தொடரும் தோழர்கள்

வெள்ளி, டிசம்பர் 09, 2011

மறுக்கப்பட்ட சுகங்கள்!

எந்த சுகங்கள்  எல்லாம் எனக்கு மறுக்கப்பட்டன?

தந்தையின் கைவிரல் பற்றிக் கடற்கரை மணலில்
            கால் தோய நடக்கும் சுகம்.

இந்த வயதில்  இனிய துணை உடன் வர
            கோவில் குளம் போகும் சுகம்

சொந்த மக்கள் ,பேரன்,பேத்தி எனக்
            கூட்டுக் குடும்பமாய் வாழும் சுகம்

இந்த சுகமெல்லாம்மறுக்கப் பட்டாலும்
           ஒன்றெனக்குத் தந்தான் இறைவன்

அது சுகமல்ல,வரம்!

முதுமையில்  என்  தாயைக் கவனித்து
           வேண்டியதெல்லாம்  செய்யும் வரம்!

 அது போதும்,இறைவா உனக்கு நன்றி!
          

58 கருத்துகள்:

 1. இதைவிட வேறென்ன பாக்கியம் வேண்டும் தல...?!!!!

  பதிலளிநீக்கு
 2. மறுக்கப்பட்ட சுகங்களை
  வரிசைப்படுத்திய விதம் மிக அருமை ஐயா...
  பெற்ற தாயை கண்ணுறக் கண்டு
  சேவை செய்யும் பாக்கியம் நிச்சயம் ஓர்
  மகத்தான வரம்...

  பதிலளிநீக்கு
 3. தாயில் சிறந்ததொரு கோவிலுமில்லை தல...!!!

  பதிலளிநீக்கு
 4. ரத்தம் கக்கி செத்திருவேனொன்னு பயந்து தான் பதிவு பக்கம் வந்தேன், நல்லா எழுதுறீங்களே.ஆ. வி யில் உங்கள் பெயர் பார்த்திருக்கிறேன்

  பதிலளிநீக்கு
 5. இதை விட ஒரு மனிதனுக்கு என்ன தேவை? என்பதை அழகாக, கவிதையாக சொல்லி விட்டீர்கள். நன்றி சார்!

  பதிலளிநீக்கு
 6. இன்று சுமையாய் நினைக்கிறார்கள்.நல்ல பகிர்வு.

  பதிலளிநீக்கு
 7. பெருமைப் படத்தக்க வரம்
  விலை மதிப்பில்லா சுகம்
  மனம் கவர்ந்த பதிவு வாழ்த்துக்கள்
  த.ம 5

  பதிலளிநீக்கு
 8. MANO நாஞ்சில் மனோ கூறியது...

  //இதைவிட வேறென்ன பாக்கியம் வேண்டும் தல...?!!!!//
  உண்மை மனோ
  நன்றி.

  பதிலளிநீக்கு
 9. மகேந்திரன் கூறியது...

  //மறுக்கப்பட்ட சுகங்களை
  வரிசைப்படுத்திய விதம் மிக அருமை ஐயா...
  பெற்ற தாயை கண்ணுறக் கண்டு
  சேவை செய்யும் பாக்கியம் நிச்சயம் ஓர்
  மகத்தான வரம்...//
  நன்றி மகேந்திரன்.

  பதிலளிநீக்கு
 10. MANO நாஞ்சில் மனோ கூறியது...

  //தாயில் சிறந்ததொரு கோவிலுமில்லை தல...!!!//
  சரியாகத்தான் சொல்லியிருக்கிறார்கள்.

  பதிலளிநீக்கு
 11. வெங்கட் நாகராஜ் கூறியது...

  //நல்ல பகிர்வு...//
  நன்றி வெங்கட்.

  பதிலளிநீக்கு
 12. rufina rajkumar கூறியது...

  //ரத்தம் கக்கி செத்திருவேனொன்னு பயந்து தான் பதிவு பக்கம் வந்தேன், நல்லா எழுதுறீங்களே.ஆ. வி யில் உங்கள் பெயர் பார்த்திருக்கிறேன்//
  இப்போது பயம் இல்லையே,இனி தொடர்ந்து வருவீர்கள்தானே!

  நன்றி.

  பதிலளிநீக்கு
 13. திண்டுக்கல் தனபாலன் கூறியது...

  //இதை விட ஒரு மனிதனுக்கு என்ன தேவை? என்பதை அழகாக, கவிதையாக சொல்லி விட்டீர்கள். நன்றி சார்!//
  நன்றி தனபாலன்

  பதிலளிநீக்கு
 14. shanmugavel கூறியது...

  //இன்று சுமையாய் நினைக்கிறார்கள்.நல்ல பகிர்வு.//
  நன்றி சண்முகவேல்.

  பதிலளிநீக்கு
 15. R.Ravichandran கூறியது...

  //Nandraga irukku sir.//
  நன்றி ரவிச்சந்திரன்

  பதிலளிநீக்கு
 16. Ramani கூறியது...

  //பெருமைப் படத்தக்க வரம்
  விலை மதிப்பில்லா சுகம்
  மனம் கவர்ந்த பதிவு வாழ்த்துக்கள்
  த.ம 5//
  நன்றி ரமணி.

  பதிலளிநீக்கு
 17. A.R.ராஜகோபாலன் கூறியது...

  // மனதை வருடிய அன்பு கவிதை அய்யா//
  நன்றி ஏ.ஆர்.ஆர்.

  பதிலளிநீக்கு
 18. Rathnavel கூறியது...

  //அருமை ஐயா.
  நன்றி.//
  நன்றி ஐயா.

  பதிலளிநீக்கு
 19. மிகவும் சுருக்கமாக கொடுத்திருக்கிறீர்கள். உங்கள் வரத்தைப் பற்றி எனக்கு கருத்து எதுவும் இல்லை. வாலி படத்தில் "சத்தம் இல்லாத யுத்தம் கேட்டேன்" பாட்டு ஞாபகம் இருக்கிறதுதானே?

  பதிலளிநீக்கு
 20. அருமை..
  மனதில் பதியும் விதமாக அழகாகச் சொன்னீர்கள் அன்பரே.

  பதிலளிநீக்கு
 21. ////அது சுகமல்ல,வரம்!

  முதுமையில் என் தாயைக் கவனித்து
  வேண்டியதெல்லாம் செய்யும் –வரம்!

  அது போதும்,இறைவா உனக்கு நன்றி!////

  இதைவிட ஒரு வரம் தேவையில்லை இதற்காக எதையும் இழக்கலாம் அருமையான கவிதை பாஸ்

  பதிலளிநீக்கு
 22. வணக்கம் ஐயா,
  நல்லா இருக்கீங்களா?
  எந்த சுகம் மறுக்கப்பட்டாலும் எம் அன்னையைப் பராமரிக்கும் ஓர் தெய்வீக சுகம் போல பூமியில் ஏதும் வருமா என்று ஆச்சரியப்பட வைக்கும் வகையில் இக் கவியினைத் தந்திருக்கிறீங்க.

  பதிலளிநீக்கு
 23. அம்மாவைக் கவனித்துக் கொள்ளுதல் பிள்ளைகளின் கடமை மட்டுமல்ல, அதற்கும் கொடுத்து வைத்திருக்க வேண்டும்... அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள். நன்றி!

  பதிலளிநீக்கு
 24. //முதுமையில் என் தாயைக்கவனித்து
  வேண்டியதெல்லாம் செய்யும் –வரம்!//

  வரத்தைப் பெற்று, அனுபவித்து எழுதியுள்ளீர்கள். வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 25. அருமை!......பல சுகங்கள் அவை எல்லாம் அற்ப சுகங்கள் .
  ஒரு சுகம் அன்னையைக் கவனித்தல் அதுவே தெய்வீக சுகம்!..
  இது கிடைத்தது போதும் என மகிழும் தங்களுக்கு வாழ்த்துக்கள்
  ஐயா .உங்கள் எண்ணம் மென்மேலும் வெற்றி பெறட்டும் .மிக்க நன்றி
  பகிர்வுக்கு .

  பதிலளிநீக்கு
 26. கார்த்திகைத் தீபத்திருநாள் வாழ்த்துக்கள் அன்பு உறவுகளே!....

  பதிலளிநீக்கு
 27. முதுமையில் என் தாயைக் கவனித்து
  வேண்டியதெல்லாம் செய்யும் –வரம்!

  அந்த வரம் கிட்டினால் அது பாக்கியம்தான்.

  பதிலளிநீக்கு
 28. @அமர பாரதி
  நன்றி.பாட்டுக் கேட்டிருக்கிறேன், ஆனால் பாடல் வரிகள் முழுமையாகத் தெரியாதே!

  பதிலளிநீக்கு
 29. @துரைடேனியல்
  என்ன ஆச்சோ தெரியவில்லையே.
  நன்றி.

  பதிலளிநீக்கு
 30. @அம்பாளடியாள்
  வாழ்த்துகள் உங்களுக்கும் உரித்தாகுக.

  பதிலளிநீக்கு
 31. மறுக்கப்பட்ட சுகங்கள் மறுக்கப்படாத உண்மைகள்.

  பதிலளிநீக்கு
 32. தாயிற் சிறந்த கோயிலுமில்லை!
  ஆம்!பித்தரே!
  தாங்கள் பெற்ற வரத்திற்கு
  இணையில்லை

  புலவர் சா இராமாநுசம்

  பதிலளிநீக்கு
 33. மிக புண்ணியம் செய்து இருக்கீங்க,தாயை கவனிக்கும் வரம் கிடைத்துள்ளது.

  பதிலளிநீக்கு
 34. ஃஃஃஃமுதுமையில் என் தாயைக் கவனித்து
  வேண்டியதெல்லாம் செய்யும் –வரம்ஃஃஃ

  இது தாங்க மிகப் பெரிய வரம்... எத்தனை ஜென்மத்துக்கு நாம் செய்த பாவத்தையும் ஒரே நாளில் கழுவிடலாம்..

  பதிலளிநீக்கு
 35. வணக்கம் ஐயா,இவையெல்லாம் என் பிள்ளைகளுக்கு மறுக்கப்பட்ட சுகங்கள், நான் பிறந்த ஊரில் இல்லாத காரணத்தால்!

  பதிலளிநீக்கு
 36. சுகமான வரம்தானே அது!! கொடுத்துவைத்தவர் நீங்கள்.

  பதிலளிநீக்கு
 37. கொடுத்து வைத்தவர் சார் நீங்கள்!

  பதிலளிநீக்கு