தொடரும் தோழர்கள்

ஞாயிறு, அக்டோபர் 16, 2011

கணினி என்ன பால்?!

இன்று ஞாயிறு,ஜாலியாக ஒரு குட்டிப் பதிவு.

------------------------------------------------------------

இந்திஆசிரியர் பால் வேறுபாடுகளைப் பற்றி வகுப்பு நடத்திக் கொண்டிருந்தார்.தமிழ் போல் இல்லாமல் இந்தியில் அஃறிணைக்கும் பால் வேறுபாடுகள் உண்டு.மூக்கு பெண்பால் என்றும் நாக்கு ஆண்பால் என்றும் என்னென்னவோ சொல்வார்கள்.

ஒரு மாணவன் எழுந்து கேட்டான்”ஐயா,கணினி என்ன பால்?”

இதற்குப் பதிலளிக்காமல் ஆசிரியர்,ஆசிரியர் மாணவர்களையும் மாணவிகளையும் இரண்டு குழுக்களாகப் பிரித்து அவர்களையே தீர்மானம் செய்து அவர்கள் முடிவுக்கான மூன்று காரணங்கள் எழுதச் சொன்னார்.

மாணவர்கள் கணினி பெண்பால் எனத்தீர்மானித்து அதற்கான கீழ் வரும் காரணங்களை எழுதினார்கள்

1அவற்றின் உள்ளே உள்ள அடிப்படை ஏரணத்தைப் படைத்தவன் அன்றி வேறொருவரும் அறிய இயலாது.

2.சின்னச் சின்னத்தவறுகள் கூட நீண்ட கால நினைவில் வைத்திருந்து, வேண்டும்போது எடுக்க இயலும்.

3.ஒன்றை சொந்தமாக்கிக் கொண்டால் அதன்பின் அதற்கான உபகரணங்களில் பாதிச் சம்பளம் போய் விடும்.

மாணவிகள் அது ஆண் என முடிவு செய்து எழுதினார்கள்

1.எல்லாத் தகவலும்இருக்கும்.ஆனால் சுயமாகச் சிந்திக்கத் தெரியாது.

2.அவை நமது பிரச்சினைகளைத் தீர்க்க உதவ வேண்டும்.ஆனால் பாதி நேரம் அவையே பிரச்சினையாகி விடுகின்றன.

3.ஒன்றைச் சொந்தமாக்கிய பின்தான் தெரியும் இன்னும் சிறிது காலம் காத்திருந்தால் இதை விடச் சிறந்தது கிடைத்திருக்கும் என!

ஆசிரியர் மாணவிகள் வென்றதாக அறிவித்தார்.

39 கருத்துகள்:

 1. வணக்கம் ஐயா,
  நலமா?

  வீக்கெண்ட் எல்லாம் எப்படி?

  என் வீக்கெண்ட் ரொம்ப பிசி...
  இப்போது தான் வேலை எல்லாம் முடித்து வீட்டிற்கு வந்தேன்.

  பதிலளிநீக்கு
 2. ஐயா, ஒரு டவுட்டு,
  குழந்தை என்ன பாலில் அடங்கும்?

  தாய்ப் பாலிலா இல்லை தகரப் பாலிலா?


  ஹே...ஹே...

  பதிலளிநீக்கு
 3. கணினி பற்றி யதார்த்தமாக பெண்களோடு ஒப்பிட்டுச் சிந்தித்திருக்கிறீங்க. அருமை ஐயா

  பதிலளிநீக்கு
 4. ஆசிரியர் மாணவிகள் வென்றதாக அறிவித்தார்.///நாட்டாம தீர்ப்ப மாத்து!!!Hi!Hi!Hi!

  பதிலளிநீக்கு
 5. In my introduction classes "on the Basic concepts of a Computer" I used to tell my students ( way back in 1980s ) in a lighter vein, that a computer most resembled a housewife.

  The audience will stare at me with awe and disbelief. I pause for a few seconds, and then continue..

  " as it is usually DOWN when you need it most. "

  The male students will be roaring with laughter, while the other half will shout with anger, though lasting for a few seconds.

  Incidentally, the students were all very senior executives in a PSU, and those were the days when computers were slowly introduced in organisations.

  subbu rathinam

  பதிலளிநீக்கு
 6. அருமையான பகிர்வு.

  இதிலும் மாணவிகளே வென்றதில் மகிழ்ச்சி..

  பதிலளிநீக்கு
 7. இரு தரப்பு வாதங்களும் சரியாக இருக்க நடுவர் மட்டும் தீர்ப்பைச் சரியாகச் சொல்லவில்லையோ என்று தோன்றுகிறது!!!!!!!!!!!!!!!! !.

  நல்ல நகைச்சுவை.

  பதிலளிநீக்கு
 8. அட இருபாலரும் சரியா சொல்றது போல தான் இருக்குது..
  கற்பனைகளை ம்நினைத்து சிரிப்பு வந்ததை அடக்க முடியலை ஐயா.

  பதிலளிநீக்கு
 9. ஹா ஹா நல்ல நகைச்சுவை

  தமிழ் மணம் ஆறு

  பதிலளிநீக்கு
 10. நல்ல பதிவு. ஆனால் எனக்கு இருபாலாரும் கொடுத்த காரணங்களும் சரிதான் எனத் தெரிகிறது.

  பதிலளிநீக்கு
 11. Rathnavel கூறியது...

  // நல்ல பதிவு.//
  நன்றி ஐயா.

  பதிலளிநீக்கு
 12. நிரூபன் கூறியது...

  //வணக்கம் ஐயா,
  நலமா?

  வீக்கெண்ட் எல்லாம் எப்படி?

  என் வீக்கெண்ட் ரொம்ப பிசி...
  இப்போது தான் வேலை எல்லாம் முடித்து வீட்டிற்கு வந்தேன்.//
  வணக்கம் நிரூ.
  கொஞ்சம் ஓய்வெடுக்க வேண்டியதுதானே.
  எனக்கு வாரம் முழுதுமே விடுமுறைதானே!

  பதிலளிநீக்கு
 13. நிரூபன் கூறியது...

  // ஐயா, ஒரு டவுட்டு,
  குழந்தை என்ன பாலில் அடங்கும்?

  தாய்ப் பாலிலா இல்லை தகரப் பாலிலா?


  ஹே...ஹே...//
  அது ’தாயி’ன் பாலைப் பொறுத்தது!

  பதிலளிநீக்கு
 14. நிரூபன் கூறியது...

  // கணினி பற்றி யதார்த்தமாக பெண்களோடு ஒப்பிட்டுச் சிந்தித்திருக்கிறீங்க. அருமை ஐயா//

  நன்றி நிரூ.

  பதிலளிநீக்கு
 15. Yoga.S.FR கூறியது...

  //ஆசிரியர் மாணவிகள் வென்றதாக அறிவித்தார்.///நாட்டாம தீர்ப்ப மாத்து!!!Hi!Hi!Hi!//
  கரெக்ட்டு!
  நன்றி.

  பதிலளிநீக்கு
 16. koodal bala கூறியது...

  // ஹா ...ஹா....சூப்பரு !//
  நன்றி பாலா.

  பதிலளிநீக்கு
 17. இராஜராஜேஸ்வரி கூறியது...

  //அருமையான பகிர்வு.

  இதிலும் மாணவிகளே வென்றதில் மகிழ்ச்சி..//
  நன்றி.

  பதிலளிநீக்கு
 18. ஆதிரா கூறியது...

  //இரு தரப்பு வாதங்களும் சரியாக இருக்க நடுவர் மட்டும் தீர்ப்பைச் சரியாகச் சொல்லவில்லையோ என்று தோன்றுகிறது!!!!!!!!!!!!!!!! !.

  நல்ல நகைச்சுவை.//
  சரியான சந்தேகம்!
  நன்றி.

  பதிலளிநீக்கு
 19. மகேந்திரன் கூறியது...

  //அட இருபாலரும் சரியா சொல்றது போல தான் இருக்குது..
  கற்பனைகளை ம்நினைத்து சிரிப்பு வந்ததை அடக்க முடியலை ஐயா.//
  நன்றி மகேந்திரன்.

  பதிலளிநீக்கு
 20. M.R கூறியது...

  // ஹா ஹா நல்ல நகைச்சுவை

  தமிழ் மணம் ஆறு//
  நன்றி ரமேஷ்.

  பதிலளிநீக்கு
 21. வைரை சதிஷ் கூறியது...

  //சூப்பர் பதிவு ஐயா//
  நன்றி சதிஷ்.

  பதிலளிநீக்கு
 22. மாய உலகம் கூறியது...

  //ஹா ஹா கலக்கல்//
  நன்றி ராஜேஷ்.

  பதிலளிநீக்கு
 23. வே.நடனசபாபதி கூறியது...

  //நல்ல பதிவு. ஆனால் எனக்கு இருபாலாரும் கொடுத்த காரணங்களும் சரிதான் எனத் தெரிகிறது.//
  உங்கள் கருத்து சரிதான்!
  நன்றி.

  பதிலளிநீக்கு
 24. நண்டு @நொரண்டு -ஈரோடு கூறியது...

  //ம் ...//
  உம்.
  நன்றி.

  பதிலளிநீக்கு
 25. K.s.s.Rajh கூறியது...

  //ஹா.ஹா.ஹா.ஹா...சூப்பர் ஜயா//
  நன்றி ராஜ்.

  பதிலளிநீக்கு
 26. ஆகா ......கணனிபற்றி புதிய கோணத்தில் சிந்தித்து நகைச்சுவையை
  வெளியிட்டவிதம் அருமை !......மிக்க நன்றி ஐயா பகிர்வுக்கு .

  பதிலளிநீக்கு
 27. சார்... தமிழ்மணம் குறித்த உங்கள் பதிவை தேடி வந்த எனக்கு ஏமாற்றம்தானா...???

  பதிலளிநீக்கு
 28. அம்பாளடியாள் கூறியது...

  //ஆகா ......கணனிபற்றி புதிய கோணத்தில் சிந்தித்து நகைச்சுவையை
  வெளியிட்டவிதம் அருமை !......மிக்க நன்றி ஐயா பகிர்வுக்கு .//
  நன்றி.

  பதிலளிநீக்கு
 29. Philosophy Prabhakaran கூறியது...

  //சார்... தமிழ்மணம் குறித்த உங்கள் பதிவை தேடி வந்த எனக்கு ஏமாற்றம்தானா...???//
  பின்னூட்டம் பதிவு மாறி வந்துவிட்டது பிரபா!
  நன்றி.

  பதிலளிநீக்கு
 30. கணினியை வைத்து இப்படிக்கூட சிந்திக்க முடியுமா என்ன... பிரமாதம் ஐயா...

  பதிலளிநீக்கு