தொடரும் தோழர்கள்

வியாழன், டிசம்பர் 01, 2011

யாருக்காக யார் சாவது?


இராமன் என்பவர் இறந்து விட்டார்.அவருக்கு வயது 40 கூட ஆகவில்லை.

அவரது மனைவி,9 வயதான மகன்,பெற்றோர் அனைவரும் உடலின் அருகே அமர்ந்து கதறி அழுது கொண்டிருந்தனர்.

இந்தக் குடுமபத்துக்கே குருஜியாக விளங்கும் அறிஞர் ஒருவர் அப்போது அங்கு வந்தார்.

அவரைக் கண்டதும் அவர்கள் மேலும் பெரிதாக அழ ஆரம்பித்தனர்.

இராமனின் மனைவி சொன்னாள்”குருஜி!இவ்வளவு இளம் வயதில் என்னையும்  என் மகனையும் நிர்க்கதியாக விட்டுப் போய் விட்டாரே? நான்  என்ன செய்வேன்?அவர் உயிருடன் வருவாரென்றால் அதற்காக நான் எதுவும் செய்வேன்”

குருஜி அவர்கள் அனைவருக்கும் ஆறுதல் சொல்லி சமாதானப் படுத்த  முயன்றார்.ஆனால் அவர்கள் சோகம் குறையவில்லை.

கடைசியில் அவர் கேட்டார்”ஒரு கோப்பை தண்ணீர் கொண்டு வாருங்கள்”

தண்ணீர் வந்தது. அவர் கோப்பையை உடலின் அருகில் வைத்துத் தானும் அமர்ந்தார்.

பின் சொன்னார்”இராமன் உயிருடன் திரும்பி வர வேண்டும் என நினைப்பவர்,இந்தத் தண்ணீரை அருந்தலாம்.இராமன் திரும்பி வருவார்.ஆனால் அதற்குப் பதில் நீரை அருந்தியவர் மரணமடைவார்”

அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.ஆனால் யாரும் முன் வரவில்லை.

அவர் இராமனின் தந்தையைக் கேட்டார்” ஐயா! நீங்கள் உங்கள் மகனுக்காக   உங்கள் உயிரைக் கொடுக்க மாட்டீர்களா?”

தந்தை சொன்னார்”நான் இறந்து விட்டால் என் மனைவிக்கு யார் ஆதரவு?அளுக்காக நான் வாழ வேண்டும்”

தாயைக் கேட்க அவள் சொன்னாள்”அடுத்த மாதம் என் மகளுக்குப் பேறுகாலம்.நான் இறந்து விட்டால் அவளுக்கு யார் உதவுவது?”

மனைவி சொன்னாள்”நான்  இறந்தால் என் பையனை யார் கவனித்து வளர்ப்பது? அவனுக்காக நான் வாழ வேண்டும்”

குருஜி பையனைப் பார்த்துக்கேட்டார்”குழந்தாய்,உன் தந்தைக்காக நீ உயிர் விடுவாயா?”

அவன் தாய் உடனே அவனை இழுத்து அணைத்துக்கொண்டு சொன்னாள் ”குருஜி,உங்களுக்கென்ன பைத்தியமா?அவன் ஒரு குழந்தை.இனிமேல்தான் அவன் வாழ்க்கையே இருக்கிறது. அவனைப் போய் நீங்கள் கேட்கலாமா?”

குருஜி சொன்னார்”உங்கள் அனைவருக்கும் ஏதாவது கடமை, பொறுப்பு இருக்கிறது  என்று  நீங்கள் சொல்கிறீர்கள். அப்படியானால் இராமனுக்கு இங்கு வேலையில்லை என்றாகிறது. எனவேதான் கடவுள் அவனை எடுத்துக் கொண்டார் .இப்போது இறுதி யாத்திரைக்கான ஏற்பாடுகளைக் கவனியுங்கள்”

சொல்லி விட்டு அவர் சென்று விட்டார்.

ஆம் பிறப்பையும் இறப்பையும் தீர்மானிப்பவன் அவன்.

எந்தப் பூவை எப்போது பறிக்க வேண்டும் என்பது அவன் எடுக்கும் முடிவு.
நாம் யார் அதைக் குறை சொல்ல? கேள்வி கேட்க?

“நாம் ஒரு செடிக்குத் தண்ணீர் ஊற்றிப் பராமரிக்கிறோம்,அதில் பச்சை இலைகள்   இருக்கும் வரை.இலைகள் வாடிப்போய்,அது உயிரற்ற குச்சியானால்   அதை நாம் கவனிக்கப் போவதில்லை. அதனிடம் அன்பு செலுத்தப் போவதில்லை.”

”உயிர் இருக்கும் வரையே அன்பு,பாசம் எல்லாம்”

“பின் மிஞ்சுவது மகிழ்ச்சியான நாட்களின் நினைவுகள் மட்டுமே”

57 கருத்துகள்:

 1. அருமையான வாழ்க்கையின் தத்துவத்தை உணர்த்து கதை..

  பகிர்வுக்கு நன்றிகள்..

  பதிலளிநீக்கு
 2. நல்ல கருத்தினைக் கொண்ட பகிர்வு....

  பகிர்வுக்கு நன்றி ஐயா...

  பதிலளிநீக்கு
 3. வாழ்க்கையின் தத்துவத்தை உணர்த்து கதை...வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 4. ”உயிர் இருக்கும் வரையே அன்பு,பாசம் எல்லாம்”

  “பின் மிஞ்சுவது மகிழ்ச்சியான நாட்களின் நினைவுகள் மட்டுமே”

  வாழ்வியலின் நிதர்சனத்தத்துவத்தை அருமையாக உணர்த்துகிறது

  யாருக்காக யார் சாவது?"

  பதிலளிநீக்கு
 5. வீடு வரை உறவு ...வீதி வரை மனைவி ..காடு வரை பிள்ளை ...கடைசி வரை யாரோ ....சரியாகவே சொன்னான் கவி அரசு ...வாசு

  பதிலளிநீக்கு
 6. வணக்கம்! ந்ல்ல கதை. அம்புலிமாமா பாணியில் ஒரு படம் போட்டு இருந்தால் இன்னும் சூப்பர்.

  பதிலளிநீக்கு
 7. வணக்கம்,ஐயா!உங்களிடமிருந்து இன்னமும் நிறையவே கற்றுக் கொள்ள இருக்கிறது!

  பதிலளிநீக்கு
 8. வாழ்வின் யதார்த்ததை எளிமையாக சொன்னீர் ஐயா! பகிர்வுக்கு நன்றி

  பதிலளிநீக்கு
 9. //”உயிர் இருக்கும் வரையே அன்பு,பாசம் எல்லாம்”

  “பின் மிஞ்சுவது மகிழ்ச்சியான நாட்களின் நினைவுகள் மட்டுமே”//

  அருமை அய்யா!

  பதிலளிநீக்கு
 10. அருமையான வாழ்க்கைத் தத்துவத்தை
  மிக அழகான கதை மூலம் விளக்கியுள்ளீர்கள்
  மனம் கவர்ந்த பதிவு
  தொடர வாழ்த்துக்கள்
  த.ம 7

  பதிலளிநீக்கு
 11. அருமையான ஒரு தத்துவத்தை சொன்னீங்க பாஸ் அருமையான பதிவு

  பதிலளிநீக்கு
 12. அழகான குட்டிக் கதை. உணர்த்தியது வாழ்வின் தாத்பரியத்தை. அருமை.

  பதிலளிநீக்கு
 13. ‘வந்தவரெல்லாம் தங்கிவிட்டால் – இந்த
  மண்ணில் நமக்கே இடமேது?
  வாழ்க்கை என்பது வியாபாரம் – வரும்
  ஜனனம் என்பது வரவாகும் – அதில்
  மரணம் என்பது செலவாகும்’

  எனக் கவிஞர் கண்ணதாசன் பாடிய பாட்டு நினைவுக்கு வருகிறது தங்கள் பதிவைப்படித்தபோது.

  நல்ல பதிவு.

  பதிலளிநீக்கு
 14. ”உயிர் இருக்கும் வரையே அன்பு,பாசம் எல்லாம்”

  “பின் மிஞ்சுவது மகிழ்ச்சியான நாட்களின் நினைவுகள் மட்டுமே”

  அழகாக
  ஆழமாக
  நுட்பமாக

  வாழ்வியல் நுட்பத்தைப் பதிவு செய்துவிட்டீர்கள்..

  அருமை.

  பதிலளிநீக்கு
 15. எதர்த்தைதை
  எழிலாக
  எடுத்துரைத்த
  கருத்துக் கதை
  அருமை அய்யா

  பதிலளிநீக்கு
 16. நண்டு @நொரண்டு -ஈரோடு கூறியது...

  // நல்ல பதிவு
  வாழ்த்துக்கள்.//
  நன்றி.

  பதிலளிநீக்கு
 17. !* வேடந்தாங்கல் - கருன் *! கூறியது...

  //அருமையான வாழ்க்கையின் தத்துவத்தை உணர்த்து கதை..

  பகிர்வுக்கு நன்றிகள்..//
  நன்றி கருன்.

  பதிலளிநீக்கு
 18. வல்லிசிம்ஹன் கூறியது...

  // மிக அருமை.//
  நன்றி.

  பதிலளிநீக்கு
 19. வெங்கட் நாகராஜ் கூறியது...

  //நல்ல கருத்தினைக் கொண்ட பகிர்வு....

  பகிர்வுக்கு நன்றி ஐயா...//
  நன்றி வெங்கட்.

  பதிலளிநீக்கு
 20. ரெவெரி கூறியது...

  //வாழ்க்கையின் தத்துவத்தை உணர்த்து கதை...வாழ்த்துக்கள்...//
  நன்றி ரெவெரி.

  பதிலளிநீக்கு
 21. இராஜராஜேஸ்வரி கூறியது...

  //”உயிர் இருக்கும் வரையே அன்பு,பாசம் எல்லாம்”

  “பின் மிஞ்சுவது மகிழ்ச்சியான நாட்களின் நினைவுகள் மட்டுமே”

  வாழ்வியலின் நிதர்சனத்தத்துவத்தை அருமையாக உணர்த்துகிறது

  யாருக்காக யார் சாவது?"//

  நன்றி இராஜராஜேஸ்வரி

  பதிலளிநீக்கு
 22. Vasu கூறியது...

  // வீடு வரை உறவு ...வீதி வரை மனைவி ..காடு வரை பிள்ளை ...கடைசி வரை யாரோ ....சரியாகவே சொன்னான் கவி அரசு //
  நன்றி வாசு.

  பதிலளிநீக்கு
 23. தி.தமிழ் இளங்கோ கூறியது...

  //வணக்கம்! ந்ல்ல கதை. அம்புலிமாமா பாணியில் ஒரு படம் போட்டு இருந்தால் இன்னும் சூப்பர்.//
  நன்றி.

  பதிலளிநீக்கு
 24. Yoga.S.FR கூறியது...

  //வணக்கம்,ஐயா!உங்களிடமிருந்து இன்னமும் நிறையவே கற்றுக் கொள்ள இருக்கிறது!//
  நன்றி.

  பதிலளிநீக்கு
 25. ராஜி கூறியது...

  //வாழ்வின் யதார்த்ததை எளிமையாக சொன்னீர் ஐயா! பகிர்வுக்கு நன்றி//
  நன்றி.

  பதிலளிநீக்கு
 26. அட்டகாசமான பதிவு ஐயா... இது போல் ஒரு குருஜி அல்லது சுய அறிவு வாழ்வின் வழிகாட்டியாக இருந்தால்.. வாழ்வின் அர்த்தம் புரிந்துக்கொண்டேயிருக்கும்.

  பதிலளிநீக்கு
 27. ராஜி கூறியது...

  // த ம 5//
  மீண்டும் நன்றி.

  பதிலளிநீக்கு
 28. shanmugavel கூறியது...

  //”உயிர் இருக்கும் வரையே அன்பு,பாசம் எல்லாம்”

  “பின் மிஞ்சுவது மகிழ்ச்சியான நாட்களின் நினைவுகள் மட்டுமே”//

  // அருமை அய்யா!//
  நன்றி சண்முகவேல்.

  பதிலளிநீக்கு
 29. Ramani கூறியது...

  //அருமையான வாழ்க்கைத் தத்துவத்தை
  மிக அழகான கதை மூலம் விளக்கியுள்ளீர்கள்
  மனம் கவர்ந்த பதிவு
  தொடர வாழ்த்துக்கள்
  த.ம 7//
  நன்றி ரமணி.

  பதிலளிநீக்கு
 30. K.s.s.Rajh கூறியது...

  //அருமையான ஒரு தத்துவத்தை சொன்னீங்க பாஸ் அருமையான பதிவு//
  நன்றி ராஜ்.

  பதிலளிநீக்கு
 31. கணேஷ் கூறியது...

  //அழகான குட்டிக் கதை. உணர்த்தியது வாழ்வின் தாத்பரியத்தை. அருமை.//
  நன்றி கணேஷ்.

  பதிலளிநீக்கு
 32. வே.நடனசபாபதி கூறியது...

  // ‘வந்தவரெல்லாம் தங்கிவிட்டால் – இந்த
  மண்ணில் நமக்கே இடமேது?
  வாழ்க்கை என்பது வியாபாரம் – வரும்
  ஜனனம் என்பது வரவாகும் – அதில்
  மரணம் என்பது செலவாகும்’

  எனக் கவிஞர் கண்ணதாசன் பாடிய பாட்டு நினைவுக்கு வருகிறது தங்கள் பதிவைப்படித்தபோது.

  நல்ல பதிவு.//
  நன்றி சபாபதி அவர்களே.

  பதிலளிநீக்கு
 33. முனைவர்.இரா.குணசீலன் கூறியது...

  ”உயிர் இருக்கும் வரையே அன்பு,பாசம் எல்லாம்”

  “பின் மிஞ்சுவது மகிழ்ச்சியான நாட்களின் நினைவுகள் மட்டுமே”

  //அழகாக
  ஆழமாக
  நுட்பமாக

  வாழ்வியல் நுட்பத்தைப் பதிவு செய்துவிட்டீர்கள்..

  அருமை.//
  நன்றி ஐயா.

  பதிலளிநீக்கு
 34. A.R.ராஜகோபாலன் கூறியது...

  // எதர்த்தைதை
  எழிலாக
  எடுத்துரைத்த
  கருத்துக் கதை
  அருமை அய்யா//
  நன்றி ஏ.ஆர்.ஆர்.

  பதிலளிநீக்கு
 35. மாய உலகம் கூறியது...

  //அட்டகாசமான பதிவு ஐயா... இது போல் ஒரு குருஜி அல்லது சுய அறிவு வாழ்வின் வழிகாட்டியாக இருந்தால்.. வாழ்வின் அர்த்தம் புரிந்துக்கொண்டேயிருக்கும்.//
  நன்றி ராஜேஷ்.

  பதிலளிநீக்கு
 36. நேரம் வரும்போது யாரும் தடுக்க முடியாது அதுவே மரணம்..நன்றி அண்ணே!

  பதிலளிநீக்கு
 37. இதைத்தான் தாமரை இலை தண்ணீர் போல இரு என்று விவேகானந்தர் சொன்னார். அருமையான கதை மற்றும் கருத்து.

  பதிலளிநீக்கு
 38. அருமையான கதை சிறப்பாக எடுத்து சொல்லி இருக்குறீர்கள் வாழ்த்துக்கள்...!!!

  பதிலளிநீக்கு
 39. வாழ்க்கையின் யதார்த்தத்தை சிறப்பாக சொல்லுகிறார் அந்த குருஜி...!

  பதிலளிநீக்கு
 40. விக்கியுலகம் கூறியது...

  //நேரம் வரும்போது யாரும் தடுக்க முடியாது அதுவே மரணம்..நன்றி அண்ணே!//
  நன்றி விக்கி.

  பதிலளிநீக்கு
 41. பாலா கூறியது...

  // இதைத்தான் தாமரை இலை தண்ணீர் போல இரு என்று விவேகானந்தர் சொன்னார். அருமையான கதை மற்றும் கருத்து.//
  நன்ரி பாலா

  பதிலளிநீக்கு
 42. MANO நாஞ்சில் மனோ கூறியது...

  //அருமையான கதை சிறப்பாக எடுத்து சொல்லி இருக்குறீர்கள் வாழ்த்துக்கள்...!!!//
  நன்றி மனோ.

  பதிலளிநீக்கு
 43. "என் ராஜபாட்டை"- ராஜா கூறியது...

  //அருமையான கருத்து .. நன்றி

  இன்று

  நடிகர் விஜய் : நேற்று ! இன்று !! நாளை ?//
  நன்றி ராஜா.

  பதிலளிநீக்கு
 44. சி.பி.செந்தில்குமார் கூறியது...

  // வாழ்க்கையின் உண்மை இதுதான்//
  நன்றி சிபி.

  பதிலளிநீக்கு
 45. ”உயிர் இருக்கும் வரையே அன்பு,பாசம் எல்லாம்” அருமையான கருத்து

  பதிலளிநீக்கு
 46. ”உயிர் இருக்கும் வரையே அன்பு,பாசம் எல்லாம்”

  “பின் மிஞ்சுவது மகிழ்ச்சியான நாட்களின் நினைவுகள் மட்டுமே”


  நல்ல கருத்து ஐயா

  பதிலளிநீக்கு
 47. MANO நாஞ்சில் மனோ கூறியது...

  //வாழ்க்கையின் யதார்த்தத்தை சிறப்பாக சொல்லுகிறார் அந்த குருஜி...!//
  அவர்தான் குருஜி!

  பதிலளிநீக்கு
 48. Loganathan Gobinath கூறியது...

  //”உயிர் இருக்கும் வரையே அன்பு,பாசம் எல்லாம்” அருமையான கருத்து//
  நன்றி.

  பதிலளிநீக்கு
 49. M.R கூறியது...

  // ”உயிர் இருக்கும் வரையே அன்பு,பாசம் எல்லாம்”

  “பின் மிஞ்சுவது மகிழ்ச்சியான நாட்களின் நினைவுகள் மட்டுமே”


  நல்ல கருத்து ஐயா//
  நன்றி ரமேஷ்.

  பதிலளிநீக்கு
 50. வணக்கம் ஐயா,

  சுய நல உணர்வு எப்போது வெளிப்படுகின்றது என்பதனை இனங்கண்டு கொள்வதற்கேற்ற அருமையான பதிவு.

  பதிலளிநீக்கு
 51. அந்த குருஜி கிட்ட யார் யார் எப்போ சாவாங்க கேட்டு சொல்லுங்க substitute ready செய்யனும்

  பதிலளிநீக்கு
 52. மிகவும் அருமை.ஒருவரின் இறப்பை இப்படி கூட பார்க்கலாமா?

  பதிலளிநீக்கு