தொடரும் தோழர்கள்

சனி, ஜூன் 10, 2017

ஒ.கி.க.ம...முடிச்சாச்சு!

ஒருவனுக்கு வயது 35.

இப்போதுதான் திருமணம்.

ஆனால் பெண் வீட்டில் வயதைக் குறைத்துச் சொல்லியிருப்பான் போலும்.

அந்நிலையில் அப்பெண்ணுக்கு எதிரில் யாராவது அவனுக்கு 35 என்று சொன்னால் கோபம் வருமா,வராதா?!

வரும்.,வருகிறது...

கதாநாயகனுக்கு.

ஒருகாட்சியில் இது காட்டப்படுகிறது.

 மீண்டும் ஒரு காட்சி.

முக்கியமான பேச்சு நடை பெறுகிறது.

கொலைப் பழியை லாரி ஓட்டுனர் ஏற்றுக்கொள்வது பற்றி..

அப்போது அந்த ஓட்டுனர்,35 வயசுல கல்யாணம் முடிச்ச உனக்கு என்று சொல்ல,நாயகனுக்குக் கோபம் வெடித்து வந்து அடிக்கப் போகிறான்.

தலைக்கு மேல்  தொங்கும் கத்தி பெரிதாகத் தெரியவில்லை.,மனைவி  முன் இப்படி வயதைச் சொல்லி விட்டானே என்றே கோபம்!

மனித குணம்    இயல்பாக!

படத்தில் வரும் யாருமே செயற்கையாயில்லை.

இயல்பான நடிப்பு.

எனக்கு ஒரு எண்ணம்.

அனைவரையும் போலிஸ் லாரியில் ஏற்றி அழைத்துச் செல்கையில் பலிக்குக் கொண்டு வந்த ஆட்டை அவிழ்த்து விட அது ஓடுகிறது...

அவர்கள் பிடித்து வந்த ஆடுவிடுதலை ஆகிறது

அவர்கள்போலீஸால் பிடித்துச் செல்லப் படுகின்றனர்

அவர்கள் கருணை மனு என்ன ஆகும்?!

என்னஒரு முரண் நகை.

இங்கேயே படத்தை முடித்திருக்கலாம் என்பதே என் எண்ணம்.

ஆனால் நான்கு ஆண்டுகளுக்குப் பின் என்று,அவர்கள் விடுதலை இத்யாதிகளைக் காட்டுவது ஒரு சமரசமாகத் தோன்றுகிறது.

நல்ல படம்.

18 கருத்துகள்:

  1. தங்களது பாணியில் விமர்சனம் கேள்விக்கணையோடு நன்று.

    பதிலளிநீக்கு
  2. ஆடு தப்பிச்சதில் பரம சந்தோஷம் சார் போன பதிவில் என்னாகுமோன்னு பயத்திலேயே பின்னூட்டம் தராம ஓடிட்டேன் :)

    பதிலளிநீக்கு
  3. தமிழ் திரைப்படம் என்றாலே சில சில இடங்களில் சமரசம் செய்திருப்பார்கள். மக்கள் விரும்புகிறார்களோ இல்லையோ வினியோகஸ்தர்களுக்காக அதை செய்கிறார்கள்.

    படம் நன்றாக இருக்கிறது என்று நீங்கள் சொல்வதால், இந்தக் குறைகளை விட்டுவிடலாம். படத்தை விருது தரும் குழுவினர் பார்ப்பதுபோல் பார்த்திருக்றீர்கள். பாராட்டுகள்!

    பதிலளிநீக்கு
  4. மெதுவாகப் பார்த்துக் கொள்ளலாம்!

    பதிலளிநீக்கு
  5. இது திரைக்கு வராத படம் போலிருக்கே :)

    பதிலளிநீக்கு
  6. நல்ல விமர்சனம்,என்ன படம் பற்றி,,,,,/

    பதிலளிநீக்கு
  7. இதுதான் ஒகிகம படத்தின் கதையா!...!

    துளசி, கீதா

    பதிலளிநீக்கு