தொடரும் தோழர்கள்

சாப்பாடு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சாப்பாடு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், டிசம்பர் 30, 2015

உணவும் உணவு சார்ந்த இடமும்- அடையாரில் ஒரு புதிய விலாசம்!



வாடா!ஓட்டலுக்குப் போய் டிஃபன் சாப்பிட்டு விட்டு வரலாம்

போடா! திரும்பத் திரும்ப அதே மூன்று,நான்கு ஓட்டல்-வசந்த பவன், ஸ்ரீபவன் ,தம்மாத் தூண்டு லக்ஷ்மிசாகர், சங்கீதா;இதை விட்டா டிஃபன் சாப்பிட ,ஏன் சாப்பாட்டுக்குக் கூட நல்ல ஓட்டல் இருக்கா இந்த அடையாரில்!

மாறி விட்டது இந்நிலை.

இன்று முதல் சுவையான  சைவ உணவுக்கு ஒரு புதிய விலாசம் கிடைத்து விட்டது 

ஆம் விலாசம்

கிருஷ்ண விலாசம்!



இன்று கோலாகல ஆரம்பம்

ஆனால் ஏற்கனவே நுங்கம்பாக்கம் ஹாடோஸ் சாலையில்  ஒரு கிளை இயங்கிக் கொண்டிருக்கிறது

உங்களில் பலர் அங்கு சாப்பிட்டிருக்கக் கூடும்;

எனவே சுவை பற்றி நான் சொல்வது தேவையில்லை என எண்ணுகிறேன்.

விலை சிறிது அதிகம்தான்.






அவர்களின் பிரபல சிந்தாமணி ரவா இட்லி ரூ.    75
                                மசாலா தோசை                155
                                ஃபில்டர் காஃபி                 75
வரிகள் தனி!

அடையார் கிளையின் பொறுப்பாளராக இருக்கும் திலிப்பைச் சந்தித்துப் பேசினேன்.

அடிக்கடி வாருங்கள் என்றார்.

சரிதான்!

இந்த ஓய்வூதியக்கரனுக்கு கட்டுப்படியாகுமா?

பாக்கெட் மட்டுமல்ல,வயிறும்தான்!

டிஸ்கி:நான் மாலை 5 மணிக்குப் போனேன்;மாலை உணவு எதுவும் இல்லை. காலை,மதிய உணவுகள் ஓடியதாகவும்,இனி 6.30க்கு மேல் இரவு உணவு என்றும் சொன்னார்!   அப்படியானால் படங்கள்?....   நான் சாப்பிட நினைத்தவை!அவர்கள் இணையயப் பக்கத்திலிருந்து! 

ஒட்டலை அடுத்து தெரு,அதை அடுத்து புஹாரிஸ்!

உணவு சமத்துவம்!


கண்டிப்பாக இது ஒரு விளம்பரம் அல்ல!இன்றைக்கு ஏதாவது எழுத வேண்டுமே!



திங்கள், டிசம்பர் 08, 2014

கல்யாண சமையல் சாதம்!



திருமணம் வெகு விமரிசையாக நடந்து முடிந்தது.

கோலாகலம் என்று சொல்லலாம்

குடும்பப்பதிவர் போல் பெப்சிகலம் என்றும் சொல்லலாம்.

இரு வீட்டாரும் பணக்காரர்கள்

ஆடம்பரத்துக்குக் கேட்கவா வேண்டும்?

கொஞ்சம் ரிவைண்ட் செய்து இந்தத் திருமணம் எப்படி நடந்தது என்று பார்க்கலாமா?

அவள் நிஷா.

அவன் ராஜேஷ்.

சந்தித்த இடம் முகநூல்.

பரஸ்பரம் லைக் போடத்துவங்கி அது பின்னர் ஒருவருக்கொருவர் லைக்காக மாறியது.

சந்திதுப் பேசும் போது லைக் லவ் ஆனது.

பேசினார்கள்,பேசினார்கள்—மணிக்கணக்கில் பேசினார்கள்

புரிந்து கொண்டார்கள்

மணம் செய்து கொள்ள முடிவு செய்தார்கள்.

அண்ணியிடம் சென்றான்.

அவள்தான் புரிந்து கொள்வாள்.

உதவி செய்வாள் 

அவள் சொன்னாள் வீட்டில் ஏற்றுக் கொள்வார்கள்.

அவளுக்கு அவன் மீது மிகப்பாசம் உண்டு நிச்சயம் செய்வாள்.

செய்தாள்

நிஷா வீட்டிலும் தடை ஏதும் இல்லை

ஸ்டேட்டஸில் வேறுபாடு இல்லையே!

இதோ திருமணம் நடந்து முடிந்து விட்டது.

வரவேற்பு

வருவோரும் போவோரும்.

பரிசுகள்

கைகுலுக்கல்கள்.

விருந்து.

யார் அந்த நடுத்தர வயதான ஆனால் அழகு குறையாத பெண்?

ராஜேஷின் அண்ணி

கொழுந்தனாரின் மீது மிகுந்த அன்பு கொண்டவள்.

இன்று அவருக்குக் கல்யாணம் 

அவள் நடத்தி வைக்கும் கல்யாணம்

அவளுக்கு மகிழ்ச்சி வெள்ளம்.

அந்த மகிழ்ச்சியுடன் அவன் அருகில் வருகிறாள்

அவனை அணைத்து ஒரு முத்....தம்!

விகல்பமில்லை ..அவர்கள் மனத்தில்

ஆனால் பெண்ணின் முகம் சுருங்குகிறது.

பெண் வீட்டார் அதிர்கிறார்கள்.

கோபப்படுகிறார்கள்
.
அவர்கள் கண்டிக்க இவர்கள் எதிர்த்துப்பேச,பேச்சுக்கள் தடித்து கைகலப்பில் முடிகிறது.

மாப்பிள்ளையை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று எங்கோ அடைத்து விடுகிறார்கள், பெண் வீட்டார்

ராஜேஷ் வீட்டார் காவல் துறையிடம் புகார் செய்கின்றனர்.

காவல்துறை விசாரணை .

மாப்பிள்ளை விடுதலை.

இரு வீட்டாரும் மூடிய அறையில் பேச்சு வார்த்தை

உடன்படிக்கை.

இனி உடனடியாக தனிக் குடித்தனம்.

அண்ணன் அண்ணியைப் பார்க்கப் போகக்கூடாது.

ஒப்பந்தம் ஆயிற்று.

கதை முடிந்தது;கத்திரிக்காய் காய்த்தது!

ஆனால் 

இது கதையல்ல நிஜம்!

முடிவு தெரியாததால் அது மட்டும் கற்பனை!

டிஸ்கி:சென்ற ’உயிர்’ தொடரை முடிக்காமல் விட்டதற்கு வருந்துகிறேன்.ஏனோ ஒரு தேக்கம் 

.நாளை ‘முடித்து’ விடுகிறேன் உயிரை.

புதன், நவம்பர் 30, 2011

சூப்பர் சாப்பாடு.

நமது தமிழ்நாட்டுத்  தினசரி சைவ உணவு  மூன்று  வரிசை முறைகளைக் கொண்டதாக  இருக்கிறது.



--முதலில் சாம்பார் சாதம்,அடுத்து ரசம் சாதம்,கடைசியில் மோர் சாதம் என்று.



இவை மனிதனின் மூன்று குணங்களின் குறியீடு.



சாம்பார் என்பது பருப்பு சேர்ந்த குழம்பு.பருப்பு இல்லாமல் செய்தால் அதுவே 

காரக்குழம்பு,  புளிக்குழம்பு,வற்றல் குழம்பு என்றெல்லாம் அழைக்கப்படுகிறது.


(இங்கு ஒரு செய்தியைச் சொல்லாமல் இருக்க முடியவில்லை.அந்தக்காலத்தில்

 மதுரை கணேஷ் மெஸ்ஸில்,சாம்பாரோடு,வெந்தயக் குழம்பு அல்லது மிளகு 

குழம்பு  ஏதாவது கொடுப்பார்கள்.ஆகா!!




குழம்பு என்றால்,குழம்பியிருப்பது.  குழம்பில் காய் சேர்க்கப் படுகிறது;ஆனால்

ரசத்தில் காய் சேர்க்கப் படுவதில்லை,குழம்பில் சேர்க்கப்படும் காயைத் தான் 

என்றும் சொல்வார்கள். 

கி.வா.ஜ.அவர்கள் அழகாகச் சொல்வார்,குழம்பில் ’தான்’ இருக்கிறது எனவே


 குழம்பியிருக்கிறது.ரச்த்தில் ’தான்’ இல்லை ;அதனால் தெளிவாக 

இருக்கிறது.

 எங்கு ”தான்” இருக்கிறதோ அங்கு குழப்பம்தான் இருக்கும்.


  
குழப்பம் என்பது  தமோ குணத்தைக் குறிக்கும். எனவே குழம்பிய சாம்பார்  

 குழப்பம் நிறைந்த  தமோ குணத்தையும்,தெளிவான ரசம் ரஜோ 

குணத்தையும்,  மோர் சத்துவ குணத்தையும்  குறிக்கும்.

நமது இந்த உணவு நமக்கு அறிவுறுத்துவது நாம் செல்ல வேண்டிய பாதையை-

குழப்பம் நிறைந்த செயலற்ற நிலையிலிருந்து, தெளிவான செயல்பாட்டுக்குச் சென்று பின் கடைசியில்  ‘அறிந்துகொள்ளும்” நிலையை அடைவது.



இதெல்லாம் எழுதியதில் பசி வந்து விட்டது!

ஆனால் இப்ப  டிஃபன்தான்.

நாளைக்குப் பார்த்துக் கொள்ளலாம் இந்த.சாம்பார்,ரசம்,மோர் எல்லாம்..

சாப்பிட்டு விட்டு ”ஐ வாண்ட் சம் மோர் ”என்று சொல்லலாம்!

(இப்போதுதான் கவனித்தேன்.இந்த ஆண்டில் ஜனவரி முதல் இன்று வரை இப்பதிவுடன் 200 பதிவுகள் எழுதி விட்டேன்! நன்றி!நன்றி!!நன்றி!!!)