அங்கதனால் நம்ப முடியவில்லை.
தன் தந்தை கொல்லப் பட்டாரா?இது எப்படி நடக்க முடியும்?
மாவீரனான தந்தையைக் கொல்ல அவரினும் பெரிய வீரன் வந்தானோ?
அன்னையிடம் சென்றான்.
“அம்மா என்ன நடந்தது?எப்படி இறந்தார் தந்தை?போரில் அவரை வென்று அவர் உயிர் கவர்ந்த அந்த வீரன் யார்?” கேட்டான்.
தாரை சோகமாய்ச் சிரித்தாள்.
”போரில் உன் தந்தை கொல்லப்படவில்லை அங்கதா!உன் தந்தைக்கும், சிறிய தந்தைக்கும் போர் நடக்கும் போது மறைந்திருந்து எய்யப்பட்ட பாணத்தினால் அவர் மரித்தார்” சொன்னாள் தாரை.
அங்கதன் கண்கள் சிவந்தன.உடல் துடித்தது.”மறைந்திருந்து எய்யப்பட்ட பாணமா?யார் செய்தது இந்த இழி செயல்?”
”அயோத்தி மன்னன்,தசரதனின் புத்திரன் இராமன்.வனத்தில் அவன் மனைவி சீதையை இராவணன் கவர்ந்து சென்றான்.அவளைத்தேடி வரும்போது உன் சிறிய தந்தையிடம் நட்புக் கொண்டு அவருக்கு உதவுவதற்காக உன் தந்தையைக் கொன்றான் இராமன்”. தாரை சொன்னாள்.
“அவ்வாறெனில் தந்தையுடன் போர் செய்து அவரை வீழ்த்தியிருக்க வேண்டும்.கோழை போல் மறைந்திருந்து கொலவதென்ன வீரம்?என்ன நியாயம்?”
”இதையேதான் உன் தந்தை இராமனிடம் கேட்டார்.
/'வாய்மையும், மரபும், காத்து, மன் உயிர் துறந்த வள்ளல்
தூயவன், மைந்தனே! நீ, பரதன்முன் தோன்றினாயே!/
தூயவன், மைந்தனே! நீ, பரதன்முன் தோன்றினாயே!/
என இழித்துரைத்தார்.ஆனால் இராமன் நீதியை எடுத்துச் சொல்லவும் புரிந்து கொண்டார்.அவன் அவதாரம் என்பதை அறிந்து கொண்டார். அவனால் வீடு பேறு பெற்றார்” தாரை சொன்னாள்.
அங்கதன் மனம் அதை ஏற்கவில்லை”என்ன சொல்லியிருந்தாலும், தந்தையே அதை ஏற்றுக் கொண்டிருந்தாலும் என்னால் அதை ஏற்க இயலவில்லை.என் தந்தை வஞ்சகமாகக் கொல்லப்பட்டார்.அதற்கு முதலில் அந்த இராமனையும், பின் என் சிறியதந்தை சுக்கிரீவனையும் நான் பழி வாங்குவேன்” உறுமினான்.
தாரை பயந்தாள்
பின் சொன்னாள்”மகனே! நீ வயதில் சிறியவன்.அவசரப்பட்டு ஏதாவது செய்து அதனால் நான் உன்னையும் இழக்கும் நிலை வந்து விடக் கூடாது. உன் சிறிய தந்தை இப்போது அரசர்.அனுமான் துணையிருக்கிறான்.படை இருக்கிறது.இராமனும்,வில் வித்தையில் தேர்ந்தவன் மட்டுமல்ல. அவதாரம். உன் கோபத்தை அடக்கு.சாந்தமடை உன் சிறிய தந்தையிடமும் இராமனிடமும் சென்று ஆசி பெற்று வா””
இவ்வாறு பலவிதமாய் அங்கதனுக்கு அறிவுரை சொன்னாள்.
அங்கதன் யோசித்தான்.
”அன்னையிடம் இது குறித்து மேலும் விவாதம் செய்வது பயனற்றது.எனவே இப்போதைக்கு அன்னை சொல்வதைக் கேட்போம் ”
”அம்மா!உங்கள் கட்டளை” அடி பணிந்தான்.
அவள் கட்டளைப்படி ஆசி பெறப் புறப்பட்டான்.
ஆனால் அவன் மனம் பேசியது”காத்திருப்பேன் ,சரியான காலத்துக்காக. இந்த இராமனைக் கொன்று ஒரு நாள் பழி தீர்ப்பேன்அது வரை காத்திருப்பேன்”
அங்கதன் காத்திருந்தான்.
---------தொடரும்
ஆன்மீகப் பதிவுகள் அதிகம் வருவதில்லையே என்ற ஒரு குறை எனக்கிருந்தது. அதைப் போக்கிவிட்டது உங்கள் கட்டுரை. (என் அடுத்த பதிவும் ஒரு ஆன்மீக மேட்டர்தான்) அங்கதன் எப்படி மனம் மாறி ராம சைன்யத்தில் அனுமனுக்கு உதவியாக இருந்தான் என்பதை அறிய ஆவலுடன் காத்திருக்கிறேன்...
பதிலளிநீக்குஆனால் அவன் மனம் பேசியது”காத்திருப்பேன் ,சரியான காலத்துக்காக. இந்த இராமனைக் கொன்று ஒரு நாள் பழி தீர்ப்பேன்அது வரை காத்திருப்பேன்”
பதிலளிநீக்குஅங்கதன் காத்திருந்தான்.
>>>
நாங்களும் காத்திருக்கிறோம்.
த ம 2
பதிலளிநீக்குஅண்ணே லேட்டஸ்ட்டா கிரேசி மோகன் நாடகம் கேட்டீங்களா!
பதிலளிநீக்குஆன்மீக பதிவா?
பதிலளிநீக்குதொடரட்டும் ...
பதிலளிநீக்குஇன்று என் வலையில்
பதிலளிநீக்குதூக்கு தண்டனையை எதிர்பவர்களுக்கு சில கேள்விகள்?":
புராணங்களில் வரும் கிளைக்கதைகள் மிக சுவாரசியமானவை. அதை தொடர்ந்து நீங்கள் அளிக்க வேண்டும்.
பதிலளிநீக்குஅங்கதனும் காத்திருந்தான், மனோ'வும் காத்திருக்கிறான்....
பதிலளிநீக்குசுவாரசியம். நானும் காத்து இருக்கிறேன் ஆர்வமாய்..
பதிலளிநீக்குநெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே ஹி ஹி, சின்னபிள்ளையில எங்க பக்கத்து வீட்டு பாட்டி சொன்ன கதை இது...!!!
பதிலளிநீக்குianaman இந்த பெயரில் இன்ட்லியில் ஓட்டு போட்டதும் போடுவதும் நான்தான் தல....
பதிலளிநீக்குதெரியாத செய்தியை சுவைபட சொல்லியிருக்கிறீர்கள்.அங்கதன் காத்திருப்பதைப் போல,நானும் காத்திருக்கிறேன்.ஆனால் கதையின் முடிவை அறிய.
பதிலளிநீக்குஅருமை நான் சின்னவயதில் ராமாயண புத்தகங்களை தேடிவாசிப்பேன்
பதிலளிநீக்குநீண்ட காலத்துக்கு பிறகு உங்கள் பதிவில் மீண்டும் வாசிக்ககிடைத்தது மகிழ்ச்சி
@கணேஷ்
பதிலளிநீக்குஇது முழுவதும் கற்பனையே. ராமாயணத்தில் ஆதாரம் எதுவும் கிடையாது.
நன்றி.
@ராஜி
பதிலளிநீக்குநன்றி.
ராஜி கூறியது...
பதிலளிநீக்கு//த ம 2//
நன்றி.
@விக்கியுலகம்
பதிலளிநீக்குஇது என்ன காமெடியாவா இருக்கு? நான் சீரியஸா எழுதுவதாக நினைத்தேன்.பேசாம நிறுத்திட வேண்டியதுதானோ!
நன்றி.
@சி.பி.செந்தில்குமார்
பதிலளிநீக்குஇராமன் ,கிருஷ்ணன் என்று வந்தால் ஆன்மீகமா?இது ஒரு கற்பனைக் கதை.அங்கதனின் மன ஓட்டத்தில் எழுதப்பட்டது,அவ்வளவே!
நன்றி.
@"என் ராஜபாட்டை"- ராஜா
பதிலளிநீக்குநன்றி.
@பாலா
பதிலளிநீக்குஇது கிளைகதையல்ல.முழுக்கற்பனை.
நன்றி.
@MANO நாஞ்சில் மனோ
பதிலளிநீக்குநன்றி.
@ஜ.ரா.ரமேஷ் பாபு
பதிலளிநீக்குநன்றி.
@MANO நாஞ்சில் மனோ
பதிலளிநீக்குஅவற்றையெல்லாம் பதிவாக்கலாமே!
@MANO நாஞ்சில் மனோ
பதிலளிநீக்கு:-0 ஓ! நன்றி.
@வே.நடனசபாபதி
பதிலளிநீக்குஇது கற்பனையே!
நன்றி.
@K.s.s.Rajh
பதிலளிநீக்குநன்றி.
அங்கதன் காத்திருந்தான்.
பதிலளிநீக்குசுவாரஸ்யமான பகிர்வு!
தொடரா? தெரியாம வந்து சிக்கிட்டேனா? தலைவரே சின்ன தொடரா பெரிய தொடரா?
பதிலளிநீக்குஆவலுடன் காத்திருக்கிறேன்...
பதிலளிநீக்கு@இராஜராஜேஸ்வரி
பதிலளிநீக்குநன்றி.
@suryajeeva
பதிலளிநீக்கு”அச்சம்தவிர்!”நாளை முடித்துவிடுவேன்!
நன்றி.
@ரெவெரி
பதிலளிநீக்குநன்றி.
இது மாதியான கிளைக் கதைகள் சுவாரஸ்யமானவை..
பதிலளிநீக்குதொடருங்கள்...
அருமை அய்யா! தொடருங்கள்.
பதிலளிநீக்குஅருமை... தொடருங்கள்.. நாளை அடுத்த பகுதியைப் போட்டுடுங்க!
பதிலளிநீக்குநல்ல வேளை இராமாயணமே
பதிலளிநீக்குமாறிவிட்டதோ என்று பயந்தேன்
கற்பனை என்று கூறிவிட்டீர்
நன்றி!
புலவர் சா இராமாநுசம்
தெரியாத கதை .தெரிந்து கொண்டேன் .
பதிலளிநீக்குதொடருங்கள்
த.ம 11
பக்கத்தில் இருந்து சொவது போன்ற எளிய நடையில் அரிய செய்திகள் அருமை.
பதிலளிநீக்குத ம 11
இன் 9
தொடருங்கள் ... தொடர்கிறேன் ...
பதிலளிநீக்கு@!* வேடந்தாங்கல் - கருன் *!
பதிலளிநீக்குநன்றி.
@shanmugavel
பதிலளிநீக்குநன்றி.
@வெங்கட் நாகராஜ்
பதிலளிநீக்குபோட்டுடறேன்.
நன்றி.
@புலவர் சா இராமாநுசம்
பதிலளிநீக்குநடந்ததை மாற்றி எழுத முடியாது. ஆனால் கற்பனையில் சில புதிய கதைகளை சொல்லலாம் அல்லவா?
நன்றி.
@M.R
பதிலளிநீக்குநன்றி.
@A.R.ராஜகோபாலன்
பதிலளிநீக்குநன்றி.
@FOOD
பதிலளிநீக்குநன்றி.
@நண்டு @நொரண்டு -ஈரோடு
பதிலளிநீக்குநன்றி.
கற்பனைக்குதிரையை சும்மா தட்டி விட்டு
பதிலளிநீக்குபறக்க விட்டு இருக்கீங்க ஐயா..
தொடருங்கள்..
நன்றாக உள்ளது...
வணக்கம் சென்னைப்பித்தன் சார், தங்களின் சுவாரசியமான இந்தப் பதிவைப்பற்றி வலைச்சரத்தில் குறிப்பிட்டு அறிமுகம் செய்து இருக்கிறேன்.நேரம் கிடைக்கும் பொழுது சென்று பார்க்கவும்.
பதிலளிநீக்கு@மகேந்திரன்
பதிலளிநீக்குநன்றி.
RAMVI கூறியது...
பதிலளிநீக்கு//வணக்கம் சென்னைப்பித்தன் சார், தங்களின் சுவாரசியமான இந்தப் பதிவைப்பற்றி வலைச்சரத்தில் குறிப்பிட்டு அறிமுகம் செய்து இருக்கிறேன்.நேரம் கிடைக்கும் பொழுது சென்று பார்க்கவும்.//
நன்றி ராம்வி.