தொடரும் தோழர்கள்

வியாழன், நவம்பர் 03, 2011

துணை--(முதல் பகுதி)


முருகேசன் பேருந்து நிலையத்துக்கு வந்து சேர்ந்தபோது மணி 8.அவன் போக வேண்டிய பேருந்து 9 மணிக்குத்தான்.அவன் எப்போதுமே இப்படித்தான்,குறிப்பிட்ட  நேரத்துக்கு  மிக முன்பாகவே தயாராகி விடுவான்.இதனாலேயே அவனை நண்பர்கள் முன்சாக்கிரதை முருகேசன் என்று அழைப்பார்கள்.


பேருந்து நிலையத்துக்கு வந்ததும் உட்கார இடம் இருக்கிறதா எனப்பார்த்தான்.எல்லா இருக்கைகளிலும் ஆட்கள் இருந்தனர்.ஒரு இருக்கை அருகில் சென்று,பையைத் தன் இரு கால்களுக்கிடையே வைத்துக் கொண்டு நின்றான்.அவன் பார்வை சுற்றி வந்தது.தெரிந்த முகங்கள் எதுவும் காணப்படவில்லை.சீட்டு முன் பதிவு எதுவும் செய்யாத நிலையில் தனக்குப் பேருந்தில் உட்கார இடம் கிடைக்குமா என்ற கவலையில் இருந்தான்.


சிறிது நேரம் சென்றது.


”முருகேசன் சார்” என்ற குரல் கேட்டு இது வந்த திசையில் பார்த்தான். அவன் பணி புரியும் தொழிற்சாலையில் வேறு பிரிவில் இருக்கும்  சரவணன்,இரண்டு பெண்களுடன்  வந்து கொண்டிருந்தான்

முருகேசன் அருகில் வந்த சரவணன்”எங்க சார்,சென்னைக்கா?”எனக் கேட்டான்.முருகேசன் ஆமாம் எனத்தலையாட்டியதும் ”முன்பதிவு செய்து விட்டீர்களா?”எனக்கேட்டான்.

”இல்லை.பேருந்து வந்த பின்தான் பார்க்க வேண்டும்”

”ரொம்ப நல்லதாப்போச்சு”என்ற சரவணன் உடன் இருந்த  பெண்களைக் காட்டிச் சொன்னான் “இது என் மனைவி.அது அவ  தங்கச்சி ராணி.விடுமுறைக்காக வந்திருந்தா.இவளை இன்னைக்குச் சென்னையிலே கொண்டு போய் விடறதுக்காக பதிவு செய்திருந்தேன். திடீரென்று நாளைக்கு எனக்கு இங்கே முக்கியமான வேலை வந்துடுச்சு. என்னோட டிக்கட்டை என்ன செய்யலாம்,இங்க வந்ததும் யார் கிட்டயாவது  வித்துடலாமான்னு யோசிச்சுக் கிட்டே இருந்தேன். மச்சினிச்சிக்கு வேறே ராத்திரி நேரத்திலேதுணை இல்லாம அனுப்பறோமேன்னு கவலை.
நல்ல வேளை நீங்க வந்தீங்க. என் டிக்கட்டை நீங்க எடுத்துக்குங்க. டிக்கட் பிரச்சினையும் தீர்ந்தது ;ஒரு நல்ல துணையும் கிடைத்தது.”

இரண்டு டிக்கட்டுகளையும் எடுத்து முருகேசனிடம் கொடுத்து ‘’நீங்களே ரெண்டையும் வச்சுக்குங்க.அடுத்தடுத்த சீட்தான்” என்று சொன்னான் சரவணன். முருகேசன் வாங்கிக்கொண்டு தன் டிக்கட்டுக்கான பணத்தைக் கொடுத்தான்.

பேருந்து வந்தது .இருவரும் ஏறினர்.அந்தப்பெண்  சன்னலோர இருக்கையில் அமர்ந்துகொண்டு,தன் அக்காவிடம் பேச ஆரம்பித்தாள். அவன் பக்கத்து இருக்கை
யில் மனமின்றி அமர்ந்தான்.

பேருந்து புறப்பட்டது.அவன் அவளிடம் தனக்குச் சன்னலோர இருக்கையில்  அமராவிடில் பிரச்சினையாகும் என்று சொல்லி மாற்றிக் கொண்டான்.

இரவு 12 மணி அளவில் ஒரு நிறுத்தத்தில் பேருந்து நின்ற போது, நடத்துனர்,”வண்டி 5 நிமிடம் நிற்கும் ” என்று சொல்லி விட்டு இறங்கிச் சென்றார்.அவள் அவனிடம் தண்ணீர் இருக்கிறதா எனக்கேட்டாள் அவனிடம் இல்லை.

அவள் சொன்னாள்”போய் ஏதாவது குளிர்பானம் வாங்கி வாருங்களேன். ரொம்பத் தாகமாக இருக்கிறது”சொல்லியறே தன் கைப்பையிலிருந்து பணம் எடுத்தாள்.

முருகேசனுக்கு எப்போதுமே பேருந்திலிருந்து இறங்கினால்,அது அவனை விட்டு விட்டுப் போய்விடுமோ என்ற பயம் உண்டு.அவனது பாதிக் கனவுகள் அது போன்றவைதான்.

“இங்கெல்லாம் நல்ல பானங்கள் கிடைக்காதே.பஸ் புறப்பட்டு விட்டால் ”என அவன் தயங்கியதைக் கண்ட அவள் தானே போய் வாங்கி வந்து அவனுக்கும் கொடுத்தாள்.அவனுக்கு வெட்கமாக இருந்தது.

நடத்துனர் வந்தார்;பேருந்து புறப்பட்டது,சிறிது நேரத்தில் விளக்குகள் அணைக்கப்பட்டன.

(தொடரும்)


41 கருத்துகள்:

 1. நல்ல தயக்கம் ,அடுத்த பாகத்தை படிக்க ஆவல்

  த.ம 2

  பதிலளிநீக்கு
 2. ம்ம்ம்ம்... துணை அடுத்த பகுதிக்கு வெயிட் செய்கிறோம்....

  பதிலளிநீக்கு
 3. ரொம்பவே அலர்ட்டா இருக்காரு ...எப்படி வர்றார்ன்னு பாப்போம் ......

  பதிலளிநீக்கு
 4. ஆகா அட்டகாசமான தொடர் அடுத்த பகுதியில் என்ன நடக்கும் என்று அடுத்த பகுதிக்கு வெயிட்டிங்.....

  பதிலளிநீக்கு
 5. சிறிது நேரத்தில் விளக்குகள் அணைக்கப்பட்டன..//

  அடுத்த பாகத்தை படிக்க ஆவல்...

  பதிலளிநீக்கு
 6. பாப்போம் என்ன நடக்குதுன்னு...

  பதிலளிநீக்கு
 7. முன் ஜாக்கிரதை முருகேசனை தொடருங்கள் அய்யா!ஆவலாக இருக்கிறது.

  பதிலளிநீக்கு
 8. உள்ளுணர்வை அப்படியே
  மென்று விழுங்குவது போல
  தவித்திருக்கிறார் மனிதர் ...

  தொடர்ச்சிக்காக .....

  பதிலளிநீக்கு
 9. சுவாமி, நான் ஏதேதோ கற்பனை எல்லாம் செய்துள்ளேன். கதையை அந்த மாதிரியே கொண்டு செல்லவும்.

  பதிலளிநீக்கு
 10. “அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மருத்துவ மனையாக மாற்ற வேண்டாம் அம்மா.
  இதை விட சிறப்பாக பெரிதாக மாநகராட்சி தோறும்...
  கல்விக்கண் திறந்த காமராஜர் பெயரில் நூலகங்களை உருவாக்குங்கள் தாயே...” என வேண்டி பதிவிட்டுள்ளேன்.
  வருகை புரிந்து எனது கருத்துக்கு வலு சேர்க்குமாரு அன்போடு அழைக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 11. பித்தரே!சற்று உடலம் பெற்றுள்ளேன்
  உங்கள் அன்புக்கு நன்றி!
  நல்ல தொடர் கதை தொடக்கமே
  அடுத்தது அறிய ஆவல் நன்று!

  புலவர் சா இராமாநுசம்

  பதிலளிநீக்கு
 12. தொடரும் போட்ச் சரியான இடம் பார்த்தீர்கள். அடுத்த பகுதிக்கு ஆவலுடன் காத்திருக்க வைத்து விட்டதில் வெற்றி உங்களுக்கு! சூப்பர்...

  பதிலளிநீக்கு
 13. நல்ல தொடக்கம் எதிர்பாரா திருப்பத்தில் முடியும் என நம்புகிறேன்.
  ‘துணை’ இணை ஆகாமல் இருக்க இறைவன் துணை இருக்கட்டும்

  பதிலளிநீக்கு
 14. துணையின் தயக்கம்..

  அருமையான் ஆரம்பம்..

  பதிலளிநீக்கு
 15. உங்கள் அடுத்த பகுதியும் சிறப்பாகத்தொடர வாழ்த்துக்கள் மிக்க
  நன்றி ஐயா பகிர்வுக்கு ......

  பதிலளிநீக்கு
 16. ஹா ஹா ஹா ஹா என்னமோ செமையா சொல்ல வர்றீங்கன்னு புரியுது ஹி ஹி...!!

  பதிலளிநீக்கு
 17. விளக்கையும் அனைச்சாச்சா இனி என்ன அநியாயம் நடக்கப்போகுதோ அவ்வ்வ்வ்வ்...

  பதிலளிநீக்கு
 18. சுவாரசியமான ஆரம்பம்.அடுத்த பகுதியை படிக்க ஆவலோடு இருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 19. @Tamilan
  மன்னிக்கவும்.’அது’வெல்லாம் எதுவும் கிடையாது!
  நன்றி.

  பதிலளிநீக்கு
 20. @புலவர் சா இராமாநுசம்
  மகிழ்ச்சி ஐயா!
  நன்றி.

  பதிலளிநீக்கு
 21. MANO நாஞ்சில் மனோ கூறியது...

  //ஹா ஹா ஹா ஹா என்னமோ செமையா சொல்ல வர்றீங்கன்னு புரியுது ஹி ஹி...!!//
  ஏமாறப் போறிங்க!

  பதிலளிநீக்கு
 22. நல்ல இடத்துல தொடரும் போடறதே ஐயாக்கு வேலையாப் போச்சு..சின்னப் பதிவாத் தானே இருக்கு..இன்னும் கொஞ்சம் போட்டிருக்கலாமே..

  பதிலளிநீக்கு
 23. இனிய காலை வணக்கம் ஐயா,
  நலமா இருக்கிறீங்களா?

  சஸ்பென்ஸ் வைத்து கதையினை நகர்த்தியிருக்கிறீங்க.

  ஆமா டிக்கட் என்பது டபுள் மீனிங் இல்லைத் தானே?

  ஹே....ஹே.....
  சும்மா ஜாலிக்கு கேட்டேன்
  கோவிச்சுக்க வேணாம்.

  பதிலளிநீக்கு