தொடரும் தோழர்கள்

புதன், அக்டோபர் 26, 2011

தீபாவளி நல் வாழ்த்துகள்


இன்று தீபாவளி;நரகாசுரனைக் கொன்ற நாள்

ஒன்று கேட்பேன் நான் இந்நாளில், சொல்லுங்கள்

நம்முள்ளிருக்கும் நரகாசுரன்களைக் கொன்றோமா?

பேராசை,சினம்,கடும்பற்று,முறையற்ற காமம்,

உயர்வு தாழ்வு மனப்பான்மை, வஞ்சம் எனும் பொல்லாத

அசுரர்களைக் கொன்றொழிக்க வேண்டாமா?


அதற்கெல்லாம் நாளாகும்,இன்று தீபாவளி,

அதிகாலை குளிப்போம்,புதுத்துணி அணிவோம்

அதிரசம் புசிப்போம், ஆட்டம்பாம் வெடிப்போம்

அதன்பின் என்ன செய்ய?


முட்டாள் பெட்டி முன் முழுநாளும் அமர்ந்து

தட்டாமல் நிகழ்ச்சிகளைப் பார்ப்போம்.

கொறிப்பதற்குப் பலகாரம் குறைவில்லை

சிறுத்தை,சிங்கம் ,அது இது அவன் இவன் எனப்

பார்ப்பதற்குப் படங்களுக்கும் குறைவில்லை!

யார் வந்தால் என்ன வாழ்த்துச் சொல்ல?

வெறுமிடைஞ்சல் ,கழுத்தறுப்பு, ரம்பம் என்றே

வெறுத்து ஒதுக்குவோம்,படத்தில் மூழ்குவோம்!

இதற்கு மேல் இன்பம் வேறென்ன வேண்டும்?!


தீபாவளி நல்வாழ்த்துகள்!

36 கருத்துகள்:

 1. அண்ணே தீபாவளி நல்வாழ்த்துக்கள்!...எனக்கு விடுமுறை இல்லன்னே...எப்பவும் போல வேலையில்தான் ஓடுது ஹிஹி!

  பதிலளிநீக்கு
 2. //நம்முள்ளிருக்கும் நரகாசுரன்களைக் கொன்றோமா?//

  நல்ல கேள்வி....

  உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துகள்...

  பதிலளிநீக்கு
 3. பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி

  பதிலளிநீக்கு
 4. வணக்கம், தங்களுக்கும், தங்களது குடும்பஉறவுகளிற்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 5. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும்

  இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 6. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இதயங்கனிந்த தீபஒளி திருநாள் வாழ்த்துகள். இந்நன்னாளில் சந்தோசமும் மகிழ்ச்சியும் பெருகட்டும்.

  பதிலளிநீக்கு
 7. இனிய தீபத்திருநாள் நல் வாழ்த்துக்கள் என் அன்பு உறவுகளே!......
  வாழ்க என்றும் பல்லாண்டு நல் வளமும் நலனும் பெற்று இங்கே
  மிக்க நன்றியும் வாழ்த்துக்களும் இன்றைய உங்கள் சிறந்த பகிர்வுக்கு ........

  பதிலளிநீக்கு
 8. அருமையான கேள்விகள்
  என் இனிய தீப ஒளித்திருநாள் வாழ்த்துகள்!!

  பதிலளிநீக்கு
 9. இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 10. தீபாவளி வாழ்த்துக்கள் ஜயா

  பதிலளிநீக்கு
 11. உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இதயங்கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 12. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இதயங்கனிந்த தீபஒளி திருநாள் வாழ்த்துகள். இந்நன்னாளில் சந்தோசமும் மகிழ்ச்சியும் பெருகட்டும்.

  பதிலளிநீக்கு
 13. //முட்டாள் பெட்டி முன் முழுநாளும் அமர்ந்து
  தட்டாமல் நிகழ்ச்சிகளைப் பார்ப்போம்.//
  நன்றாக சொன்னீர்கள். இந்த தொலைக்காட்சிகள் வந்து நமக்கு தொல்லை தரும் காட்சிகளாக மாறிவிட்டன. என்று இதிலிருது மீள்வோமோ?
  உங்களுக்கும் எனது தீபாவளி நல் வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 14. @விக்கியுலகம்
  நன்றி.
  ஆறுதல்கள்;வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
 15. தீபாவளி நல் வாழ்த்துகள் நக்கலான பதிவு . இன்றுள்ள நிலையை சரியான முறையில் படம் பிடித்து காட்டுகிறது. வாசுதேவன்

  பதிலளிநீக்கு
 16. தீபாவளித் திருநாளிற்கேற்ற தித்திக்கும் தீந் தமிழ்க் கவிதை ஐயா.

  பதிலளிநீக்கு