தொடரும் தோழர்கள்

புதன், அக்டோபர் 12, 2011

கனி பற்றிப் புதிய தகவல்!

இன்று காலை டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் படித்த இந்தச் செய்தியை உடனே உங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற ஆவலில் இந்த அவசரப் பதிவு.

நாம் தினம்,தினம் பல கனிகளைச் சாப்பிடுகிறோம்.ஆப்பிள் ,வாழை,சாத்துக்குடி, ஆரஞ்சு இவைதாம் நம் ஆரோக்கியத்துக்கு நல்லது என்ற நம்பிக்கையில் இருக்கிறோம்.ஆனால் நம் நம்பிக்கைகளைத் தகர்த்துத் தவிடு பொடியாக்கி விட்டது ஒரு ஆராய்ச்சி!

ஹைதராபாத்தில் உள்ள தேசிய ஊட்டச்சத்து நிலையம் நடத்திய ஒரு ஆராய்ச்சியின் முடிவுகள் வெளி வந்துள்ளன.இந்தியாவில் பொதுவாக உண்ணப்படும் 14 கனி வகைகளை ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொண்டார்கள்.இந்தக் கனிகளில் இயற்கையில் இருக்கும் ஆண்டி ஆக்சிடண்ட் அளவுகளை ஆராய்ச்சி மூலம் கண்டறிந்தார்கள். உடலில் உள்ள செல்களின் சிதைவைக் கட்டுப் படுத்தக்கூடியவை ஆண்டிஆக்சிடண்ட்கள்.ஆராய்ச்சி முடிவின் படி நமக்கு மிகவும் பயனளிக்ககூடிய கனி--கொய்யாக்கனி என்பது கண்டறியப்பட்டது.100 கிராம் கொய்யாவில்,496 மில்லி கிராம் ஆண்டிஆக்சிடண்ட் இருப்பதாக அறிந்தார்கள்.மற்ற முக்கியக் கனிகளில் அந்த அளவு---

மாம்பழம்-170
ஆப்பிள்--123
பப்பாளி-- 50
வாழை--- 50
சாத்துக்குடி 26

மலிவான கொய்யாவே அதிக அளவு பயன் தருகிறது!

இனி எல்லோரும் கொய்யாக்கனியை அதிகம் உண்ணுங்கள்!

அதுவும் விலை ஏறட்டும்!!56 கருத்துகள்:

 1. அதுவும் விலை ஏறட்டும்!!//

  ஹா ஹா செம

  பதிலளிநீக்கு
 2. கொய்யா பற்றி அருமையான விசயம் ஐயா!

  பதிலளிநீக்கு
 3. அதாவது இளமை தரும் கனி கொய்யான்னு சொல்லுங்க

  பதிலளிநீக்கு
 4. நானும் கனிமொழி பற்றி எதோ புது விஷயம்னு வந்து ஏமாந்து போயிட்டேன் சாமி

  பதிலளிநீக்கு
 5. அடங்கொய்யால... கொய்யாக் கனி இவ்வளவு சத்துள்ளதுன்னு தெரியாமப் போயிடுச்சே... இனி ஒரு கை பாத்துடலாம்..!

  பதிலளிநீக்கு
 6. நாமெல்லாம் சாய்ந்தால் சாய்கிற செம்மறி ஆடுகள் என சொல்லாமல் சொல்கிறீர்கள். எனினும் இது உபயோகமான தகவல். நன்றி.

  பதிலளிநீக்கு
 7. //மலிவான கொய்யாவே அதிக அளவு பயன் தருகிறது!

  //

  நல்ல விஷயம்

  பதிலளிநீக்கு
 8. இதே கொய்யா காஷ்மீரில் மட்டும் விளைந்துகொண்டிருந்தால் பெரிய அளவில் பேசப்பட்டிருக்கும் ......உள்ளூர் சரக்கோட நிலைமை எப்பவுமே இப்படித்தான் ...

  பதிலளிநீக்கு
 9. ஹாய் ஜாலி.. நான் எப்போதும் கொய்யா பிரியன் இனி கேட்கவா வேண்டும்.. நல்ல பதிவு வாழ்த்துக்கள்..!

  பதிலளிநீக்கு
 10. "கனி"ன்னதும் அடிச்சி பிடிச்சி ஓடி வந்தேன் ஹி ஹி ஏமாத்திபுட்டீன்களே...???

  பதிலளிநீக்கு
 11. எதிர்பாத்தேன், நீங்க இப்படிதான் எதாவது காமெடி பண்ணுவீங்க!னு :))

  பதிலளிநீக்கு
 12. இனி "கொய்யா"லன்னு திட்ட முடியாது ஹா ஹா ஹா பயனுள்ள தகவல் தல...!!!

  பதிலளிநீக்கு
 13. வணக்கம்!என்னங்க சார்! நீங்களும் சமயம் பார்த்து ஜோக் செய்கின்றீர்.கனி என்றால் இப்போதைக்கு கனிமொழியைத்தானே நினைப்பார்கள்.

  பதிலளிநீக்கு
 14. அண்ணனுக்கு எப்பவும் லொள்ளு ஜாஸ்திதான், டைட்டிலும் , கடைசி பஞ்ச் லைனான கொய்யாப்பழம் மேட்டரும் அதற்கு கட்டியம் கூறியது

  பதிலளிநீக்கு
 15. //ஆராய்ச்சியின் முடிவுகள் வெளி வந்துள்ளன.//

  கனி பத்தின முடிவெல்லாம் வெளில வருது..ஆனா பாவம், கனி தான்.........

  பதிலளிநீக்கு
 16. விக்கியுலகம் கூறியது...

  //Thank you//

  நன்றி விக்கி.

  பதிலளிநீக்கு
 17. நண்டு @நொரண்டு -ஈரோடு கூறியது...

  //பயனுள்ள தகவல்.
  பகிர்வுக்கு நன்றி .//
  நன்றி நண்டு @நொரண்டு -ஈரோடு

  பதிலளிநீக்கு
 18. மாய உலகம் கூறியது...

  அதுவும் விலை ஏறட்டும்!!//

  //ஹா ஹா செம//

  :)

  பதிலளிநீக்கு
 19. மாய உலகம் கூறியது...

  //கொய்யா பற்றி அருமையான விசயம் ஐயா!//
  நன்றி ராஜேஷ்.

  பதிலளிநீக்கு
 20. ’’சோதிடம்’’ சதீஷ்குமார் கூறியது...

  //அதாவது இளமை தரும் கனி கொய்யான்னு சொல்லுங்க//
  ஆமாம்,ஆமாம்!
  நன்றி சதீஷ் குமார்.

  பதிலளிநீக்கு
 21. அம்பலத்தார் கூறியது...

  //வாழ்க கொய்யா. தகவலிற்கு நன்றி//
  நன்றி அம்பலத்தார்.

  பதிலளிநீக்கு
 22. suryajeeva கூறியது...

  // நானும் கனிமொழி பற்றி எதோ புது விஷயம்னு வந்து ஏமாந்து போயிட்டேன் சாமி//

  இதை,இதைத்தான் நான் எதிர்பார்த்தேன்!!
  நன்றி சூரியஜீவா.

  பதிலளிநீக்கு
 23. கணேஷ் கூறியது...

  //அடங்கொய்யால... கொய்யாக் கனி இவ்வளவு சத்துள்ளதுன்னு தெரியாமப் போயிடுச்சே... இனி ஒரு கை பாத்துடலாம்..!//
  ரைட்டு!
  நன்றி கணேஷ்.

  பதிலளிநீக்கு
 24. வே.நடனசபாபதி கூறியது...

  //நாமெல்லாம் சாய்ந்தால் சாய்கிற செம்மறி ஆடுகள் என சொல்லாமல் சொல்கிறீர்கள். எனினும் இது உபயோகமான தகவல். நன்றி.//
  நன்றி சபாபதி அவர்களே!

  பதிலளிநீக்கு
 25. "என் ராஜபாட்டை"- ராஜா கூறியது...

  //மலிவான கொய்யாவே அதிக அளவு பயன் தருகிறது!

  //

  // நல்ல விஷயம்//
  உண்மை.

  பதிலளிநீக்கு
 26. "என் ராஜபாட்டை"- ராஜா கூறியது...

  // நல்ல பகிர்வு//
  நன்றி.

  பதிலளிநீக்கு
 27. "என் ராஜபாட்டை"- ராஜா கூறியது...

  //இன்று என் வலையில்


  கிளுகிளு கில்பான்ஸ் கழகம்- துவக்க விழா//

  வந்துடலாம்!

  பதிலளிநீக்கு
 28. koodal bala கூறியது...

  // இதே கொய்யா காஷ்மீரில் மட்டும் விளைந்துகொண்டிருந்தால் பெரிய அளவில் பேசப்பட்டிருக்கும் ......உள்ளூர் சரக்கோட நிலைமை எப்பவுமே இப்படித்தான் ...//
  அப்படி சொல்லுங்க!
  நன்றி.

  பதிலளிநீக்கு
 29. Nirosh கூறியது...

  //ஹாய் ஜாலி.. நான் எப்போதும் கொய்யா பிரியன் இனி கேட்கவா வேண்டும்.. நல்ல பதிவு வாழ்த்துக்கள்..!//
  நன்றி நிரோஷ்.

  பதிலளிநீக்கு
 30. முனைவர்.இரா.குணசீலன் கூறியது...

  //அட!!

  வியப்பாக உள்ளதே!!!!!!!!!//
  !!!
  நன்றி குணசீலன்.

  பதிலளிநீக்கு
 31. MANO நாஞ்சில் மனோ கூறியது...

  // "கனி"ன்னதும் அடிச்சி பிடிச்சி ஓடி வந்தேன் ஹி ஹி ஏமாத்திபுட்டீன்களே...???//
  ஹா,ஹா,ஹா!

  பதிலளிநீக்கு
 32. தக்குடு கூறியது...

  //எதிர்பாத்தேன், நீங்க இப்படிதான் எதாவது காமெடி பண்ணுவீங்க!னு :))//
  பத்திரிகைச் செய்திக்குப் பொறுத்தமா தலைப்புக் கொடுத்தேன்!
  நன்றி.

  பதிலளிநீக்கு
 33. MANO நாஞ்சில் மனோ கூறியது...

  //இனி "கொய்யா"லன்னு திட்ட முடியாது ஹா ஹா ஹா பயனுள்ள தகவல் தல...!!!//
  நன்றி மனோ.

  பதிலளிநீக்கு
 34. தி.தமிழ் இளங்கோ கூறியது...

  //வணக்கம்!என்னங்க சார்! நீங்களும் சமயம் பார்த்து ஜோக் செய்கின்றீர்.கனி என்றால் இப்போதைக்கு கனிமொழியைத்தானே நினைப்பார்கள்.//

  ஆனால் எப்போதுமே கனி என்றால் பழம்தானே!
  நன்றி.

  பதிலளிநீக்கு
 35. சி.பி.செந்தில்குமார் கூறியது...

  //அண்ணனுக்கு எப்பவும் லொள்ளு ஜாஸ்திதான், டைட்டிலும் , கடைசி பஞ்ச் லைனான கொய்யாப்பழம் மேட்டரும் அதற்கு கட்டியம் கூறியது//

  இதெல்லாம் லொள்ளா!:))

  நன்றி சிபி.

  பதிலளிநீக்கு
 36. செங்கோவி கூறியது...

  //ஆராய்ச்சியின் முடிவுகள் வெளி வந்துள்ளன.//

  //கனி பத்தின முடிவெல்லாம் வெளில வருது..ஆனா பாவம், கனி தான்.........//
  கனிந்த பின் மரத்தில் இருக்காது எக்கனியும்!
  நன்றி!

  பதிலளிநீக்கு
 37. இனி எல்லோரும் கொய்யாக்கனியை அதிகம் உண்ணுங்கள்!

  அதுவும் விலை ஏறட்டும்!!
  // ஆஹா எப்படி எல்லாம் அறிவுரை சொல்றாங்கப்பா?

  பதிலளிநீக்கு
 38. மலிவான கொய்யாவே அதிக அளவு பயன் தருகிறது!

  அடடா இனி இந்தக் கொய்யாக் கனியை வைத்து புதிய
  தத்துவத்தை உருவாக்க வேண்டியதுதான் புதிய தத்துவம்.
  "நான் ஏழை என்றாலும் எதிலும் கொயாக்கனி மாதிரி"
  புரிஞ்சுதா?...........அருமையான தகவல் வாழ்த்துக்கள்
  ஐயா .மிக்க நன்றி பகிர்வுக்கு .

  பதிலளிநீக்கு
 39. கனியைப் பத்துன ஆராய்ச்சி அபாரம்
  பேஷ் பேஷ் ரொம்ப நல்லா இருக்கு சார்..

  பதிலளிநீக்கு
 40. உள்ளே வெள்ளையா இருக்குமே அதா இல்லை ரோஸா இருக்குமே அந்த கொய்யாவா???

  பதிலளிநீக்கு
 41. கொய்யா கனி!... நல்ல தகவல்கள் ஐயா... :)

  பதிவுகளுக்குப் பெயர் வைப்பதில் நீங்கள் கில்லாடி...

  பதிலளிநீக்கு
 42. வணக்கம் ஐயா,
  சிட்டுவேசன் தலைப்போடு கூடிய பழங்களில் உள்ள ஊட்டச் சத்துப் பற்றிச் சொல்லும் அருமையான பதிவு

  பதிலளிநீக்கு
 43. நிரூபன் கூறியது...

  // வணக்கம் ஐயா,
  சிட்டுவேசன் தலைப்போடு கூடிய பழங்களில் உள்ள ஊட்டச் சத்துப் பற்றிச் சொல்லும் அருமையான பதிவு//
  நன்றி நிரூ.

  பதிலளிநீக்கு