தொடரும் தோழர்கள்

திங்கள், டிசம்பர் 08, 2014

கல்யாண சமையல் சாதம்!திருமணம் வெகு விமரிசையாக நடந்து முடிந்தது.

கோலாகலம் என்று சொல்லலாம்

குடும்பப்பதிவர் போல் பெப்சிகலம் என்றும் சொல்லலாம்.

இரு வீட்டாரும் பணக்காரர்கள்

ஆடம்பரத்துக்குக் கேட்கவா வேண்டும்?

கொஞ்சம் ரிவைண்ட் செய்து இந்தத் திருமணம் எப்படி நடந்தது என்று பார்க்கலாமா?

அவள் நிஷா.

அவன் ராஜேஷ்.

சந்தித்த இடம் முகநூல்.

பரஸ்பரம் லைக் போடத்துவங்கி அது பின்னர் ஒருவருக்கொருவர் லைக்காக மாறியது.

சந்திதுப் பேசும் போது லைக் லவ் ஆனது.

பேசினார்கள்,பேசினார்கள்—மணிக்கணக்கில் பேசினார்கள்

புரிந்து கொண்டார்கள்

மணம் செய்து கொள்ள முடிவு செய்தார்கள்.

அண்ணியிடம் சென்றான்.

அவள்தான் புரிந்து கொள்வாள்.

உதவி செய்வாள் 

அவள் சொன்னாள் வீட்டில் ஏற்றுக் கொள்வார்கள்.

அவளுக்கு அவன் மீது மிகப்பாசம் உண்டு நிச்சயம் செய்வாள்.

செய்தாள்

நிஷா வீட்டிலும் தடை ஏதும் இல்லை

ஸ்டேட்டஸில் வேறுபாடு இல்லையே!

இதோ திருமணம் நடந்து முடிந்து விட்டது.

வரவேற்பு

வருவோரும் போவோரும்.

பரிசுகள்

கைகுலுக்கல்கள்.

விருந்து.

யார் அந்த நடுத்தர வயதான ஆனால் அழகு குறையாத பெண்?

ராஜேஷின் அண்ணி

கொழுந்தனாரின் மீது மிகுந்த அன்பு கொண்டவள்.

இன்று அவருக்குக் கல்யாணம் 

அவள் நடத்தி வைக்கும் கல்யாணம்

அவளுக்கு மகிழ்ச்சி வெள்ளம்.

அந்த மகிழ்ச்சியுடன் அவன் அருகில் வருகிறாள்

அவனை அணைத்து ஒரு முத்....தம்!

விகல்பமில்லை ..அவர்கள் மனத்தில்

ஆனால் பெண்ணின் முகம் சுருங்குகிறது.

பெண் வீட்டார் அதிர்கிறார்கள்.

கோபப்படுகிறார்கள்
.
அவர்கள் கண்டிக்க இவர்கள் எதிர்த்துப்பேச,பேச்சுக்கள் தடித்து கைகலப்பில் முடிகிறது.

மாப்பிள்ளையை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று எங்கோ அடைத்து விடுகிறார்கள், பெண் வீட்டார்

ராஜேஷ் வீட்டார் காவல் துறையிடம் புகார் செய்கின்றனர்.

காவல்துறை விசாரணை .

மாப்பிள்ளை விடுதலை.

இரு வீட்டாரும் மூடிய அறையில் பேச்சு வார்த்தை

உடன்படிக்கை.

இனி உடனடியாக தனிக் குடித்தனம்.

அண்ணன் அண்ணியைப் பார்க்கப் போகக்கூடாது.

ஒப்பந்தம் ஆயிற்று.

கதை முடிந்தது;கத்திரிக்காய் காய்த்தது!

ஆனால் 

இது கதையல்ல நிஜம்!

முடிவு தெரியாததால் அது மட்டும் கற்பனை!

டிஸ்கி:சென்ற ’உயிர்’ தொடரை முடிக்காமல் விட்டதற்கு வருந்துகிறேன்.ஏனோ ஒரு தேக்கம் 

.நாளை ‘முடித்து’ விடுகிறேன் உயிரை.

7 கருத்துகள்:

 1. ‘கோப்படுகிறார்கள்.’
  ‘ப’ இடையே விட்டுப்போய் இருக்கிறது. சேர்த்துவிடுங்கள்.

  நம் நாட்டு கலாச்சாரப்படி அந்த அண்ணி செய்தது சரியல்ல. எனவே மணமகளின் உறவினர் கோபப்பட்டது சரியே. அதெல்லாம் சரி. அந்த பெண் அழகு குறையாதவள் என்று எப்படி உங்களுக்குத் தெரியும்? வழக்கம்போல் நிகழ்வை கதையாக மாற்றி சுவைபடத் தந்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ”ப”னா அவ்வளவு இல்லை என்னிடம்!
   எழுத்தைச் சரி செய்து விட்டேன்.
   அது எழுத்தாளனின் உரிமம்!
   நன்றி

   நீக்கு
 2. ஒன்றை இழந்தால் தான் மற்றொன்றை அடைய முடியும்.

  நல்ல வழிகாட்டல் பகிர்வு பித்தன் ஐயா.

  பதிலளிநீக்கு
 3. எல்லோரும் சொல்ல யோசித்த ஒரு விஷயத்தை பதிவாகத் தந்தமைக்கு பாராட்டுக்கள்!
  த.ம.3

  பதிலளிநீக்கு
 4. எங்கு இருந்தால் என்ன...? விகல்பம் நீங்கா விட்டால்...?

  பதிலளிநீக்கு
 5. நானும் செய்தித்தாள்களில் படித்தேன்! சுவையாக பகிர்ந்தமைக்கு நன்றி!

  பதிலளிநீக்கு
 6. ம்ம்ம்ம்.... என்னவோ நடக்குது! மர்மமாய் இருக்குது!

  உங்கள் பாணியில் செய்தியை பகிர்ந்து கொண்டது நன்று!

  பதிலளிநீக்கு