தொடரும் தோழர்கள்

செவ்வாய், அக்டோபர் 04, 2011

நாக ரத்தினம்!

சோதிடர் சொல்லி விட்டார்”சார்,தசாநாதன் சாதகமாக இல்லை.உங்கள் எல்லாப் பிரச்சினைக்கும் காரணம் அதுதான்”

”ஏதாவது பரிகாரம் செய்யலாமா?”

“செய்யலாம்.கஷ்டம் கொஞ்சம் குறையும்.அதற்கு முன்னால்,உங்கள் குல தெய்வத்தை வழிபட்டு விடுங்கள்.அப்போதுதான் பரிகாரம் பலன் தரும்”

யோசித்தேன்”கடைசியாக ஊர்ப்பக்கம் போய் பதினைந்து வருடம் இருக்குமா?” இத்தனை ஆண்டுகளாக ஊர்ப்பக்கமே போகாமல் இருந்தது உறுத்தியது.போய் விட வேண்டியதுதான் போய்க் குல தெய்வமான அய்யனாருக்கு எல்லாப் பூசையும் செய்து விட்டு வர வேண்டியதுதான்.

அடுத்த வாரமே புறப்பட்டேன். ரயில் நிலையத்துக்கு என் நண்பன் வந்திருந்தான். அங்கிருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் எங்கள் கிராமம்.

அவனது பைக்கிலியே சென்றோம்.அவன் மனைவி குழந்தைகள் அன்பாக வரவேற்றனர்.

அன்று கிராமத்தில் பெரிசுகளையெல்லாம் பார்த்து விட்டு வந்தேன். கோவில் பூசாரியிடமும் மறுநாள் பூசைக்கு எல்லாம் தயாரா என்று கேட்டு விட்டு வந்தேன்.

தோப்புப் பக்கம் போனேன்.எத்தனை நாட்கள் விளயாடிய இடம்? அங்குதான் தூங்கண்ணனைப் பார்த்தேன்.எல்லார் வீட்டிலும் என்ன வேலை சொன்னாலும் செய்வான்;யார் வீட்டிலாவது சாப்பிடுவான். தனியாள்.

”என்ன ,தூங்கண்ணே! எப்படியிருக்கே? ”

என்னை உற்றுப் பார்த்தான்.”யாரு ?கோடி வீட்டுத் தம்பியா?என்ன ஊரையே மறந்துட்டீங்களா?”

“அதான் வந்துட்டேனே.என்ன செஞ்சிட்டுருக்கே ?”

சொன்னான்”நாந்தான் இந்தத் தோப்புக்குக் காவல்.இதை பாண்டித்தேவர் வாங்கிட்டாரு. அவர்தான் ஒரு பக்கமா உக்காருடான்னு சொல்லி இங்கேயே இருக்கச் சொல்லிட்டாரு” பேசிக் கொண்டிருக்கும் போதே சிறிது தூரத்தில் ஒரு பெரிய நல்ல பாம்பு வேகமாகச் சென்று மறைந்தது.நான் பயந்து போய் அவனைப் பார்த்தேன்.

“தம்பி!நான் சொல்றதை யாரிட்டயும்சொல்லிடாதீங்க. அது ரொம்ப வயசான பாம்பு. அதுங்கிட்ட நாகரத்தினம் இருக்கு.அதை எடுக்கணும்னு காத்துக்கிட்டிருக்கேன். அமாவாசை அன்னிக்கு ராத்திரி இரைதேடப் போகும்போது அந்த ரத்தினத்தைக் கக்கிட்டு அந்த வெளிச்சத்திலதான் போகும்.அப்ப,அந்த ரத்தினத்தைச் சாணியால மூடிட்டு அந்தப்பாம்பை லேசாக் கொன்னுடலாம்.”

நான் சிரித்தேன்.

“என்ன சிரிக்கிறீங்க?நெசம் தம்பி.இது நடக்கத்தான் போகுது பாருங்க.பாண்டி த் தேவருக்கே இம்புட்டுப் பணம் எப்புடி வந்தது.ஒரு ரத்தினம் கெடச்சப்பறம்தான்”

அத்தோடு வந்து விட்டேன். மறுநாள் ,பூசை,படையல் என்று பொழுது போயிற்று. மாலை நண்பனுடன் டவுனுக்குப் போய் வந்தேன்.

மறு நாள் புறப்பட வேண்டும் .அன்று காலை யாரோ சொன்னார்கள், தூங்கண்ணன் இறந்து கிடக்கிறான்,அவனைப் பாம்பு தீண்டி விட்டது என்று.நானும் போய்ப் பார்த்தேன்.தோப்பில் அவன் கிடந்தான் .உடல் விஷத்தால் நிறம் மாறியிருந்தது.இடது கையில் வேல்கம்பு.வேலில் ரத்தம்.அருகில் அந்த நாகம் தலையில் காயத்துடன் செத்துக் கிடந்தது.

அவனுக்கு என்று யாரும் இல்லாததால், வெட்டியானையே எல்லா வற்றையும் செய்யச் சொல்லி விட்டார்கள்.ஆகும் செலவெல்லாம் பாண்டித்தேவர் பொறுப்பு.

உடலை எடுத்துச் செல்லும்போதுதான் கவனித்தேன்,அவன் வலது கை மூடியிருந்தது,இறுக்கமாக.அதைப் பற்றி யாரும் கண்டு கொள்ளவில்லை.

எனக்கு ஒரு நெருடல் .கையில் என்ன இருக்கும்?

நேற்று அமாவாசை!

”ஒரு வேளை,ஒரு வேளை,அப்படியிருக்குமோ?”

……………………………………………….

கதை இதோடு முடிவதே சிறப்பு.

ஆனால் சிலர் ஏதாவது ட்விஸ்ட் வேண்டும் என்பார்கள், சினிமாத்தனமாக.அவர்களுக்காக,இதோ----

……………….

இது நடந்து இரண்டு ஆண்டுகள்கழிந்த பின்,ஒரு நாள்.அந்தப் பெரிய மாலிலிருந்து வெளியேவந்தேன்.சாலைக்கு வந்ததும் என்னருகில் ஒரு கார் வந்து நின்றது.கரிலிருந்து பட்டு வேட்டி,சட்டையுடன் ஒருவர் இறங்கினார்.என்னைப் பார்த்துக் கேட்டார்”தம்பி,நல்லாருக்கீங்களா?”

பார்த்தமுகம்,ஆனால் யாரென்று தெரியவில்லை.

என்ன தம்பி,முழிக்கறீங்க.நாந்தான் மாசாணம்,ஒங்க ஊரு வெட்டியான்!”

……………………………………………………

56 கருத்துகள்:

 1. என்ன தம்பி,முழிக்கறீங்க.நாந்தான் மாசாணம்,ஒங்க ஊரு வெட்டியான்!”//

  ஹா ஹா ஹா ஹா இதான் நச்சின்னு இருக்கு...!!!

  பதிலளிநீக்கு
 2. எங்கே ஊர்லயும் இப்படி பேசி கேட்டுருக்கிறேன், ஆனால் சாணி இல்லை கலசம் கொண்டு மூடவேண்டுமாம், பாம்பு அந்த மண்சட்டி கலசத்தை கொத்தி கொத்தி உயிரை விட்டுடுமாம் அப்புறமா போயி நாகரத்தினத்தை எடுக்கலாமாம் ஹி ஹி....!!!

  பதிலளிநீக்கு
 3. ஜயா இந்தக்கதையின் கிளைமாக்ஸ் சூப்பர் இதன் கிளைமாக்ஸ் உண்மையா?

  பதிலளிநீக்கு
 4. முடிவுதான் கலக்குது பாஸ்.

  பதிலளிநீக்கு
 5. யப்பா செம கலக்கல்...வெட்டியான் முடிச்சு சூப்பர்

  பதிலளிநீக்கு
 6. கதை சூப்பர் ஐயா... அதுவும் கிளைமாக்ஸ் அருமை அருமை... வாழ்த்துக்கள்...!

  பதிலளிநீக்கு
 7. நானும் கேள்விப் பட்டதுண்டு ஐயா ,

  படைக்க சுவாரஸ்யம் கதை .
  பகிர்வுக்கு நன்றி

  பதிலளிநீக்கு
 8. ட்விஸ்ட்டோட வர்றது தான் நிறைவா இருக்கு.

  பதிலளிநீக்கு
 9. ட்விஸ்ட்தான் சுவை கூட்டுகிறது கதைக்கு.

  பதிலளிநீக்கு
 10. நாகத்திடம் ரத்தினம் இருக்கும் என்பது கற்பனைதான் என்றும் இதுவரை யாரும் நிரூபிக்கவில்லை என்றும் சொல்வார்கள். ஆனாலும் உங்களின் கதையில் சுவாரசியம் குறையாமல் இருந்தது. சூப்பர்ப்!

  பதிலளிநீக்கு
 11. செம்ம கலக்கல் பாஸ்!
  இரண்டாவது முடிவும் நச்சுன்னு இருக்கு!

  பதிலளிநீக்கு
 12. கதை அருமை. வயதான பாம்பிடம் நாகரத்தினம் இருக்கும் என்பது செவி வழி வந்த கதைதான்.
  ஆனாலும் அதை அருமையை எடுத்து சென்று இருக்கிறீர்கள்.வாழ்த்துக்கள்!

  ஆல்ஃப்ரெட் ஜோசஃப் ஹிட்ச்காக் அவருடைய படம் ஒன்றுக்கு இரண்டு முடிவு வைத்திருந்தார் என்றும் படத்தின் முடிவில் இரசிகர்கள் தாங்கள் விரும்பும் முடிவை இருக்கையில் உள்ள பொத்தானை அழுத்தியதும் பெருவாரியான இரசிகர்களின் விருப்பம்போல் கதை நகர்ந்து முடியும் எனக் கேள்விப்பட்டு இருக்கிறேன். தாங்களும் அதுபோல் கதையின் முடிவைஅறிவிக்காமல்,எங்களைப்
  போன்ற தங்கள் இரசிகர்களின் விருப்பம் அறிந்து முடிக்கலாம்.

  பதிலளிநீக்கு
 13. MANO நாஞ்சில் மனோ கூறியது...

  // என்ன தம்பி,முழிக்கறீங்க.நாந்தான் மாசாணம்,ஒங்க ஊரு வெட்டியான்!”//

  ஹா ஹா ஹா ஹா இதான் நச்சின்னு இருக்கு...!!!//
  நன்றி மனோ.

  பதிலளிநீக்கு
 14. MANO நாஞ்சில் மனோ கூறியது...

  // எங்கே ஊர்லயும் இப்படி பேசி கேட்டுருக்கிறேன், ஆனால் சாணி இல்லை கலசம் கொண்டு மூடவேண்டுமாம், பாம்பு அந்த மண்சட்டி கலசத்தை கொத்தி கொத்தி உயிரை விட்டுடுமாம் அப்புறமா போயி நாகரத்தினத்தை எடுக்கலாமாம் ஹி ஹி....!!!//
  எல்லாமே கதைகள்தான்!

  பதிலளிநீக்கு
 15. MANO நாஞ்சில் மனோ கூறியது...

  // தமிழ்மணம் எங்கே போச்சு தல...???//
  திரும்ப வந்து ஓட்டுப் போட்டுட்டுப் போங்க!
  அதற்கும் நன்றி!

  பதிலளிநீக்கு
 16. K.s.s.Rajh கூறியது...

  //ஜயா இந்தக்கதையின் கிளைமாக்ஸ் சூப்பர் இதன் கிளைமாக்ஸ் உண்மையா?//
  இதில் வரும் சம்பவங்கள், பாத்திரங்கள் யாவும் கற்பனையே!
  நன்றி ராஜ்.

  பதிலளிநீக்கு
 17. விக்கியுலகம் கூறியது...

  //லாஸ்ட் டைரக்டர் டச்!//
  நன்றி விக்கி.

  பதிலளிநீக்கு
 18. !* வேடந்தாங்கல் - கருன் *! கூறியது...

  // ட்விஸ்டும் சூப்பர் றா இருக்கு சகோ..//
  நன்றி கருன்.

  பதிலளிநீக்கு
 19. வைரை சதிஷ் கூறியது...

  //முடிவுதான் கலக்குது பாஸ்.//
  நன்ரி சதீஷ்.

  பதிலளிநீக்கு
 20. ’’சோதிடம்’’ சதீஷ்குமார் கூறியது...

  // யப்பா செம கலக்கல்...வெட்டியான் முடிச்சு சூப்பர்//
  நன்றி சதீஷ்குமார்.

  பதிலளிநீக்கு
 21. Nirosh கூறியது...

  //கதை சூப்பர் ஐயா... அதுவும் கிளைமாக்ஸ் அருமை அருமை... வாழ்த்துக்கள்...!//
  நன்றி நிரோஷ்.

  பதிலளிநீக்கு
 22. M.R கூறியது...

  //நானும் கேள்விப் பட்டதுண்டு ஐயா ,

  படைக்க சுவாரஸ்யம் கதை .
  பகிர்வுக்கு நன்றி//

  // தமிழ் மணம் 7//
  நன்றி ரமேஷ்.

  பதிலளிநீக்கு
 23. செங்கோவி கூறியது...

  //ட்விஸ்ட்டோட வர்றது தான் நிறைவா இருக்கு.//
  நன்றி செங்கோவி.

  பதிலளிநீக்கு
 24. இராஜராஜேஸ்வரி கூறியது...

  // ட்விஸ்ட்தான் சுவை கூட்டுகிறது கதைக்கு.//
  நன்றி இராஜராஜேஸ்வரி.

  பதிலளிநீக்கு
 25. கணேஷ் கூறியது...

  //நாகத்திடம் ரத்தினம் இருக்கும் என்பது கற்பனைதான் என்றும் இதுவரை யாரும் நிரூபிக்கவில்லை என்றும் சொல்வார்கள். ஆனாலும் உங்களின் கதையில் சுவாரசியம் குறையாமல் இருந்தது. சூப்பர்ப்!//
  நன்றி கணேஷ்.

  பதிலளிநீக்கு
 26. ஜீ... கூறியது...

  //செம்ம கலக்கல் பாஸ்!
  இரண்டாவது முடிவும் நச்சுன்னு இருக்கு!//
  நன்றி ஜீ.

  பதிலளிநீக்கு
 27. வே.நடனசபாபதி கூறியது...

  //கதை அருமை. வயதான பாம்பிடம் நாகரத்தினம் இருக்கும் என்பது செவி வழி வந்த கதைதான்.
  ஆனாலும் அதை அருமையை எடுத்து சென்று இருக்கிறீர்கள்.வாழ்த்துக்கள்!

  ஆல்ஃப்ரெட் ஜோசஃப் ஹிட்ச்காக் அவருடைய படம் ஒன்றுக்கு இரண்டு முடிவு வைத்திருந்தார் என்றும் படத்தின் முடிவில் இரசிகர்கள் தாங்கள் விரும்பும் முடிவை இருக்கையில் உள்ள பொத்தானை அழுத்தியதும் பெருவாரியான இரசிகர்களின் விருப்பம்போல் கதை நகர்ந்து முடியும் எனக் கேள்விப்பட்டு இருக்கிறேன். தாங்களும் அதுபோல் கதையின் முடிவைஅறிவிக்காமல்,எங்களைப்
  போன்ற தங்கள் இரசிகர்களின் விருப்பம் அறிந்து முடிக்கலாம்.//
  தங்களின் விளக்கமான கருத்துக்கும்,ஆலோசனைக்கும் நன்றி சபாபதி அவர்களே.

  பதிலளிநீக்கு
 28. ஒரு லக்கினத்தில் ஒன்பது கிரகங்களும் உச்சத்தில் இருக்கும் ஒருவன்... ஒருவன்...

  பதிலளிநீக்கு
 29. முடிவு மிக மிக மிக மிக மிக
  அருமை!
  புலர் சா இராமாநுசம்

  பதிலளிநீக்கு
 30. விறுவிறுப்பான ஒரு குறும்படம் பார்த்த த்ரில் .

  பதிலளிநீக்கு
 31. கதை நல்லா இருக்கு சார்,கடைசீல சூப்பர்.

  பதிலளிநீக்கு
 32. நாகத்திடம் ரத்தினம் இருந்ததோ இல்லையோ, உங்களது கதை ரத்தினமாய் ஜொலிக்கிறது.

  இரண்டு முடிவுமே நன்று... :)

  பகிர்வுக்கு மிக்க நன்றி. த.ம. 13

  பதிலளிநீக்கு
 33. என்ன தம்பி,முழிக்கறீங்க.நாந்தான் மாசாணம்,ஒங்க ஊரு வெட்டியான்...

  நச்.

  பதிலளிநீக்கு
 34. வச்சிங்க பாருங்க கிளைமாக்ஸ்ல டிவிஸ்ட் !
  கலக்கிட்டிங்க போங்க!

  பதிலளிநீக்கு
 35. இனிய இரவு வணக்கம் ஐயா,

  அளவுக்கதிகமாக ஆசைப்படுவதால் ஏற்படும் விளைவுதனை வாழ்வில் கண்ட ஓர் சம்பவத்தினூடாகப் பகிர்ந்திருக்கிறீங்க.

  பதிலளிநீக்கு
 36. suryajeeva சொன்னது…

  //ஒரு லக்கினத்தில் ஒன்பது கிரகங்களும் உச்சத்தில் இருக்கும் ஒருவன்... ஒருவன்...//
  ????
  நன்றி!

  பதிலளிநீக்கு
 37. புலவர் சா இராமாநுசம் கூறியது...

  // முடிவு மிக மிக மிக மிக மிக
  அருமை!//
  நன்றி ஐயா.

  பதிலளிநீக்கு
 38. manoharan கூறியது...

  //விறுவிறுப்பான ஒரு குறும்படம் பார்த்த த்ரில் .//
  நன்றி மனோகரன்.

  பதிலளிநீக்கு
 39. shanmugavel கூறியது...

  //கதை நல்லா இருக்கு சார்,கடைசீல சூப்பர்.//
  நன்றி சண்முகவேல்.

  பதிலளிநீக்கு
 40. வெங்கட் நாகராஜ் கூறியது...

  //நாகத்திடம் ரத்தினம் இருந்ததோ இல்லையோ, உங்களது கதை ரத்தினமாய் ஜொலிக்கிறது.

  இரண்டு முடிவுமே நன்று... :)

  பகிர்வுக்கு மிக்க நன்றி. த.ம. 13//
  நன்றி வெங்கட்.

  பதிலளிநீக்கு
 41. ரெவெரி கூறியது...

  என்ன தம்பி,முழிக்கறீங்க.நாந்தான் மாசாணம்,ஒங்க ஊரு வெட்டியான்...

  //நச்.//
  நன்றி ரெவெரி.

  பதிலளிநீக்கு
 42. கோகுல் கூறியது...

  // வச்சிங்க பாருங்க கிளைமாக்ஸ்ல டிவிஸ்ட் !
  கலக்கிட்டிங்க போங்க!//
  நன்றி கோகுல்.

  பதிலளிநீக்கு
 43. நிரூபன் கூறியது...

  //இனிய இரவு வணக்கம் ஐயா,

  அளவுக்கதிகமாக ஆசைப்படுவதால் ஏற்படும் விளைவுதனை வாழ்வில் கண்ட ஓர் சம்பவத்தினூடாகப் பகிர்ந்திருக்கிறீங்க.//
  இது ஒரு கற்பனைதான் .
  நன்றி நிரூ.

  பதிலளிநீக்கு
 44. அருமை ! ஹிட்ச்காக் பாணியில் இருந்தது ! வாசுதேவன் .

  பதிலளிநீக்கு
 45. கதை சொல்லி கலக்கீட்டீங்க. கலங்கவும் வச்சிட்டீங்க.

  பதிலளிநீக்கு
 46. ட்விஸ்ட் வச்சு சினிமா பாணியில கலக்கிட்டிங்க தலைவா... சூப்பர்

  பதிலளிநீக்கு
 47. Vasu சொன்னது…

  //அருமை ! ஹிட்ச்காக் பாணியில் இருந்தது ! வாசுதேவன் .//
  நன்றி வாசு.

  பதிலளிநீக்கு
 48. FOOD கூறியது...

  // கதை சொல்லி கலக்கீட்டீங்க. கலங்கவும் வச்சிட்டீங்க.//
  நன்றி சங்கரலிங்கம்.

  பதிலளிநீக்கு
 49. மாய உலகம் கூறியது...

  // ட்விஸ்ட் வச்சு சினிமா பாணியில கலக்கிட்டிங்க தலைவா... சூப்பர்//
  நன்றி ராஜேஷ்.

  பதிலளிநீக்கு
 50. அருமை! நம்பிக்கையா? மூட நம்பிக்கையா?

  பதிலளிநீக்கு
 51. அப்பாதுரை கூறியது...

  // class!//

  பிரம்ம ரிஷி!
  நன்றி அப்பாதுரை.

  பதிலளிநீக்கு