தொடரும் தோழர்கள்

வெள்ளி, மே 09, 2014

தூண்டில் மீன்களும்,தூண்டில் போடும் கண்களும்!மீன்!
வலை வீசியும் பிடிக்கலாம்
இல்லை தூண்டில் போட்டும் பிடிக்கலாம்!

மொத்தமாய்ச் சிக்கும் மீன் வலை வீசினால்!
ஒற்றையாய்த் தான் கிடைக்கும் தூண்டிலில்!

மீன் கூட்டத்தில் வலைவீசி ஒரு வீச்சில்
வலை நிறைய அள்ளுகிறான் வலைஞன்!
தூண்டில் வீசி காத்திருக்கிறான் கொக்கு போல்
உறு மீன் வரவுக்காகத் தூண்டில்காரன்!

வலை மீன் செல்கிறது சந்தைக்கு ஏனெனில்
வலைஞனுக்கு அது தொழில்!
தூண்டில் மீன் செல்கிறது வீட்டு அடுப்புக்கு
இல்லையேல் மீண்டும் நீர் நிலைக்கு!
ஏனெனில் அவனுக்கு அது உணவு தேடல்
இன்றேல் பொழுதுபோக்கு.

வலை மீன் விரும்பி வந்து வலையில் விழுவதில்லை!
தூண்டில் மீன் கொக்கி இரைக்காய்த் தானே மாட்டுகிறது!

கடல் மீன்,ஆற்று மீன்,குளத்து மீன்,ஏரி மீன்
என்று எங்கெல்லாம் மீன்?

கடல் மீனைப் பிடிக்கத் தூண்டில் பயனில்லை
மற்ற மீனுக்கு வலையும் வீசலாம்!

வஞ்சிரம்,கொடுவா,வாளை,இறால் என்று
கொஞ்சமா மீன் வகைகள் நீர் நிலையில்!

எல்லா மீனும் உணவாகப் போவதில்லை!

கண்ணாடிப் பெட்டிக்குள் குறுக்கும் நெடுக்குமாய்
என்னாளும் நீந்தி ஓடும் சில மீன்கள்!
சுதந்திரத்தை இழந்த பின்னும் சுதந்திரமாய் இருப்பதாய்!

பெண்களின் கண்களுக்கு உவமையாய்ச் சொல்வர் மீனை
உண்மையில் உவமை சரி ஆனாலும் வேற்றுமை-
மீன் தூண்டிலில் மாட்டும்,
கண் தூண்டில் போடும்!


நட்சத்திரங்களை விண்மீன்கள் என்றுரைப்பர்.
வானப் பெருங்க்கடலில் நீந்துவதாலா?

பெண்ணின் கண்ணுக்கும் விண்மீனுக்கும் ஒப்பிடுவான் செகப்பிரியர்
ரோமியோ சொல்கிறான் ஜூலியட் கண்கள் பற்றி


"
வானில் ஜொலிக்கும் இரு விண்மீன்களுக்கு வெறோதோ வேலையாம் ;
அவள் கண்களை தங்களுக்குப் பதிலாய் அங்கு வரச் சொல்கின்றன!
அவ்வாறு கண்கள் அங்கும்,விண்மீன்கள் அவள் முகத்திலும் இருந்தால்?
அவள் கன்னத்தின் ஒளியில் விண்மீன்கள் ஒளியற்றுப் போகும்,
பகலொளியில் விளக்கொளி பயனற்றுப்போவது போல்.
அவள் கண்களால் வான முழுவதும் ஒளி மயமாய்த் தகதகக்க
பறவைகள் குரலெழுப்பும் வானம் வெளுத்ததென்று!"

(
ரோமியோவும் ஜூலியட்டும்)


எத்தனையோ சொல்லலாம் இத்தகைய மீன் பற்றி!
அத்தனைக்கும் இடமில்லை இனி நேரமுமில்லை/

ஏதேனும் சொல்வதற்குப் பாரதியே அடி தருவான்
வேதாந்த மாக விரித்துப் பொருளுரைக்க
யாதானுஞ் சற்றே யிடமிருந்தாற் கூறீரோ? “

(30-05-2011)

13 கருத்துகள்:

 1. சுதந்திரத்தை இழந்த பின்னும் சுதந்திரமாய் இருப்பதாய்!

  நினைத்து நீந்தும் மீன்கள் பற்றி அருமையான கவிதை..!

  பதிலளிநீக்கு
 2. ரசித்தேன்...

  "மாட்டிக் கொள்ளாமல்" இருந்தால் சரி...

  பதிலளிநீக்கு
 3. வணக்கம்,

  நிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்
  வழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

  www.Nikandu.com
  நிகண்டு.காம்

  பதிலளிநீக்கு
 4. #கண் தூண்டில் போடும்!#
  உடம்பிலே முள் இருந்தாலும் தூண்டில் முள்ளில் சிக்கி விடுகிறதே மீன் ...ஐ மீன் ஆண் !
  த ம 4

  பதிலளிநீக்கு
 5. தேசியக்கவி பாரதியே சொன்ன பிறகு நம்மைப் போன்றோரால் வேறேனும் சொல்லவும் கூடுமோ?
  செகப்பிரியரின் கவிதையின் தமிழாக்கம் அருமை! அருமை!!

  பதிலளிநீக்கு
 6. உங்கள் வலையில் , இந்த இந்த மீனும் சிக்கிவிட்டதா! அருமை! அருமை!

  பதிலளிநீக்கு
 7. மீன் சித்தாந்தம் ரசிக்க வைத்தது! நன்றி!

  பதிலளிநீக்கு
 8. மிகவும் அருமை . தெளிவான நடை. மன நிறைவளிப்பதாக உள்ளது

  பதிலளிநீக்கு
 9. Beautiful lyric...சித்தாந்தம் சிலிர்க்க வைக்கிறது ....

  பதிலளிநீக்கு
 10. மீன் தூண்டிலில் மாட்டும்,
  கண் தூண்டில் போடும்!

  கவிதைக்கு பொய்யை விட எதார்த்த கற்பனை அழகாக அமையும் என்பதற்கு உதாரணமான வரிகள் !

  அருமை ! அருமை !

  நன்றி
  சாமானியன்
  saamaaniyan.blogspot.fr

  பதிலளிநீக்கு