தொடரும் தோழர்கள்

வியாழன், அக்டோபர் 20, 2011

லோகுவின் ஆசை!---(சிறுகதை)

திரைஅரங்கிலிருந்து வெளி வந்த லோகுவுக்கு உடல் முழுவதும் ஒரு சூடு பரவியிருந்தது. பார்த்த படத்தில் வந்த சில காட்சிகள் அவனை வதைத்துக் கொண்டிருந்தன.நண்பர்கள் யாரும் உடன் இல்லாததால்,இன்று எப்படியாவது அந்த அனுபவத்தை பெற்று விட வேண்டியதுதான் எனத் தீர்மானித்தான்.அந்த அரங்கு இருந்த தெருவுக்குப் பக்கத்திலேயே, அதற்காகச் சில ஆட்கள் இருக்கிறார்கள் எனக் கேள்விப்பட்டிருக்கிறான்.


அவன் தெரு முனையை அடைந்து சுற்றும் முற்றும் பார்த்தான்.யாரும் இருப்பதாகத் தெரியவில்லை.குறுக்கும் நெடுக்குமாக இரு முறை நடந்தான்.அப்போதுதான் இருட்டிலிருந்து வெளி வந்தான் அந்த ஆள்.


“என்ன சார்?ஆள் வேணுமா”எனக் கேட்டான் .லோகுவும் தயக்கத்துடன் தலயை ஆட்டினான்.

”சார் பார்த்தா ரீஜண்டா இருக்கீங்க.நேத்துத்தான் ஆந்திராவிலிருந்து பார்ட்டி வந்திருக்கிது.ரூபாய் கொஞ்சம் அதிகம் .ஆனா பின்னால பிரச்சினை எதுவும் வராது. என்ன சொல்றீங்க”

லோகு மெல்லிய குரலில் கேட்டான்”எவ்வளவு?”

”பார்ட்டிக்கு 500.என் கமிசன் 50.லாட்ஜில ரூம்பு எடுக்கணும் அதுவும் ஒன் செலவுதான்.” அவன் சொன்னான்.

லோகு”லாட்ஜில் ரூமா?’ என இழுக்கவே அவன் சொன்னான் ”அதுக்கெல்லாம் பயப்படாதே சார்.பக்கத்திலேயே லாட்ஜ் இருக்குது.நமக்கு வேண்டியவங்கதான்.நல்ல ரூமாப் போட்டுடலாம். 250தான்.”

லோகு கூட்டிப் பார்த்தான்.800 தான் ,பர்சில் 1000 இருக்கிறது.

”சரி” என்றான்.

லோகுவையும் அழைத்துக் கொண்டு அவன் அருகில் இருந்த லாட்ஜுக்குச் சென்றான். பார்த்தாலே நிழலான விஷயங்கள் நடக்கும் இடம் எனத் தெரிந்தது.ரிசப்சனில் இருந்தவனிடம்.”மணி, சாருக்கு ஒரு டிலக்ஸ் ரூம் போடு ”எனச் சொல்லி விட்டு லோகுவிடம் 250 ரூபாயை வாங்கிக் கொடுத்தான்.மணி என்பவன் புத்தகத்தை விரித்து விட்டு கேட்டான்.”சார் பேர் விலாசம் சொல்லுங்க.”

லோகுவுக்குக் கொஞ்சம் பயம் வந்தது.ஒரு நிமிடம் யோசித்தான் பின் சொன்னான் ”முத்துசாமி” விலாசம் தவறாக ஏதோ கொடுத்தான்.

லோகுவை அழைத்து வந்த ஆள் லோகுவிடம்”சார் நான் போயிக் கூட்டிட்டு வரேன் . 100ருபாய் அட்வான்ஸ் குடுங்க,அங்க குடுக்க.”

லோகு 100 ரூபாய் கொடுத்தான்.

அந்த ஆள் புறப்பட்ட அந்த நேரத்தில்தான் அவர்கள் வந்தார்கள்------

இரண்டு போலீஸ்காரர்கள்!

உள்ளே நுழைந்த அவர்கள் அந்த ஆளைப் பிடித்துப் பிடரியில் ஒரு அறை விட்டனர். ”ஏண்டா நாயே .எத்தனை தடவை சொன்னாலும் திருந்தவே மாட்டியா? நடடா” என்று அவனை இழுத்துப் போகும்போது லோகுவைப் பார்த்தனர்.

லோகுவுக்குச் சப்தநாடியும் ஒடுங்கிப் போயிற்று.

அவர்கள் கேட்டனர்”யார் சார் நீங்க?”

“இல்ல ,தங்குவதற்கு ரூம் கேட்டு வந்தேன்” நடுங்கியபடி சொன்னான் லோகு.


”போங்க சார் போயி நல்ல லாட்ஜாப் பாருங்க!”

லோகு அவசரமாக அங்கிருந்து கிளம்பி திரும்பிப் பார்க்காமல் நடையைக் கட்டினான் . கூடவே அவர்களும் கிளம்பினர்.

சிரிது நேரம் சென்றபின் போலிஸ்காரர்களும் அந்த ஆளும் திரும்பி வந்தனர்,சிரித்துப் பேசிக் கொண்டே!

லாட்ஜ் மணி அவர்கள் ஒவ்வொருவரிடமும் 50ரூபாயைக் கொடுத்தான்.

அந்த ஆள் புறப்பட்டான்”சரி,நான் அடுத்த வேட்டைக்குப் போறேன்”

போலிஸ்காரர்களும் கிளம்பினர்.அந்தச் சந்துமுனை இருட்டில் சென்று நின்றனர்!

“ஓடு மீன் ஓட உறுமீன் வருமளவும்

வாடியிருக்குமாம் கொக்கு”

58 கருத்துகள்:

 1. அற்ப விஷயத்துக்கு ஆசைப்பட்டால் இப்படித்தான் அனைத்தையும் இழக்க நேரிடும். நல்லாவே ‘கதை’ச்சிருக்கீங்க சார்...

  பதிலளிநீக்கு
 2. அப்படிப் போடுங்க... நச்சின்னு ஒரு 'சிறு' கதை.
  ரொம்ப நல்லாயிருக்கு.

  பதிலளிநீக்கு
 3. ஹா ஹா ஹா ஹா இப்பிடியும் நடக்குதா அவ்வ்வ்வ்....சிபி'கிட்டே சொல்லி வைக்கணும்...

  பதிலளிநீக்கு
 4. நான் நினைக்கிறேன் அந்த லோகு நம்ம சிபி'தான் ஹி ஹி அவன்தான் நிறைய கில்மா படம் பார்த்துட்டு அலையுறான் ஹி ஹி...

  பதிலளிநீக்கு
 5. வணக்கம் ஐயா,
  நலமா?
  நான் கொஞ்சம் பிசியாகிட்டேன்,
  இன்று தான் மறுபடியும் அனைவரினதும் வலையினை மேயப் புறப்பட்டிருக்கிறேன்.

  தங்களின் ஏனைய பதிவுகளை நேரம் கிடைக்கும் போது படிக்கிறேன்.

  மன்னிக்கவும்

  பதிலளிநீக்கு
 6. வணக்கம் ஐயா.
  ஆசை காட்டி மோசம் செய்து,
  வேசம் போட்டு ஒரு கும்பல் பணத்தைப் பிடுங்கியிருக்கிறதே..
  பாவம் அந்த லோகு((((:

  பதிலளிநீக்கு
 7. போலிப் போலீஸ் என்பதை கண்டு பிடிக்கவா அவனால் முடியலை?
  ஹே...ஹே..

  பதிலளிநீக்கு
 8. இன்னும் நன்றாக எழுதியிருக்கலாம்..

  நன்றி,
  கண்ணன்
  http://www.tamilcomedyworld.com

  பதிலளிநீக்கு
 9. கதை அருமை சார்

  நல்லா இருக்கு

  பதிலளிநீக்கு
 10. யார் அனுபவம் நு தெரியல, இருந்தாலும் சூப்பர்... சார், நான் உங்கள நம்புறன் சார்

  பதிலளிநீக்கு
 11. நல்ல கதை அய்யா! பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 12. இந்த கள்ளன் போலீஸ் விளையாட்டு
  அருமையாக இருக்கே
  மூனுபேருக்கும் திருப்தி
  நம் கதா நாயகன் உட்பட

  பதிலளிநீக்கு
 13. MANO நாஞ்சில் மனோ கூறியது...

  // ஹா ஹா ஹா ஹா இப்பிடியும் நடக்குதா அவ்வ்வ்வ்....சிபி'கிட்டே சொல்லி வைக்கணும்...//
  //நான் நினைக்கிறேன் அந்த லோகு நம்ம சிபி'தான் ஹி ஹி அவன்தான் நிறைய கில்மா படம் பார்த்துட்டு அலையுறான் ஹி ஹி...//
  பாவம்.சிபித்தம்பி நல்ல பிள்ளையாச்சே!கில்மா படமெல்லாம் விமரிசனம் எழுதுவதற்காகத்தான் பார்க்கிறார்!அவ்ரு இப்படியெல்லாம் மாட்டிக்க மாட்டார்!

  நன்றி மனோ.

  பதிலளிநீக்கு
 14. @நிரூபன்
  வாங்க நிரூபன்.
  தகாத ஆசைக்குத் தண்டனை.
  போலிஸ் நிஜப் போலிஸாகக்கூட இருக்கலாமே!

  நன்றிகள் நிரூ.

  பதிலளிநீக்கு
 15. @suryajeeva
  கதாசிரியன் எப்போதும் கண்ணையும் காதையும் திறந்து வைத்திருக்க வேண்டும்.எங்கிருந்தாவது கரு கிடைக்கும்.அது போலத்தான் இது!
  நன்றி.

  பதிலளிநீக்கு
 16. கள்ளன் போலீஸ் விளையாட்டு கதை...ரொம்ப நல்லாயிருக்கு...

  பதிலளிநீக்கு
 17. @வைரை சதிஷ்
  நன்றி.
  படிப்பு எப்படிப் போயிட்டிருக்கு?

  பதிலளிநீக்கு
 18. இதுக்கப்புறமாச்சும் பய திருந்தினானா,இல்லியா?நல்ல கதை,விழிப்பூட்டும் கதை.

  பதிலளிநீக்கு
 19. புத்தியில் உறைக்கும் கதை ,அருமை ,நச்..

  த.ம 6

  பதிலளிநீக்கு
 20. சூப்பர் சார்... பயபுள்ள ஏமாந்துட்டானே...

  பதிலளிநீக்கு
 21. திட்டம் போட்டு திருடுற கூட்டம் திருடிக்கொண்டே இருக்குது... ஹா ஹா... இது கதையாக தெரியவில்லை ... சமூகத்தில் பெரும்பாலும் நடந்துகொண்டிருக்கும் நிகழ்வாகவே படுகிறது..........

  பதிலளிநீக்கு
 22. அட இது புதுவையான திருட்டா இருக்கே

  பதிலளிநீக்கு
 23. முதல் 2 பேராவை பிளாக்ல டைப் பண்ணிட்டு மீதியை வோஒர்டு பேடுல டைப்புனீங்க பொல!!!

  பதிலளிநீக்கு
 24. >MANO நாஞ்சில் மனோ கூறியது...

  நான் நினைக்கிறேன் அந்த லோகு நம்ம சிபி'தான் ஹி ஹி அவன்தான் நிறைய கில்மா படம் பார்த்துட்டு அலையுறான் ஹி ஹி..

  அண்ணன் கோவிச்சுக்கப்போறார், கும்முறதுக்கு இது உன் பிளாக் இல்லை தம்பி, அடக்கி வாசி

  பதிலளிநீக்கு
 25. சி.பி.செந்தில்குமார் கூறியது...

  //முதல் 2 பேராவை பிளாக்ல டைப் பண்ணிட்டு மீதியை வோஒர்டு பேடுல டைப்புனீங்க பொல!!!//
  இல்லை சிபி.முழுவதும் வேர்ட் இல் அடித்து காபி செய்தேன்.பப்ளிஷ் பண்ணியதும் இப்படி வந்து விட்டது.என்ன செய்ய? இந்த மாதிரி விஷயங்களில் நான் ஒரு 0!
  நன்றி.

  பதிலளிநீக்கு
 26. சி.பி.செந்தில்குமார் கூறியது...

  >MANO நாஞ்சில் மனோ கூறியது...

  நான் நினைக்கிறேன் அந்த லோகு நம்ம சிபி'தான் ஹி ஹி அவன்தான் நிறைய கில்மா படம் பார்த்துட்டு அலையுறான் ஹி ஹி..

  //அண்ணன் கோவிச்சுக்கப்போறார், கும்முறதுக்கு இது உன் பிளாக் இல்லை தம்பி, அடக்கி வாசி//

  :)))

  பதிலளிநீக்கு
 27. தப்பு செய்ய நினைத்தவனுக்கு அபராதம் ரூபாய் 350. ஆனால் அந்த தப்பை செய்யத்தூண்டியவர்களுக்கோ வரவு ரூபாய் 350. நாட்டு நடப்பை எடுத்துக்காட்டிய நல்ல கதை.

  பதிலளிநீக்கு
 28. ஹா ஹா ஹா. கணிக்க முடியாத முடிவு... சூப்பர் சார்.

  பதிலளிநீக்கு
 29. “ஓடு மீன் ஓட உறுமீன் வருமளவும்

  வாடியிருக்குமாம் கொக்கு”

  பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 30. நல்ல சூடு
  அருமை!

  புலவர் சா இராமாநுசம்

  பதிலளிநீக்கு