தொடரும் தோழர்கள்

திங்கள், டிசம்பர் 19, 2011

சென்னை இசை விழா ஸ்பெசல்!

நேற்று மாலை 4.25 க்கு திருமதி சௌம்யா அவர்களின் கச்சேரி--(4.30 முதல்

ஆறு வரை ராகு காலம்!)இந்த சீசனில் நிறையக் கச்சேரிகள் செய்வதாலும்,குளிர்காலம் என்பதாலும்

அநேகருக்குச் சில நாட்கள் தொண்டை கொஞ்சம் பிரச்சினை கொடுக்கும்.

நேற்று சௌம்யாவுக்கும் அதே நிலைதான். அதையும் மீறி நன்றாகவே

பாடினார்.மோகன ராகம் (பவனுத) குறிப்பிடும்படி இருந்தது.
------------------------------------------

சபா உறுப்பினர்-:என்ன செயலாளர் சார்! வித்துவானுக்கு இரவு உணவுக்கு

என்ன வேணுமாம்?

செயலாளர்: பழம், பால் போதுமாம்!

உறுப்பினர்:  எதுக்கு பழம் பால்?நல்ல புதுப் பாலாவே குடுத்துடலாம்!

!!!!!!!!!!!!

---------------------------------------
சென்ற பதிவில் காண்டீன் உணவுப் பொருள்களின் விலை பற்றிச் சொல்லி

யிருந்தேன்.

அதற்குத் தொடர்புடைய ஒரு நிகழ்ச்சி.

இடை வேளையில் ஒரு வயதான தம்பதி-கணவருக்கு 80 வயது இருக்கலாம்.

காரிடாரின் ஓரமாக நின்று.கொண்டு,மனைவி ஒரு டிஃபன் டப்பாவிலிருந்து

மிளகாய்ப் பொடி எண்ணெய் தடவியை தோசை எடுத்துத்தர,அவர் சாப்பிட்டுக்

கொண்டிருந்தார்.பின் மனைவியும் சாப்பிட்டார்.இருவரும் கொண்டு

வந்திருந்த  பாட்டில் தண்ணீரைக் குடித்தனர்.பின் அடுத்த கச்சேரிக்கு

அரங்குக்குள் சென்று விட்டனர்.வீட்டு உணவு;வயிறும் நிறைந்தது;

உடலுக்கும் நல்லது;காசும் மிச்சம். சபாவுக்கு வந்தது இசையின் மீதுள்ள

ஆசையால்தானே!அதுதானே முக்கியம்!

19 கருத்துகள்:

 1. ஆனந்தமாய் இசையை ரசிக்க வேண்டும். மனதுக்குப் பிடித்ததை உண்ண வேண்டும். நீங்கள் சொல்லியிருப்பது மிகச் சரியே. கி.வா.ஜ அவர்களிடம் ஒருவர் ‘பழம் கிழம் ஏதாவது வாங்கிட்டு வரட்டுமா’ என்று கேட்க, அவர் ‘நான் பழைய காலத்து கிழவன் தான். அதை பழம்கிழம்னு சொல்லிக் காட்டணுமா’ என்று சிரித்தாராம். உங்கள் ஜோக் அதை நினைவுபடுததியது. அருமை.

  பதிலளிநீக்கு
 2. அருமை பித்தரே !
  நகைச்சுவை!

  என் வைலைவழி வாருங்கள்!
  தாங்கள் தவறாது கல்ந்து கொள்ள
  வேண்டுகிறேன்

  புலவர் சா இராமாநுசம்

  பதிலளிநீக்கு
 3. அருமை பித்தரே !
  நகைச்சுவை!

  என் வைலைவழி வாருங்கள்!
  தாங்கள் தவறாது கல்ந்து கொள்ள
  வேண்டுகிறேன்

  புலவர் சா இராமாநுசம்

  பதிலளிநீக்கு
 4. அருமை சுவாரஸ்ய பகிர்வு பாஸ்

  பதிலளிநீக்கு
 5. அந்த தம்பதியரை பாராட்டவேண்டும் தல, அவர்கள் அன்பும் அதில் நன்றாக வெளிப்படுகிறது!!!!

  பதிலளிநீக்கு
 6. இசை கேட்டால், எல்லாம் இன்பமயமாக இருக்கும், வாழ்க்கையும் நல்லா என்ஜாய் பண்ணுங்க தல...

  பதிலளிநீக்கு
 7. அண்ணே அருமையான தம்பதிகள் போல...நன்றி!

  பதிலளிநீக்கு
 8. சௌம்யா என்ன கலர் புடவை?

  இதெல்லாம் கூட முக்கியம் கேட்டோ:-))))

  பதிலளிநீக்கு
 9. நல்ல இசைவிழா அனுபவம்.அந்த தம்பதிகளைப் பற்றிய குறிப்பு மனதை நெகிழ வைத்தது.

  பதிலளிநீக்கு
 10. நல்ல பகிர்வு. வருவது இசையை ரசிக்கத் தானே....

  பதிலளிநீக்கு
 11. இசைவிழாவை நன்றாக அனுபவிக்கிறீர்கள் அய்யா! அது குரல் பிரச்சினை செய்யும் குளிர்காலத்தில் சீஸனை வைத்தார்கள்?

  பதிலளிநீக்கு
 12. வீட்டு உணவுக்கு தான் சார் சுவை மிகு அதிகம்

  பதிலளிநீக்கு
 13. நல்லதொரு பகிர்வுக்கு நன்றி .
  எல்லோருக்கும் இந்த வாய்ப்புகள் கிட்டுவதில்லை. Enjoy

  பதிலளிநீக்கு
 14. நல்ல பகிர்வு... இசையைப் பற்றியும் எழுதியமை நன்று...

  பதிலளிநீக்கு
 15. //சபா உறுப்பினர்-:என்ன செயலாளர் சார்! வித்துவானுக்கு இரவு உணவுக்கு

  என்ன வேணுமாம்?

  செயலாளர்: பழம், பால் போதுமாம்!

  உறுப்பினர்: எதுக்கு பழம் பால்?நல்ல புதுப் பாலாவே குடுத்துடலாம்!//

  ஜோக் சூப்பர்.. இசை பற்றி பகிர்வு.. பல்சுவையுடன் நன்றி அய்யா

  காதல் கதைகள் - எனக்கு 55 உனக்கு 25

  பதிலளிநீக்கு
 16. இசையைப்பற்றியும் (நகைச்)சுவையைப் பற்றியும் எழுதி ஒரு கதம்ப மாலையையே தந்துவிட்டீர்கள். நன்றி. பழத்தோடு சம்பந்தப்பட்ட, நான் படித்த ஒரு நகைச்சுவை. ‘அதோ பழம் வாங்கிக்கொண்டு இருக்கிறாரே.அவர் யார்? அவர்தான் ‘பழம்’பெரும் நடிகர்! இது எப்படி இருக்கு?!!

  பதிலளிநீக்கு
 17. வணக்கம் ஐயா,
  நல்லா இருக்கீங்களா?
  இசையின் மீதுள்ள ஆசையால்....உணவைச் சேமிப்போர் பற்றிய நகைச்சுவை.
  கலக்கல் ஐயா

  பதிலளிநீக்கு