தொடரும் தோழர்கள்

செவ்வாய், அக்டோபர் 11, 2011

விதி---(சிறுகதை)

உங்களுக்கு சந்தோஷம் தருவது எதுவெல்லாம்,பாலு?”

இந்தக் கேள்வியை ரமா கேட்க வேண்டும் எனக்காத்திருந்தவன் போல,கேட்பாள் என எதிர்பார்த்திருந்தவன் போல,ஒரு விநாடி கூடச் சிந்திக்காமல் பதில் சொல்ல ஆரம்பித்தான் பாலு.

“எனக்குச் சந்தோஷம் தரும் விஷயங்கள் நிறைய இருக்கு ,ரமா.சந்தோஷம்கறது பெரிசாத்தான் இருக்கணும்கறது இல்லே.சின்னச் சின்ன சந்தோஷங்கள் எவ்வளவோ இருக்கு.வாழ்க்கையே சின்னச் சின்ன சந்தோஷங்களினாலான தோரணம்தான். சிலவற்றை மட்டும் சொல்றேன். இன்னைக்குச் சனிக்கிழமையில்லையா?இன்றிலிருந்தே ஆரம்பிக்கிறேன்.இன்று ராத்திரி படுக்கும்போது,நாளை காலையில் சீக்கிரம் எழுந்து, எந்திர கதியில் எல்லாம் முடித்துஆஃபீசுக்கு ஓட வேண்டாம்கற நினைப்பில் ஒரு சந்தோஷம்!

“நாளைக்காலை,நல்லா விழிச்ச பிறகும்,சோம்பேறித்தனமா படுக்கையில் புரள்வது ஒரு சந்தோஷம்!மத்தியானம் மெஸ்ஸில் போடும் ஸ்பெசல் சாப்பாட்டை ஒரு பிடி பிடிச்சுட்டு வந்துசாயந்திரம் வரை தூங்கறது ஒரு சந்தோசம்.திங்கட்கிழமை ஆஃபீஸ் போகணுமேங்கற எரிச்சலையும் மீறிவர சந்தோஷம்,ஒரு நாள் இடைவெளிக்கப்புறம்,சாயந்திரம் ரமாவைப் பார்க்கப் போகிறோம்கற நினைப்பிலே வர சந்தோஷம்.உன்னோடு இருக்கும்போது, உன்னைப்பத்தி நினைக்கும்போதெல்லாமே சந்தோஷம்தான்.

இன்னும் எதிர்காலச் சந்தோஷங்களைப் பற்றிச்சொல்லணும்னா,நாம ரெண்டு பேரும் தம்பதியா இணைந்து வாழப்போறது சந்தோஷம்,எந்த இடைஞ்சலுமில்லாம,எந்தப் பொறுப்புகளும் இல்லாம,நாம,ஜாலியா,ஃப்ரீயா,வாழ்க்கையை அனுபவிக்கப் போறது பெரிய சந்தோஷம்.”

மூச்சு விடாமல் பேசியபேச்சின் இடையே ரமா குறுக்கிட்டாள்.
“நாம,கல்யாணத்துக்கப்புறம் வாழப்போற வாழ்க்கையிலே,முக்கியமான சந்தோஷம் ஒண்ணு இருக்கே,அதைப் பத்தி?

எதைச் சொல்றே ரமா?”

”உம்,வள்ளுவர் சொன்ன குழலுக்கும் யாழுக்கும் பெரிய இன்பம்!”

பாலுவின் முகம் சுருங்கியது.”நான் ஃப்ரீயா வாழ்க்கையை அனுபவிக்கப்ப்போறது எனச் சொன்னதிலேயே,பதில் இருக்கிறது.”

ரமா நம்ப முடியாமல் அவனைப் பார்த்தாள்.

“உண்மையாகத்தான் சொல்கிறீர்களா பாலு?”

”ஆமாம்”

”இது விளயாட்டில்லையே?”

"இதில் விளையாட என்ன இருக்கிறது ரமா?குழந்தைகள் ஒரு சுமை,இடைஞ்சல்னு நான் நினைக்கிறேன்.அதனால்,நாமிருவர் மட்டும்தான்,நமக்கிருவர் கிடையாது”

“இதில் என் அபிப்பிராயம்னு ஒண்ணு இருக்கில்லையா?”ரமாவின் குரலில்சிறிது கோபம் தொனித்தது.

“கல்யாணத்துக்கப்புறம் என் அபிப்பிராயம்தான் முக்கியம் .எனக்குப் பிடிக்கிறதுதான் உனக்கும் .பிடிக்கணும்.”

“அப்போ,எனக்குன்னு சிந்தனைகளோ,சொந்த அபிப்பிராயங்களோ,விருப்பு வெறுப்புக்களோ இருக்கக் கூடாதுங்கிறிங்களா?--ரமாவின் குரலில் இன்னும் சிறிது வேகம் கோபம்.

“இருக்கலாம்.ஆனால் தன் அபிப்பிராயங்களை மூட்டை கட்டி வச்சுட்டுக் கணவனோடு ஒத்துப் போறவதான் ஒரு நல்ல மனைவிங்கறது-வெல்-என் அபிப்பிராயம்”

ரமா எழுந்தாள்.புடவையில் ஒட்டியிருந்த மணலைத் தட்டி விட்டுப் புடவையின் சுருக்கங்களைச் சரி செய்து கொண்டாள்.பாலுவைப் பார்த்து ஆங்கிலத்தில்-அவர்களிடையே நெருக்கம் குறைந்து விட்டதுஎன உணர்த்துவதற்கான ஒரு உத்தியே போல்--பேச ஆரம்பித்தாள்

“நல்லது,என் இனிய நண்பரே!நான் போகிறேன்.இனி நாம் சந்திக்க வேண்டிய அவசியம் இல்லை”

பாலு குறுக்கிட்டான்”நான் குழந்தை வேண்டாம் என்று சொன்னதாலா இந்த முடிவு?”

ரமா ஆங்கிலத்திலேயே தொடர்ந்தாள்”எனக்குக் குழந்தைகளை மிகவும் பிடிக்கும் எனத்தெரிந்தும் நீங்கள் தெரிவித்த அபிப்பிராயத்துக்காக நான் உங்களை மன்னித்துக் கூட விடலாம்.ஆனால் அதைச் சொன்ன விதத்தில் நீங்கள் உங்களைத் தோலுரித்துக் காட்டி விட்டீர்கள்.நீங்கள் பெண்களை அடிமையாய் நினைக்கும் ஆண் என்பதைக் காட்டி விட்டீர்கள்.இனி நாம் சேர முடியாது.எனவே விடை பெறுகிறேன்.”

செருப்பை மாட்டிக் கொண்டு ரமா அந்த இடத்திலிருந்தும்,அவன் வாழ்விலிருந்தும் விலகிச் சென்று விட்டாள்.

இப்படித்தான் அவர்கள் பிரிந்தார்கள்.குழந்தை எனும் ஒரு சந்தோஷத்தைக் காரணமாக வைத்துத்தான் பிரிந்தார்கள்.இனி சந்திக்கப் போவதேயில்லை என்று எண்ணிக் கொண்டுதான் பிரிந்தார்கள்.

ஆனால் பத்து ஆண்டுகளுக்குப் பின் அவர்கள் சந்திக்க நேர்ந்தது!

அது இப்படித்தான்-----

(நாளை முடிவடையும்;பொறுத்துக்கொள்ளுங்கள்.நாளையும் படியுங்கள்)

41 கருத்துகள்:

 1. சிறுகதை என்று போட்டிருந்ததால் நம்பி உள்ள வந்தேன், தொடர் கதையாக்கி இப்படி ஏமாத்தி போட்டீங்களே...

  பதிலளிநீக்கு
 2. suryajeeva கூறியது...

  //சிறுகதை என்று போட்டிருந்ததால் நம்பி உள்ள வந்தேன், தொடர் கதையாக்கி இப்படி ஏமாத்தி போட்டீங்களே.//
  அதுக்கு மேல் அடிக்க முடியலை சூரியஜீவா.மன்னிக்கவும்.நாளை நிச்சயம் முடிச்சிடுவேன்.
  நன்றி.

  பதிலளிநீக்கு
 3. ஏதோ விளையாட்டாய் ஆரம்பித்த
  உரையாடல் வேதனை யாக போகிறதே
  நாளை பார்ப்போம்

  புலவர் சா இராமாநுசம்

  பதிலளிநீக்கு
 4. காத்திருக்கிறோம் நாளைக்காக

  நன்றியுடன்
  சம்பத்குமார்

  பதிலளிநீக்கு
 5. கதை சுவாரஸ்யமாகப்போகிறது. நீங்கள் முடிவு தருமுன் நானே தருகிறேன்.

  நிச்சயம் அவர்கள் கடற்கரையில் சந்தித்திருப்பார்கள் பாலு தன் மனைவியோடும் நான்கைந்து குழந்தைகளோடும் வந்திருப்பார்.
  ஆனால் ரமாவோ ஆண் வர்க்கத்தின் மேல் உள்ள வெறுப்பினால் திருமணம் செய்துகொள்ளாமல்,இருந்திருப்பார். அன்று அவர் நடத்திவரும் ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்தில் உள்ள சில குழந்தைகளோடு அங்கு வந்திருப்பார். அல்லது ரமாவுக்கு திருமணம் நடந்து அவருக்கு குழந்தைகள் இல்லாமலிருக்கும்.
  என்ன சரிதானே?

  பதிலளிநீக்கு
 6. நாளை முடிவடையும்;பொறுத்துக்கொள்ளுங்கள்.நாளையும் படியுங்கள் -:)

  நாளைக்காக காத்திருக்கிறேன்...

  பதிலளிநீக்கு
 7. உங்கள் விரல் நுனி, எங்களை சேர் நுனிக்கு வரவழைத்துவிட்டது. நாளைக்கான எதிர்பார்ப்புகளுடன்.

  பதிலளிநீக்கு
 8. எனக்கும் ஒன்னு தோணுது..ஆனாலும் வேண்டாம்.

  பதிலளிநீக்கு
 9. கதையின் முடிவுக்காய்
  நாளை வரை காத்திருக்கிறோம்...
  பத்துவருடம் கழித்து சந்திக்கிறார்கள்
  என்ன நடந்திருக்கும் என ஆவலாக இருக்குது..

  பதிலளிநீக்கு
 10. சஸ்பென்ஸா முடிச்சிருக்கீங்க அடுத்த பகுதிக்கு வெயிட்டிங்க

  பதிலளிநீக்கு
 11. அவர்களுக்கு விதியின் பலம் தெரிய பத்து வருடங்கள்... எங்களுக்குக் கதை முடிவு தெரிய சில மணி நேரங்கள் - அதான் உங்க சிறுகதையின் அடுத்த பகுதி வெளிவரும் வரை....

  நல்ல பகிர்வு! அடுத்து வரும் பகுதிக்கு வெயிட்டிங்....

  பதிலளிநீக்கு
 12. அவர்களுக்கு விதியின் பலம் தெரிய பத்து வருடங்கள்... எங்களுக்குக் கதை முடிவு தெரிய சில மணி நேரங்கள் - அதான் உங்க சிறுகதையின் அடுத்த பகுதி வெளிவரும் வரை....

  நல்ல பகிர்வு! அடுத்து வரும் பகுதிக்கு வெயிட்டிங்....

  பதிலளிநீக்கு
 13. காட்டு பூச்சி கூறியது...

  //நாளைக்காக காத்திருக்கிறேன்//
  நன்றி காட்டு பூச்சி!

  பதிலளிநீக்கு
 14. மைந்தன் சிவா கூறியது...

  //பீட்டர் அக்கா கதை போல!!//
  புரியவில்லை!!

  பதிலளிநீக்கு
 15. புலவர் சா இராமாநுசம் கூறியது...

  //ஏதோ விளையாட்டாய் ஆரம்பித்த
  உரையாடல் வேதனை யாக போகிறதே
  நாளை பார்ப்போம்//
  நன்றி ஐயா.

  பதிலளிநீக்கு
 16. சம்பத்குமார் கூறியது...

  //காத்திருக்கிறோம் நாளைக்காக

  நன்றியுடன்
  சம்பத்குமார்//
  நன்ரி சம்பத்குமார்.

  பதிலளிநீக்கு
 17. வே.நடனசபாபதி கூறியது...

  // கதை சுவாரஸ்யமாகப்போகிறது. நீங்கள் முடிவு தருமுன் நானே தருகிறேன்.

  நிச்சயம் அவர்கள் கடற்கரையில் சந்தித்திருப்பார்கள் பாலு தன் மனைவியோடும் நான்கைந்து குழந்தைகளோடும் வந்திருப்பார்.
  ஆனால் ரமாவோ ஆண் வர்க்கத்தின் மேல் உள்ள வெறுப்பினால் திருமணம் செய்துகொள்ளாமல்,இருந்திருப்பார். அன்று அவர் நடத்திவரும் ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்தில் உள்ள சில குழந்தைகளோடு அங்கு வந்திருப்பார். அல்லது ரமாவுக்கு திருமணம் நடந்து அவருக்கு குழந்தைகள் இல்லாமலிருக்கும்.
  என்ன சரிதானே?//
  almost!நன்றி சபாபதி அவர்களே.

  பதிலளிநீக்கு
 18. நண்டு @நொரண்டு -ஈரோடு கூறியது...

  // ம் ...//
  கதை கேட்கிறீங்களா?
  நன்றி.

  பதிலளிநீக்கு
 19. ரெவெரி கூறியது...

  நாளை முடிவடையும்;பொறுத்துக்கொள்ளுங்கள்.நாளையும் படியுங்கள் -:)

  // நாளைக்காக காத்திருக்கிறேன்...//
  நன்றி ரெவெரி.

  பதிலளிநீக்கு
 20. FOOD கூறியது...

  //உங்கள் விரல் நுனி, எங்களை சேர் நுனிக்கு வரவழைத்துவிட்டது. நாளைக்கான எதிர்பார்ப்புகளுடன்.//
  நன்றி ஆஃபீசர்!

  பதிலளிநீக்கு
 21. செங்கோவி கூறியது...

  //எனக்கும் ஒன்னு தோணுது..ஆனாலும் வேண்டாம்.//
  அப்புறம் சொல்லுங்க!
  நன்றி செங்கோவி.

  பதிலளிநீக்கு
 22. மகேந்திரன் கூறியது...

  //கதையின் முடிவுக்காய்
  நாளை வரை காத்திருக்கிறோம்...
  பத்துவருடம் கழித்து சந்திக்கிறார்கள்
  என்ன நடந்திருக்கும் என ஆவலாக இருக்குது..//
  நன்றி மகேந்திரன்.

  பதிலளிநீக்கு
 23. K.s.s.Rajh கூறியது...

  // சஸ்பென்ஸா முடிச்சிருக்கீங்க அடுத்த பகுதிக்கு வெயிட்டிங்க//
  நன்றி ராஜ்.

  பதிலளிநீக்கு
 24. வெங்கட் நாகராஜ் கூறியது...

  //அவர்களுக்கு விதியின் பலம் தெரிய பத்து வருடங்கள்... எங்களுக்குக் கதை முடிவு தெரிய சில மணி நேரங்கள் - அதான் உங்க சிறுகதையின் அடுத்த பகுதி வெளிவரும் வரை....

  நல்ல பகிர்வு! அடுத்து வரும் பகுதிக்கு வெயிட்டிங்....//

  நன்றி வெங்கட்.

  பதிலளிநீக்கு
 25. தொடறும் போட்ட ஆவலை தூண்டி விட்டு விட்டீர்கள் .

  இதில் எனக்கு கற்பனை வேறு ,ரமாவிற்கு கல்யாணம் ஆகி குழந்தை இல்லாமல் இருப்பதும் ,பாலுவிற்கு குழந்தை இருப்பது போலவும் கற்பனை எனக்கு ,ஹா ஹா

  த.ம. 11

  பதிலளிநீக்கு
 26. அடுத்து வரும் பகுதிக்கு வெயிட்டிங்...

  பதிலளிநீக்கு
 27. அட! நாளைக்கு எப்படி முடிக்கப் போறாரோன்னு எதிர்பார்ப்போடயும், யூகங்களோடவும் காத்திருக்க வெச்சுட்டிங்களே... காத்திருந்து படிக்கிறேன்...

  பதிலளிநீக்கு
 28. அண்ணே இதுல தோத்தது ஈகோவா சகோவா! காத்திருக்கிறேன்!

  பதிலளிநீக்கு
 29. M.R கூறியது...

  //தொடறும் போட்ட ஆவலை தூண்டி விட்டு விட்டீர்கள் .

  இதில் எனக்கு கற்பனை வேறு ,ரமாவிற்கு கல்யாணம் ஆகி குழந்தை இல்லாமல் இருப்பதும் ,பாலுவிற்கு குழந்தை இருப்பது போலவும் கற்பனை எனக்கு ,ஹா ஹா //

  கற்பனை பாதி நிஜமாகலாம்?!
  நன்றி ரமேஷ்.

  பதிலளிநீக்கு
 30. சே.குமார் கூறியது...

  //அடுத்து வரும் பகுதிக்கு வெயிட்டிங்...//
  நன்றி குமார்.

  பதிலளிநீக்கு
 31. koodal bala கூறியது...

  // நல்லாருக்கே ..!//
  நன்றி பாலா.எப்படி இருக்கீங்க?

  பதிலளிநீக்கு
 32. கணேஷ் கூறியது...

  //அட! நாளைக்கு எப்படி முடிக்கப் போறாரோன்னு எதிர்பார்ப்போடயும், யூகங்களோடவும் காத்திருக்க வெச்சுட்டிங்களே... காத்திருந்து படிக்கிறேன்...//
  நன்றி கணேஷ்.

  பதிலளிநீக்கு
 33. விக்கியுலகம் கூறியது...

  //அண்ணே இதுல தோத்தது ஈகோவா சகோவா! காத்திருக்கிறேன்!//
  இதில் ஈகோவே இல்லை!
  நன்றி விக்கி.

  பதிலளிநீக்கு
 34. "என் ராஜபாட்டை"- ராஜா கூறியது...

  //அருமையான சிறுகதை//

  நன்றி ராஜா.

  பதிலளிநீக்கு
 35. வணக்கம் ஐயா,
  நலமா?
  கதை நகர்வு அருமை.
  குழந்தையினைக் காரணமாக வைத்துப் பிரிந்த பெண்ணின் மன நிலையினைச் சுட்டியபடி கதை தொடர்கிறது.

  பதிலளிநீக்கு
 36. நிரூபன் கூறியது...

  //வணக்கம் ஐயா,
  நலமா?
  கதை நகர்வு அருமை.
  குழந்தையினைக் காரணமாக வைத்துப் பிரிந்த பெண்ணின் மன நிலையினைச் சுட்டியபடி கதை தொடர்கிறது.//
  நன்றி நிரூ.

  பதிலளிநீக்கு