தொடரும் தோழர்கள்

வெள்ளி, டிசம்பர் 02, 2011

ஒரு பெரியவர்,ஒரு குளம்,குளிக்கும் சில பெண்கள்!

ஒரு பெரியவருக்கு ஒரு பண்ணை சொந்தமாக இருந்தது.


அங்கு ஒரு அழகிய குளம் இருந்தது. கிட்டத்தட்ட ஒரு நீச்சல் குளம் 

போல் நல்ல வடிவத்தில்  இருந்தது.


பெரியவர் அக்குளத்தின் கரையில் சில பழ மரங்கள் நட்டு அவை 

வளர்ந்து   கனி கொடுக்கத்  தொடங்கின.


ஒரு நாள் அவர் ஒரு கூடையை எடுத்துக் கொண்டு பழங்கள் 

பறிப்பதற்காக குளக்கரைக்குச் சென்றார். குளத்தை நெருங்கும்போதே  
 
சிரித்து  விளையாடும்   சில பெண்குரல்கள் கேட்டன.அருகில் சென்ற 

போது சில பெண்கள் குளத்தில்  ஆடையின்றிக்  குளித்துக் கொண்டிருப்  
பதைக் கண்டார்.அவர் வருவதைக் கண்ட பெண்கள் குளத்தின்
 
ஆழமான  பகுதிக்குச் சென்று நின்று கொண்டனர்.


அவர்களில் ஒருத்தி  சத்தமாய்ச் சொன்னாள்”பெரியவரே! நீங்கள் 

இங்கிருந்து   போகும் வரை நாங்கள் வெளியே வர மாட்டோம்!”


பெரியவர் சொன்னார்”நீங்கள் ஆடையின்றிக் குளிப்பதையோ, அப்படியே  
நீங்கள் கரையேறி வருவதையோ பார்ப்பதற்கு நான் வரவில்ல”


பின் தன் கூடையைக் காட்டிச் சொன்னார்”குளத்தில் இருக்கும் 

முதலைக்கு உணவளிக்கத்தான் நான் வந்தேன்!!”


பின்னர் என்ன நடந்தது எனச் சொல்லவா வேண்டும்!


புத்திசாலிப் பெரியவர்!


42 கருத்துகள்:

 1. அந்த ஜொள்ளு மனிதர் நீங்க தானே...

  பதிலளிநீக்கு
 2. பெரியவர் கிருஷ்ணரின் வழி வந்தவரோ . வாசு

  பதிலளிநீக்கு
 3. அடேங்கப்பா இனி அந்த குலத்துக்கு குளிக்க போவே போவே ஹி ஹி புத்திசாலி பெரியவர், ஜோள்ளரும் போல ஹி ஹி...

  பதிலளிநீக்கு
 4. வணக்கம் ஐயா,
  நல்லா இருக்கிறீங்களா?

  என்னம்மா யோசித்து கரையேற்றிக் காட்சி பார்க்கிறாங்க!

  புத்திசாலிப் பெரியவராக இருப்பாரே...

  பதிலளிநீக்கு
 5. இதே பொழப்பு போல, பெருசுக்கு!!
  ஹய்யோ!அய்யோ!! ஐயோ!?

  பதிலளிநீக்கு
 6. இதே பொழப்பு போல, பெருசுக்கு!!
  ஹய்யோ!அய்யோ!! ஐயோ!?

  பதிலளிநீக்கு
 7. அப்புறம் என்னங்க நடந்துச்சு பெரியவரே..?

  பதிலளிநீக்கு
 8. அண்ணே இப்படித்தான் பல பேரு நம்பள நெனசிக்கறாங்க போல ஹிஹி!

  பதிலளிநீக்கு
 9. நண்டு @நொரண்டு -ஈரோடு கூறியது...

  // ஹா..ஹா...
  :)) நன்றி.

  பதிலளிநீக்கு
 10. ரெவெரி கூறியது...

  //அந்த ஜொள்ளு மனிதர் நீங்க தானே...//
  மான நஷ்ட வழக்குப் போடப்போறேன்!ஹா,ஹா,!
  நன்றி ரெவெரி.

  பதிலளிநீக்கு
 11. இல்லாதனச் சொல்லி ஏமாற்றியப்
  பொல்லாத கிழவர்!

  புலவர் சா இராமாநுசம்

  பதிலளிநீக்கு
 12. Vasu கூறியது...

  //பெரியவர் கிருஷ்ணரின் வழி வந்தவரோ . வாசு//
  இருக்குமோ! நன்றி. வாசு.

  பதிலளிநீக்கு
 13. `MANO நாஞ்சில் மனோ கூறியது...

  //அடேங்கப்பா இனி அந்த குலத்துக்கு குளிக்க போவே போவே ஹி ஹி புத்திசாலி பெரியவர், ஜோள்ளரும் போல ஹி ஹி...//
  நன்றி மனோ.

  பதிலளிநீக்கு
 14. வெண் புரவி கூறியது...

  //பாசக்கார பெருசு..//
  ஹா,ஹா,நன்றி.

  பதிலளிநீக்கு
 15. வே.நடனசபாபதி கூறியது...

  // வாய்விட்டு சிரித்தேன்!//
  :) நன்றி.

  பதிலளிநீக்கு
 16. மனசாட்சி கூறியது...

  //அய்யோ அய்யோ//
  :) நன்றி.

  பதிலளிநீக்கு
 17. நிரூபன் கூறியது...

  // வணக்கம் ஐயா,
  நல்லா இருக்கிறீங்களா?

  என்னம்மா யோசித்து கரையேற்றிக் காட்சி பார்க்கிறாங்க!

  புத்திசாலிப் பெரியவராக இருப்பாரே...//
  வணக்கம் நிரூ!
  புத்திசாலிதான்!
  நன்றி.

  பதிலளிநீக்கு
 18. சைதை அஜீஸ் கூறியது...

  //இதே பொழப்பு போல, பெருசுக்கு!!
  ஹய்யோ!அய்யோ!! ஐயோ!?//
  நன்றி.

  பதிலளிநீக்கு
 19. பாலா கூறியது...

  // நல்ல விவகாரமான ஆள்தான்...//
  நன்றி!

  பதிலளிநீக்கு
 20. பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

  //அப்புறம் என்னங்க நடந்துச்சு பெரியவரே..?//
  பெரியவரைத்தான் கேக்கணும்!
  நன்றி.

  பதிலளிநீக்கு
 21. ராஜி கூறியது...

  //Vayasanalum perusuku ilamai pogalai pola//
  :) நன்றி.

  பதிலளிநீக்கு
 22. விக்கியுலகம் கூறியது...

  //அண்ணே இப்படித்தான் பல பேரு நம்பள நெனசிக்கறாங்க போல ஹிஹி!//
  ஹா,ஹா.நன்றி விக்கி.

  பதிலளிநீக்கு
 23. புலவர் சா இராமாநுசம் சொன்னது…

  //இல்லாதனச் சொல்லி ஏமாற்றியப்
  பொல்லாத கிழவர்!

  புலவர் சா இராமாநுசம்//
  :) நன்றி ஐயா.

  பதிலளிநீக்கு
 24. அந்த ? மனிதர் நீங்கதானா ன்னு நான் கேட்கமாட்டேன்.

  பதிலளிநீக்கு
 25. அய்யா நீங்கள் அருமையான கதைசொல்லிதான்....உங்கள் நண்பர்கள் கொடுத்து வைத்தவர்கள் அதனால்தான் இனைந்திருக்கின்றேன்...

  பதிலளிநீக்கு
 26. அய்யா.. கரிசல் காட்டுக் கதை போல உள்ளதே!

  பதிலளிநீக்கு
 27. சி.பி.செந்தில்குமார் சொன்னது…

  //அடங்கொன்னியா//
  :) நன்றி சிபி.

  பதிலளிநீக்கு
 28. !* வேடந்தாங்கல் - கருன் *! கூறியது...

  //அந்த ? மனிதர் நீங்கதானா ன்னு நான் கேட்கமாட்டேன்.//
  கேட்டுத்தான் பாருங்களேன்!
  நன்றி கருன்.

  பதிலளிநீக்கு
 29. veedu கூறியது...

  //அய்யா நீங்கள் அருமையான கதைசொல்லிதான்....உங்கள் நண்பர்கள் கொடுத்து வைத்தவர்கள் அதனால்தான் இனைந்திருக்கின்றேன்...//
  நன்றி.

  பதிலளிநீக்கு
 30. ரமேஷ் வெங்கடபதி கூறியது...

  //அய்யா.. கரிசல் காட்டுக் கதை போல உள்ளதே!//
  இது வெளிநாட்டுக் கதை!
  நன்றி.

  பதிலளிநீக்கு
 31. walking போகும் பொது நடந்த கதையா ஐயா ...கலக்குங்க ...

  பதிலளிநீக்கு
 32. அடாடா... புத்திசாலிப் பெரிசு (குடுத்து வச்சதும் கூட) ரசிச்சுச் சிரிச்சேங்க...

  பதிலளிநீக்கு