தொடரும் தோழர்கள்

புதன், ஜூன் 15, 2011

ஓடிப் போன ஓட்ட வடை!!

சில நாட்களுக்கு முன் நண்பர் ஓ.வ.நாராயணன் அவர்கள் சில பதிவர்கள் வரும் வாரத்தில் போடும் பதிவுகளைப் பற்றி ஒரு அருமையான நகைச்சுவைக் காவியம்(!)
படைத்திருந்தார்.பின்னூட்டத்தில் நான் சொன்னேன், நான் எழுதப்போகும் பதிவின் தலைப்பில் அமலா பால் அல்ல ஓட்ட வடைதான் என்று .எனவே ஓட்ட வடை பற்றிய இந்தப் பதிவு.

முதலில் ஒரு கேள்வி அனைத்துப் பதிவர்களுக்கும்.ஒரு பதிவில் முதல் ஆளாகப் பின்னூட்டம் இடும்போது,’வடை எனக்குத்தான்’ என்று சொல்கிறார்களே அது என்ன வடை?ஓட்ட வடையா?!வேறா!


வடையில் பல வகையுண்டு.மெது வடை,மசால் வடை,தவலை வடை(தவளை அல்ல!),கார வடை,மிளகு வடை என்று(என்ன,சொலவடையா?அதெல்லாம் இந்த லிஸ்ட்டில் வராதுங்க!)ஆனால் எல்லா வடையிலும் ஓட்டை போடுவதில்லை!மெது வடை எனப்படும் உளுந்து வடையில்தான் ஓட்டை;அது ஏன் என்று யாருக்காவது தெரியுமா? வெந்துவிட்டதா என்று பார்ப்பதற்கா? ஆனால் ஓட்டைதான் மாவை வடையாகத் தட்டியவுடனே போட்டு விடுகிறார்களே! எனவே ஒட்டைக்கு வேறு ஏதோ காரணம் இருக்க வேண்டும்.

வெந்துவிட்டதா என்று பார்ப்பது என்று சொன்னதும்,அந்தக்காலத்தில் இட்லி சுடும் வழக்கம் நினைவுக்கு வருகிறது.

இட்லித்தட்டின் குழிகளில் துணி போட்டு மாவு ஊற்றிச் சுடுவார்கள். இட்லி வெந்து விட்டதா என்று பார்க்க ஒரு இட்லியில் குத்திப் பார்ப்பார்கள்,குழியாக!. ஓட்டல்களிலும் அப்படித்தான்.அங்கு பயன்படுத்தப் படும் துணியை என்றாவது பார்த்து விட்டீர்கள் என்றால் அதன் பின் அங்கு இட்லியே சாப்பிட மாட்டீர்கள்!

இப்போது டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் ஒரு போட்டி நடக்கிறது.சென்னையில் இருக்கும் சில ஓட்டல்களைக் குறிப்பிட்டு,எந்த ஓட்டலில் சுவையான இட்லி, வடை, காஃபி கிடைக்கிறது என்று தீர்மானிக்க நிபுணர்களை அங்கெல்லாம் சாப்பிடச் சொல்லிப் பார்க்கிறார்கள்.வடை என்றால்,ஓட்ட வடைதான்.இட்லி சாம்பார் என்றாலே அதனுடன் இணையக் கூடியது ஓட்ட வடையாகிய மெது வடைதான்!

இரண்டு புலவர்கள் ஒரு ஓட்டலில் வடை வாங்கினார்கள்—ஓட்ட வடைதான்(ஓட்டலுக்கு முதலாவதாகப் போனார்களோ!)

ஒருவர் வடையைப் பிய்த்துப் பார்த்தார்.வடை ஊசிப் போயிருந்தது.

உடனே சொன்னார்”ஊசியிருக்கிறது!”

மற்றவர் பார்த்தார்.ஊசிய வடையில் நூல் போல வந்தது.

உடன் அவர் சொன்னர்”நூலும் இருக்கிறது!”

இருவரும் சேர்ந்து”தையலுக்காகும்” என்று சொல்லிய படியே வடைகளை வெளியில் இருந்த பெண்ணிடம் கொடுத்து விட்டனர்!

கடைக்காரரிடம் திருப்பிக் கொடுத்திருந்தால் வடைகறிக்காவது பயன் படுத்தியிருப்பார்!


வடையில்பயன்படும் உளுத்தம் பருப்பு ,எண்ணெய் இவற்றில் செய்யப்படும் கலப்படம் பற்றி,தெருவோரத்தில் விற்கப்படும் சுகாதாரமற்ற வடைகளினால் ஏற்படும் ஆபத்து பற்றி,சில கடைகளில் அவற்றைக் கைப்பற்றி அழிக்க வேண்டியதன் அவசியம் பற்றி இங்கு எழுத எண்ணுகிறேன்!

(யோவ்!அது வேறு ஒருவர் பேட்டை;காலை வைக்காதே!)

அப்படியானால் வடையில் ஓட்ட போடுவது எப்படி?கல்யாணமாகாத இளைஞர்கள் பின் மாலைக் கடிக்கு எப்படி ஓட்ட வடை சுடலாம் என்பது பற்றி ’பெண்களுக்காக’ வில் வந்த கட்டுரையிலிருந்து சில பகுதிகள்,நன்றியுடன் வெளியிடுகிறேனே!

(அடங்க மாட்டியே;அதுவும் மற்றவர் செயற்பாட்டுப் பகுதி;மூக்கை நுழைக்காதே!)

என்னவோ போங்க! அப்ப நான் என் பதிவை முடித்துக் கொள்கிறேன்!

(அதெல்லாம் சரி ஓடிப்போன ஓட்ட வடை என்ற தலைப்பு ஏன்?)

மாலையில் தெருவோரக் கடையில் இரண்டு ஓட்ட வடை வாங்கி வந்தேன். வடை சாப்பிட்டுக் கொண்டே கணினியில் தட்டிக் கொண்டிருந்தேன்.அப்போது ஒரு ஓட்ட வடை கீழே விழுந்து உருண்டு ஓடிப் பீரோ அடியில் சென்று விட்டது.அழுக்காகிப்போன ஓட்டவடையை எப்படிச் சாப்பிடுவது?!

”ஓடிப்போன ஓட்ட வடை!”

52 கருத்துகள்:

 1. //”ஊசியிருக்கிறது!”
  ”நூலும் இருக்கிறது!”
  ”தையலுக்காகும்” //
  திரு கி.வ.ஜா அவர்களின் சிலடை போல் உள்ளது. ரசித்தேன்.

  அது சரி அது ஓட்டை வடையா அல்லது தங்கள் கையில் இருந்து ஓடியதால் ஓட்ட வடையா?

  பதிலளிநீக்கு
 2. ஐயா உங்களுக்குமா சந்தேகம்???

  பதிலளிநீக்கு
 3. விரைவாக வேகுவதற்கு தானாம் ஓட்டை போடுவார்கள்...)

  பதிலளிநீக்கு
 4. அருமையான வடை. சூடா, மொறு மொறுன்னு

  பதிலளிநீக்கு
 5. சுவையான பதிவு
  இருந்தாலும் தலைப்பை சொல்லியதற்காக
  இப்படி ஒரு பதிவு
  அமர்க்களம்

  பதிலளிநீக்கு
 6. ஹிஹி இன்னிக்கு வடையை வைச்சு தாளிக்கிறாங்க..அங்கால என்னண்டா ஹன்சிகாவோட போட்டி,,
  இங்க வடைக்கே வடையா?அவ்வவ்

  பதிலளிநீக்கு
 7. அமுதா கிருஷ்ணா கூறியது...

  //ஆகா...//

  ஓகோ!நன்றி!

  பதிலளிநீக்கு
 8. ஜீ... கூறியது...

  //வடை எனக்கா? :-)//
  :-(
  நன்றி ஜீ!

  பதிலளிநீக்கு
 9. வே.நடனசபாபதி கூறியது...

  //”ஊசியிருக்கிறது!”
  ”நூலும் இருக்கிறது!”
  ”தையலுக்காகும்” //
  திரு கி.வ.ஜா அவர்களின் சிலடை போல் உள்ளது. ரசித்தேன்.

  //அது சரி அது ஓட்டை வடையா அல்லது தங்கள் கையில் இருந்து ஓடியதால் ஓட்ட வடையா?//
  ஓட்டைதான்.ஆனால் சொல்லும்போது ஓட்ட.அவர் பெயரும் ஓட்டவடை.எப்படிப் பார்த்தாலும் இது ஓட்ட வடைதான்!
  நன்றி!

  பதிலளிநீக்கு
 10. கந்தசாமி. கூறியது...

  // ஐயா உங்களுக்குமா சந்தேகம்???//
  கேள்வி கேட்டால்தான் பதில் கிடைக்கும்!

  பதிலளிநீக்கு
 11. கந்தசாமி. கூறியது...

  // விரைவாக வேகுவதற்கு தானாம் ஓட்டை போடுவார்கள்...)//
  மசால் வடை இன்னும் கடினமானதாயிற்றே! அதில் ஏன் போடுவதில்லை?
  நன்றி!

  பதிலளிநீக்கு
 12. ஜ.ரா.ரமேஷ் பாபு கூறியது...

  //அருமையான வடை. சூடா, மொறு மொறுன்னு//
  வடையின் சுவை சொன்னதற்கு நன்றி!

  பதிலளிநீக்கு
 13. A.R.ராஜகோபாலன் கூறியது...

  // சுவையான பதிவு
  இருந்தாலும் தலைப்பை சொல்லியதற்காக
  இப்படி ஒரு பதிவு
  அமர்க்களம்//
  மொக்கை என்று தீர்மானித்து விட்டால்?!
  நன்றி ராஜகோபாலன்!

  பதிலளிநீக்கு
 14. விக்கியுலகம் கூறியது...

  //அண்ணே வணக்கம்னே//
  பதில் வணக்கம் விக்கி,நன்றியுடன்!

  பதிலளிநீக்கு
 15. பிளாகர் மைந்தன் சிவா கூறியது...

  //ஹிஹி இன்னிக்கு வடையை வைச்சு தாளிக்கிறாங்க..அங்கால என்னண்டா ஹன்சிகாவோட போட்டி,,
  இங்க வடைக்கே வடையா?அவ்வவ்//
  இந்த வாரம் வடை வாரம் என அறிவிக்கலாமா?!
  நன்றி சிவா!

  பதிலளிநீக்கு
 16. அச்சச்சோ.... ஓட்ட வடை ஓடிய வடையாகி விட்டதே.... ஏன் ஓட்டை என்று கண்டுபிடிக்க ஏதாவது ஒரு கமிட்டி போட்டு விடலாமா என்று பலத்த யோசனையா இருக்காங்களாம் அரசுத் துறையில்.... :)))

  பதிலளிநீக்கு
 17. வடையில் உள்ள எண்ணையை நீக்குவதற்கு இருக்கலாம் எதுக்கும் ஓட்டைவடை வரட்டும்!

  பதிலளிநீக்கு
 18. அய்யா வடையை வச்சி இவ்வளவு பெரிய பதிவா

  இதுக்கா உங்களுக்கு டாக்டர் பட்டம் கூட தரலாம்...

  பதிலளிநீக்கு
 19. அஹா நம்ம லேட்டா போறோமே வடை ஆரிப்போயிருமேன்னு நினைத்தேன் ...வடை நல்ல சூடா தான் இருந்தது

  பதிலளிநீக்கு
 20. FOOD கூறியது...

  // இது உங்க பாணி. நடத்துங்க.//
  நன்றி!( சந்திப்பு ஏற்பாடுகளில் பிஸியாக இருந்தும் வருகை தந்தமைக்கு,நன்றி!)

  பதிலளிநீக்கு
 21. பிளாகர் வெங்கட் நாகராஜ் கூறியது...

  //அச்சச்சோ.... ஓட்ட வடை ஓடிய வடையாகி விட்டதே.... ஏன் ஓட்டை என்று கண்டுபிடிக்க ஏதாவது ஒரு கமிட்டி போட்டு விடலாமா என்று பலத்த யோசனையா இருக்காங்களாம் அரசுத் துறையில்.... :)))//
  தலைநகரில்தானே இருக்கீங்க! கமிட்டியில நம்ம பேரையும் சிபாரிசு பண்ணுங்க!
  நன்றி வெங்கட்!

  பதிலளிநீக்கு
 22. Nesan கூறியது...

  //வடையில் உள்ள எண்ணையை நீக்குவதற்கு இருக்கலாம் எதுக்கும் ஓட்டைவடை வரட்டும்!//
  இந்தப் பிரச்சினைக்கு ஓட்டவடையே பதில் சொல்லட்டும்!
  நன்றி!

  பதிலளிநீக்கு
 23. # கவிதை வீதி # சௌந்தர் கூறியது...

  //அய்யா வடையை வச்சி இவ்வளவு பெரிய பதிவா

  இதுக்கா உங்களுக்கு டாக்டர் பட்டம் கூட தரலாம்...//
  தந்தால் அடக்கத்துடன் ஏற்றுக் கொள்வேன்!
  நன்றி!

  பதிலளிநீக்கு
 24. # கவிதை வீதி # சௌந்தர் கூறியது...

  //வடைப் போச்சே...//
  ஆறிப் போச்சு!

  பதிலளிநீக்கு
 25. ரியாஸ் அஹமது கூறியது...

  //அஹா நம்ம லேட்டா போறோமே வடை ஆரிப்போயிருமேன்னு நினைத்தேன் ...வடை நல்ல சூடா தான் இருந்தது//
  ஆறா வடை?!
  நன்றி!

  பதிலளிநீக்கு
 26. //சென்னை பித்தன் கூறியது...
  நன்றி!( சந்திப்பு ஏற்பாடுகளில் பிஸியாக இருந்தும் வருகை தந்தமைக்கு,நன்றி!)//
  சந்திப்பு ஏற்பாடுகள் ஒருபுறம் இருப்பினும் உங்களை சிந்திக்காமல் இருக்க முடியுமா?

  பதிலளிநீக்கு
 27. ஐயா வணக்கம் ஐயா!

  என்னது நான் போட்டது காவியமா? அப்டீன்னா இதுமாதிரி இன்னும் நாலைந்து பதிவுகள் போட்டா நான் ஒரு காவியப் பதிவராகிவிடுவேனா?ஹி ஹி ஹி!

  பதிலளிநீக்கு
 28. FOOD சொன்னது…

  //சென்னை பித்தன் கூறியது...
  நன்றி!( சந்திப்பு ஏற்பாடுகளில் பிஸியாக இருந்தும் வருகை தந்தமைக்கு,நன்றி!)//
  //சந்திப்பு ஏற்பாடுகள் ஒருபுறம் இருப்பினும் உங்களை சிந்திக்காமல் இருக்க முடியுமா?//
  மிக்க நன்றி!

  பதிலளிநீக்கு
 29. ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி கூறியது...

  //ஐயா வணக்கம் ஐயா!

  என்னது நான் போட்டது காவியமா? அப்டீன்னா இதுமாதிரி இன்னும் நாலைந்து பதிவுகள் போட்டா நான் ஒரு காவியப் பதிவராகிவிடுவேனா?ஹி ஹி ஹி!//
  ஒவ்வொருவர் பதிவும் ஒரு வகைக் காவியம்!
  நன்றி ஓ.வ.நா.!

  பதிலளிநீக்கு
 30. முதலில் ஒரு கேள்வி அனைத்துப் பதிவர்களுக்கும்.ஒரு பதிவில் முதல் ஆளாகப் பின்னூட்டம் இடும்போது,’வடை எனக்குத்தான்’ என்று சொல்கிறார்களே அது என்ன வடை?ஓட்ட வடையா?!வேறா!//

  அவ்...என்ன ஒரு டெரர் தனம் ஐயா..
  கலக்கல் கடி...

  பதிலளிநீக்கு
 31. ஆனால் ஓட்டைதான் மாவை வடையாகத் தட்டியவுடனே போட்டு விடுகிறார்களே! எனவே ஒட்டைக்கு வேறு ஏதோ காரணம் இருக்க வேண்டும்.//

  சபாஷ் ஐயா, இதற்கான காரணத்தை அறியாமல் தான் விஞ்ஞானிகள் இன்று வரை ஓயாது ஆராய்ச்சி நடாத்துகிறார்கள்..

  ஹி...ஹி..
  உட்கார்ந்து யோசிக்கிறீங்களோ;-))

  பதிலளிநீக்கு
 32. ஓட்டல்களிலும் அப்படித்தான்.அங்கு பயன்படுத்தப் படும் துணியை என்றாவது பார்த்து விட்டீர்கள் என்றால் அதன் பின் அங்கு இட்லியே சாப்பிட மாட்டீர்கள்//

  இதைப் போயி, இந்த நேரத்தில் ஞாபகப்படுத்துறீங்களே...

  நாம நல்லா இருப்பது, கடைசியில் நண்பன் காசில் சாப்பிடுவது உங்களுக்குப் பிடிக்கலையா?

  பதிலளிநீக்கு
 33. இருவரும் சேர்ந்து”தையலுக்காகும்” என்று சொல்லிய படியே வடைகளை வெளியில் இருந்த பெண்ணிடம் கொடுத்து விட்டனர்!//

  ஆகா...மொக்கை போடும் போதும், ஐயா இலக்கிய ரசனை குறையக் கூடாது எனும் நோக்கில் தையல்....
  என்று சிலேடை வைத்துப் போடுகிறாரே..
  நடக்கட்டும், நடக்கட்டும்,

  பதிலளிநீக்கு
 34. .அப்போது ஒரு ஓட்ட வடை கீழே விழுந்து உருண்டு ஓடிப் பீரோ அடியில் சென்று விட்டது.அழுக்காகிப்போன ஓட்டவடையை எப்படிச் சாப்பிடுவது?!

  ”ஓடிப்போன ஓட்ட வடை!” //

  ஹா...ஹா...இக் காலத்தில் பதிவர்கள் எப்படியெல்லாம் தலைப்பு வைத்து இறுதியில் கொண்டு வந்து ஜாயிண்ட் பண்ணுறார்கள் என்பதற்கு ஒரு செல்லக் கடி....

  உங்களின் கலக்கல் மொக்கையை ரசித்தேன்.

  பதிலளிநீக்கு
 35. சென்னைக்கே உண்டான கலக்கல். ஓடியவடை தப்பிச்சது தம்பிரான்புண்ணியமுன்னு நெனச்சிருக்கும்..ஹா ஹா

  பதிலளிநீக்கு
 36. குண்டலகேசி என்னும் நூலில் இந்த வடை பற்றிய குறிப்பு காணப்படுகிறது.அதாவது,அந்தக் காலத்தில் எல்லா வடைகளும் ஒரே முறையில் தான் சுடப்பட்டனவாம்!கடலைப் பருப்பாலான வடை வெந்து விட்டதாம்.உளுந்து வடை வெந்து விட்டதா என்று ஒரு அவசரக் குடுக்கை(என்னைப்போல்)எண்ணெயில் போட்டவுடன் கரண்டிக் காம்பால் குத்திப் பார்த்ததாம்!வேகவில்லை!சில நிமிடங்கள் கழித்து வடையை வெளியே எடுத்த போது ஓட்டையாக இருந்ததாம்!அழகாகவும்?!இருந்ததாம்.அதன் பின்னர் தான் ஓட்டை போடும் வழ்க்கமும்,ஓட்ட வடை என்று பேரும்?! கிடைத்ததாம்

  பதிலளிநீக்கு
 37. நிரூபன் கூறியது...

  முதலில் ஒரு கேள்வி அனைத்துப் பதிவர்களுக்கும்.ஒரு பதிவில் முதல் ஆளாகப் பின்னூட்டம் இடும்போது,’வடை எனக்குத்தான்’ என்று சொல்கிறார்களே அது என்ன வடை?ஓட்ட வடையா?!வேறா!//

  //அவ்...என்ன ஒரு டெரர் தனம் ஐயா..
  கலக்கல் கடி...//
  என்ன வடை என்று தெரிய வேண்டாமா!

  பதிலளிநீக்கு
 38. நிரூபன் கூறியது...

  ஆனால் ஓட்டைதான் மாவை வடையாகத் தட்டியவுடனே போட்டு விடுகிறார்களே! எனவே ஒட்டைக்கு வேறு ஏதோ காரணம் இருக்க வேண்டும்.//

  //சபாஷ் ஐயா, இதற்கான காரணத்தை அறியாமல் தான் விஞ்ஞானிகள் இன்று வரை ஓயாது ஆராய்ச்சி நடாத்துகிறார்கள்..

  ஹி...ஹி..
  உட்கார்ந்து யோசிக்கிறீங்களோ;-))//

  நடக்கடும் ஆராய்ச்சிகள்!:-D

  பதிலளிநீக்கு
 39. நிரூபன் கூறியது...

  ஓட்டல்களிலும் அப்படித்தான்.அங்கு பயன்படுத்தப் படும் துணியை என்றாவது பார்த்து விட்டீர்கள் என்றால் அதன் பின் அங்கு இட்லியே சாப்பிட மாட்டீர்கள்//

  //இதைப் போயி, இந்த நேரத்தில் ஞாபகப்படுத்துறீங்களே...

  நாம நல்லா இருப்பது, கடைசியில் நண்பன் காசில் சாப்பிடுவது உங்களுக்குப் பிடிக்கலையா?//
  இப்பல்லாம் அப்படி இல்லை நிரூபன்!அதனால் பயமில்லை!

  பதிலளிநீக்கு
 40. இருவரும் சேர்ந்து”தையலுக்காகும்” என்று சொல்லிய படியே வடைகளை வெளியில் இருந்த பெண்ணிடம் கொடுத்து விட்டனர்!//

  //ஆகா...மொக்கை போடும் போதும், ஐயா இலக்கிய ரசனை குறையக் கூடாது எனும் நோக்கில் தையல்....
  என்று சிலேடை வைத்துப் போடுகிறாரே..
  நடக்கட்டும், நடக்கட்டும்,//
  தமிழ் எங்கள் உயிருக்கு நேர்!

  பதிலளிநீக்கு
 41. நிரூபன் கூறியது...

  .அப்போது ஒரு ஓட்ட வடை கீழே விழுந்து உருண்டு ஓடிப் பீரோ அடியில் சென்று விட்டது.அழுக்காகிப்போன ஓட்டவடையை எப்படிச் சாப்பிடுவது?!

  ”ஓடிப்போன ஓட்ட வடை!” //

  ஹா...ஹா...இக் காலத்தில் பதிவர்கள் எப்படியெல்லாம் தலைப்பு வைத்து இறுதியில் கொண்டு வந்து ஜாயிண்ட் பண்ணுறார்கள் என்பதற்கு ஒரு செல்லக் கடி....
  நானும் ஒருவன்தான்!

  உங்களின் கலக்கல் மொக்கையை ரசித்தேன்.
  நன்றி நிரூபன்!

  பதிலளிநீக்கு
 42. அன்புடன் மலிக்கா கூறியது...

  // சென்னைக்கே உண்டான கலக்கல். ஓடியவடை தப்பிச்சது தம்பிரான்புண்ணியமுன்னு நெனச்சிருக்கும்..ஹா ஹா//
  அது ஓடிப்போயிடுச்சு! எனக்குத் தான் நட்டம்!
  நன்றி அன்புடன் மலிக்கா!

  பதிலளிநீக்கு
 43. Yoga.s.FR கூறியது...

  //குண்டலகேசி என்னும் நூலில் இந்த வடை பற்றிய குறிப்பு காணப்படுகிறது.அதாவது,அந்தக் காலத்தில் எல்லா வடைகளும் ஒரே முறையில் தான் சுடப்பட்டனவாம்!கடலைப் பருப்பாலான வடை வெந்து விட்டதாம்.உளுந்து வடை வெந்து விட்டதா என்று ஒரு அவசரக் குடுக்கை(என்னைப்போல்)எண்ணெயில் போட்டவுடன் கரண்டிக் காம்பால் குத்திப் பார்த்ததாம்!வேகவில்லை!சில நிமிடங்கள் கழித்து வடையை வெளியே எடுத்த போது ஓட்டையாக இருந்ததாம்!அழகாகவும்?!இருந்ததாம்.அதன் பின்னர் தான் ஓட்டை போடும் வழ்க்கமும்,ஓட்ட வடை என்று பேரும்?! கிடைத்ததாம்//

  குண்டலகேசியா?நான் வளையாபதி என நினைத்திருந்தேன்!

  நன்றி Yoga.s.FR!

  பதிலளிநீக்கு
 44. ஐயா உளுந்தவடையை சும்மா பிரிச்சு மேஞ்சுட்டீங்க..நல்ல ருசியான பதிவு.

  பதிலளிநீக்கு
 45. வாலுப் போய் கத்திவந்து-டொம்டொம்
  ஊசிப் போய் நூலுவந்தது-டொம்டொம்
  வாசிப்போரும் சிரிக்கவந்ததுடொம்டொம்-படித்து
  வயிறு வலிக்க செய்துவிட்டீர்
  டொம்டொம்
  புலவர் சா இராமாநுசம்

  பதிலளிநீக்கு
 46. செங்கோவி கூறியது...

  //ஐயா உளுந்தவடையை சும்மா பிரிச்சு மேஞ்சுட்டீங்க..நல்ல ருசியான பதிவு.//
  நன்றி செங்கோவி!

  பதிலளிநீக்கு
 47. புலவர் சா இராமாநுசம் கூறியது...

  //வாலுப் போய் கத்திவந்து-டொம்டொம்
  ஊசிப் போய் நூலுவந்தது-டொம்டொம்
  வாசிப்போரும் சிரிக்கவந்ததுடொம்டொம்-படித்து
  வயிறு வலிக்க செய்துவிட்டீர்
  டொம்டொம்//
  நன்றி ஐயா!

  பதிலளிநீக்கு