”என்னங்க!நம்ம மின் அம்மி வேலை செய்யலைங்க.”
“எடுத்துட்டுப் போய் சரி பண்ணிக் கொண்டு
வரேன் ”
”பிரயோசனமில்லைங்க.ரெண்டு மூணு தடவை பண்ணியாச்சு.சரி
பாத்து ரெண்டு நாள் ஓடுது;பிறகு ஓடமாட்டேங்குது.வேற வாங்கிட வேண்டியதுதான்,”
“சரி.இன்னிக்கு ஏபிசிடி காட்சியகத்தில்
போய்ப் பார்த்து வாங்கிட்டு வரேன்”
“அது வேண்டாங்க,எஸ்டியு வாங்கிட்டு
வந்திடுங்க! தொலைக்காட்சி விளம்பரத்தில் பார்த்தேன்.அதுதான் சரி”
கணவனுக்கு வயிற்றில் புளியைக்
கரைக்கிறது.
அவனும் அந்த விளம்பரம் பார்த்திருக்கிறான்.
அதில் மனைவி கணவனுக்கு தட்டில் இட்லி
கொடுப்பாள்.
மெதுவாக இருக்கிறது என்பான்.
பின் சாம்பார் ஊற்றுவாள்.
கணவன் “அம்மா இருந்தால் மூன்று வகைச்
சட்னி இருக்கும்”என்பான்,
மனைவி மின் அம்மியை அவன் முன் வைத்து
“தேங்காய் ,புதினா என்று முப்பது வகை இருக்கிறது .அரைத்துக்கொள்ளுங்கள்” என்று சொல்லி விட்டு அரைப்பானைக் காட்டி”சட்னி”
என்று சொல்லிவிட்டுத் தன்னைக்காட்டி “பத்தினி” என்பாள்.
இந்த விளம்பரத்தை பார்த்திருந்த
கணவனுக்கு அச்சம் பிறந்தது,நம் நிலையும் அது போல் ஆகி விடுமோ.
பின் என்ன? வீட்டிலே சண்டைதான்,எது
வாங்குவதென்று!
கோபித்துக்கொண்டு மனைவி அம்மா வீட்டுக்குப்
போய் விடுகிறாள்.
இப்போது, தானேதான் அரைக்க வேண்டும்
கணவன்!
தலையெழுத்தை யாரால் மாற்ற இயலும்?!
”பெண் விடுதலை வேண்டும்;பெரிய கடவுள்
காக்க வேண்டும்!”
ஹிஹிஹி.. நிதர்சனம்.
பதிலளிநீக்குபயம் சரிதான்!
பதிலளிநீக்குஇது மாதிரி நிறைய விளம்பரங்கள் வயிற்றில் புளியைக் கரைக்கின்றன...
பதிலளிநீக்குயப்பா நான் தப்பிச்சேன், ஊருக்கு வந்தா மும்பையில ரெண்டு மாசம் ஊருல அம்மா சாப்பாடு ஒருமாசம், அப்பிடியே பஹ்ரைன் ஓடி வந்துரலாம்...!
பதிலளிநீக்குஹ!ஹ!!ஹா!!மாட்டிக்கினோம்.
பதிலளிநீக்கு
பதிலளிநீக்கு”பெண் விடுதலை வேண்டும்;பெரிய கடவுள் காக்க வேண்டும்!”
:)))))))))))))))))))))
Aama romba correct
பதிலளிநீக்குஅய்யாவுக்கு நல்லது செய்ய நினைக்கிற அம்மாவை தப்பாச் சொல்லாதீங்க!
பதிலளிநீக்குதம5
நாவடக்கம் தேவை என்பது புரிகிறது.
பதிலளிநீக்குவிளம்பரம் பற்றிய உங்கள் கதை.... சிரிப்பை வரவழைத்தது. பல சமயங்களில் இந்த விளம்பரங்கள் நமக்கு நல்ல வேலை வைக்கிறதே!
பதிலளிநீக்கு