தொடரும் தோழர்கள்

திங்கள், அக்டோபர் 10, 2011

பரல்கள்!

இன்றைய பரல்களில் முதலில் ஜோக்ஸ்—

ராமு:நேத்து நான் உன் வீட்டுக்கு வந்தப்ப டி.வி.ல சீரியல் பார்த்து அழுதிட்டிருந்தே!சீரியல் பார்த்து அழுவற முதல் ஆம்பிளை நீதாண்டா.

சோமு: டேய்!அது சீரியல் இல்லடா.என் கல்யாண சி.டி.!

இரண்டு பெண்கள்:

முதல்பெண்: என் கணவர் ,திருமணமான புதுசிலே என்னைத் ’தேவயானி,தேவயானி’ ன்னு கொஞ்சுவாரு.

இரண்டாமவள்:இப்போ?

முதல்:தேவையா நீ,தேவையா நீன்னு எரிஞ்சு விழுறாரு!

புத்தர் ஒரு முறை தன் சீடர்களுடன் பயணம் சென்று கொண்டிருந்தார். செல்லும் வழியில்,ஒரு சிறு நீர்நிலையைக் கண்டார்.ஒரு சீடனிடம் அங்கிருந்து குடிக்க நீர் கொண்டுவருமாறு சொன்னார்.அவன் செல்லும் முன்பே ஒரு மாட்டு வண்டி அந்த நீர் வழியாகச் சென்றது.சீடன் சென்று பார்த்த போது நீர் கலங்கியிருந்தது.இதை எப்படி புத்தருக்குக் கொடுப்பது என்று அவன் திரும்பி வந்து,புத்தரிடம் விவரம் சொன்னான்.சிறிது நேரம் கழித்து புத்தர் அந்த சீடனிடனிடம் மீண்டும் சென்று வரப் பணித்தார். அவன் சென்று பார்த்தான்.நீர் சிறிது தெளிந்திருந்தாலும், இன்னும் கலங்கலாகவே இருந்தது.அவன் திரும்பி வந்து புத்தரிடம் சொன்னான். சிறிது நேரம் சென்றது.புத்தர் மீண்டும் அவனைப் போய் வரச் சொன்னார்.

இம்முறை சென்று பார்த்தபோது நீர் தெளிவடைந்திருந்தது.எடுத்து வந்து புத்தரிடம் கொடுத்தான்.

புத்தர் அந்தச் சீடனைப் பார்த்துச் சொன்னார்”அந்த நீர் தெளிவதற்காக நீ என்ன செய்தாய்?அதை அப்படியே விட்டு விட்டாய்.நேரம் சென்றதும் நீர் தானே தெளிந்து விட்டது.உன் மனமும் இது போன்றதுதான்.குழப்பம் ஏற்படும்போது அதை அப்படியே விடு.சிறிது நேரம் சென்றதும் அது தானே தெளியும்.நீ அதற்காக எந்தப் பயிற்சியும் செய்ய வேண்டியதில்லை.அது தானே நடக்கும்.”

ஆம்!

மன அமைதியைப் பெறக் கடினமாக எதுவும் செய்ய வேண்டியதில்லை. முயற்சியின்றித்தானே நடக்கும்.

அவலம்.(புதுக்கவிதை)

----------

இளம் வயதில் விதவையான

நார்மடிப் பாட்டிக்கு

நரை சிரைக்கும் நாவிதனின்

ஸ்பரிசமும்

சிலிர்ப்புதான்!

(இது அந்தக் கால அவலம் பற்றிய கவிதை.நார்மடி என்பது தலை மழித்த பிராமண விதவைகளணியும் ஒரு புடவை)

61 கருத்துகள்:

 1. தேவையானி காமெடி சூப்பர் புதுசாவும் இருக்கு

  பதிலளிநீக்கு
 2. //நேரம் சென்றதும் நீர் தானே தெளிந்து விட்டது.உன் மனமும் இது போன்றதுதான்.குழப்பம் ஏற்படும்போது அதை அப்படியே விடு.சிறிது நேரம் சென்றதும் அது தானே தெளியும்.//

  சூப்பர் ஐயா.

  பதிலளிநீக்கு
 3. தேவையா இல்லையா= தேவயானி! ஹா ஹா ஹா

  பதிலளிநீக்கு
 4. பரல்கள் அருமை...

  பதிலளிநீக்கு
 5. //நேரம் சென்றதும் நீர் தானே தெளிந்து விட்டது.உன் மனமும் இது போன்றதுதான்.குழப்பம் ஏற்படும்போது அதை அப்படியே விடு.சிறிது நேரம் சென்றதும் அது தானே தெளியும்.//
  எங்க.. ஒவ்வொரு மாட்டு வண்டியா போய்கிட்டே இருந்தா எப்போ தண்ணி தெளியறது?

  பதிலளிநீக்கு
 6. இளம் வயது விதவைகள் நிறைந்த சமூகத்தின் பிரதிபலிப்பாய் இருந்த நல்ல கவிதை.

  பதிலளிநீக்கு
 7. தேவையா நீ!.... :))))

  //மன அமைதியைப் பெறக் கடினமாக எதுவும் செய்ய வேண்டியதில்லை. முயற்சியின்றித்தானே நடக்கும்.//

  நல்ல கருத்து....

  நார்மடி... :(

  பதிலளிநீக்கு
 8. நல்ல நகைச்சுவையுடன் ,அழகான தத்துவம் .
  பகிர்வுக்கு நன்றி ஐயா

  தமிழ் மணம் எட்டு

  பதிலளிநீக்கு
 9. அண்ணே முதலிரண்டும் ஒன்னு சொல்றதுக்கு இல்ல(வீட்டுல எலி!)

  புத்தர்..சாரிண்ணே...எனக்கு இவர் மேல் பெரிய மரியாதை இல்லை!..எனவே இவர் சொன்னது எடுத்துக்க முடியல..மன்னிக்கவும்..!

  கடைசி விஷயம் கொடுமையின் உச்சம்!

  பதிலளிநீக்கு
 10. நகைச்சுவைகள் சிரிக்கவைத்தன..

  புத்தர் கதை சிந்திக்கவைத்தது..

  அருமை..

  பதிலளிநீக்கு
 11. பந்து கூறியது போல் வண்டி மேல் வண்டியாக போய் மனம் சேறாக தான் இருக்கிறது, எங்கப்பா? தெளிய விடுறானுங்க...

  பதிலளிநீக்கு
 12. ஐயா!

  அவலக் கவிதை அக்கால
  சமூகக்கொடுமைக்கு ஓர் எடுத்துக்
  காட்டு!

  புலவர் சா இராமாநுசம்

  பதிலளிநீக்கு
 13. என் கல்யாண cd ???பலபேருக்கு அப்படித்தான்.தேவயாணி ஹா ஹா !!!!!!!.அடுத்து ஒரு தத்துவம் .அருமை .கடைசியில் நிச்சயம் அது அவலம் தான் .

  பதிலளிநீக்கு
 14. C.P. செந்தில்குமார் கூறியது...

  //தேவையானி காமெடி சூப்பர் புதுசாவும் இருக்கு//
  நன்றி சிபி.

  பதிலளிநீக்கு
 15. நண்டு @நொரண்டு -ஈரோடு கூறியது...

  //ஹா..ஹா...//
  நன்றி

  பதிலளிநீக்கு
 16. வைரை சதிஷ் கூறியது...

  // சூப்பர் காமெடி ஹி.....ஹி....//
  நன்றி சதீஷ்.

  பதிலளிநீக்கு
 17. செங்கோவி கூறியது...

  //நேரம் சென்றதும் நீர் தானே தெளிந்து விட்டது.உன் மனமும் இது போன்றதுதான்.குழப்பம் ஏற்படும்போது அதை அப்படியே விடு.சிறிது நேரம் சென்றதும் அது தானே தெளியும்.//

  //சூப்பர் ஐயா.//
  நன்றி செங்கோவி.

  பதிலளிநீக்கு
 18. FOOD கூறியது...

  //தேவையா இல்லையா= தேவயானி! ஹா ஹா ஹா//

  நன்றி சார்.

  பதிலளிநீக்கு
 19. ரெவெரி கூறியது...

  //பரல்கள் அருமை...//
  நன்றி ரெவெரி.

  பதிலளிநீக்கு
 20. bandhu கூறியது...

  //நேரம் சென்றதும் நீர் தானே தெளிந்து விட்டது.உன் மனமும் இது போன்றதுதான்.குழப்பம் ஏற்படும்போது அதை அப்படியே விடு.சிறிது நேரம் சென்றதும் அது தானே தெளியும்.//
  //எங்க.. ஒவ்வொரு மாட்டு வண்டியா போய்கிட்டே இருந்தா எப்போ தண்ணி தெளியறது?//

  அவசியமே இல்லாத சில மாட்டு வண்டிகளையும் நாம் அனுமதிக் கிறோம், எனவே வேண்டாத குழப்பம்.
  நன்றி bandhu

  பதிலளிநீக்கு
 21. விமலன் கூறியது...

  //இளம் வயது விதவைகள் நிறைந்த சமூகத்தின் பிரதிபலிப்பாய் இருந்த நல்ல கவிதை.//
  நன்றி விமலன்.

  பதிலளிநீக்கு
 22. வெங்கட் நாகராஜ் கூறியது...

  //தேவையா நீ!.... :))))

  //மன அமைதியைப் பெறக் கடினமாக எதுவும் செய்ய வேண்டியதில்லை. முயற்சியின்றித்தானே நடக்கும்.//

  நல்ல கருத்து....

  நார்மடி... :(//
  நன்றி வெங்கட்.

  பதிலளிநீக்கு
 23. M.R கூறியது...

  // நல்ல நகைச்சுவையுடன் ,அழகான தத்துவம் .
  பகிர்வுக்கு நன்றி ஐயா

  தமிழ் மணம் எட்டு//
  நன்றி ரமேஷ்.

  பதிலளிநீக்கு
 24. விக்கியுலகம் கூறியது...

  //அண்ணே முதலிரண்டும் ஒன்னு சொல்றதுக்கு இல்ல(வீட்டுல எலி!)

  புத்தர்..சாரிண்ணே...எனக்கு இவர் மேல் பெரிய மரியாதை இல்லை!..எனவே இவர் சொன்னது எடுத்துக்க முடியல..மன்னிக்கவும்..!

  கடைசி விஷயம் கொடுமையின் உச்சம்!//
  நன்றி விக்கி.

  பதிலளிநீக்கு
 25. முனைவர்.இரா.குணசீலன் கூறியது...

  // நகைச்சுவைகள் சிரிக்கவைத்தன..

  புத்தர் கதை சிந்திக்கவைத்தது..

  அருமை..//
  நன்றி ஐயா.

  பதிலளிநீக்கு
 26. suryajeeva கூறியது...

  //பந்து கூறியது போல் வண்டி மேல் வண்டியாக போய் மனம் சேறாக தான் இருக்கிறது, எங்கப்பா? தெளிய விடுறானுங்க...//
  வேண்டாத வண்டிகளுக்கு அனுமதி மறுத்து விடுங்கள்!(சொல்வது எளிது,சொல்லி விட்டேன்!)
  நன்றி சூரியஜீவா

  பதிலளிநீக்கு
 27. புலவர் சா இராமாநுசம் கூறியது...

  // ஐயா!

  அவலக் கவிதை அக்கால
  சமூகக்கொடுமைக்கு ஓர் எடுத்துக்
  காட்டு!//
  நன்றி ஐயா.

  பதிலளிநீக்கு
 28. manoharan கூறியது...

  //என் கல்யாண cd ???பலபேருக்கு அப்படித்தான்.தேவயாணி ஹா ஹா !!!!!!!.அடுத்து ஒரு தத்துவம் .அருமை .கடைசியில் நிச்சயம் அது அவலம் தான் .//
  நன்றி மனோகரன்.

  பதிலளிநீக்கு
 29. நகைச்சுவை துணுக்குகள் ஆகட்டும், அறிவுரை ஆகட்டும், கவிதை ஆகட்டும் ஒவ்வொன்றும் அருமை. கவிதை மனதை ஏதோ செய்தது உண்மை.

  பதிலளிநீக்கு
 30. பரல்கள்-உணர்ச்சிகளின் கலவை!

  பதிலளிநீக்கு
 31. மன அமைதியைப் பெறக் கடினமாக எதுவும் செய்ய வேண்டியதில்லை. முயற்சியின்றித்தானே நடக்கும்./


  நடப்பது தானே நட்க்கும்!

  நடப்பதுதானே நடக்கும்??

  பதிலளிநீக்கு
 32. நல்ல தொகுப்புக்கள் ஜயா நகைச்சுவைகள் சூப்பர்

  பதிலளிநீக்கு
 33. ராமு:நேத்து நான் உன் வீட்டுக்கு வந்தப்ப டி.வி.ல சீரியல் பார்த்து அழுதிட்டிருந்தே!சீரியல் பார்த்து அழுவற முதல் ஆம்பிளை நீதாண்டா.

  சோமு: டேய்!அது சீரியல் இல்லடா.என் கல்யாண சி.டி.! அருமையான நகைச்சுவை வாழ்த்துக்கள் ஐயா .மிக்க நன்றி பகிர்வுக்கு ......

  பதிலளிநீக்கு
 34. வே.நடனசபாபதி கூறியது...

  // நகைச்சுவை துணுக்குகள் ஆகட்டும், அறிவுரை ஆகட்டும், கவிதை ஆகட்டும் ஒவ்வொன்றும் அருமை. கவிதை மனதை ஏதோ செய்தது உண்மை.//
  நன்றி ஐயா.

  பதிலளிநீக்கு
 35. கோகுல் கூறியது...

  //பரல்கள்-உணர்ச்சிகளின் கலவை!//
  நன்றி கோகுல்.

  பதிலளிநீக்கு
 36. இராஜராஜேஸ்வரி கூறியது...

  மன அமைதியைப் பெறக் கடினமாக எதுவும் செய்ய வேண்டியதில்லை. முயற்சியின்றித்தானே நடக்கும்./


  //நடப்பது தானே நட்க்கும்!

  நடப்பதுதானே நடக்கும்??//

  கிட்டத்தட்ட ஆழ்நிலைத்தியானம் என்பது இது போலத்தான்.let the mind float என்று சொல்வார்கள்.
  நன்றி.

  பதிலளிநீக்கு
 37. மைந்தன் சிவா கூறியது...

  //ஹிஹி கல்யாண சிடி ஹிஹிஹி//
  நன்றி சிவா.

  பதிலளிநீக்கு
 38. K.s.s.Rajh கூறியது...

  // நல்ல தொகுப்புக்கள் ஜயா நகைச்சுவைகள் சூப்பர்//
  நன்றி ராஜ்

  பதிலளிநீக்கு
 39. அம்பாளடியாள் கூறியது...

  ராமு:நேத்து நான் உன் வீட்டுக்கு வந்தப்ப டி.வி.ல சீரியல் பார்த்து அழுதிட்டிருந்தே!சீரியல் பார்த்து அழுவற முதல் ஆம்பிளை நீதாண்டா.

  சோமு: டேய்!அது சீரியல் இல்லடா.என் கல்யாண சி.டி.! //அருமையான நகைச்சுவை வாழ்த்துக்கள் ஐயா .மிக்க நன்றி பகிர்வுக்கு //
  நன்றி அம்பாளடியாள்.

  பதிலளிநீக்கு
 40. கல்யாண சிடியைப் பார்த்து அழுத ஜோக்கும், புத்தர் கதையும் முறையே சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தன. இரண்டுக்கும் இடம்தந்த பரல்கள் அருமை ஐயா...

  பதிலளிநீக்கு
 41. கணேஷ் கூறியது...

  //கல்யாண சிடியைப் பார்த்து அழுத ஜோக்கும், புத்தர் கதையும் முறையே சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தன. இரண்டுக்கும் இடம்தந்த பரல்கள் அருமை ஐயா...//
  நன்றி கணேஷ்.

  பதிலளிநீக்கு
 42. நகைச்சுவை சிரிப்பு ரகம்... கவிதை நல்ல ரகம்... அனைத்தும் அருமை ரகம் வாழ்த்துக்கள்..!

  பதிலளிநீக்கு
 43. முதல்பெண்: என் கணவர் ,திருமணமான புதுசிலே என்னைத் ’தேவயானி,தேவயானி’ ன்னு கொஞ்சுவாரு.

  இரண்டாமவள்:இப்போ?

  முதல்:தேவையா நீ,தேவையா நீன்னு எரிஞ்சு விழுறாரு!//

  அய்யய்யோ சிரிச்சி முடியல தல....!!!

  பதிலளிநீக்கு
 44. கடைசி, வேதனையின் உசசம், மனசு தவிக்குது...

  பதிலளிநீக்கு
 45. முதல் ஜோக் சூப்பர்! :-)

  புத்தரின் தத்துவம் செம்ம டச்சிங்!

  கவிதை சொல்லவே வேணாம்! கலக்கல் பாஸ்!

  பதிலளிநீக்கு
 46. சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த நகைச்சுவை மிகவும் அருமை.

  பதிலளிநீக்கு
 47. Nirosh கூறியது...

  // நகைச்சுவை சிரிப்பு ரகம்... கவிதை நல்ல ரகம்... அனைத்தும் அருமை ரகம் வாழ்த்துக்கள்..!//
  நன்றி நிரோஷ்.

  பதிலளிநீக்கு
 48. MANO நாஞ்சில் மனோ கூறியது...

  முதல்பெண்: என் கணவர் ,திருமணமான புதுசிலே என்னைத் ’தேவயானி,தேவயானி’ ன்னு கொஞ்சுவாரு.

  இரண்டாமவள்:இப்போ?

  முதல்:தேவையா நீ,தேவையா நீன்னு எரிஞ்சு விழுறாரு!//

  //அய்யய்யோ சிரிச்சி முடியல தல....!!!//
  :-D நன்றி மனோ.

  பதிலளிநீக்கு
 49. MANO நாஞ்சில் மனோ கூறியது...

  //கடைசி, வேதனையின் உசசம், மனசு தவிக்குது...//
  அதனால்தான் ’அவலம்’

  பதிலளிநீக்கு
 50. ஜீ... கூறியது...

  //முதல் ஜோக் சூப்பர்! :-)

  புத்தரின் தத்துவம் செம்ம டச்சிங்!

  கவிதை சொல்லவே வேணாம்! கலக்கல் பாஸ்!//
  நன்றி ஜீ.

  பதிலளிநீக்கு
 51. C.P. செந்தில்குமார் கூறியது...

  // Dhevayani jok super//
  இரண்டாவது கமெண்ட்டுக்கு இரண்டாவது நன்றி.

  பதிலளிநீக்கு
 52. கே. ஆர்.விஜயன் கூறியது...

  // சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த நகைச்சுவை மிகவும் அருமை.//
  வாங்க இனிய விஜயன். மறந்துட்டீங்க!
  நன்றி.

  பதிலளிநீக்கு
 53. // டேய்!அது சீரியல் இல்லடா.என் கல்யாண சி.டி.!//

  ஐயா , அது ஆனந்த கண்ணீரா இருக்க போகுது. அப்படி சொல்லியாவது கொஞ்சம் பேரை ஆறுதல் படுத்துவோம்

  பதிலளிநீக்கு
 54. நார்மடி கவிதை brilliant! சமீபத்தில் படித்த சிறந்த கவிதை.

  பதிலளிநீக்கு
 55. உங்கள் நண்பன் கூறியது...

  // டேய்!அது சீரியல் இல்லடா.என் கல்யாண சி.டி.!//

  // ஐயா , அது ஆனந்த கண்ணீரா இருக்க போகுது. அப்படி சொல்லியாவது கொஞ்சம் பேரை ஆறுதல் படுத்துவோம்//

  :) நன்றி நண்பரே.

  பதிலளிநீக்கு
 56. அப்பாதுரை கூறியது...

  // நார்மடி கவிதை brilliant! சமீபத்தில் படித்த சிறந்த கவிதை.//
  மிக்க நன்றி அப்பாதுரை.

  பதிலளிநீக்கு
 57. வணக்கம் ஐயா,
  பரல்களுக்கு மகுடமாய் முதல் இரு ஜோக்கும் அமைந்திருக்கிறது.

  பதிலளிநீக்கு
 58. நிரூபன் கூறியது...

  //வணக்கம் ஐயா,
  பரல்களுக்கு மகுடமாய் முதல் இரு ஜோக்கும் அமைந்திருக்கிறது.//
  நன்றி நிரூ.

  பதிலளிநீக்கு