தொடரும் தோழர்கள்

திங்கள், அக்டோபர் 31, 2011

வாழ்க்கை----!

இலையுதிர்த்து நின்ற மரத்தடியில் இருந்த
         நேற்றுப் பெய்த மழையில் முளைத்த காளான்
தலை நிமிர்த்திச் சிரித்தது மரத்தைப்  பார்த்து
          ”விரித்த குடையுடன் நான் நிற்க,மொட்டையாய் நீ” என்று!

மரம் பேசவில்லை;மௌனமாய் அழுதது
          காளானும் கேலி பேசும் தன் நிலைக்காக.
மறவாதே!மீண்டும் துளிர்க்கும் அந்த மரம்
           காளானின் வாழ்வு  எத்தனை நாள்?

……………………………………………………………………..

69 கருத்துகள்:

 1. முளைத்த காளான் பிடுங்கப்படும் அவித்துத் திங்க........

  பதிலளிநீக்கு
 2. சின்ன பசங்கல்லாம் ஓவரா ஆட்டம் போடக்கூடாதுன்னு சொல்றீங்க. ஓகே சார்.

  பதிலளிநீக்கு
 3. இப்படியும் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள்.

  நன்று.

  பதிலளிநீக்கு
 4. Arumaiyana kavithai. Manitharkalum than nilai unarndhal evvalav nanraga irukum.

  பதிலளிநீக்கு
 5. தன்னடக்கமாய் இருத்தல் தரணியில் உயர்ந்ததன்றோ? அருமையாய் எடுத்தியம்பியது உம் கவிதை. மிக மகிழ்ந்தேன். நன்று. நன்றி பகிர்விற்கு!

  பதிலளிநீக்கு
 6. சொம்மா சொல்லக்கூடாது வாத்தியாரே சூப்பரா சொல்லீட்டேபா!
  ஆனா பாரு, யானைக்கு வொரு காலம்னா பூனைக்கும் வொரு காலம்பா.
  அல்லாமே மாறக்கூடியதுதாம்பா!
  கவுர்தி இர்க்கோணம் ஆனா ஹெட்வெயீட் அகாதுபா!!
  வர்ட்டா

  பதிலளிநீக்கு
 7. யோசிக்க வைக்கிறது. கவிதை அருமை.

  பதிலளிநீக்கு
 8. மீண்டும் துளிர்க்கும் அந்த மரம்
  காளானின் வாழ்வு எத்தனை நாள்?// சிந்தனையைத் தூண்டும் வரிகள்.,

  பதிலளிநீக்கு
 9. நல்ல கவிதை சார் சொல்லும் பொருளும் அருமை. இரத்தின சுருக்கம்ன்னா இது தானா?

  பதிலளிநீக்கு
 10. @செங்கோவி
  திங்கக்கூடிய காளான் கூட இல்லை;வெறும் நாய்க்குடை!
  நன்றி.

  பதிலளிநீக்கு
 11. @சைதை அஜீஸ்

  கரீட்டு!
  டாங்க்ஸுப்பா!

  பதிலளிநீக்கு
 12. @koodal bala
  காலையில் மரத்தடியில் ஒரு நாய்க்குடை பார்த்தேன்;கவிதை பிறந்தது.அவ்வளவே.நோ உள்குத்து ஆர் வெளிக்குத்து!
  நன்றி.

  பதிலளிநீக்கு
 13. ஜூப்பர் கவிதை..

  மரம் மறுபடியும் துளிர்த்து நிக்கிறப்ப அதைப் பார்க்க நாய்க்குடை இருக்காதுங்கறதுதான் உண்மை.

  பதிலளிநீக்கு
 14. பிறரை குறை கூறும் முன் தன் நிலை நோக்கவேண்டும் என்ற கருத்துடன் கூடிய அருமையான புதுக்கவிதையைத் தந்தமைக்கு நன்றி.

  நாய்க்குடைகளும் காளான்கள் தான். சில நாய்க்குடைகள் விஷத்தன்மை வாய்ந்தவை.சில சாப்பிடக்கூடியவை. அதனால்தான் சாப்பிடக்கூடிய காளான்களை தேர்ந்தெடுத்து முறைப்படுத்தப்பட்ட வெப்பநிலையில் வளர்க்கிறார்கள்.இவைகள் Button Mushrooms என சொல்லப்படுகின்றன.(படித்ததை சொல்ல வாய்ப்பு கொடுத்தமைக்கு நன்றி.)

  பதிலளிநீக்கு
 15. நேற்றுப் பெய்த மழையில் முளைத்த காளான்
  தலை நிமிர்த்திச் சிரித்தது மரத்தைப் பார்த்து
  ”விரித்த குடையுடன் நான் நிற்க,மொட்டையாய் நீ” என்று!/

  காளானின் கர்வம் காலப்போகில் அழிய
  வசந்தகாலத்துல் துளிர்க்கும் மரம் //வாழ்வியல் தத்துவம்..

  பதிலளிநீக்கு
 16. @வே.நடனசபாபதி
  நன்றி-கருத்துக்கும் தகவலுக்கும்.

  பதிலளிநீக்கு
 17. @சி.பி.செந்தில்குமார்
  முதல்வரின் வாழ்த்துக்கு நன்றி!

  பதிலளிநீக்கு
 18. பணம் இருக்குன்னு ஆடாதேடா மனிதா, நீயேதான் அந்த காளான்'தான் என்பதை உணர்வாய்...!!!

  பதிலளிநீக்கு
 19. கொஞ்சமா சொன்னாலும் செவியில அறையிற மாதிரி நச்சின்னு சொல்லிட்டீங்க தல....!!!

  பதிலளிநீக்கு
 20. வாழ்க்கை தத்துவம் வகையா சொல்லியிருக்கீங்க.

  பதிலளிநீக்கு
 21. சிறு கவிதையில்
  வாழ்வியல் தத்துவம்...

  பதிலளிநீக்கு
 22. மிகவும் அருமை..

  பதிலளிநீக்கு
 23. கவிதையின் கருப்பொருள் நன்றாக இருக்கிறது சார். ஓடம் வண்டியில் போகும், வண்டியும் ஒரு நாள் ஓடத்தில் போகும் என்பது நினைவிற்கு வருகிறது. பகிர்விற்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 24. ஒரே நாள் ,அதே போல் தற்காலிக நிகழ்வு நிரந்தரமில்லை என்பதை உணர்த்தும் கவிதை அருமை

  த.ம. 14

  பதிலளிநீக்கு
 25. நறுக்குத்தெரித்தாற் போல் சொல்லிருக்கீங்க!

  பதிலளிநீக்கு
 26. @suryajeeva
  அதெல்லாம் ஒண்ணும் இல்லீங்க.
  நன்றி.

  பதிலளிநீக்கு
 27. நல்ல கவிதை ... சொல்லும் பொருளும் அருமை...

  பதிலளிநீக்கு
 28. என்னதான் இருந்தாலும் சிறியவர்கள் சிறியவர்கள்தான் பெரியவர்கள் பெரியவர்கள்தான் அசத்தலான இந்தக் கவிதையின் உட்பொருள் விளக்கம் அருமை ஐயா மிக்க நன்றி பகிர்வுக்கு ......எல்லா ஓட்டும் போட்டாச்சு .

  பதிலளிநீக்கு
 29. வலியது வாழும், மெலியது அழியும் எனும் தத்துவத்தினை உங்களின் இக் கவிதை எனக்கு நினைவூட்டுகிறது ஐயா.

  பதிலளிநீக்கு