தொடரும் தோழர்கள்

சனி, அக்டோபர் 22, 2011

கற்புக் கற்பென்று............

கற்பென்பது என்ன?

அது உடல் சம்பந்தப் பட்டதா?உள்ளம் சம்பந்தப்பட்டதா?அல்லது இரண்டுமா?

ஒரு பெண் கற்பிழந்தவள் என்று கூறும் நாம் ஆண் கற்பிழந்து விட்டான் என எப்போதாவது சொல்கிறோமா? ஏன்?

ஆணுக்குக் கற்பு என்பது கிடையாதா?

ஆண் எத்தனை பெண்களுடன் உறவு கொண்டாலும் தன் மனைவி மட்டும் கற்புடையவளாக இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பது ஏன்?

அவள் கற்புடையவள் என்பதை அவன் எப்படித்தீர்மானிக்கிறான்? கன்னித்திரையின் (hymen) தன்மையை வைத்தா?அது மட்டுமே சரியான நிரூபணம் ஆகுமா?

அவனுடன் உடலுறவு கொள்ளும் போதெல்லாம் மனதில் வேறெவனையோ நினைத்துக் கொண்டு அவள் இருப்பாளாகில் அது கற்பாகுமா?

உடலுறவின் விளைவை உடல்ரீதியாகச் சுமந்து வெளிக்காட்டுபவள் அவள் என்பதால்,அத்தகைய இடர்ப்பாடுகள் ஏதும் ஆணுக்கில்லை யென்பதால், கற்பென்பது பெண்ணுக்கு மட்டுமே உரியதாக்கப் பட்டதா?

ஒரு வன்புணர்வில் ஒரு பெண் தன் பெண்மையை இழந்திருந்தால் அவள் கற்பிழந்தவள் ஆவாளா?

வன்புணர்வென்பது என்ன?

இந்தியக் குற்றவியல் சட்டம் செக்சன் 375 சொல்கிறது—

ஒரு ஆண் ஒரு பெண்ணுடன் கீழ்க்கண்ட சூழ்நிலைகளில் எதிலாவது உடலுறவு கொண்டால் அது வன்புணர்வு.

1)அவளது விருப்பமில்லாமல்

2) அவளது சம்மதமின்றி

3)அவளுக்கு அவள் விரும்பும் யாருக்கோ இடர் விளைவிப்பதாகச் சொல்லிச் சம்மதம் பெற்று

4)அவள் அவனைத் தன் கணவன் என்ற தவறான நம்பிக்கையில்,,அது அவனுக்குத்தெரிந்தும்,சம்மதம் அளிக்கும்போது

5)அவளது சம்மதம் அவள் மனநிலை சரியில்லாத நேரத்திலோ அல்லது அவளுக்கு ஏதாவது போதை மருந்து கொடுத்து அதன் காரணமாகவோ அவள்நடக்கப்போகும் நிகழ்வின் விளைவுகளை புரிந்து கொள்ளாத நிலையில் பெறப்பட்டால்

6)சம்மதத்துடனோ சம்மதமில்லாமலோ-அவள் பதினாறு வயதுக்கு உட்பட்டவளாக இருந்தால்.

எனவே நிச்சயமாக அப்படி ஒரு நிகழ்வு அவளது கற்பென்று கதைக்கப்படும் விஷயத்துக்குக் களங்கமாகாதுதானே?

பாரதி சொல்வான் ----

ஆண்க ளெல்லாம்
களவின்பம் விரும்புகின்றார்; கற்பே மேலென்று
ஈரமின்றி யெப்போதும் உபதே சங்கள்
எடுத்தெடுத்துப் பெண்களிடம் இயம்பு வாரே!

ஆணெல்லாம் கற்பைவிட்டுத் தவறு செய்தால்,
அப்போது பெண்மையுங்கற் பழிந்தி டாதோ?

………..

……..

காணுகின்ற காட்சியெல்லாம் மறைத்து வைத்துக்
கற்புக்கற் பென்றுலகோர் கதைக்கின் றாரே?

நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம்,கற்பு என்பது நமது கலாசாரத்துக்கு மட்டும் உரியது என்று.

இல்லை!

ஷேக்ஸ்பியரின் ”தி ரேப் ஆஃப் லுக்ரீஸ்” என்ற கவிதையில் .ஒரு பெண் கற்பிழந்ததைப் பற்றிக் கூறுகிறார்—

//she hath lost a dearer thing than life,//

”உயிரை விட மதிப்பு வாய்ந்த ஒன்றை அவள் இழந்து விட்டாள்”

ஆக எங்குமே கற்புக்கு ஒரே அளவுகோல்தான்.

அதைப் பெண்களுக்கு மட்டுமே உரியதாகி விட்டது இந்தச் சமூகம்!

51 கருத்துகள்:

 1. ஆணுக்கோ, பெண்ணுக்கோ... கற்பு என்பது துரோகம் செய்யாமல் இருப்பது.. மனதாலும், உடலாலும்.

  பதிலளிநீக்கு
 2. சர்ச்சைக்குரிய ஒரு தலைப்பை எடுத்து
  அருமையாக விவாதித்திருக்கிரீர்கள்.
  அருமை.
  என்னைப்பொருத்தவரையில் கற்பு என்பது மனதளவில்
  கேள்விக்கணைகள் விடுத்து அதில் உள்ள சிக்கல்களையும்
  விடுவித்து இருக்கிறீர்கள்.
  பெண்களுக்கு மட்டுமே கற்பு சொந்தமானது அன்று.
  ஆண்களுக்கும் உண்டு.

  பதிலளிநீக்கு
 3. கற்பு என்பது மனரீதியான ஒன்று. Losing Self Integrity என்று வேண்டுமானால் வைத்துக்கொள்ளலாம். இது உடலுறவு மட்டுமல்ல, சுய கட்டுபாடு சம்பந்தமான எல்லாவற்றுக்கும் பொருந்தும். ஒரு விஷயத்தில் Self Integrityயை இழந்து விட்டால், நாம் மீதே நமக்கு மரியாதை இராது.

  நல்ல கட்டுரை.

  பதிலளிநீக்கு
 4. என்ன தல, கடும் காட்டமா இருக்கீங்க போல...?? சரியான கேள்வி விடை சொல்ல ஆளில்லை...!!!!

  பதிலளிநீக்கு
 5. ஆமாம் ஐயா கற்பு என்பது இருபாலருக்கும் பொதுவானது .//

  த.ம 6

  பதிலளிநீக்கு
 6. ஔவையார் அழகாய்ச் சொல்லியிருக்கிறார்.

  "கற்பெனப் படுவது சொல்திறம்பாமை"

  It is all about being honest! nothing more and nothing less!

  பதிலளிநீக்கு
 7. //
  எங்குமே கற்புக்கு ஒரே அளவுகோல்தான்.

  அதைப் பெண்களுக்கு மட்டுமே உரியதாகி விட்டது இந்தச் சமூகம்!/

  உண்மைதான் .. நமக்கு வசதியாக எல்லாத்தையும் சமுகம் மாத்திகொல்கிறது

  பதிலளிநீக்கு
 8. வணக்கம்,ஐயா!அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள்!கற்பென்பது ஆணுக்கும்,பெண்ணுக்கும் சமனானதே!

  பதிலளிநீக்கு
 9. சரியாகச் சொன்னீர்கள் கற்ப்பு இருபாலருக்கும் ஒன்றேதான் .
  ஆனால் அதை ஆண்கள் நினைக்கவில்லை என்பது பெண்ணினத்தின் தலைஎழுத்து .
  சாட்டை அடிக்கு நன்றி ஐயா ..........

  பதிலளிநீக்கு
 10. சரியா போச்சு, குஷ்புவுக்கு போட்டியா இந்த கட்டுரை,

  பதிலளிநீக்கு
 11. கேள்வியைக் கேட்டுவிட்டு, விரிவான விளக்கத்தை தாங்களே தந்துள்ளீர்கள்.பதிவின் கடைசி வரியில் பதில் உள்ளது!

  பதிலளிநீக்கு
 12. //ஆக எங்குமே கற்புக்கு ஒரே அளவுகோல்தான்.

  அதைப் பெண்களுக்கு மட்டுமே உரியதாகி விட்டது இந்தச் சமூகம்!//

  உண்மை அய்யா!

  பதிலளிநீக்கு
 13. கற்பு நிலையென்று சொல்லவந்தால்
  இருகட்சிக்கும் பொதுவில் வைப்போம்!

  பதிலளிநீக்கு
 14. நீண்ட நாளைக்கு பிறகு சந்திகின்றோம். வேலை வேலை என்று ஓடிக்கொண்டு இருக்க நேரிடுவதால் நாம் இழக்கும் தருணங்கள் இவை. திடமான , அழுத்தமான ஒரு பகிர்வு. நண்பர் "சேட்டைக்காரன் " அவர்களே என் கருத்துக்களையும் அழகாக சொல்லிவிட்டார்.
  வேறு நான் என்ன சொல்ல. இனி முடிந்த மட்டும் இங்கும் சந்தித்தித்து மகிழ விழைகிறேன் நன்றி தங்களின் அன்பிற்கு. இது அன்றி நம்மிடம்தான் உள்ளது என்ன "குழந்தே " :)))

  பதிலளிநீக்கு
 15. //ஆணெல்லாம் கற்பைவிட்டுத் தவறு செய்தால்,
  அப்போது பெண்மையுங்கற் பழிந்தி டாதோ?//

  karpu iruvarukkum onre...vaalththukkal

  ………..

  பதிலளிநீக்கு
 16. நல்ல பதிவு .கற்புடை ஆண்களூம் எந்தக் காலத்திலும் உண்டு.
  இருபாலருக்கும் பொது என்று சொல்லோடு நிற்பவரும் இங்கே அதிகம்.

  பதிலளிநீக்கு
 17. கேள்விகள் அத்தனை.. அத்தனைக்கும் பதில் என்று ஒன்றே ஒன்றை முத்தாகச் சொன்ன பித்தனுக்கு நன்றி. உங்கள் கட்டுரையில் இருந்து ஒன்று மட்டும் புரிகிறது. உலகெங்கும் கற்பின் அளவுகோல் ஒன்றாகவே இருந்து வந்துள்ளது. நன்றி.

  பதிலளிநீக்கு
 18. கற்பென்பது ஆணுக்கும்
  பெண்ணுக்கும் பொதுவில்
  வைப்போம்

  புலவர் சா இராமாநுசம்

  பதிலளிநீக்கு
 19. ஐயா என் தளத்திற்கு இன்று உங்கள் வருகையை எதிர் பார்க்கின்றேன்
  முடிந்தால் அவசியம் வாருங்கள் மிக்க நன்றி ..

  பதிலளிநீக்கு
 20. அம்பாளடியாள் கூறியது...

  //ஐயா என் தளத்திற்கு இன்று உங்கள் வருகையை எதிர் பார்க்கின்றேன்
  முடிந்தால் அவசியம் வாருங்கள் மிக்க நன்றி ..//
  அங்கு சென்ற பின்தான் இங்கு வந்தேன் அம்மா!

  பதிலளிநீக்கு
 21. சமுதாயத்திற்கும், ஆணாதிக்க வாதம் பேசுவோருக்கும் சாட்டையடி கொடுக்கும் பதிவு ஐயா.

  பதிலளிநீக்கு
 22. கற்பின் அளவுகோலாக மனிதர்கள் நிர்ணயிப்பது காலம்தோறும் மாறக் கூடியது. கந்தர்வனின் நிழலைக் கண்டதால் கற்பிழந்தாளென்று மகன் பரசுராமனிடம் மனைவியை ஜமதக்னி முனிவர் வெட்டச் சொன்னதாக புராணத்தில் வரும். கற்பென்று வந்தால் இருபாலருக்கும் பொதுவில் வைப்போம் என்றான் பாரதி. என்னைப் பொறுத்தவரை அண்ணன் சேட்டைக்காரன் சொன்னதை வழிமொழிகிறேன்.

  பதிலளிநீக்கு