தொடரும் தோழர்கள்

செவ்வாய், நவம்பர் 01, 2011

பழிக்குப் பழி!!

லண்டனிலிருந்து புறப்பட்ட விமானத்தில் இரண்டு அரபுத் தீவிரவாதிகள் ஏறினர். ஒருவர் ஜன்னல் பக்க இருக்கையிலும்,மற்றவர் அடுத்த,நடு இருக்கையிலும் அமர்ந்தனர்.கடைசி நேரத்தில் ஒரு யூத மத குரு வந்து மூன்றாது,பாதையை ஒட்டிய இருக்கையில் அமர்ந்தார்.

புறப்பட்ட சிறிது நேரத்தில் அவர் தன் காலணிகளை கழட்டி வைத்துவிட்டுக் கால் விரல்களை மடக்கி நீட்டி த்  தளர்த்திக்கொண்டார்.

சன்னல் அருகில் இருந்த அராபியன் எழுந்து” வழி விடுங்கள்.எனக்கு கோக் வேண்டும் .போய் வாங்கி வருகிறேன்.’ என்றான்.

அந்த யூதர் நான் வாங்கி வந்து தருகிறேன் என்று சொல்லிச் சென்றார்.அவர் சென்றவுடன் அந்த அராபியன் அவரது ஒரு காலணியில் துப்பி வைத்தான்.

அவர் கோக்குடன் திரும்பி வந்ததும் அடுத்தவன் எனக்கும் கோக் தேவை என்று சொல்ல,அவர் வாங்கி வரச் சென்றார்.அவர் சென்றதும் அவன் மற்றக் காலணியில் துப்பி வைத்தான்..அவர் திரும்பி வந்து கோக்கைக் கொடுத்து விட்டு அமர்ந்தார்.

விமானம் தரையிறங்கத்தொடங்கவும் அந்த யூதர் தன் காலணியை அணிந்து கொண்டார்.உடனே என்ன நடந்திருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டார்.

அவர் அந்த அராபியர்களைப் பார்த்துக் கேட்டார்
”ஏன் இப்படி?”
“இன்னும் எத்தனை நாளைக்கு?”
“நம் நாடுகளுக்கிடையேயான சண்டை?”
“இந்த வெறுப்பு?”
“இந்த விரோதம்?”
“இப்படிக் காலணியில் துப்பிவைப்பதும்,கோக் புட்டியில் சிறுநீர் கழித்து வைப்பதும்?”
...................!!!

56 கருத்துகள்:

 1. இது ரொம்ப்ப...மோசமான.. ம்....பழிக்குப் பழி தான்

  பதிலளிநீக்கு
 2. அவனாவது துப்பினான் இவனோ ஹிம்.

  பதிலளிநீக்கு
 3. ////
  அவர் அந்த அராபியர்களைப் பார்த்துக் கேட்டார்—
  ”ஏன் இப்படி?”
  “இன்னும் எத்தனை நாளைக்கு?”
  “நம் நாடுகளுக்கிடையேயான சண்டை?”
  “இந்த வெறுப்பு?”
  “இந்த விரோதம்?”
  “இப்படிக் காலணியில் துப்பிவைப்பதும்,கோக் புட்டியில் சிறுநீர் கழித்து வைப்பதும்////

  ஹா.ஹா.ஹா.ஹா...வித்தியாசமானபழிக்குப்பழி

  பதிலளிநீக்கு
 4. நான் கூட அவர் கோக்கில் துப்பி இருப்பாருண்ணுதான் நினைச்சேன். கடைசியில் சிரிப்ப அடக்க முடியல... ஹாஹாஹா

  பதிலளிநீக்கு
 5. ஹா...ஹா..ரொம்பப் பயங்கரமான பழிக்குப் பழியா இருக்கே..

  பதிலளிநீக்கு
 6. நல்லது நினைத்தால் நல்லது நடக்கும்

  தீயது நினைத்தால் பிரதிபலன் பழிக்குப்பழியாகவே இருக்கும்

  பகிவிற்க்கு மிக்க நன்றி..

  பதிலளிநீக்கு
 7. ஹா... ஹா... இப்படிப் பழி வாங்குவார் என்பதை எதிர்பார்க்கவேயில்லை. கலக்குறீங்க செ.பி. சார்!

  பதிலளிநீக்கு
 8. இது பழிக்கு பழி இல்லையே... ரெண்டு பேருமே பல்பு வாங்கி இருக்காங்க

  பதிலளிநீக்கு
 9. ‘தீதும் நன்றும் பிறர் தர வாரா’ என்பதை அழகாக எடுத்துக் காட்டியுள்ளீர்கள்.நன்றி.

  பதிலளிநீக்கு
 10. அடப்பாவிங்களா... ரொம்ப அதிகம்தான் இது.

  பதிலளிநீக்கு
 11. அடப்ப்பாவிகளா? இது ரொம்பவே அதிகமான Tit 4 Tat.,

  பதிலளிநீக்கு
 12. நான் இதை உன்னிடம் எதிர்பாக்கலபா!
  மொத்தம் மூனு பேரு பத்தி கதெ சொல்றெ!
  அதுலே ஒர்த்தன் மதகுரு அப்பாலே மத்த ரெண்டு பேரு தீவிரவாதிகளா?
  ஏம்பா இந்த கொலவெறி?
  இது நான் ஸ்கூல் போரப்ப அதுலெ வொரு ஸ்டோரி வரும்...அம்மா வீட்டு வேலை செய்றா, அப்பா வேலை சென்சு குடும்பத்தெ காப்பாத்ரார். தம்பி ஸ்கூல் பாடம் படிக்கிறான். தங்கச்சி அம்மாக்கு ஹெல்ப் பண்றா...அப்படீனு.
  ஸ்கூல் பொஸ்தகத்தில் இருப்பது கேப்மாரித்தனம்னா நீ யெய்தினதுக்கு இன்னாபா பேரு?
  உன்னே நல்லவன்னு என்னமாதிரி ரொம்ப பேரு நெனெக்கொறோன் வாத்தியாரே!
  மனசு ரொம்ப கஸ்டமா இர்க்குபா.
  அனா ஒண்ணுபா. வோன் கதீலே ரெண்டு கருத்து கீதுபா. ஒன்னு, வல்லவனுக்கு புல்லும் ஆய்தம்.
  ரென்டு, விதை வித்சா விதை வரும்...வினை வித்சா வினை வரும்.
  டக்கரா வர்துபா உனக்கு எய்த்து, எத்த யெய்தினாலும் ரோசிக்க வெக்குதுபா, நான் இன்னாவாவ்து தப்பா சொன்னா ஸாரிபா!!

  பதிலளிநீக்கு
 13. எத்தனுக்கு எத்தன் தான் ஹா ஹா ஹா

  த. ம 8

  பதிலளிநீக்கு
 14. இப்புடிக்கூடவா பண்ணுவாங்க ஹி...ஹி ..ஹி ...றொம்ப அதிகம் .
  மிக்க நன்றி ஐயா பகிர்வுக்கு .எல்லா ஓட்டும் போட்டாச்சு ..

  பதிலளிநீக்கு
 15. இந்த ரெண்டு பேருக்குமே எப்பவும் எழாம் பொருத்தம்தான் நான் நேரில் பார்த்துருக்கிறேன்.....

  பதிலளிநீக்கு
 16. கொடுமை கொடுமை வேற என்னாத்தை சொல்ல....

  பதிலளிநீக்கு
 17. வணக்கம் ஐயா,
  நலமா?
  உடல் நலக் குறைவால் உடனுக்குடன் வர முடியலை..
  அடடா....
  அருவருக்கும் வகையிலும் பழிக்குப் பழி வாங்கினால் திருந்தி விடுவார்கள் என்று அரபி நினைத்திருப்பாரோ?

  பதிலளிநீக்கு
 18. ஏன் பாஸ்! என்னா பழிவாங்கல்!!

  பதிலளிநீக்கு
 19. @சைதை அஜீஸ்
  அஜீஸ்,நகைச் சுவையை, நகைச் சுவையாகவே பாருங்கள்.இதில் கேப்மாறித்தனமோ.மொள்ளமாறித்தனமோ இருப்பதாக எனக்குத் தெரிய வில்லை. இதையே வேறு கோணத்தில் பாருங்கள். தீவிரவாதி என்பவன் இவ்வாறு செய்தால் இயல்பே.ஆனால் ஒரு மத குரு இவ்வாறு செய்யலாமா என்று யோசித்தால் உங்கள் கருத்தே மாறிவிடும்.இம்மாம் ஸொல்லியும் உனக்குப் பேஜார் ஆவுதுன்னா,நான் இன்னா சொல்ல? ஸாரி வாத்யாரே! டாங்க்ஸு!

  பதிலளிநீக்கு
 20. "என் ராஜபாட்டை"- ராஜா
  இனிமேல்தான் பார்க்கணும்!

  பதிலளிநீக்கு
 21. @MANO நாஞ்சில் மனோ
  நீங்க சொன்னாச் சரி!

  பதிலளிநீக்கு
 22. 2 மச்...முதல் வரி பார்த்ததும் பயந்தேன்...கடைசி வரி...Hilarious...

  பதிலளிநீக்கு
 23. இப்படிக்கூடவா பழிக்குப் பழி?

  பதிலளிநீக்கு
 24. @சைதை அஜீஸ், அது சரி , இந்த இடுக்கை அரேபியர்களையும் , யூதர்களையும் பற்றியது. இந்தியனான உங்களுக்கு ஏன் இதில் இவ்வளவு கோவம்.

  பதிலளிநீக்கு
 25. “இன்னும் எத்தனை நாளைக்கு?”
  “நம் நாடுகளுக்கிடையேயான சண்டை?”சமமாகும் வரை;

  பதிலளிநீக்கு
 26. வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு ......

  பதிலளிநீக்கு