தொடரும் தோழர்கள்

புதன், நவம்பர் 30, 2011

சூப்பர் சாப்பாடு.

நமது தமிழ்நாட்டுத்  தினசரி சைவ உணவு  மூன்று  வரிசை முறைகளைக் கொண்டதாக  இருக்கிறது.--முதலில் சாம்பார் சாதம்,அடுத்து ரசம் சாதம்,கடைசியில் மோர் சாதம் என்று.இவை மனிதனின் மூன்று குணங்களின் குறியீடு.சாம்பார் என்பது பருப்பு சேர்ந்த குழம்பு.பருப்பு இல்லாமல் செய்தால் அதுவே 

காரக்குழம்பு,  புளிக்குழம்பு,வற்றல் குழம்பு என்றெல்லாம் அழைக்கப்படுகிறது.


(இங்கு ஒரு செய்தியைச் சொல்லாமல் இருக்க முடியவில்லை.அந்தக்காலத்தில்

 மதுரை கணேஷ் மெஸ்ஸில்,சாம்பாரோடு,வெந்தயக் குழம்பு அல்லது மிளகு 

குழம்பு  ஏதாவது கொடுப்பார்கள்.ஆகா!!
குழம்பு என்றால்,குழம்பியிருப்பது.  குழம்பில் காய் சேர்க்கப் படுகிறது;ஆனால்

ரசத்தில் காய் சேர்க்கப் படுவதில்லை,குழம்பில் சேர்க்கப்படும் காயைத் தான் 

என்றும் சொல்வார்கள். 

கி.வா.ஜ.அவர்கள் அழகாகச் சொல்வார்,குழம்பில் ’தான்’ இருக்கிறது எனவே


 குழம்பியிருக்கிறது.ரச்த்தில் ’தான்’ இல்லை ;அதனால் தெளிவாக 

இருக்கிறது.

 எங்கு ”தான்” இருக்கிறதோ அங்கு குழப்பம்தான் இருக்கும்.


  
குழப்பம் என்பது  தமோ குணத்தைக் குறிக்கும். எனவே குழம்பிய சாம்பார்  

 குழப்பம் நிறைந்த  தமோ குணத்தையும்,தெளிவான ரசம் ரஜோ 

குணத்தையும்,  மோர் சத்துவ குணத்தையும்  குறிக்கும்.

நமது இந்த உணவு நமக்கு அறிவுறுத்துவது நாம் செல்ல வேண்டிய பாதையை-

குழப்பம் நிறைந்த செயலற்ற நிலையிலிருந்து, தெளிவான செயல்பாட்டுக்குச் சென்று பின் கடைசியில்  ‘அறிந்துகொள்ளும்” நிலையை அடைவது.இதெல்லாம் எழுதியதில் பசி வந்து விட்டது!

ஆனால் இப்ப  டிஃபன்தான்.

நாளைக்குப் பார்த்துக் கொள்ளலாம் இந்த.சாம்பார்,ரசம்,மோர் எல்லாம்..

சாப்பிட்டு விட்டு ”ஐ வாண்ட் சம் மோர் ”என்று சொல்லலாம்!

(இப்போதுதான் கவனித்தேன்.இந்த ஆண்டில் ஜனவரி முதல் இன்று வரை இப்பதிவுடன் 200 பதிவுகள் எழுதி விட்டேன்! நன்றி!நன்றி!!நன்றி!!!)


67 கருத்துகள்:

 1. முக்குணங்களை உணவு முறையுடன் ஒப்பிட்டது அருமை.200 க்கு வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 2. இருநூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள் தல....!!!

  பதிலளிநீக்கு
 3. சாம்பார் ரசத்துல இப்பிடி ஒரு மேட்டர் இருக்கா எனக்கு புது தகவலா இருக்கு தல ஹி ஹி...!!!

  பதிலளிநீக்கு
 4. பதிவைப் படித்ததும் பசி வந்துவிட்டது...

  இருநூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள் ஐயா...

  பதிலளிநீக்கு
 5. பதிவைப் படித்ததும் ஒரு Full Meals சாப்பிட்டது போன்ற உணர்வு ஏற்பட்டது உண்மை. தங்கள் பதிவுக்கு நான் போடுகிறேன் ‘ஒன்ஸ் மோர்’.

  இருநூறு பதிவுகளை அனைவரும் விரும்பும் வண்ணம் வழங்கிய தாங்கள், விரைவில் இரண்டாயிரம் பதிவுகளை வழங்க எனது வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 6. இருநூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்

  "சூப்பர் சாப்பாடு." அருமை.. பாராட்டுக்கள்...

  பதிலளிநீக்கு
 7. சுவையான பதிவு, முக்கனி போல முச்சுவை தந்தீர்கள் அய்யா. 200 பதிவிற்கு பாந்தமான வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 8. இருநூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள் ...

  பதிலளிநீக்கு
 9. சுவையான தகவல்கள்...எனக்கு மிக பிடித்த ரசத்தில் இப்படி ஒரு விஷயம் இருக்கா ? அருமை.

  இருநூறாவது பதிவுக்கு என் பாராட்டுகள். இன்னும் பல நூறு பதிவுகள் தொடர என் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 10. 200வது பதிவுக்கு வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 11. Super Sago. Saappadu arumai. GIVAJA matter (?!..) arumai. Double Century-ku vaalthukkal.
  TM 8.

  பதிலளிநீக்கு
 12. வணக்கம்,ஐயா!விளக்கம் அருமை! இரு நூறு பதிவு கண்ட ஐயாவுக்கு வாழ்த்துக்களும்!

  பதிலளிநீக்கு
 13. 200ஆவதிற்கு வாழ்த்துகள். சாப்பாடு சுவையாக உள்ளது. வாழ்த்துகள்.
  வேதா. இலங்காதிலகம்.
  http://www.kovaikkavi.wordpress.com

  பதிலளிநீக்கு
 14. /குழம்பு என்றால்,குழம்பியிருப்பது/
  ஆஹா! என்னா தத்துவம் என்னா தத்துவம். சூப்பர்.

  பதிலளிநீக்கு
 15. எனக்கும் பசி வந்துவிட்டது நண்பரே..

  தங்கள் அறிவுப்பசிக்கு 200 இடுகைகள் குறைவுதான் அன்பரே..

  இன்னும் உங்களிடமிருந்து நிறைய எதிர்பார்க்கிறேன்..

  ஆயிரத்துக்கு மேற்பட்ட இடுகைகளால் தமிழ் வலையுலகில் நீங்க இடம்பெற மனம் நிறைய வாழத்துகிறேன் அன்பரே..

  பதிலளிநீக்கு
 16. அட்டகாசமா சொல்லி இருக்கீங்க அண்ணே..இருந்தாலும் இங்கன பருப்புகள் கிடைக்காததால் சாம்பார் என்பது அரிது எங்களுக்கு என்ன செய்வது!200 க்கு வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 17. ஒரு வருடத்தில் இல்லை இல்லை 11 மாதத்தில் 200 பதிவுகள் - வாழ்த்துகள்....

  பதிலளிநீக்கு
 18. வணக்கம் ஐயா,
  நல்லா இருக்கீங்களா
  உணவின் சுவையை வைத்து மனிதனின் குணங்களோடு ஒப்பிட்டு அருமையான விளக்கப் பதிவினைத் தந்திருக்கிறீங்க.

  பதிலளிநீக்கு
 19. பதிவுலகில் இரு நூறு பதிவுகளை எழுதிச் சாதித்துக் கொண்டிருக்கும் எம் இளவல் உங்களுக்கு வாழ்த்துக்கள் ஐயா!

  பதிலளிநீக்கு
 20. சிறப்பான பதிவு பாஸ்

  அதுவும் 200வது பதிவு
  வாழ்த்துக்கள் பாஸ்

  பதிலளிநீக்கு
 21. 11 மாதங்களில் 200 பதிவு எழுதியிருக்கின்றீர்கள் பாராட்டுக்கள் ஓட்டு மொத்தமாக இதுவரை நீங்கள் 286 பதிவுகள் எழுதியிருக்கின்றீர்கள் விரைவில் 300வது பதிவை எட்ட இருக்கும் உங்களுக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 22. வாழ்த்துக்கள் சார் இன்னும் நீங்க நிறைய எழுதணும் நாங்க படிக்கணும்..

  சாப்பாடு மேட்டர் - உண்மையில் பல புதிய விஷயங்களை சாப்பாடை வச்சு சொல்லி இருக்கீங்க,..

  பதிலளிநீக்கு
 23. MANO நாஞ்சில் மனோ கூறியது...

  // சாம்பார் ரசத்துல இப்பிடி ஒரு மேட்டர் இருக்கா எனக்கு புது தகவலா இருக்கு தல ஹி ஹி...!!!//
  நம் அன்றாட வாழ்வில் இது போல் எவ்வளவோ!

  பதிலளிநீக்கு
 24. @விக்கியுலகம்
  அடப்பாவமே?சாம்பார் இல்லாம ஒரு சாப்பாடா?
  நன்றி.

  பதிலளிநீக்கு
 25. @வெங்கட் நாகராஜ்
  கணக்குச் சரியே.
  நன்றி வெங்கட்.

  பதிலளிநீக்கு
 26. நிரூபன் கூறியது...

  //பதிவுலகில் இரு நூறு பதிவுகளை எழுதிச் சாதித்துக் கொண்டிருக்கும் எம் இளவல் உங்களுக்கு வாழ்த்துக்கள் ஐயா!//
  // இளவல் //
  :)) நன்றி நிரூ.

  பதிலளிநீக்கு
 27. K.s.s.Rajh கூறியது...

  //11 மாதங்களில் 200 பதிவு எழுதியிருக்கின்றீர்கள் பாராட்டுக்கள் ஓட்டு மொத்தமாக இதுவரை நீங்கள் 286 பதிவுகள் எழுதியிருக்கின்றீர்கள் விரைவில் 300வது பதிவை எட்ட இருக்கும் உங்களுக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்...//
  கணக்காகச் சொல்லிவிட்டீர்கள்.300 ஐ 2011 இல் தொடுவேனா பார்க்கலாம்!

  பதிலளிநீக்கு
 28. அன்பரே
  இருநூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்!
  பல நூறாகட்டும்!
  புலவர் சா இராமாநுசம்

  பதிலளிநீக்கு
 29. நமக்கெல்லாம் இலை முன்னால உக்காந்தா உலகமே மறந்து போகுது. இதை எல்லாம் எப்படி சிந்திக்கிறாங்க?

  பதிலளிநீக்கு
 30. கி.வா.ஜ. சொன்ன கருத்து அருமை. உணவுகளுடன் மனித குணங்களை ஒப்பிட்டுச் சொல்லியிருப்பது சூப்பர். 200 பதிவுகளை அதிவேகமாய் வெற்றிகரமாய் முடித்திட்ட சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ஆன தங்களுக்கு இந்த பாசஞ்சரின் மனமார்ந்த வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 31. இருநூறாவது பதிவு...மேன்மேலும் வளர.....வாழ்த்துக்கள் Sir!
  நம்ம தளத்தில்:
  "மாயா... மாயா... எல்லாம்... சாயா... சாயா..."

  பதிலளிநீக்கு
 32. இருநூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள். இன்னும் நிறைய பதிவுகள் எழுத வாழ்த்துக்கள்.  எனது வலைப்பூ இன்று முதல் புதிய டொமைனுக்கு மாறுகிறது:
  வலையுலக நண்பர்களே, எனது வலைப்பூ பற்றி ஓர் அறிவிப்பு

  பதிலளிநீக்கு
 33. 200வது பதிவுக்கு வாழ்த்துக்கள் !!!!! பண்டைய தமிழக உணவு பழக்கவழக்கங்களுடன் சிறிது உடல் உழைப்பு இருந்தால் அது உடல் நலத்திற்கு பெரிதும் உதவும் ஆனால் நாம் அதைவிட்டு விட்டு இந்த கால மசாலா உணவுகளை உண்பதால்தான் இந்த கால மக்கள் பல வித நோய்வாய்படுகிறார்கள்.

  பதிலளிநீக்கு