தொடரும் தோழர்கள்

ஞாயிறு, மே 04, 2014

ஆட்ரி எனும் அற்புத நடிகை

அழுக்கில்லையென்றாலே அழகு வந்துவிடும்.

நான் சொல்வது உடல் அழுக்கல்ல; மன அழுக்கு!

கீழேயுள்ள அழகுக் குறிப்புகளைப் பாருங்கள் ---

உதடுகள் அழகாக இருக்க எப்போதும் அன்பான சொற்களையே பேசுங்கள்.

கண்கள் அழகு பெற மற்றவர்களிடம் இருக்கும்  நல்ல  பண்புகளையே பாருங்கள்.

அழகிய மெல்லிய உடல் அழகுக்கு உங்கள் உணவை பசித்தவர் களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.

கேசப் பொலிவுக்கு தினம் ஒரு முறையாவது ஒரு குழந்தையின் கைகள் உங்கள் கூந்தலைத் தடவட்டும்.

நிமிர்ந்த நன்னடைக்கு,எப்போதும் நாம் தனியாக இல்லை என்ற நினைப்பு உங்களுடன் இருக்கட்டும்.

உதவும் கரம் தேவையென்றால் நினைவில் வையுங்கள் அது உங்கள் மணிக்கட்டுக்குக் கீழே இருக்கிறது என்பதை.வயது முதிர்ச்சி யடையும்போது,உணருங்கள் இரண்டு கரம் உள்ளது, ஒன்று உங்களுக்கு உதவ,மற்றது அடுத்தவர்க்கு உதவ என்பதை.

ஒரு பெண்ணின் அழகு அவள் உடலமைப்பிலோ,அவள் அழகிய உடைகளிலோ,அவள் கூந்தல் அலங்காரத்திலோ இல்லை.
அது அவள் அன்பு உறையும் ஆன்மாவின் சாளரமான அவள் கண்களில்தான் இருக்கிறது.

இறைவனின் கண்களில் அனைவரும் அழகுதான்.அவன் அனைவரையும் விரும்புகிறான்.அவன் பார்வையில் ,அனைவருமே அழகானவர்கள்தான்

இந்தச் சிந்தனைகள் யாரிடம் பிறந்தன தெரியுமா?

ரோமன் ஹாலிடே என்ற படத்தில்  ஹாலிவுட்டில் அறிமுகமாகி,ஒரு மிகச் சிறந்த நடிகையாக மட்டுமன்றி,ஒரு மிக நல்ல  மனித உயிராகவும் இருந்த ஆட்ரி ஹெப்பர்னிட மிருந்து!. 


அவரது மிகச் சிறப்பான நடிப்பில் வெளி வந்த ரோமன் ஹாலிடே,சரேட்,மை ஃபேர் லேடி,வெயிட் அன்டில் டார்க்,ஹௌ டு ஸ்டீல் ய மில்லியன் போன்ற படங்கள் காலத்தால் அழியாதவை.
 
அவர் பிறந்த தினம் மே 4!
 
 

16 கருத்துகள்:

 1. கூகிள் கூட இன்னிக்கு முகப்புல இவங்க படத்தை வெச்சிருக்கேன்னு பார்த்தேன். அழகுடன் நல்ல சிந்தனைகளும் கொண்ட வித்தியாச நடிகைன்னு இப்பத்தான் புரியுது. ‘ரோமன் ஹாலிடே’ படம் இதுவரை பாக்கற வாய்,பபு எனக்கு கிடைக்கலைங்கறது வருத்தம். (அந்த கதையை கொத்துக்கறி போட்டு வந்த தமிழ். தெலுங்கு படங்கள் பாத்திருக்கேன்.)

  பதிலளிநீக்கு
 2. ஆட்ரி ஹெப்பர்ன் பிறந்த நாளான இன்று அவரது கருத்துக்களை பகிர்ந்து அவரை நினைவூட்டியமைக்கு வாழ்த்துக்கள்! அவர் நடித்த ‘மை ஃபேர் லேடி’ எனக்குப் பிடித்த திரைப்படம்.

  பதிலளிநீக்கு
 3. இதுவரை அறியாத தகவல் இந்த அப்புவால எப்படித் தான் இப்படியெல்லாம்
  சிந்தித்துப் பகிர்விட முடிகிறது !! செல்லத் தாத்தாவே நன்றி நன்றி மிக்க
  நன்றி அருமையான இப் பகிர்வுக்கு .

  பதிலளிநீக்கு
 4. தமிழ்மணத்தில் இணைத்து என் கடமையை செய்து விட்டேன் :))

  பதிலளிநீக்கு
 5. நல்லதொரு தகவலை பகிர்ந்தமைக்கு நன்றி ஐயா!

  பதிலளிநீக்கு
 6. கவனத்தில் கொள்ள வேண்டிய அழகுக் குறிப்புகள்...

  பதிலளிநீக்கு
 7. கவனத்தில் கொள்ள வேண்டிய அழகுக் குறிப்புகள்...

  பதிலளிநீக்கு
 8. ஆட்ரியைப் பற்றி எழுத நினைத்தேன். மனதைக் கொள்ளை கொள்ளும் அழகுப் புன்னகை. மான்விழி. உள்ள அழகு, அதை வெளிக் கொணர்ந்த படங்கள். அவர் செய்த சமூக சேவைகள் அனைத்தும் என்னை அவருடைய வாழ்கையை மீண்டும் மீண்டும் படிக்க வைத்தன. இப்போதுதான் ஹவ் டு ஸ்டீல் அ மில்லியன் பார்த்து முடித்தேன். அடுத்தது வெயிட் அண்டில் டார்க்..அற்புதமான நடிகை. மிக நன்றி,.

  பதிலளிநீக்கு
 9. கவனத்தில் கொள்ள வேண்டிய அழகுக் குறிப்புகள்...

  பதிலளிநீக்கு
 10. உடம்பை ரசிக்க வைக்கும் நடிகைகளின் மத்தியில், (முதலில்) சிந்தனையை ரசிக்க வாய்த்த நடிகை !
  த ம 5

  பதிலளிநீக்கு
 11. பகிர்வுக்கு நன்றி அய்யா...

  பதிலளிநீக்கு
 12. நல்ல பகிர்வு,நன்றி ஐயா!///நம் நாட்டில் நாடாளப் பிறந்த நடிக/நடிகையர்!

  பதிலளிநீக்கு
 13. அற்புத நடிகை என்று கூறிவிட்டு தத்துவமாக இருக்கிறதே என குழம்பிவிட்டேன். இவ்வளவும் ஒரு நடிகை கூறியதா? தலைப்பு சாலப்பொருத்தம்

  பதிலளிநீக்கு
 14. பெயரில்லா6 மே, 2014 அன்று AM 6:21

  Please keep this page linked under your '25 Golden Sayings'. It deserves to be available permanently in the home page. thanks for sharing.

  பதிலளிநீக்கு
 15. நல்ல தகவல்..... பகிர்ந்து கொண்டதற்கு நன்றி ஐயா.

  பதிலளிநீக்கு