தொடரும் தோழர்கள்

ஞாயிறு, டிசம்பர் 18, 2011

ஹாலிடே!ஜாலிடே!!கடிடே!!

நம்ம கிராமத்துக்கு மின்சாரம் வந்தாச்சு;இனிமே நாமும் பட்டணத்து ஆசாமிகள் போல் அனுபவிக்கலாம்

எதை?

வேறெதை?பவர்கட்டைத்தான்!
.............................................................................

மகாபாரதத்தில் உட்கார்ந்து கொண்டே இருந்தவர் யார்?

’குந்தி’தேவி!
............................................................................

வேடந்தாங்கலுக்கு வருகிற பறவைகள் எல்லாம் எங்கிருந்து வருகின்றன?

முட்டையிலிருந்துதான்!
..............................................................................................................


இந்த ரோடு எங்கே போகிறது?

எங்கும் போகவில்லை.நான் பிறந்ததிலிருந்து இங்கேயேதான் இருக்கிறது!
..................................................................................................

ஏன் உன் தலைமுடி உதிர்ந்து விட்டது?

கவலைதான்.

என்ன கவலை?

தலைமுடி உதிர்கிறதே என்ற கவலைதான்.!
..............................................................................................

எதுக்குப்  பசங்க எல்லோரையும் வாசல்ல உட்கார்ந்து தேர்வு எழுத விட்டிருக்காங்க?

என்ட்ரன்ஸ் எக்ஸாமாம்!
...................................................................................................

அரபு நாடுகளில் ஃபோட்டோ எடுத்தா எப்படி இருக்கும்?

ஒரே”ஷேக்கா” இருக்கும்!
.....................................................................................................

அந்தப் பாம்புக்கு என்ன நோயாம்?

வேறென்ன? ’புற்று’ நோயாம்!

 !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
22 கருத்துகள்:

 1. ஹா ஹா ஹா ஹா ஞாயிறு கடி பலமா இருக்கே தல....!!!

  பதிலளிநீக்கு
 2. அரபு நாடுகளில் ஃபோட்டோ எடுத்தா எப்படி இருக்கும்?

  ஒரே”ஷேக்கா” இருக்கும்!//

  இங்கே அரபிக்காரன்கிட்டே சொன்னால் எனக்கு அ[க]டி கிடைக்கும் ஹி ஹி...

  பதிலளிநீக்கு
 3. நல்ல நகைச்சுவைகளை பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி!

  பதிலளிநீக்கு
 4. ஹா ஹா கடி கடி பயங்கர கடி

  த.ம 2

  பதிலளிநீக்கு
 5. முதல் ஜோக்கும் கடைசி ஜோக்கும் வாய் விட்டுச் சிரிக்க வைத்தன. மற்ற ஜோக்குகள் சிரிக்க‌ வைத்தன. சன்டேன்னா செ.பி. வலையில எங்களுக்கு ஜாலிடேதான்! ஜோக் படி, கொண்டாடு!

  பதிலளிநீக்கு
 6. எல்லா ‘கடி’ ஜோக்குகளும் அருமை. ஆனால் முதலில் உள்ளது ஜோக் அல்ல. நாட்டு நடப்பு தான். நான் இன்றுதான் மயிலாடுதுறையிலிருந்து வருகிறேன். அங்கே அறிவிக்கப்பட்ட மின் தடை 2 மணி நேரம். அறிவிக்கபடாத மின் தடை சொல்ல முடியாதாம். மதுரை போன்ற இடங்களில் 4 மணி நேரம் மின் தடை எனக்கேள்விப்பட்டேன். அப்படியென்றால் சிற்றூர்களில் எவ்வளவு மணி நேரம் மின் தடையோ?

  பதிலளிநீக்கு
 7. MANO நாஞ்சில் மனோ சொன்னது…

  //ஹா ஹா ஹா ஹா ஞாயிறு கடி பலமா இருக்கே தல....!!!//
  ஞாயிறுன்னா அப்படித்தான்!
  நன்றி மனோ.

  பதிலளிநீக்கு
 8. MANO நாஞ்சில் மனோ கூறியது...

  அரபு நாடுகளில் ஃபோட்டோ எடுத்தா எப்படி இருக்கும்?

  ஒரே”ஷேக்கா” இருக்கும்!//

  //இங்கே அரபிக்காரன்கிட்டே சொன்னால் எனக்கு அ[க]டி கிடைக்கும் ஹி ஹி...//

  ஹா,ஹா!

  பதிலளிநீக்கு
 9. வே.சுப்ரமணியன். கூறியது...

  // நல்ல நகைச்சுவைகளை பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி!//
  நன்றி வே.சு.

  பதிலளிநீக்கு
 10. M.R கூறியது...

  //ஹா ஹா கடி கடி பயங்கர கடி

  த.ம 2//
  :) நன்றி ரமேஷ்.

  பதிலளிநீக்கு
 11. கணேஷ் கூறியது...

  //முதல் ஜோக்கும் கடைசி ஜோக்கும் வாய் விட்டுச் சிரிக்க வைத்தன. மற்ற ஜோக்குகள் சிரிக்க‌ வைத்தன. சன்டேன்னா செ.பி. வலையில எங்களுக்கு ஜாலிடேதான்! ஜோக் படி, கொண்டாடு!//
  :-D நன்ரி கணேஷ்.

  பதிலளிநீக்கு
 12. விக்கியுலகம் கூறியது...

  //அண்ணே கலக்கல்!//
  நன்றி விக்கி.

  பதிலளிநீக்கு
 13. வே.நடனசபாபதி கூறியது...

  // எல்லா ‘கடி’ ஜோக்குகளும் அருமை. ஆனால் முதலில் உள்ளது ஜோக் அல்ல. நாட்டு நடப்பு தான். நான் இன்றுதான் மயிலாடுதுறையிலிருந்து வருகிறேன். அங்கே அறிவிக்கப்பட்ட மின் தடை 2 மணி நேரம். அறிவிக்கபடாத மின் தடை சொல்ல முடியாதாம். மதுரை போன்ற இடங்களில் 4 மணி நேரம் மின் தடை எனக்கேள்விப்பட்டேன். அப்படியென்றால் சிற்றூர்களில் எவ்வளவு மணி நேரம் மின் தடையோ?//
  உண்மைதான்.நன்றி.

  பதிலளிநீக்கு
 14. Yoga.S.FR கூறியது...

  //VANAKKAM,AIYAA!EXCELLENT!!!!//
  நன்றி Yoga.S.FR

  பதிலளிநீக்கு
 15. பேப்பர் படிப்பது போல ஞாயிற்றுக்கிழமையில் ஜாலிடே வழக்கமாகி வருகிறது. குதறிட்டீங்க போங்க.

  பதிலளிநீக்கு
 16. அப்பாதுரை சொன்னது…

  //பேப்பர் படிப்பது போல ஞாயிற்றுக்கிழமையில் ஜாலிடே வழக்கமாகி வருகிறது. குதறிட்டீங்க போங்க.//
  :) நன்றி அப்பாதுரை.

  பதிலளிநீக்கு
 17. வணக்கம் ஐயா,
  நல்லா இருக்கிறீங்களா?
  அருமையான நகைச்சுவைகளைப் பகிர்ந்திருக்கிறீங்க.

  பாம்பிற்கு புற்று நோயில் டபுள் மீனிங் இல்லையே..
  நம்மளை மாதிரி யூத் பசங்களிற்கு ஏதோ தப்பாகவும் வெளங்குது. மன்னிச்சிடுங்க.

  அப்புறமா ஐயா, கிறிஸ்மஸ் என்பதால் வேலை அதிகமா இருந்திச்சு.
  அதான் வர முடியலை! இனிமே ஆஜராகிடுவேன்!

  பதிலளிநீக்கு
 18. இனிய நத்தார், மற்றும் புதுவருட வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் ஐயா.

  பதிலளிநீக்கு
 19. அத்தனையும் அருமையான யோக்குகள் வாழ்த்துகள் சகோதரா.
  வேதா. இலங்காதிலகம்.

  பதிலளிநீக்கு