தொடரும் தோழர்கள்
உறவுகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
உறவுகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புதன், மார்ச் 25, 2015
கொலம்பஸ்.கொலம்பஸ்,விட்டாச்சு லீவு!
//அக்கரையில் தாயாய் என்னைப்பெற்றவள்!
இக்கரையில் என்னைத் தாயாய்ப் பெற்றவள்!
தலைமுறைப் புரிதல்களுக்கிடையில்
தடுமாறுகின்றன உறவுகள்!
கரைகளை இணைக்கும்
கவின்மிகுபாலமாய் இடையில் நான்!
நேற்று பாலமாயிருந்தவள்தான்
இன்று அக்கரையேகியுள்ளாள்…
ஏனோ அதை மறந்துபோனாள்!
இன்று இக்கரையானவளே
நாளை பாலமாகுவாள்…
பாவம் அதை அவள் அறியாள்!
இற்றுப்போகா வரம்பெற்றுவந்த பாலங்களால்
இறுக்கமாகும் இடைவெளிகள் யாவும்
இன்னும் பல தலைமுறைகள் கடந்தும்!//
இன்று முகநூலில் நான் படித்து ரசித்த திருமதி கீதா மதிவாணன் அவர்களின் கவிதை.
இரு தலைமுறைகளின் இடைவெளி நிரப்ப இடையில் உள்ள தலைமுறை பாலமாவதைப் பற்றி எழுதியிருக்கிறார்.
திங்கள், டிசம்பர் 08, 2014
கல்யாண சமையல் சாதம்!
திருமணம் வெகு விமரிசையாக நடந்து முடிந்தது.
கோலாகலம் என்று சொல்லலாம்
குடும்பப்பதிவர் போல் பெப்சிகலம்
என்றும் சொல்லலாம்.
இரு வீட்டாரும் பணக்காரர்கள்
ஆடம்பரத்துக்குக் கேட்கவா வேண்டும்?
கொஞ்சம் ரிவைண்ட் செய்து இந்தத்
திருமணம் எப்படி நடந்தது என்று பார்க்கலாமா?
அவள் நிஷா.
அவன் ராஜேஷ்.
சந்தித்த இடம் முகநூல்.
பரஸ்பரம் லைக் போடத்துவங்கி அது பின்னர்
ஒருவருக்கொருவர் லைக்காக மாறியது.
சந்திதுப் பேசும் போது லைக் லவ் ஆனது.
பேசினார்கள்,பேசினார்கள்—மணிக்கணக்கில் பேசினார்கள்
புரிந்து கொண்டார்கள்
மணம் செய்து கொள்ள முடிவு செய்தார்கள்.
அண்ணியிடம் சென்றான்.
அவள்தான் புரிந்து கொள்வாள்.
உதவி செய்வாள்
அவள் சொன்னாள் வீட்டில் ஏற்றுக் கொள்வார்கள்.
அவளுக்கு அவன் மீது மிகப்பாசம் உண்டு நிச்சயம் செய்வாள்.
செய்தாள்
அண்ணியிடம் சென்றான்.
அவள்தான் புரிந்து கொள்வாள்.
உதவி செய்வாள்
அவள் சொன்னாள் வீட்டில் ஏற்றுக் கொள்வார்கள்.
அவளுக்கு அவன் மீது மிகப்பாசம் உண்டு நிச்சயம் செய்வாள்.
செய்தாள்
நிஷா வீட்டிலும் தடை ஏதும் இல்லை
ஸ்டேட்டஸில் வேறுபாடு இல்லையே!
இதோ திருமணம் நடந்து முடிந்து விட்டது.
வரவேற்பு
வருவோரும் போவோரும்.
பரிசுகள்
கைகுலுக்கல்கள்.
விருந்து.
யார் அந்த நடுத்தர வயதான ஆனால் அழகு
குறையாத பெண்?
ராஜேஷின் அண்ணி
கொழுந்தனாரின் மீது மிகுந்த அன்பு
கொண்டவள்.
இன்று அவருக்குக் கல்யாணம்
அவள் நடத்தி வைக்கும் கல்யாணம்
அவளுக்கு மகிழ்ச்சி வெள்ளம்.
அந்த மகிழ்ச்சியுடன் அவன் அருகில்
வருகிறாள்
அவனை அணைத்து ஒரு முத்....தம்!
விகல்பமில்லை ..அவர்கள் மனத்தில்
ஆனால் பெண்ணின் முகம் சுருங்குகிறது.
பெண் வீட்டார் அதிர்கிறார்கள்.
கோபப்படுகிறார்கள்
.
அவர்கள் கண்டிக்க இவர்கள் எதிர்த்துப்பேச,பேச்சுக்கள்
தடித்து கைகலப்பில் முடிகிறது.
மாப்பிள்ளையை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று
எங்கோ அடைத்து விடுகிறார்கள், பெண் வீட்டார்
ராஜேஷ் வீட்டார் காவல் துறையிடம் புகார்
செய்கின்றனர்.
காவல்துறை விசாரணை .
மாப்பிள்ளை விடுதலை.
இரு வீட்டாரும் மூடிய அறையில் பேச்சு
வார்த்தை
உடன்படிக்கை.
இனி உடனடியாக தனிக் குடித்தனம்.
அண்ணன் அண்ணியைப் பார்க்கப் போகக்கூடாது.
ஒப்பந்தம் ஆயிற்று.
ஒப்பந்தம் ஆயிற்று.
கதை முடிந்தது;கத்திரிக்காய் காய்த்தது!
ஆனால்
இது கதையல்ல நிஜம்!
முடிவு தெரியாததால் அது மட்டும் கற்பனை!
டிஸ்கி:சென்ற ’உயிர்’ தொடரை முடிக்காமல் விட்டதற்கு வருந்துகிறேன்.ஏனோ ஒரு தேக்கம்
.நாளை ‘முடித்து’ விடுகிறேன் உயிரை.
முடிவு தெரியாததால் அது மட்டும் கற்பனை!
டிஸ்கி:சென்ற ’உயிர்’ தொடரை முடிக்காமல் விட்டதற்கு வருந்துகிறேன்.ஏனோ ஒரு தேக்கம்
.நாளை ‘முடித்து’ விடுகிறேன் உயிரை.
புதன், பிப்ரவரி 15, 2012
ஒரு வங்கிக் காசாளரும்,வாடிக்கையாளரும்!
(நேற்றைய பதிவின் நீட்சி)
ஒரு வங்கியின் கிளை.
உணவு இடைவேளைக்கு இன்னும் ஐந்து மணித்துளிகளே பாக்கி உள்ளன.
தனது கூண்டுக்குள் அமர்ந்திருக்கும் காசாளர்,தன் கைக்கடிகாரத்தை பார்க்கிறார், சாப்பிடப்போவதற்காக.
அன்று காலை அவருக்கும் அவர் மனைவிக்கும் சண்டை.ஒரு சின்ன விஷயத்தில் தொடங்கி வெடித்து விட்டது.
மனைவியிடம் கோபித்துக்கொண்டு,”உன் சோத்தை நீயே கொட்டிக்கோ” என்று இரைந்து விட்டு,அலுவலகம் வந்து விட்டார்.
நேரமாகி விட்ட படியால் எங்கும் சாப்பிடவுமில்லை.
காலையிலிருந்து மூன்று குழம்பி குடித்து வயிறே குழம்பிப் போயிருந்தது.
இப்போது உணவகம் சென்று ஒரு பிடி பிடிக்க வேண்டும்.
இடைவேளைக்காகக் காத்துக் கொண்டிருக்கிறார்.
(இங்கு ஷாட்டைக் கட் செய்கிறோம்----அடுத்த ஷாட்--)
அந்தக் கிளையின் வாடிக்கையாளர் ஒருவர்.அன்றாட உபயோகப் பொருள்கள் தயாரிக்கும் ஒரு நிறுவனத்தின் மொத்தக் கொள்முதலாளர்.
ஒரு தவணை உண்டியலுக்குப்( usance bill) பணம் கட்ட இன்று கடைசி நாள்.
இன்று கட்டவில்லை என்றால் அவரது முகவாண்மை ரத்தாகி விடும்.
பெரிய இழப்பாகி விடும்.
காலை முதல் அலைந்து திரிந்து தேவையான பணத்தைச் சேர்த்து விட்டார்.
இப்போது வங்கியில் பணம் செலுத்த வேண்டும்.
(ஷாட் கட்-அடுத்த ஷாட்!)
அவர் வங்கியில் நுழையும்போது உணவு இடை வேளைக்கு 5 மணித் துளிகளே பாக்கி!
காசாளரின் கூண்டை அடைந்து பையிலிருந்து பணத்தை எடுக்கிறார்.10,20 50 100 என எல்லா விதமான நோட்டுக்களும் இருக்கின்றன.
காசாளர் கோபமாகச் சொல்கிறார்”.மூடும் நேரம்.பில்லுக்கெல்லாம் சின்ன நோட்டெல்லாம் வாங்க முடியாது.500,1000 இருந்தால் கொடுங்கள்.வாங்கிக் கொள்கிறேன்.”அவருக்குப் பசி வயிற்றை கிள்ளுகிறது.
வாடிக்கையாளர் காலை முதல் மிகச் சிரமப்பட்டுப் பணத்தைச் சேர்த்திருக்கிறார் .இன்று கட்டா விட்டால் வியாபாரமே போய்விடும் எனும் நிலை.
“அதெப்படி சின்ன நோட்டு வாங்க மாட்டேன்னு நீங்க சொல்ல முடியும்.நான் நேரம் முடியுமுன் வந்து விட்டேன்.நீங்க வாங்கித்தான் ஆகணும்” எனச் சொல்கிறார்.
காசாளர் சொல்கிறார்” நான் சொன்னாச் சொன்னதுதான்.வாங்க முடியாது”
வார்த்தை தடிக்கிறது.
காசாளர் முகப்பை மூடிவிட்டு உணவுக்குப் புறப்படுகிறார்.
வாடிக்கையாளர் மேலாளரைப் பார்த்துப் புகார் செய்யப் போகிறார்.
முடிவு எப்படியிருக்கும்?
இதைத் தவிர்த்திருக்க முடியாதா?
முடியும். எப்படி?
காசாளர்;”சார்.சாப்பிடும் நேரம் வந்து விட்டது.இதை வாங்கினால் எண்ணி முடிக்க நேரமாகும்.கொஞ்சம் காத்திருங்கள்.நான் சாப்பிட்டு விட்டு வந்து வாங்கிக் கொள்கிறேன். நீங்கள் இன்னும் சாப்பிடவில்லையென்றால் வாருங்களேன் இருவரும் போய்ச் சாப்பிட்டு விட்டு வந்து விடலாம்.”
(அல்லது)
வாடிக்கையாளர்: காசாளரை நெருங்கியதும்”சாரி,சார் பணம் சேகரிக்க நேரமாகி விட்டது.கடைசி நாள்.நீங்கள் சோர்ந்திருக்கிறீர்கள் .நீங்கள் போய்ச் சாப்பிட்டு விட்டு வாருங்கள். நான் காத்திருக்கிறேன். இல்லையெனில் இருவரும் சேர்ந்து வெளியில் போய்ச் சாப்பிட்டு விட்டு வரலாம்”
முடியாதா?
முடியும்.
நமது பிரச்சினையில் ஒன்றிப்போகாமல் மற்றவர்க்கும் பிரச்சினை இருக்கும் என்பதை உணர்ந்து செயல்பட்டால்!
செவ்வாய், பிப்ரவரி 14, 2012
தனி மனித உறவுகள்!
இந்தப் பதிவை நேற்றைய பதிவின் நீட்சி எனக் கொள்ளலாம்.
நேற்று,தன் பிரச்சினையே பெரிது என நினைக்கும் மனித மனம் பற்றிச் சொல்லியிருந்தேன்.
இது தொடர்பான ஆண்டன் செகாவின் குட்டிக் கதை ஒன்று நினைவுக்கு வருகிறது.
குளிர் நடுக்கும் ஒரு கனமான இரவு..
ஒரு வீட்டில் மட்டும் விளக்கு எரிந்துகொண்டிருக்கிறது.
கட்டிலின் மேல் ஒரு சிறுவன் துவண்டு படுத்திருக்கிறான்.
அருகில் அமர்ந்து அவனைக் கவனித்துக் கொண்டு,அவ்வப்போது மருந்து கொடுத்துக் கொண்டும் இருக்கும் ஒரு மனிதர்.அவன் தந்தை.அவர் ஒரு மருத்துவரும் கூட.
அப்போது கதவு தட்டும் ஓசை.
திறந்து பார்த்தால் ஒரு இளைஞன் பதற்றத்துடன் நிற்கிறான்.
“ஐயா!என் மனைவி தாங்கமுடியாத தலைவலியால் துடித்துக் கொண்டிருக்கிறாள். மாத்திரைகள்கொடுத்தும் பயனில்லை.தயவு செய்து உடனே வாருங்கள்”
மருத்துவர் சொல்கிறார் “என் மகன் மிக உடல் நலமின்றி இருக்கிறான்.அவனை விட்டு விட்டு என்னால் வர இயலாது.”
இளைஞன் அவர் காலில் விழுகிறான்.”நீங்கள் எனக்குக் கடவுள் மாதிரி.நானே திரும்பக் கொண்டு வந்து விட்டு விடுகிறேன்”
தயக்கத்துடன் புறப்படுகிறார்.
அவன் வீட்டை அடைந்ததும்,அவரை வரவேற்பரையில் அமரச் செய்து விட்டு மேலே செல்கிறான்.நீண்ட நேரம் கழித்தும் அவன் திரும்ப வரவில்லை.
மருத்துவர் மேலே சென்று பார்க்கிறார்.
அவன் உட்கார்ந்து அழுது கொண்டிருக்கிறான்.அவன அருகில் ஒரு காகிதம் கிடக்கிறது.
அதை எடுத்துப் பார்க்கிறார்.
”நான் என் காதலனுடன் போகிறேன்—கவிதா”என்ற ஒரே வரி.
இளைஞனின் அழுகை அதிகமாகிறது”என் மனைவி,என் மனைவி”
மருத்துவருக்குக் கோபம் வருகிறது.
இதற்காகவா என் பையனைக் கவனிக்காமல் இவனுடன் வரச்செய்தான்.இவன் இருப்பதைப் பார்த்தால் என்னைத் திரும்பக் கொண்டு போய் விடமாட்டான் எனத் தோன்றுகிறதே .என்ன செய்வேன்.என் மகனுக்கு என்ன ஆச்சோ.’என் மகன்,என் மகன்”எனப் புலம்புகிறார்.
இளைஞன்”என் மனைவி,என் மனைவி”
மருத்துவர்”என் மகன்,என் மகன்’
.............. ................
............... ..................
கதை இங்கு முடிகிறது.
தனி மனித உறவுகளில் பிரச்சினகள்,சண்டைகள் ஏற்படக் காரணம் ஒருவர் தன் பிரச்சினையிலேயெ மனம் கவிந்து மற்றவர் பிரச்சினையை காண மறுப்பதே.
சேவை நிறுவனங்களில் ஊழியர்-வாடிக்கையாளர் உரசல் என்பது சகஜம்
உதாரணத்துக்கு ஒரு வங்கியை எடுத்துகொள்வோம்.
ஒரு ஊழியருக்கும் வாடிக்கையாளருக்கும் எவ்வாறு பிரச்சினை ஏற்படுகிறது?
வெள்ளி, அக்டோபர் 21, 2011
மனிதம் தொலைத்த மனிதர்கள்!
சென்ற கும்பமேளாவின்போது(2000-2001) நான் அலகாபாதில் பணி புரிந்து
கொண்டிருந்தேன். கும்பகோணத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கொண்டாடப்படும்
மகாமகம் போன்றதுதான் இக் கும்பமேளா என்பது உங்கள் அனைவருக்கும் தெரிந்ததே.ஒரு
அரசுடைமையாக்கப் பட்ட வங்கியில் முதன்மை மேலாளராகப் பணி புரிந்து வந்ததால் அரசு
அதிகாரிகளின் துணையுடன் முக்கிய நாட்களில் திரிவேணி சங்கமத்தில் எளிதாக நீராட
முடிந்தது.
இக் கும்பமேளா பற்றி எண்ணும்போதெல்லாம்,அதனுடன் சம்பந்தப்பட்ட பல
விஷயங்கள் சேர்ந்தே நினைவுக்கு வரும். முதலில் பிரமிக்க வைக்கும் அந்த மக்களின்
நம்பிக்கை.மாக மாதம் என்றழைக்கப் படும் அந்த மாதம் முழுவதும் பல ஊர்களிலிருந்து
கையில் மிகக் குறைந்த சமையல் சாதனங்கள், துணிமணி களுடன் வந்து,கிடைத்த
இடத்திலே தங்கி (பல நேரங்களில் வானமே கூரை) அந்த நடுக்கும் குளிரையும் பொருட்
படுத்தாமல் தினமும் நதியில் நீராடி கடவுளை நினைத்தே வாழும் அம்மக்களின் நம்பிக்கை.
(இரண்டு ஸ்வெட்டர் அணிந்தும் பகல் நேரத்தில் நடுங்கிக் கொண்டே வங்கியில் பணி
புரிந்து வந்தவன் நான்.)
அடுத்தபடியாக மூன்று கோடி மக்கள் வந்திருந்தும் எந்த விதமான அசம்பாவிதமும் நிகழாமல்
திறமையாக அனைத்தையும் கையாண்ட நிர்வாகம்.
12 ஆண்டுகளுக்கு ஒரு முறை வந்தாலும் தவறாமல் சரியான நாளில் எங்கிருந்தெல் லாமோ
வரும் சாதுக்கள்கூட்டம்.
இவை அனைத்தையும் பின் தள்ளி இன்று நினைத்தாலும் என் மனத்தைப் பிசையும்,
கண்களில் கண்ணீர் வரவழைக்கும்,செய்தி.இதைப் பத்திரிகையில் படிக்கும்போதே என்
கண்களில் கட்டுப்பாடற்றுக் கண்ணீர் வழியத்தொடங்கியது.
அந்தத் திருவிழாவுக்குத் தங்கள் வயதான தாய்/தந்தையுடன் வந்த சிலர் அந்தக்
கூட்டத்தில் அவர்களைத் தனியே தவிக்க விட்டுச் சென்று விட்ட கொடுமை! எழுத்தறிவற்ற
பாமரர்களான அவர்கள் தங்களைப் பற்றி,தங்கள் ஊர் பற்றி, உறவினர் பற்றி எந்தத்தகவலும்
கொடுக்க இயலாதவர்களாய் , நடுங்கிக் கொண்டு, அறியாத ஒரு ஊரில்,கோடிக்கணக்கான
மக்கள் கூட்டத்தில், நிர்க்கதியாக நிற்கும் நிலையை எண்ணிப் பார்த்தால் உங்கள் நெஞ்சில்
ரத்தக்கண்ணீர் வரவில்லையா?ஏன் இந்த நிலை?இதற்குக் காரணம் வறுமையா? பெற்றோரைக்
கூட அநாதையாகத் தவிக்க விடும் அளவுக்கு அவ்வளவு கொடுமையானதா அவர்கள்
வறுமை?
என்ன செய்யப் போகிறோம் நாம்?
(இது ஒரு மீள் பதிவு)

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)