ற தலைப்பில்  என்னையும் எழுதப் பணித்து விட்டார்.முதல் இன்னிங்க்ஸிலேயே ஆடச் சொல்லி விட்டார்.அன்புக் கட்டளை.உடனே இறங்கி விட்டேன்.

அப்டமன் கார்ட்,ஆர்ம் கார்ட்,செஸ்ட் கார்ட்  எல்லாம் போட்டாச்சு.காலில் தடுப்புக் கட்டியாச்சு.கையுறைகளை மாட்டிக்கொண்டு ,மட்டையைச் சுழற்றிக் கொண்டு  இதோ மைதானத்தில் இறங்குகிறேன்.தலையைத் திருப்பி சூரியனைப் பார்க்கிறேன்.

முதல் பந்தில் அடித்தால் சிக்ஸரோ இல்லை நடு ஸ்டம்ப்  எகிறப் போகுதோ!


என்ன எழுதலாம் ?

புது விதமாக ஏதாவது?தமிழ் இலக்கியத்தில் பிள்ளைத்தமிழ் என்று ஒரு பிரிவு உண்டு.இறைவனையோ,இறைவியையோ குழந்தையாக உருவகித்துப் பாடும்  பாடல் அது.குழந்தைகள் தினத்தில் ஏதாவது பிள்ளைத்தமிழ் பற்றி எழுதலாமா?
(நீ என்ன பெரிய முனைவர் குணசீலனா,தமிழ் இலக்கியம்  பற்றியெல்லாம் எழுதுவதற்கு.ஏதோ கொஞ்சம் தமிழ் படித்ததற்கே அலட்டிக் கொள்கிறாயே! அதெல்லாம் அவர் எழுதுவார்--1)


இன்றைய மாணவர்கள் பற்றி அவர்கள் நடத்தை பற்றி.புத்திசாலித்தனம் பற்றி,குறும்புகள் பற்றி எழுதலாமா?(உனக்கென்ன தெரியும்?நீ ஆசிரியரா?அதையெல்லாம் வேடந்தாங்கல் கருன் பார்த்துக் கொள்வார்.--2)


மழைக்காலம் வந்து விட்டது.குளிர் காலம் வரப்போகிறது.குழந்தைகளுக்குப் பல உடல் உபாதைகள் ஏற்படும்-சளி,காய்ச்சல்.செரியாமை என்பது போல். அவர்களுக்கு மருத்துவரிடம் போகாமல் ஏதாவது வீட்டு வைத்தியம் செய்வது  எப்படி என்று குறிப்புகள் எழுதலாமா?(அதுக்கெல்லாம்  நிறையத் தெரிஞ்சி ருக்கணும்.உன்னால் முடியாது. அன்பு உலகம் M.R. பார்த்துக் கொள்வார்--3.)

பின் என்னதான் எழுத?என் இளமை நினைவுகளை நினைத்துப் பார்த்துச்  சுவை படக் கூறலாமா?எத்தனையோ இருக்கிறதே!(அதெல்லாம் எழுத ,’நினைத்துப் பார்க்கிறேன்’,வே .நடனசபாபதி இருக்கிறார். அவர் எழுதட்டும்.--4)

இப்படியே போனால் நான் எழுத எதுவுமே இருக்காதே!கணேஷுக்கு என்ன பதில் சொல்ல?

ஒரு சிறுவன் தன் அப்பா பற்றி ஒரு கவுஜ எழுதுகிறான்

“என் அப்பா ரொம்ப நல்லவர்தான்.
 ஒரே ஒரு கெட்ட குணம் அவரிடம்

பொய் அதிகம் சொல்வார் அடிக்கடி.

 ஆஃபீசில் விடுப்பெடுக்க
 அழகாய் ஒரு பொய்!

லேட்டாய் வீடு திரும்பினால்
 அம்மாவிடம் ஒரு பொய்!

 கடன் காரன் தேடி வந்தால்
 கண்டிப்பாய் ஒரு பொய்!

 பார்த்தார் என் பிராக்ரஸ் ரிபோர்ட்
 சொன்னார் கோபமாய்

“முட்டாப் பய மகனே”

 ஹை!அப்பா ஒரு நிஜம் சொன்னார்!!”

கடைசியில் இன்றைய டைம்ஸில் வந்த செய்தி-

இன்றைய சிறுவர்களின் EQ குறைந்து வருகிறது.மிக எளிதில் பொறுமை இழக்கிறார்கள்.சகிப்புத்தன்மை குறைவாக இருக்கிறது.எளிதாக மன அழுத்தத்துக்கு ஆளாகிறார்கள்.எதையும் தாங்கும் சக்தி குறைந்து விட்டது. இப்போதெல்லாம் ஏழு,எட்டு வயதுக் குழந்தைகள் கூட வன்முறை பற்றியும் மரணம் பற்றியும்  பேசுகிறார்கள்”
இவை மனோதத்துவ நிபுணர்களின் கருத்து.

மற்றொரு செய்தி.சென்னையில் வசதியான பள்ளிகளில் படிக்கும் சிறுவர்களில் 20 விழுக்காடு பேர் பருமனாக இருக்கிறார்கள்.8 விழுக்காட்டுக்கு மேல் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டி ருக்கிறார்கள். 2ஆவது வகை நீரிழுவு நோய் இவர்களுக்கு வருவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம்.

Quo vadis!

தொடர அழைக்கும் நால்வர் யாரென்பதைத் தனியாகச் சொல்லவும் வேண்டுமோ?!


68 கருத்துகள்:

 1. தொடர்பதிவு எழுத வித்யாசமாக அழைத்திருக்கிரீர்கள். நல்லா இருக்கு. இப்ப வளரும்தலைமுறையினர் பற்றி கவலைதான் எல்லாருக்குமே இருக்கு.

  பதிலளிநீக்கு
 2. இன்றைய குழந்தைகள் குழந்தைகளாக இல்லை என்பது நிஜம்.உடல்நலமும்,மனநலமும் கெட்டிருக்கிறார்கள் என்பதை செய்திகள் வழி சுட்டிக்காட்டியிருக்கிறீர்கள்,

  பதிலளிநீக்கு
 3. நல்ல ஐடியா..

  ஓகே,.. தலைவரே..

  உங்க கட்டளைக்கு(அன்பு)பணிந்து நானும் எழுதுகிறேன்..

  பதிலளிநீக்கு
 4. குழந்தைகள் பற்றிய பதிவு
  அருமை!

  புலவர் சா இராமாநுசம்

  பதிலளிநீக்கு
 5. மனோதத்துவ நிபுணர்களின் கருத்து
  மனம் பதற் வைக்கிறது..

  மகத்தான மழ்லை உல்கத்திற்கு
  மழ்லையர் தின இனிய வாழ்த்துகள்..

  பதிலளிநீக்கு
 6. வித்தியாசமாக தொடரை தொடர்ந்துள்ளது
  அனுபவத்தைக் காட்டுகிறது
  அருமையான பதிவு
  கவிதை மிக மிக அருமை வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 7. குழந்தைகள் தினத்தை முன்னிட்டு சுவாரஸ்யமாக பதிவிட்ட முன்னாள் குழந்தைக்கு வாழ்த்துக்கள்! சிறுவனின் ‘கவுஜ’ பிரமாதம். தங்களின் அன்புக்கட்டளைக்கு அடி பணிகின்றேன். .

  பதிலளிநீக்கு
 8. இன்றைய செய்தியில் ஜீரணிக்க முடியாத செய்தியாக உள்ளது .

  வன்முறை பேசுவது வளர்ந்த சூழ்நிலையோ , இரண்டாம் செய்தி ஜீன் ஆ அல்லது மன உளைச்சலா


  நல்லதகவல் ஐயா

  அழைப்பிற்கு நன்றி ஐயா
  அன்புக்கு மரியாதை தருகிறேன் ஐயா

  த.ம 6

  பதிலளிநீக்கு
 9. குழந்தைகள் உலகம் குழதைகள் உஅகமாக இல்லை இப்பொழுது என்பதுதானே கவலையாக உள்ளது.

  பதிலளிநீக்கு
 10. நல்லதொரு தொடர்தான். தொடருங்கள்

  பதிலளிநீக்கு
 11. வித்தியாசமாய் ஒரு பகிர்வு... தொடரச் சொன்ன விதமும் வித்தியாசமாய்... :)

  தொடரட்டும் இத் தொடர்....

  பதிலளிநீக்கு
 12. பித்தன் சார் வேர்களில் ஒரு பதிவு எழுதுங்களேன் !
  என்ன பதிவு ..சிறு பதிவா தொடர் பதிவா ?
  சிறு பதிவுதான் எழுதுங்களேன்.
  கவிதையா கதையா கட்டுரையா..
  கட்டுரைதான் எழுதுங்களேன்.
  சமூகமா ..அரசியலா..
  அரசியல்தான் எழுதுங்களேன்.
  தமிழ் நாட்டு அரசியலா..டெல்லி அரசியலா..
  தமிழக அரசியலைத்தான் எழுதுங்களேன்...
  அம்மா.. அல்லது...
  விடுங்க சாமி ..டெப்பனட்டா நீங்க பித்தன்னு ஒத்துகிறேன்.
  பாண்டியன்ஜி

  பதிலளிநீக்கு
 13. குழந்தைகள் பற்றிய பதிவு
  அருமை...வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 14. இந்த தொடர் பதிவில் உங்கள் சிந்தனை நன்றாக உள்ளது!

  பதிலளிநீக்கு
 15. குழந்தைகளின் பிரச்சினைகளை நன்கு சொல்லியுள்ளீர்கள்..ஆரோக்கியப்பிரச்சினைக்கு நம் பாரம்பரிய உணவுப் பழக்கத்தை நாம் கைவிட்டதே காரணம்.

  பதிலளிநீக்கு
 16. அண்ணே ஆரம்பமே அமக்களமா இருக்கே...சூப்பர்!

  பதிலளிநீக்கு
 17. இருந்தாலும் உங்களுக்கு குசும்பு யாஸ்த்தி ஐயா .எப்படி என்குறீர்களா?..உங்கள தொடர் பதிவிடச் சொன்னா அந்த முன்னுக்கு இருக்குற நாலுபேருக்கும் ஐடியாவ மறைமுகமாய்க் கொடுத்து தொடர் பதிவை இட அழைத்த விதம் இருக்கே .அப்பாடா இது உங்களால்
  மட்டும்தான் முடியும் .என்ன இருந்தாலும் நீங்க அனுபவத்தில்
  கிழவன் கிழவநேதான்அருமை!...
  அருமை ..அருமை!....
  வாழ்த்துக்கள் ஐயா..... மிக்க நன்றி பகிர்வுக்கு ........

  பதிலளிநீக்கு
 18. நம் சந்ததியினருக்கான உலகத்தை நாம் தான் கெடுத்து குட்டிச் சுவராய் ஆக்கி வைத்திருக்கிறோம்.
  எனக்கெனவோ தற்கால குழந்தைகளின் உலகம் மகத்தானதாய் தெரியவில்லை - நம் காலத்தைப் போல .

  பதிலளிநீக்கு
 19. குழந்தைகள் தினத்தில் ஒரு சிறப்பான பகிர்வு

  பதிலளிநீக்கு
 20. என் அழைப்பை ஏற்றுத் தொடர்ந்தமைக்கு மனமார்ந்த நன்றி. அப்பாவை உண்மை சொன்ன அந்தக் கவிதையை மிக ரசித்தேன். மற்ற நால்வரை அழகாய் அழைத்ததோடு மட்டுமில்லாமல், அவர்கள் எழுதுவதற்கு குறிப்பும் கொடுத்திருக்கும் பாங்கு கவனித்து ரசிக்கத் தக்கது. பிரமாதம் ஐயா...

  பதிலளிநீக்கு
 21. மீண்டும் தொடர் பதிவுகள் ஆரம்பித்துவிட்டன....இனி ஓரு ரவுண்டு வரும் போல

  உங்கள் பதிவு அருமையாக இருக்கு குறிப்பாக பதிவை நகர்த்தி சென்றவிதம் அருமை

  பதிலளிநீக்கு
 22. என்ன சண்முகவேல் இப்படி சொல்லிட்டீங்க?
  குழந்தைகள் நலம் கெட்டார்கள் என்றால் யார் காரணம்?

  ஒவ்வொரு தலைமுறையும் அடுத்த தலைமுறையைப் பற்றிச் சொல்லும் குறை தானே இது?
  நம்மை விட நம் இளைய தலைமுறை நன்றாக சிந்தித்துச் செயல்படுகிறது என்பதை சற்று ஆழ்ந்து கவனித்தால் புலப்படும்.

  பதிலளிநீக்கு
 23. வித்தியாசமான பதிவு. வித்தியாசமான அழைப்புகள். மறுபடியும் தொடர் வண்டி ஆரம்பிச்சிடுச்சா?

  பதிலளிநீக்கு
 24. குழந்தைகள் தின வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 25. எப்டி அண்ணாத்தே இப்டி ரோசிக்கிறே நீ!
  நீ அடிக்கிற அல்லா பாலும் சிக்ஸரா போகுதுபா. ஆனா பாரு...அல்லார் கவலையும் புள்ளெ கெட்டுபோது கொயந்த வீணா போகுது அப்படீன்னுதான் இருக்குபா.
  எங்கப்பா என்ன சூப்பரா வளர்த்தார், நான் நல்லாருக்கேன். ஆனா நான் எம்புள்ளய அப்படி வளக்கலேயேபா. அவன் எப்படி நல்ல வர்வான்? ஸோ, ப்ராப்லம் கொயந்தங்ககிட்டே இல்லபா. எங்கம்மா எனக்கு சோறு ஊட்டிச்சுபா! இன்னிக்கு எத்தன அம்மா கொயந்தக்கு சோறு ஊட்றாபா? அல்லா தப்பும் நம்மேல வச்சிகிட்டு, பாவம் புள்ளைங்களை கொற சொல்றோம்பா!! இன்னீக்கு கொயந்தைங்க வெளெயாட ஒரு க்ரவுண்டு இருக்காபா? பீச்சுலேகூட வெளெயாட பாண் பண்டாங்கபா!
  அப்பொறம் குண்டாயிட்டான், மன அயுத்தம், சாவப்பத்தி பேசுறான் இன்னா, பேசத்தான்பா செய்வான்.
  தப்பு பண்றது நாம, கொறைய புள்ள மேல போடுறது இன்னா ஞாயம் வாத்தியாரே?

  பதிலளிநீக்கு
 26. Lakshmi கூறியது...

  // தொடர்பதிவு எழுத வித்யாசமாக அழைத்திருக்கிரீர்கள். நல்லா இருக்கு. இப்ப வளரும்தலைமுறையினர் பற்றி கவலைதான் எல்லாருக்குமே இருக்கு.//
  நன்றி லக்ஷ்மி அவர்களே.

  பதிலளிநீக்கு
 27. shanmugavel கூறியது...

  //இன்றைய குழந்தைகள் குழந்தைகளாக இல்லை என்பது நிஜம்.உடல்நலமும்,மனநலமும் கெட்டிருக்கிறார்கள் என்பதை செய்திகள் வழி சுட்டிக்காட்டியிருக்கிறீர்கள்,//
  பெரியவர்களின் அணுகு முறைகளும் எதிர்பார்ப்புகளும் மாறிவிட்டன.
  நன்றி சண்முகவேல்.

  பதிலளிநீக்கு
 28. !* வேடந்தாங்கல் - கருன் *! கூறியது...

  // நல்ல ஐடியா..

  ஓகே,.. தலைவரே..

  உங்க கட்டளைக்கு(அன்பு)பணிந்து நானும் எழுதுகிறேன்..//
  நன்றி கருன்.

  பதிலளிநீக்கு
 29. புலவர் சா இராமாநுசம் கூறியது...

  //குழந்தைகள் பற்றிய பதிவு
  அருமை!//
  நன்றி ஐயா!

  பதிலளிநீக்கு
 30. இராஜராஜேஸ்வரி கூறியது...

  // மனோதத்துவ நிபுணர்களின் கருத்து
  மனம் பதற் வைக்கிறது..

  மகத்தான மழ்லை உல்கத்திற்கு
  மழ்லையர் தின இனிய வாழ்த்துகள்..//

  நன்றி இராஜராஜேஸ்வரி .

  பதிலளிநீக்கு
 31. Ramani கூறியது...

  //வித்தியாசமாக தொடரை தொடர்ந்துள்ளது
  அனுபவத்தைக் காட்டுகிறது
  அருமையான பதிவு
  கவிதை மிக மிக அருமை வாழ்த்துக்கள்//
  நன்றி ரமணி.

  பதிலளிநீக்கு
 32. வே.நடனசபாபதி கூறியது...

  //குழந்தைகள் தினத்தை முன்னிட்டு சுவாரஸ்யமாக பதிவிட்ட முன்னாள் குழந்தைக்கு வாழ்த்துக்கள்! சிறுவனின் ‘கவுஜ’ பிரமாதம். தங்களின் அன்புக்கட்டளைக்கு அடி பணிகின்றேன். //
  நன்றி சபாபதி அவர்களே.

  பதிலளிநீக்கு
 33. M.R கூறியது...

  //இன்றைய செய்தியில் ஜீரணிக்க முடியாத செய்தியாக உள்ளது .

  வன்முறை பேசுவது வளர்ந்த சூழ்நிலையோ , இரண்டாம் செய்தி ஜீன் ஆ அல்லது மன உளைச்சலா


  நல்லதகவல் ஐயா

  அழைப்பிற்கு நன்றி ஐயா
  அன்புக்கு மரியாதை தருகிறேன் ஐயா

  த.ம 6//
  நன்றி ரமேஷ்.

  பதிலளிநீக்கு
 34. விமலன் கூறியது...

  // குழந்தைகள் உலகம் குழதைகள் உஅகமாக இல்லை இப்பொழுது என்பதுதானே கவலையாக உள்ளது.//
  ஆம். நன்றி விமலன்.

  பதிலளிநீக்கு
 35. ராஜி கூறியது...

  // நல்லதொரு தொடர்தான். தொடருங்கள்//
  நன்றி ராஜி.

  பதிலளிநீக்கு
 36. வெங்கட் நாகராஜ் கூறியது...

  //வித்தியாசமாய் ஒரு பகிர்வு... தொடரச் சொன்ன விதமும் வித்தியாசமாய்... :)

  தொடரட்டும் இத் தொடர்....//

  நன்றி வெங்கட்.

  பதிலளிநீக்கு
 37. பாண்டியன்ஜி கூறியது...

  // பித்தன் சார் வேர்களில் ஒரு பதிவு எழுதுங்களேன் !
  என்ன பதிவு ..சிறு பதிவா தொடர் பதிவா ?
  சிறு பதிவுதான் எழுதுங்களேன்.
  கவிதையா கதையா கட்டுரையா..
  கட்டுரைதான் எழுதுங்களேன்.
  சமூகமா ..அரசியலா..
  அரசியல்தான் எழுதுங்களேன்.
  தமிழ் நாட்டு அரசியலா..டெல்லி அரசியலா..
  தமிழக அரசியலைத்தான் எழுதுங்களேன்...
  அம்மா.. அல்லது...
  விடுங்க சாமி ..டெப்பனட்டா நீங்க பித்தன்னு ஒத்துகிறேன்.
  பாண்டியன்ஜி//
  பித்தன்தான் என்று நிச்சயம் செய்து விட்டீர்கள்!ஹா,ஹா!
  நன்றி பாண்டியன்ஜி

  பதிலளிநீக்கு
 38. ரெவெரி கூறியது...

  //குழந்தைகள் பற்றிய பதிவு
  அருமை...வாழ்த்துக்கள்...//
  நன்றி ரெவெரி.

  பதிலளிநீக்கு
 39. ஷைலஜா கூறியது...

  //இந்த தொடர் பதிவில் உங்கள் சிந்தனை நன்றாக உள்ளது!//
  நன்றி ஷைலஜா.

  பதிலளிநீக்கு
 40. செங்கோவி கூறியது...

  // குழந்தைகளின் பிரச்சினைகளை நன்கு சொல்லியுள்ளீர்கள்..ஆரோக்கியப்பிரச்சினைக்கு நம் பாரம்பரிய உணவுப் பழக்கத்தை நாம் கைவிட்டதே காரணம்.//
  ஆம்.
  நன்றி செங்கோவி.

  பதிலளிநீக்கு
 41. விக்கியுலகம் கூறியது...

  // அண்ணே ஆரம்பமே அமக்களமா இருக்கே...சூப்பர்!//
  நன்றி விக்கி.

  பதிலளிநீக்கு
 42. அம்பாளடியாள் கூறியது...

  //இருந்தாலும் உங்களுக்கு குசும்பு யாஸ்த்தி ஐயா .எப்படி என்குறீர்களா?..உங்கள தொடர் பதிவிடச் சொன்னா அந்த முன்னுக்கு இருக்குற நாலுபேருக்கும் ஐடியாவ மறைமுகமாய்க் கொடுத்து தொடர் பதிவை இட அழைத்த விதம் இருக்கே .அப்பாடா இது உங்களால்
  மட்டும்தான் முடியும் .என்ன இருந்தாலும் நீங்க அனுபவத்தில்
  கிழவன் கிழவநேதான்அருமை!...
  அருமை ..அருமை!....
  வாழ்த்துக்கள் ஐயா..... மிக்க நன்றி பகிர்வுக்கு ........//

  கிழவன் என்று எப்போதாவது சொல்லிட விட ஆசைப்பட்டு இன்று வாய்ப்புக் கிடைத்ததா?!ஹா,ஹா!
  நன்றி அம்பாளடியாள்.

  பதிலளிநீக்கு
 43. சிவகுமாரன் கூறியது...

  //நம் சந்ததியினருக்கான உலகத்தை நாம் தான் கெடுத்து குட்டிச் சுவராய் ஆக்கி வைத்திருக்கிறோம்.
  எனக்கெனவோ தற்கால குழந்தைகளின் உலகம் மகத்தானதாய் தெரியவில்லை - நம் காலத்தைப் போல //
  உங்கள் காலமே அப்படி என்றால் என் காலத்தை என்ன சொல்ல?
  நன்றி சிவா.

  பதிலளிநீக்கு
 44. FOOD கூறியது...

  //குழந்தைகள் தினத்தில் ஒரு சிறப்பான பகிர்வு//
  நன்றி சங்கரலிங்கம்.

  பதிலளிநீக்கு
 45. கணேஷ் கூறியது...

  //என் அழைப்பை ஏற்றுத் தொடர்ந்தமைக்கு மனமார்ந்த நன்றி. அப்பாவை உண்மை சொன்ன அந்தக் கவிதையை மிக ரசித்தேன். மற்ற நால்வரை அழகாய் அழைத்ததோடு மட்டுமில்லாமல், அவர்கள் எழுதுவதற்கு குறிப்பும் கொடுத்திருக்கும் பாங்கு கவனித்து ரசிக்கத் தக்கது. பிரமாதம் ஐயா...//
  வாய்ப்புக் கொடுத்தமைக்கும் வந்து கருத்துச் சொன்னமைக்கும் நன்றி கணேஷ்.

  பதிலளிநீக்கு
 46. K.s.s.Rajh கூறியது...

  // மீண்டும் தொடர் பதிவுகள் ஆரம்பித்துவிட்டன....இனி ஓரு ரவுண்டு வரும் போல

  உங்கள் பதிவு அருமையாக இருக்கு குறிப்பாக பதிவை நகர்த்தி சென்றவிதம் அருமை//
  நன்றி ராஜ்.

  பதிலளிநீக்கு
 47. அப்பாதுரை கூறியது...

  // என்ன சண்முகவேல் இப்படி சொல்லிட்டீங்க?
  குழந்தைகள் நலம் கெட்டார்கள் என்றால் யார் காரணம்?

  ஒவ்வொரு தலைமுறையும் அடுத்த தலைமுறையைப் பற்றிச் சொல்லும் குறை தானே இது?
  நம்மை விட நம் இளைய தலைமுறை நன்றாக சிந்தித்துச் செயல்படுகிறது என்பதை சற்று ஆழ்ந்து கவனித்தால் புலப்படும்.//
  நன்றி அப்பாஜி.

  பதிலளிநீக்கு
 48. பாலா கூறியது...

  // வித்தியாசமான பதிவு. வித்தியாசமான அழைப்புகள். மறுபடியும் தொடர் வண்டி ஆரம்பிச்சிடுச்சா?//
  நன்றி பாலா.

  பதிலளிநீக்கு
 49. "என் ராஜபாட்டை"- ராஜா கூறியது...

  // குழந்தைகள் தின வாழ்த்துகள்//
  நன்றி ராஜா.

  பதிலளிநீக்கு
 50. சைதை அஜீஸ் கூறியது...

  //எப்டி அண்ணாத்தே இப்டி ரோசிக்கிறே நீ!
  நீ அடிக்கிற அல்லா பாலும் சிக்ஸரா போகுதுபா. ஆனா பாரு...அல்லார் கவலையும் புள்ளெ கெட்டுபோது கொயந்த வீணா போகுது அப்படீன்னுதான் இருக்குபா.
  எங்கப்பா என்ன சூப்பரா வளர்த்தார், நான் நல்லாருக்கேன். ஆனா நான் எம்புள்ளய அப்படி வளக்கலேயேபா. அவன் எப்படி நல்ல வர்வான்? ஸோ, ப்ராப்லம் கொயந்தங்ககிட்டே இல்லபா. எங்கம்மா எனக்கு சோறு ஊட்டிச்சுபா! இன்னிக்கு எத்தன அம்மா கொயந்தக்கு சோறு ஊட்றாபா? அல்லா தப்பும் நம்மேல வச்சிகிட்டு, பாவம் புள்ளைங்களை கொற சொல்றோம்பா!! இன்னீக்கு கொயந்தைங்க வெளெயாட ஒரு க்ரவுண்டு இருக்காபா? பீச்சுலேகூட வெளெயாட பாண் பண்டாங்கபா!
  அப்பொறம் குண்டாயிட்டான், மன அயுத்தம், சாவப்பத்தி பேசுறான் இன்னா, பேசத்தான்பா செய்வான்.
  தப்பு பண்றது நாம, கொறைய புள்ள மேல போடுறது இன்னா ஞாயம் வாத்தியாரே?//
  கரீட்டா சொல்லிக்கிறே வாத்யாரே!
  டாங்க்ஸ்!

  பதிலளிநீக்கு
 51. வித்தியாசமான சிந்தனைக் கட்டுரை ஐயா...
  அழைப்பு அற்புதம்...

  பதிலளிநீக்கு
 52. வணக்கம் ஐயா, நலமாக இருக்கிறீங்களா?

  குழந்தைகள் தினத்தில் ஒரு குழந்தையின் உணர்வாக ஒரு அழகிய கவிதையினைத் தந்திருக்கிறீங்க!

  வித்தியாசமான சிந்தனை ஐயா!

  பதிலளிநீக்கு
 53. தங்கள் அன்பிற்கு மனமகிழ்ந்தேன் அன்பரே..

  தாங்கள் அறிமுகம் செய்தவிதம் அருமையாக உள்ளது அன்பரே..

  குழந்தைகள் தினம் கொண்டாடுவதைவிட
  குழந்தைகளை தினம் கொண்டாடவேண்டும் என நினைப்பவன் நான்..

  தாங்கள் தந்திருக்கும் குறிப்புகள் சிந்திக்கத்தக்கன்...

  குழந்தைகள் தான் வருங்கால நலமிக்க சமூகம்!

  அதனால் அவர்களைச் செம்மைப்படுத்துவது நம் கடமை..

  தேவையான பதிவு.

  பதிலளிநீக்கு
 54. “முட்டாப் பய மகனே”

  ஹை!அப்பா ஒரு நிஜம் சொன்னார்!!”//

  ஹா ஹா ஹா ஹா ஹா சிரிச்சி முடியல....

  பதிலளிநீக்கு
 55. குழந்தைகளுடன் அவர்கள் உலகில் நாமும் சென்றால் நாமும் குழந்தைகள் ஆகிவிடுவோம் இல்லையா...

  பதிலளிநீக்கு
 56. //ஹை!அப்பா ஒரு நிஜம் சொன்னார்!!”//

  ஹா ஹா. கை தட்டி, பலமாய் சிரித்தேன். நன்றி.

  இதே தலைப்பு என் தளத்தில்.
  http://vaazhveperaanantham.blogspot.com/2011/11/blog-post_14.html

  பதிலளிநீக்கு
 57. பிஞ்சிலே பழுப்பது என்பது இது தான் . பொதுவாகவே இதற்கு காரணமாக தொலை காட்சி பெட்டியினை தான் கூறுகிறார்கள் . வாசுதேவன்

  பதிலளிநீக்கு
 58. MANO நாஞ்சில் மனோ கூறியது...

  //குழந்தைகளுடன் அவர்கள் உலகில் நாமும் சென்றால் நாமும் குழந்தைகள் ஆகிவிடுவோம் இல்லையா...//
  உண்மை.

  பதிலளிநீக்கு
 59. ஐயா..

  தங்கள் அன்பான அழைப்பினை ஏற்று..

  http://gunathamizh.blogspot.com/2011/11/blog-post_3736.html

  மழலை உலகம் தொடர்பான இடுகை வெளியிட்டிருக்கிறேன்..

  காணத் தங்களை அன்புடன் அழைக்கிறேன்..

  பதிலளிநீக்கு