தொடரும் தோழர்கள்

திங்கள், அக்டோபர் 24, 2011

ஜாலியா ஒரு வலைப்பூ மாலை--கவுஜ!

நேற்று இரவு மெட்ராஸ் பவன் ஸ்பெசல் மீல்ஸ்

சோற்றைத் தின்ற பின் வெளியே வந்து நான்

நடக்கத்தொடங்கினேன் என் ராஜபாட்டையில்

நண்பர்கள் சிலரைச் சந்திக்க எண்ணி!

வந்தார் எதிரே நண்பர் நாஞ்சில் மனோ

சொந்தமாய்க்கேட்டேன் நண்பா நலமா?

சொன்னார் அவர் “நலமே நான் நலமே

அன்பு உலகம் இது எனக்கென்ன குறை?”

இந்த இனிய சொற்களை கேட்ட பின்

என் மனம் சிட்டுக்குருவியாய்ப் பறந்தது.

செல்லும் வழியில் பார்த்தேன் ஒரு போஸ்டர்

“எல்லோரும் விரும்பும் மேஜிக் ஷோ” என்று

பார்க்க விரும்பினேன் அம் மாய உலகம்

ஆர்வமிருப்பினும் நேரமில்லை!

மேலும் சென்ற பின் பார்த்தேன் ஆங்கோர்

சோலை நடுவே வசந்த மண்டபம்.

முன்னேகோவில் இதன் பிரகாரத்தில்தான்

என் காதல் பயிருக்கு நாற்று நடப்பட்டது!

எங்கெங்கோ போய்த் தேடினாலும் இந்தச்

செங்கோவில் போல் ஆகுமா அது?

பக்தைகள் பலர் எதிரே வந்தனர்

அத்தனை பேரும் அம்பாளடியாள்கள்

Kavithaigal படைக்க மனம் துடிக்குது

கற்பனை ஏனோ வறண்டு கிடக்குது.

இல்லம் திரும்பினேன்,தம்பி சொன்னான்

நல்ல வேலை கிடைத்தது என்று-அட்ராசக்க!57 கருத்துகள்:

 1. அருமை அருமை, வலைச்சரம் அருமை

  பதிலளிநீக்கு
 2. தீபாவளி வாழ்த்துக்கள் ஐயா

  அருமையான கோர்வை

  த.ம 5

  பதிலளிநீக்கு
 3. நல்ல கவிதை.

  உங்களுக்கும் இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துகள்.....

  பதிலளிநீக்கு
 4. அட்ரா அட்ரா அட்ரா சக்கைன்னானாம் ஹா ஹா ஹா ஹா அசத்தல் தல....

  பதிலளிநீக்கு
 5. எதிரே நண்பர் நாஞ்சில் மனோ சொந்தமாய்க்கேட்டேன் நண்பா நலமா? சொன்னார் அவர் “நலமே நான் நலமே//

  அய்யய்யோ தல, நான் உங்களை நலம் விசாரிக்க மறந்துட்டேனே, சிபி'யை அவசரமாய் நாலு மிதி மிதிக்க ஓடிட்டு இருந்தேன் ஹி ஹி...

  பதிலளிநீக்கு
 6. @வெங்கட் நாகராஜ்
  நன்றி.தீபாவளி நல் வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 7. @MANO நாஞ்சில் மனோ
  சிபியை ஒரு வழி பண்ணிடுவீங்க!ஹா,ஹா.

  பதிலளிநீக்கு
 8. @MANO நாஞ்சில் மனோ
  தீபாவளி நல்வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 9. அருமை.
  மனப்பூர்வ தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 10. அருமையோ அருமை!ஒரு கவிதை போல் அத்தனை(கிட்டத்தட்ட)பதிவர்களையும் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தி விட்டீர்கள்!வாழ்த்துக்கள்!!!!இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
 11. //எங்கெங்கோ போய்த் தேடினாலும் இந்தச்

  செங்கோவில் போல் ஆகுமா அது?//

  என் பேரை எப்படிச் சேர்க்க முடியும்னு நினைச்சேன்...சேர்த்துட்டீங்களே..

  ஐயா & ஐயாவின் குடும்பத்தார்க்கு இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 12. ஜயா அற்புதம் கலக்கீட்டீங்க..திரும்ப திரும்ப பல முறை படித்தேன் அழகு..

  இனிய தீபாவளி வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 13. அருமையான படைப்பு.
  என் இனிய
  அன்பின் நண்பனுக்கு .
  இனிய தீபாவளி நல்
  வாழ்த்துக்கள் .
  அன்பின் .
  "யானைக்குட்டி "
  ஞானேந்திரன்

  பதிலளிநீக்கு
 14. அருமையான படைப்பு.
  என் இனிய
  அன்பின் நண்பனுக்கு .
  இனிய தீபாவளி நல்
  வாழ்த்துக்கள் .
  அன்பின் .
  "யானைக்குட்டி "
  ஞானேந்திரன்

  பதிலளிநீக்கு
 15. சில வலைப்பூக்களை கோத்து அழகிய மாலையாக ஆக்கியிருக்கிறீர்கள். நன்றாக உள்ளது. உங்களுக்கு இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 16. ஹா ஹா மேஜிக் ஷோ பார்த்தீர்களா... பகிர்வுக்கு நன்றி அன்பரே!

  பதிலளிநீக்கு
 17. தங்களுக்கும், தங்களது குடும்பத்துக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் அன்பரே!... மகிழ்ச்சியும், வளமும் பெருகட்டும்...

  பதிலளிநீக்கு
 18. தீபாவளி நல்வாழ்த்துக்கள்...

  http://anubhudhi.blogspot.com/

  பதிலளிநீக்கு
 19. எல்லா பெயரையும் கலந்து அருமையாக படைத்திருக்கிறீர்கள்,

  தீபாவளி வாழ்த்துக்கள் சார்

  பதிலளிநீக்கு
 20. இன்னா நைனா
  அப்பாலே தீபாலிக்கு பான்ட் சொக்கா அல்லான் வாங்கிட்டியா?
  டப்பாஸெ பாத்து சுளுவா வெடி!
  அப்டீயே வூட்லே அல்லாருக்கும் தீவாலி வாய்த்த சொல்லிகோபா!

  பதிலளிநீக்கு
 21. இனிய காலை வணக்கம் ஐயா,
  நலமா?

  உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் உளம் கனிந்த இன்பத் தீபத் திருநாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்!

  பதிலளிநீக்கு
 22. பதிவர்களின் பெயர்களை பொருட் பிரிப்பின்றி அசத்தலாக தொகுத்து ஒரு கவிதை தந்திருக்கிறீங்க.

  ரசித்தேன் ஐயா.

  பதிலளிநீக்கு
 23. @Rathnavel
  நன்றி ஐயா.இனிய தீபாவளி வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 24. @Yoga.S.FR
  நன்றி.இனிய தீபாவளி வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 25. @செங்கோவி
  நன்றி.இனிய தீபாவளி வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 26. @யானைக்குட்டி@ ஞானேந்திரன்
  நன்றி நண்பா!
  மனங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 27. எப்படி ஐயா இப்படி ... பேஷ் பேஷ் ரொம்ப நன்னாயிருந்தது ...

  பதிலளிநீக்கு
 28. @மாய உலகம்
  தீபாவளி நல் வாழ்த்துகள் உங்களுக்கும் உரித்தாகுக.

  பதிலளிநீக்கு
 29. @Sankar Gurusamy
  நன்றி.தீபாவளி நல் வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 30. @பாலா
  நன்றி.
  தீபாவளி நல் வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 31. @சைதை அஜீஸ்
  படா சோக்காக்கீது நைனா வால்த்து.டாங்க்ஸ் வாத்த்யாரே! உங்களுக்கும் வால்த்து.

  பதிலளிநீக்கு
 32. @நிரூபன்
  உங்களுக்கும் என மனங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 33. மெட்ராஸ் பவன்..பில் கட்டாம போயிட்டீங்க..

  பதிலளிநீக்கு
 34. வணக்கமையா அருமையான கோர்வை உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார்க்கும் எனது தீபாவளி வாழ்த்துக்கள்..

  பதிலளிநீக்கு
 35. ! சிவகுமார் !
  500 ரூபாய் கொடுத்தேன்,நீங்க பாக்கி கொடுக்கவில்லை!

  பதிலளிநீக்கு