தொடரும் தோழர்கள்

செவ்வாய், ஜூன் 28, 2011

அம்மாவே சரண்!

சமீபத்தில் நண்பர் ஏ.ஆர்.ராஜகோபாலன் அவர்கள் அடுத்த பிறவி என்ற தலைப்பில் மனதைத் தொடும் கவிதை ஒன்று எழுதியிருந்தார்.அதைப் படித்ததும்,ஆதி சங்கரரின் ”மாத்ரு பஞ்சகம்” என்ற ஸ்லோகம் நினைவுக்கு வந்தது.

உறவுகள் அனைத்திலும் உயர்ந்த உறவு,தாய் என்ற உறவு. தாய்ப் பாசம் என்பது சன்னியாசியையும் விடுவதில்லை. தனது தாயின் மரணத்தை எண்ணிக் கலங்கி ஐந்து ஸ்லோகங்களால் தன் மன உணர்வுகளை வெளியிடுகிறார் ஜகத்குரு ஆதிசங்கரர்.நம்மையும் கலங்கச்செய்கிறார்.அந்த ஸ்லோகங்களின் தமிழாக்கம் இதோ:-

1)என்னை என் தாய் வயிற்றில் சுமந்து,பத்து மாதமும் பட்ட சிரமத்துக்கு நான் என்ன கைம்மாறு செய்திருக்கிறேன்!
பிரசவ சமயத்தில் என் தாய் அனுபவித்த சொல்லொணா வலிக்கு ஈடாக நான் என்ன செய்திருக்கிறேன்!
என் நலனைக் கருதி ருசியற்ற உணவை உண்டு வாழ்ந்த என் தாய்க்கு ஏதாவது செய்திருக்கிறேனா ?
எனக்காக உறக்கமின்றிக் கண்விழித்து,உடல் இளைத்து என் மலத்தில் படுத்து
என்னைக் காத்த என் தாயாருக்கு என்ன செய்திருக்கிறேன்!
ஒரு தாயின் செயல்களுக்கு யாராலும் கைம்மாறு செய்ய முடியாது,
எனவே அம்மா,உன்னை நான் வணங்குகிறேன் .ஏற்றுக்கொள்!

2)நான் கல்வி கற்கச் சென்றபோது, ஒரு நாள் உறக்கத்தில் நான் சந்நியாசியாவது போல் கனவு கண்டு,அழுது கொண்டே குருகுலம் வந்து அங்கிருந்த அனைவரையும் கதறி அழச் செய்த என் தாயே! உனக்கு வணக்கம்.

3)அம்மா! நீ முக்தி அடையும் சமயம் உன் வாயில் சிறிது நீராவது ஊற்றினேனா? இறந்த தாய்க்குச் செய்ய வேண்டிய கர்மாக்களாகிய சிராத்தம்,தர்ப்பணம் ஏதாவது செய்தேனா?உன் கடைசி நேரத்தில் உன் காதில் தாரக மந்திரமாவது ஓதினேனா?

எதுவும் செய்ய அதிகாரமில்லாததாலும்,சந்நியாசியானதால் வைதீகக் கர்மாக்கள் எதுவும் செய்ய இயலாமல் போனதாலும்,மனம் கலங்கி நிற்கும் உன் மகனான என்னிடம் தயவு செய்யம்மா!உன் தாமரைத்தாள் பிடித்து வேண்டுகிறேன்!

4)அம்மா! என்னை முத்தே,கண்ணே,ராஜா,என்றெல்லாம் சீராட்டி,சிரஞ்சீவியாக இருக்க வேண்டும் என்று வாழ்த்தி,எனக்குப் பாலூட்டித் தாலாட்டி வளர்த்த என் அன்னைக்கா வேகாத அரிசியை நான் வாயில் இடுவேன்?இதைப் பொறுக்க முடியவில்லை தாயே!நீயே சரண்.

5)அம்மா,என்னை பெற்றபோது பொறுக்க முடியாத வலியில்,அம்மா!அப்பா! சிவபெருமானே!கோவிந்தா! ஹரே முகுந்தா!என்றெல்லாம் அழைத்த என் கருணைத் தெய்வமே!என் இரு கைகளையும் தூக்கிக் கூப்பி,உன்னைச் சரணடைகிறேன்!

26 கருத்துகள்:

 1. மாத்ரு பஞ்சகத்தின் தமிழ் அர்த்தத்தினை அழகாய் எழுதிய உங்களுக்கு எனது நன்றி. சமஸ்கிருத பாடலைப் படித்திருக்கிறேன். இப்போது தான் அதன் முழு அர்த்தமும் புரிகிறது.... நன்றி ஐயா...

  பதிலளிநீக்கு
 2. வெங்கட் நாகராஜ் கூறியது...

  // மாத்ரு பஞ்சகத்தின் தமிழ் அர்த்தத்தினை அழகாய் எழுதிய உங்களுக்கு எனது நன்றி. சமஸ்கிருத பாடலைப் படித்திருக்கிறேன். இப்போது தான் அதன் முழு அர்த்தமும் புரிகிறது.... நன்றி ஐயா...//
  வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி வெங்கட்!

  பதிலளிநீக்கு
 3. உறவுகள் அனைத்திலும் உயர்ந்த உறவு,தாய் என்ற உறவு// உண்மை தானே..

  மாத்ரு பஞ்சகத்தின் தமிழ் அர்த்தத்தினை
  அசத்தலாக பகிர்ந்து இருக்கிறீர்கள்..
  நன்றி..

  பதிலளிநீக்கு
 4. ஐந்து ஸ்லோகங்களின் மொழிபெயர்ப்பும் உணர்வுபூர்வமாய் இருக்கின்றன!

  பதிலளிநீக்கு
 5. ,சுலோகத்தின் தமிழாக்கம் மிக அருமை. நல்ல பதிவு.

  பதிலளிநீக்கு
 6. @!* வேடந்தாங்கல் - கருன் *!
  நன்றி கருன்!

  பதிலளிநீக்கு
 7. @ரியாஸ் அஹமது

  நன்றி ரியாஸ் அஹமது!

  பதிலளிநீக்கு
 8. @வே.நடனசபாபதி
  நன்றி சபாபதி அவர்களே!

  பதிலளிநீக்கு
 9. அருமையான தமிழாக்கம்.. தாயின் பெருமை மகத்தானது அல்லவா ... "தாயில்லாமல் நானில்லை ..." என்ற மக்கள் திலகம் பாடிய பட்டு நினைவிற்கு வந்தது .. மொழி மாற்றம் செய்வதிலும் வல்லவர் என்று புரிகிறது ...
  படிக்கும் போதே கண்கள் சிறிது பனித்தன .. வாசுதேவன்

  பதிலளிநீக்கு
 10. அருமையான பதிவு ஐயா. தலைப்பு ம்..ம்!

  பதிலளிநீக்கு
 11. @Vasu
  நீண்ட நாட்களுக்குப் பின் வருகை!
  நன்றி வாசு!

  பதிலளிநீக்கு
 12. செங்கோவி கூறியது...

  // அருமையான பதிவு ஐயா. தலைப்பு ம்..ம்!//
  நன்றி செங்கோவி!
  தலைப்பில் என்ன தவறு?!

  பதிலளிநீக்கு
 13. எளிய நடையில்
  அறிய செய்திகள் தந்த உங்களுக்கு
  மதி நிறைந்த நன்றி அய்யா

  குழந்தை எது பேசினாலும் அழகு
  அது போல் அன்னையைப் பற்றி
  எதை எழுதினாலும் அற்புதம்
  பணிவோம் அவள் பொற்பதம்

  என்னை ஆரம்பமாய் கொண்டு எழுதிய
  உங்களின் பெருந்தன்மைக்கு முன் நான் ஒரு தூசு
  நன்றி அய்யா

  பதிலளிநீக்கு
 14. வாசிக்கவுனம் யோசிக்கவும் வைத்தது.

  பதிலளிநீக்கு
 15. அன்னையின் அர்ப்பணிப்புக்களும், நம்மையெல்லாம் வளர்த்து ஆளாக்க அம்மா செய்யும் கடமைகளும், உலகில் வேறெந்தப் பொருளுக்கும் நிகராக அமைந்திடாது,

  நாம் நேரில் கண்டு தரிசிக்கும் ஒரேயொரு தெய்வம் எம்மைப் பெற்ற தாய்.

  அம்மாவைப் பற்றிய உங்களின் நினைவுகளையும், உங்கள் மன எண்ணங்களையும் பகிர்ந்ததோடு, அம்மாவின் பெருமைகளையும் சொல்லியிருக்கிறீங்க ஐயா.

  பதிலளிநீக்கு
 16. @A.R.ராஜகோபாலன்

  நாம் ஒரு குடும்பம் என்பதே உண்மை,
  இதில் எங்கு வந்தது பெருந்தன்மை!
  இங்கு யாரிடமும் இல்லையொரு மாசு
  பின் என்ன பேச்சு இது ’தூசு’!
  நன்றியும் வாழ்த்துகளும்,கோப்லி!

  பதிலளிநீக்கு
 17. FOOD கூறியது...

  //வாசிக்கவுனம் யோசிக்கவும் வைத்தது.//
  நன்றி சங்கரலிங்கம்!

  பதிலளிநீக்கு
 18. நிரூபன் கூறியது..
  //நாம் நேரில் கண்டு தரிசிக்கும் ஒரேயொரு தெய்வம் எம்மைப் பெற்ற தாய்.//
  முற்றிலும் உண்மை!
  நன்றி நிரூபன்!

  பதிலளிநீக்கு
 19. உறவுகள் அனைத்திலும் உயர்ந்த உறவு,தாய் என்ற உறவு//

  சத்தியம் சத்தியம்....!!!

  பதிலளிநீக்கு
 20. அன்புடையீ்ர்
  வணக்கம என்னுடைய இந்த வயதிலும்
  தங்களின் இப் பதிவு படித்து கண்கலங்கிப் போனேன் மேலும்
  நான் என் வலைதளத்தில் அன்னைக்கு என்ற தலைப்பில் எழதி
  உள்ள கவிதைக்குத் தெளிவுரை போல் அமைந்துள்ளது
  அன்பு கூர்ந்து அதனைப் படித்து
  கருத்துரை வழங்க வேண்டுகிறேன்

  புலவர் சா இராமாநுசம்

  பதிலளிநீக்கு
 21. புலவர் சா இராமாநுசம் கூறியது...

  அன்புடையீ்ர்
  //வணக்கம என்னுடைய இந்த வயதிலும்
  தங்களின் இப் பதிவு படித்து கண்கலங்கிப் போனேன் //
  இதை விட வேறென்ன பரிசு வேண்டும் எனக்கு!
  மேலும்
  //நான் என் வலைதளத்தில் அன்னைக்கு என்ற தலைப்பில் எழதி
  உள்ள கவிதைக்குத் தெளிவுரை போல் அமைந்துள்ளது
  அன்பு கூர்ந்து அதனைப் படித்து
  கருத்துரை வழங்க வேண்டுகிறேன்/
  படித்தேன்,வியந்தேன்,மொழிந்தேன் அங்கு!

  பதிலளிநீக்கு
 22. There is a golden word:A MOTHER WILL PLAY TO ANYBODY ROLE BUT NOBODY CAN PLAY A MOTHER ROLE.That is why even a bad man comes as his son she will not consider it as a sins.In other words, she is not ready to give that person wrongful evils to others. therefore even the saints have not given up the relationshop of mother,just like the PATTINATHAR, RAMANA MAHARISHI.BY DK.,

  பதிலளிநீக்கு