தொடரும் தோழர்கள்

புதன், டிசம்பர் 17, 2014

நீங்களே சொல்லுங்கள்!
குற்றவாளிக் கூண்டில் அந்தப் பெண்.

சர்க்கார் வக்கீல் இந்தப் பெண் தன் ஒரு வயதுக் குழந்தையை விற்க முயன்ற போது கைது செய்யப்பட்டாள்

நீதிபதி அவளைப் பார்த்தார்.

நீ உன் குழந்தையை விற்க முயன்றது உண்மையா?”

ஆம்

நீ குற்றத்தை ஒப்புக் கொள்கிறாய்

அவள் கேட்டாள்குற்றமா?எது குற்றம்?எனக்குப் பணம் தேவையென்றால் எனது வளையலையோ,வீட்டில் இருக்கும் பாத்திரத்தையோ விற்கும் உரிமை எனக்கு உண்டல்லவா?”

உண்டு.

”எனக்குப் பணத்தேவை.விற்பதற்கு என்னிடம் வேறெதுவும் இல்லை.எனவே என் மூன்றாவது குழந்தையை விற்க முனைந்தேன்.இது எப்படி குற்றமாகும்?என் உடைமையை விற்கக எண்ணினேன்.திருட்டுப் பொருளை அல்ல.இது எவ்வாறு குற்றமாகும்?.”

”உன் சொந்தப் பொருட்களை விற்க உரிமை உண்டு.ஆனால் .ஏனென்றால் அவை வாங்கவும் விற்கவும் படும் பொருட்கள்.ஆனால் குழந்தை என்பது வியாபாரப் பொருளல்ல.அதை விற்க முனைவது சட்டப்படி குற்றம்.”

”ஓர் உயிரைக்காப்பாற்றப் பணம் தேவைப்படும்போது கையில் இருக்கும் ஏதாவது பொருளை விற்றுத்தானே சமாளிக்க முடியும்.என்னிடம் இருந்த ஒரே மதிப்புள்ள பொருள் என் குழந்தைதான். என்னைக் கொஞ்சம் விளக்க அனுமதியுங்கள்”

சரி
..............
காலை  6 மணி

கட்டிட வேலைக்குப் புறப்படுகிறான் வரதன்

”கமலா.நான் வேலை முடிஞ்சு வரும்போது மேஸ்திரி கிட்டக் கேட்டுப் பணம் வாங்கிட்டு வரேன்.”

சரிங்க.

இரண்டு மணி நேரத்தில் ஓடி வருகிறான் முருகன்

“அண்ணி! அண்ணன் வேலை செய்யும்போது ஆறாவது மாடிலேருந்து கீள விளுந்திட்டாரு 
அடி பட்டு ஆசுபத்திரிக்குக் கொண்டு போயிருக்காங்க”

ஓடினாள்.

ஆஸ்பத்திரி.

டாக்டர்கள் சொல்லி விட்டார்கள்”ஆபரேசன் செய்ய வேண்டும்.ஐயாயிரம் வேண்டும்”

கம்பெனியில் கொடுத்த ஆயிரம் ரூபாய் போதாது.என்ன செய்ய?

காதில்,கழுத்தில் எதுவுமில்லை.

வீட்டிலும் விற்க எதுவுமில்லை

என்ன செய்வது.

எதை விற்பது?

குழந்தையின் அழுகுரல்

பொறிதட்டியது.

ஆம்.

இந்தக் குழந்தையை விற்க வேண்டியதுதான்.

வேண்டிய பணம், கிடைக்கும் வரை ஏலம் விட வேண்டியதுதான்


குழந்தையை தூக்கிக் கொண்டாள்.

வேகமாக நடந்தாள்

......நடந்ததைச் சொல்லி முடித்தாள் நீதி மன்றத்தில்.
 ............................

சட்டம் என்னவோ சொல்லி விட்டுப் போகட்டும்.

நீங்கள் சொல்லுங்கள்.

அவள் குற்றவாளியா?

(இன்று டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் படித்த ஒரு செய்தியின் அடிப்படையில் எழுந்தது)


9 கருத்துகள்:

 1. வணக்கம்
  ஐயா.

  நல்ல கதையாக உள்ளது இறுதியில் தீர்ப்பு சொல்வது சங்கடந்தான்... இருந்தாலும் மற்றவர்களின் பதிலை எதிர்பார்க்கிறேன்.. பகிர்வுக்கு நன்றி
  ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: பருவமாறிந்து பருவச்சிறகை விரித்தேன்.:

  கவிதையாக என்பக்கம் வாருங்கள் அன்புடன்
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 2. குற்றவாளியே!(உயிர்கள் அனைத்தும் படைத்தவனுக்கே சொந்தம்.வாங்கவோ/விற்கவோ எவருக்கும் உரிமை இல்லை.)

  பதிலளிநீக்கு
 3. இதைப் படிக்கும்போது ‘பராசக்தி’ திரைப்படத்தில் நீதி மன்ற காட்சியில் கல்யாணி என்ற கதாபாத்திரம் குழந்தையை ஆற்றில் வீசியது குற்றம் என்றும், ஆக்கப்பட்ட பொருள் அனைத்தும் அரசாங்கத்துக் சொந்தம் என்றும் அரசு வழக்கறிஞர் வாதாடிய காட்சி நினைவுக்கு வருகிறது. அங்கே பசியின் கொடுமையால் குழந்தையை எறிந்தாள். இங்கோ கணவனைக் காப்பாற்ற விற்கிறாள். அவரவர்கள் பார்வையில் அவர்களது செயல்கள் சரியே.

  பதிலளிநீக்கு
 4. குற்றவாளியே! கரு ஒன்று உருவாகும்போதே அது அரசுக்கு உடமை ஆகிவிடுகிறது. அதனால்தான் இலவசமாக மருந்துகள் பிரசவம் எல்லாம் அரசு பார்க்கிறது. நாம் வளர்த்தாலும் அது அரசுடைமைதானாம். இன்று அனைவருக்கும் கல்வி இயக்க பள்ளி மேலாண்மை கருத்தரங்கில் கலந்து கொண்டேன்! அங்கு இவ்வாறுதான் சொன்னார்கள். குழந்தையை அடிக்க பெற்றோருக்கு உரிமை இல்லை என்றும் சொன்னார்கள்.

  பதிலளிநீக்கு
 5. பெற்ற குழந்தையை விற்க நினைப்பது தவறுதானே ஐயா.

  பதிலளிநீக்கு
 6. மனசாட்சியுள்ள எந்த நீதிபதியாலும் தீர்ப்பு சொல்ல முடியாத வழக்கு

  பதிலளிநீக்கு
 7. :((படிக்கும்போதே குற்ற உணர்வு மேலிடுகிறது:(

  பதிலளிநீக்கு
 8. முட்டாள்தனமான முடிவு. கொடுக்கும் பணம் போதவில்லை என்றால் அடுத்த குழந்தையை விற்க வேண்டி வருமே! தொடர் சிகிச்சை பெற வேண்டி இருந்தால் எத்தனை குழந்தை விற்றாலும் போதாதே.

  பதிலளிநீக்கு