தொடரும் தோழர்கள்

செவ்வாய், அக்டோபர் 18, 2011

இது வயசுக் கோளாறு!!

தோட்டக்காரன் வரவில்லை.எனவே தோட்டத்துக்குத் தண்ணீர் பாய்ச்சலாம் என ஆரம்பித்தேன். அப்போது போர்ட்டிகோவில் இருந்த கார் தூசியாக இருப்பதைப் பார்த்தேன்.காரைக் கழுவி விடலாம் எனக் கார் அருகில் சென்றேன்.கழுவ ஆரம்பிக்கும் போது தொலைபேசி மணி ஒலித்தது.பைப்பைக் கீழே போட்டுவிட்டு உள்ளே சென்று ஃபோனை எடுத்தேன்.

”சார் உங்களுக்கு எங்கள் வங்கியின் கடன் அட்டை வழங்குகிறோம் ”என ஒரு பெண் பேச ஆரம்பித்தாள்.தொடர்பைத் துண்டித்தேன்.அப்போதுதான் நினைவுக்கு வந்தது,அந்த மாதம் கடன் அட்டைக்கான பில் கட்டவில்லை என்பது.மேசை அறையில் தேடினேன், கிடைத்தது.சரி கையோடு காசோலை எழுதி வைத்துவிட்டால்,பின் யாரிடமாவது பெட்டியில் போடச் சொல்லி விடலாம் என் எண்ணி காசோலை புத்தகத்தை எடுத்தேன். ஒரு காசோலை கூட இல்லை.

இரண்டு நாள் முன்பு வங்கியிலிருந்து வாங்கி வந்த காசோலை என் கைப்பையில் பீரோவுக்குள் இருக்கிறது.அதை எடுத்து வரலாம் எனப் புறப்பட்டேன்.டீப்பாயில் வைத்திருந்த காஃபிக்கோப்பை என் கண்ணில் பட்டது.அதில் இருந்த காஃபி ஆறிப் போயிருந்தது. சிறிது நேரம் முன்புஅதைக் குடிக்க ஆரம்பித்த போதுதான், தோட்டத்துக்கு நீர் பாய்ச்சச் சென்று விட்டேன்.வீணாக்க மனமின்றிச் சுட வைத்துக் குடிக்கலாம் என எடுத்துக் கொண்டு சமையலறைக்குச் சென்றேன்.

செல்லும் வழியில் பூந்தொட்டியில் இருந்த செடி வாடியது போல் தோன்றவே, தொட்டிக்குத் தண்ணீர் ஊற்றத் தீர்மானித்தேன்.காஃபிக்கோப்பையை ஜன்னலில் வைத்து விட்டு ஒரு மக்கில் தண்ணீர் எடுக்கப் போகும்போது அருகில் என் மூக்குக் கண்ணாடி இருப்பதைப் பார்த்தேன்.அதை அப்புறம் எடுத்துக்கொள்ளலாம் என்று என்று எண்ணி,தண்ணீர் எடுத்துச் செடிக்கு ஊற்ற ஆரம்பித்தேன்;சிறிது நீர் வழிந்து கீழே விழுந்தது..

அதைத் துடைக்கக் குனிந்தபோது கீழே கிடந்த என் பேனாவைப் பார்த்தேன்.அதை எடுத்துக் கொண்டு நிமிர்ந்தேன்.

யோசித்தேன் என்ன செய்து கொண்டிருந்தேன்?எதற்காக உள்ளே வந்தேன்?

ரொம்ப பிசியாகத்தான் இருந்திருக்கிறேன்.

ஆனால் தோட்டத்துக்குத் தண்ணீர் பாய்ச்சப் படவில்லை.

கார் கழுவப்படவில்லை.

கடன் அட்டை பில் பணம் செலுத்தப் படவில்லை.

பூந்தொட்டிக்குத் தண்ணீர் ஊற்றப்படவில்லை.

ஒரு கப் காஃபி இன்னமும் ஜன்னலில் ஆறிக்கொண்டு இருக்கிறது.

மூக்குக் கண்ணாடி இன்னும் எங்கோ இருக்கிறது.

புதுக் காசோலைப் புத்தகம் இன்னும் எடுக்கப்படவில்லை.

இப்படி எதுவுமே நடக்காமல் நான் எப்படி பிஸியாக இருந்தேன்?

என்ன ஆச்சு எனக்கு?

இதற்குப் பதில் சொல்கிறார் நாஞ்சில் மனோ----

“வயசாயிப் போச்சி தல!ஹே ஹே!”

58 கருத்துகள்:

 1. //“வயசாயிப் போச்சி தல!ஹே ஹே!”//

  ஹி...ஹி... :)

  நல்ல நகைச்சுவை....

  பதிலளிநீக்கு
 2. அப்படினா இவ்ளோ நேரமும் அவர பத்தி தான் சொன்னின்களா?

  பதிலளிநீக்கு
 3. alzheimer's disease, dementia, ஆகிய நோய் வகைகளை வைத்து கதை வருவது குறைவு தான்...

  பதிலளிநீக்கு
 4. நல்ல யுக்தி, புது விதமாய் பின்னிருந்து முன்னுக்கு,

  பதிலளிநீக்கு
 5. இப்படி எதுவுமே நடக்காமல் நான் எப்படி பிஸியாக இருந்தேன்?
  “வயசாயிப் போச்சி தல!ஹே ஹே!”//

  "இதுவா வயசுக் கோளாறு!!"???

  பதிலளிநீக்கு
 6. புதுசு புதுசா ட்ரை பண்றீங்களே ஐயா.

  பதிலளிநீக்கு
 7. இது வயசுக் கோளாறு..-:)

  பதிலளிநீக்கு
 8. உங்களை யூத்துன்னு ஒத்துக்கிட்டதை வாபஸ் வாங்கணும் போல இருக்கே...

  பதிலளிநீக்கு
 9. பலவிஷயங்கள் மனதில் இருக்கும் பொது ஏற்படும் குழப்பத்தை மணக்க மணக்க கூறியுள்ளீர்கள் ... வாசுதேவன்

  பதிலளிநீக்கு
 10. இது வயசுக் கோளாறல்ல. வயசானதால் ஏற்பட்ட கோளாறு!!!!

  பதிலளிநீக்கு
 11. உண்மைதான் ஐயா ஒரு நேரத்தில் ஒரு வேலையில் மட்டும் கவனம் செலுத்தினால் சிக்கல் இல்லை

  த.ம. 6

  பதிலளிநீக்கு
 12. வலையில் மூத்தவர் நீரய்யா
  வயதில் மூத்தவர் நானய்யா
  என்வலை வந்தா தெரியுமய்யா
  என்னுடை வயது புரியுமய்யா

  புலவர் சா இராமாநுசம்

  பதிலளிநீக்கு
 13. அது வயசுக் கோளாறு இல்ல... வயசானதால கோளாறு.. ஹா... ஹா... நல்ல நகைச்சுவை.

  பதிலளிநீக்கு
 14. அட ஜயா...நல்ல நகைச்சுவையாக எழுதியிருக்கீங்க....சூப்பர்...

  பதிலளிநீக்கு
 15. நம் எண்ணங்களை ஒருமுகப்படுத்துவோம். செயல், சிந்தனை மற்றும் உணர்வுகளை ஒன்றாக focus செய்து விழிப்புணர்வுடன் வாழ்ந்தால் இப்படிபட்ட பிரச்சனை ஏற்படாது.
  உண்மையில் சிந்தனையை தூண்டிய பகிர்வுக்கு நன்றிகள் ஐயா!

  பதிலளிநீக்கு
 16. ஹா ஹா ஹா ஹா ஹா நீங்க எனக்கு வயசு பதினஞ்சு'ன்னு சொல்ல வர்றீங்களா தல ஹி ஹி....

  பதிலளிநீக்கு
 17. ஆக, பிசியா இருந்துகிட்டு ஒரு வேலையும் செய்யலை...???

  பதிலளிநீக்கு
 18. அரைமணி நேரத்துக்குள்ளே நடந்த சம்பவத்தை சொன்ன விதம் அருமை தல, புதிய சிந்தனை!!!!

  உங்ககிட்டே இருந்து நாங்க இன்னும் நிறைய கத்துக்க ஆசையா இருக்கிறோம்....!!!

  பதிலளிநீக்கு
 19. உங்களுக்கு வயசாயிடுச்சுன்னு சத்தியமா நான் சொல்லமாட்டேன், உங்கள் எழுத்துக்கள் என்றும் பதினாறுதான்...!!!

  பதிலளிநீக்கு
 20. எனக்கு இது இன்றைய இளைஞர்களின்
  மனோ நிலையை ஒரு அனுபவஸ்தர்
  (வயதானவர் இல்லை ) சொல்வது போல்தான்
  உள்ளது.அருமையான பதிவு

  பதிலளிநீக்கு
 21. சார், வயசுல்லாம் ஆகிடலை உங்களுக்கு.. இப்போதும் இந்தவயதிலும் சுறுசுறுப்பா இயங்குறீங்க பாருங்க. இத்தனை வேலைகளையும் செய்யணும் என்று திட்டமிடுறீங்க பாருங்க. மனசுதான் காரணம். :))

  பதிலளிநீக்கு
 22. நல்ல நகைச்சுவையாக எழுதியிருக்கீங்க சார்....சூப்பர்

  பதிலளிநீக்கு
 23. வெங்கட் நாகராஜ் சொன்னது…

  //“வயசாயிப் போச்சி தல!ஹே ஹே!”//

  //ஹி...ஹி... :)

  நல்ல நகைச்சுவை....//
  நன்றி வெங்கட்.

  பதிலளிநீக்கு
 24. HajasreeN கூறியது...

  //அப்படினா இவ்ளோ நேரமும் அவர பத்தி தான் சொன்னின்களா?//
  :) நன்றி.

  பதிலளிநீக்கு
 25. suryajeeva கூறியது...

  // alzheimer's disease, dementia, ஆகிய நோய் வகைகளை வைத்து கதை வருவது குறைவு தான்...

  நல்ல யுக்தி, புது விதமாய் பின்னிருந்து முன்னுக்கு,//

  நன்றி சூரிய ஜீவா.

  பதிலளிநீக்கு
 26. இராஜராஜேஸ்வரி கூறியது...

  இப்படி எதுவுமே நடக்காமல் நான் எப்படி பிஸியாக இருந்தேன்?
  “வயசாயிப் போச்சி தல!ஹே ஹே!”//

  // "இதுவா வயசுக் கோளாறு!!"???//
  ஒவ்வொரு வயசுக்கும் ஒவ்வொரு கோளாறு.
  நன்றி.

  பதிலளிநீக்கு
 27. செங்கோவி கூறியது...

  // புதுசு புதுசா ட்ரை பண்றீங்களே ஐயா.//
  நன்றி செங்கோவி.

  பதிலளிநீக்கு
 28. ரெவெரி கூறியது...

  //இது வயசுக் கோளாறு..-:)//
  :)) நன்றி ரெவெரி.

  பதிலளிநீக்கு
 29. shanmugavel கூறியது...

  //ஆமா,இதுவா வயசுக்கோளாறு?//
  ஆமாம்.இதுவும்தான்!
  நன்றி சண்முகவேல்.

  பதிலளிநீக்கு
 30. Philosophy Prabhakaran கூறியது...

  //உங்களை யூத்துன்னு ஒத்துக்கிட்டதை வாபஸ் வாங்கணும் போல இருக்கே...//
  அய்யய்யோ!அப்படி எதுவும் பண்ணிடாதீங்க!பதிவில் வரும் நான்,நான் அல்ல;வேறு நான்!நான் சொல்வது புரிந்ததா?
  நன்றி பிரபா!

  பதிலளிநீக்கு
 31. Vasu கூறியது...

  //பலவிஷயங்கள் மனதில் இருக்கும் பொது ஏற்படும் குழப்பத்தை மணக்க மணக்க கூறியுள்ளீர்கள் ...//

  நன்றி வாசு.

  பதிலளிநீக்கு
 32. வே.நடனசபாபதி கூறியது...

  // இது வயசுக் கோளாறல்ல. வயசானதால் ஏற்பட்ட கோளாறு!!!!//
  :) நன்றி ஐயா.

  பதிலளிநீக்கு
 33. M.R கூறியது...

  //உண்மைதான் ஐயா ஒரு நேரத்தில் ஒரு வேலையில் மட்டும் கவனம் செலுத்தினால் சிக்கல் இல்லை//
  த.ம. 6
  உண்மை.

  நன்றி ரமேஷ்.

  பதிலளிநீக்கு
 34. புலவர் சா இராமாநுசம் கூறியது...

  //வலையில் மூத்தவர் நீரய்யா
  வயதில் மூத்தவர் நானய்யா
  என்வலை வந்தா தெரியுமய்யா
  என்னுடை வயது புரியுமய்யா//
  வணங்குகிறேன்;வாழ்த்துங்கள்
  நன்றி ஐயா.

  பதிலளிநீக்கு
 35. கணேஷ் கூறியது...

  //அது வயசுக் கோளாறு இல்ல... வயசானதால கோளாறு.. ஹா... ஹா... நல்ல நகைச்சுவை.//
  நன்றி கணேஷ்.

  பதிலளிநீக்கு
 36. K.s.s.Rajh கூறியது...

  // அட ஜயா...நல்ல நகைச்சுவையாக எழுதியிருக்கீங்க....சூப்பர்...//
  நன்றி ராஜ்.

  பதிலளிநீக்கு
 37. சைதை அஜீஸ் கூறியது...

  // நம் எண்ணங்களை ஒருமுகப்படுத்துவோம். செயல், சிந்தனை மற்றும் உணர்வுகளை ஒன்றாக focus செய்து விழிப்புணர்வுடன் வாழ்ந்தால் இப்படிபட்ட பிரச்சனை ஏற்படாது.
  உண்மையில் சிந்தனையை தூண்டிய பகிர்வுக்கு நன்றிகள் ஐயா!//
  நன்றி அஜீஸ்.

  பதிலளிநீக்கு
 38. குமாரபுரம் யசோதரன் கூறியது...

  // ஹா ஹா ஹா ஹா ஹா நீங்க எனக்கு வயசு பதினஞ்சு'ன்னு சொல்ல வர்றீங்களா தல ஹி ஹி....//
  சேச்சே!அப்படியெல்லாம் சொல்வேனா?இருபத்தஞ்சு!ஹா ஹா

  பதிலளிநீக்கு
 39. குமாரபுரம் யசோதரன் கூறியது...

  //ஆக, பிசியா இருந்துகிட்டு ஒரு வேலையும் செய்யலை...???//

  :)

  பதிலளிநீக்கு
 40. குமாரபுரம் யசோதரன் கூறியது...

  //அரைமணி நேரத்துக்குள்ளே நடந்த சம்பவத்தை சொன்ன விதம் அருமை தல, புதிய சிந்தனை!!!!

  உங்ககிட்டே இருந்து நாங்க இன்னும் நிறைய கத்துக்க ஆசையா இருக்கிறோம்....!!!//

  நன்றி யசோதரன்.

  பதிலளிநீக்கு
 41. குமாரபுரம் யசோதரன் கூறியது...

  //உங்களுக்கு வயசாயிடுச்சுன்னு சத்தியமா நான் சொல்லமாட்டேன், உங்கள் எழுத்துக்கள் என்றும் பதினாறுதான்...!!!//
  ரொம்பக் குறைவாச் சொல்றீங்க.இன்னும் ஒரு பத்து சேர்க்கலாம்.
  நன்றி.

  பதிலளிநீக்கு
 42. Ramani கூறியது...

  // எனக்கு இது இன்றைய இளைஞர்களின்
  மனோ நிலையை ஒரு அனுபவஸ்தர்
  (வயதானவர் இல்லை ) சொல்வது போல்தான்
  உள்ளது.அருமையான பதிவு//

  நன்றி ரமணி.

  பதிலளிநீக்கு
 43. Starjan ( ஸ்டார்ஜன் ) கூறியது...

  //சார், வயசுல்லாம் ஆகிடலை உங்களுக்கு.. இப்போதும் இந்தவயதிலும் சுறுசுறுப்பா இயங்குறீங்க பாருங்க. இத்தனை வேலைகளையும் செய்யணும் என்று திட்டமிடுறீங்க பாருங்க. மனசுதான் காரணம். :))//
  உண்மை.மனசுதான் காரணம்.

  பதிலளிநீக்கு
 44. Starjan ( ஸ்டார்ஜன் ) கூறியது...

  //நல்ல நகைச்சுவையாக எழுதியிருக்கீங்க சார்....சூப்பர்//
  நன்றி ஸ்டார்ஜன்.

  பதிலளிநீக்கு
 45. சி.பி.செந்தில்குமார் கூறியது...

  //அண்ணெ, உங்க மனசுக்கு என்றும் 16, யூத்//
  :) நன்றி சிபி.

  பதிலளிநீக்கு
 46. இப்படி எதுவுமே நடக்காமல் நான் எப்படி பிஸியாக இருந்தேன்?


  என்ன ஆச்சு எனக்கு?


  இதற்குப் பதில் சொல்கிறார் நாஞ்சில் மனோ----


  “வயசாயிப் போச்சி தல!ஹே ஹே!”

  எல்லோரும் இப்படித்தான்..
  அழகாக நகைச்சுவைபட சொல்லியவிதம் அருமை அன்பரே..

  பதிலளிநீக்கு
 47. அண்ணே என்னே உங்க ஞாபக சக்தி...இவ்வளவும் ஞாபதுல வச்சிருக்கீங்க அதனால நீங்க பிசிதானே எப்பவுமே!

  பதிலளிநீக்கு
 48. முனைவர்.இரா.குணசீலன் கூறியது...

  இப்படி எதுவுமே நடக்காமல் நான் எப்படி பிஸியாக இருந்தேன்?


  என்ன ஆச்சு எனக்கு?


  இதற்குப் பதில் சொல்கிறார் நாஞ்சில் மனோ----


  “வயசாயிப் போச்சி தல!ஹே ஹே!”

  //எல்லோரும் இப்படித்தான்..
  அழகாக நகைச்சுவைபட சொல்லியவிதம் அருமை அன்பரே..//
  நன்றி குணசீலன் அவர்களே.

  பதிலளிநீக்கு
 49. விக்கியுலகம் கூறியது...

  //அண்ணே என்னே உங்க ஞாபக சக்தி...இவ்வளவும் ஞாபதுல வச்சிருக்கீங்க அதனால நீங்க பிசிதானே எப்பவுமே!//
  நன்றி விக்கி.

  பதிலளிநீக்கு
 50. அய்யா இது வயசானதாலே வந்த கோளாறு? அருமையான பதிவு.உங்க font வித்யாசமா இருக்கு என்ன font யூஸ் பண்றீங்க

  பதிலளிநீக்கு
 51. காட்டு பூச்சி சொன்னது…

  //அய்யா இது வயசானதாலே வந்த கோளாறு? அருமையான பதிவு.உங்க font வித்யாசமா இருக்கு என்ன font யூஸ் பண்றீங்க//

  நன்றி காட்டு பூச்சி .
  நான் அநேகமாக word இல் அடித்துப் பின் வெட்டி ஒட்டுகிறேன்.font என்னவென்பதெல்லாம் எனக்குத் தெரியாது!I am ignorant in these matters!

  பதிலளிநீக்கு
 52. // அய்யய்யோ!அப்படி எதுவும் பண்ணிடாதீங்க!பதிவில் வரும் நான்,நான் அல்ல;வேறு நான்!நான் சொல்வது புரிந்ததா?
  நன்றி பிரபா! //

  ம்ம்ம் ஒத்துக்குறேன்...

  பதிலளிநீக்கு
 53. Philosophy Prabhakaran கூறியது...

  // அய்யய்யோ!அப்படி எதுவும் பண்ணிடாதீங்க!பதிவில் வரும் நான்,நான் அல்ல;வேறு நான்!நான் சொல்வது புரிந்ததா?
  நன்றி பிரபா! //

  // ம்ம்ம் ஒத்துக்குறேன்...//

  சிறப்பு நன்றி.

  பதிலளிநீக்கு
 54. காலங்கள் மாறும் போது, கோலங்கள் மாறும் என்பதனை அழுத்தமாகச் சொல்லி நிற்கிறது இப் பதிவு.

  பதிலளிநீக்கு
 55. காலங்கள் மாறும் போது, வாழ்க்கை கோலங்கள் மாறும் என்பதனை இப் பதிவு சொல்லி நிற்கிறது.

  பதிலளிநீக்கு