தொடரும் தோழர்கள்

திங்கள், பிப்ரவரி 28, 2011

சாந்தோம் சந்திப்புகளின் முடிவு!

இன்று நீ வந்தாய்! கண்களில் கண்ணீரோடு,

ஏன் வந்தாய் என்னை உயிரோடு கொல்வதற்கா?

நின்றாய்,தள்ளி அமர்ந்தாய்,தரை நோக்கித் தலை கவிழ்ந்தாய்,

மெல்ல வாய் திறந்தாய் “இரண்டு நாட்களாய்

என்னென்னவோ நடந்துபோச்சு;பெண்பார்த்தார்கள்,

பிடிக்குதென்று சொன்னார்கள்;நிச்சயம் செய்தார்கள்.

என் மனம் யார் பார்த்தார்கள்?என் குரல் யார் கேட்டார்கள் ?

அப்பா சொல்லி விட்டார்;ஆவணியில் கல்யாணம்.

என்ன நான் செய்வேன்,அழுவதற்கும் உரிமையில்லை.

உங்கள் மடியில் முகம் புதைத்து அழுவதென்றால்

என்னுயிரே இன்றெனக்கு அதற்கும் துணிவில்லை.

ஐ ஏ எஸ் மாப்பிள்ளை அனைவருக்கும் சந்தோஷம்.

என்னைத் தவிர எல்லோரும் சிரிக்கின்றார்,

எதிர்க்கவும் வழியில்லை காதல் உரைக்கவும் துணிவில்லை,

ஒன்றும் புரியவில்லை,ஒரு வழியும் தெரியவில்லை,

ஓடிப்போய் மணந்திடவும் உள்ளம் ஒப்பவில்லை,

மன்னியுங்கள் என்னை மகாபாவியாகிவிட்டேன்,

உங்களைப் பிரிந்து உயிரின்றிப் போகின்றேன்,

என்னை மறந்து விடுங்கள்” என்றுரைத்துப் போய்விட்டாய்.

உனக்குரிமையில்லாத ஒரு விஷயம் சொல்லிச்சென்றாய்

"உன்னை மறக்கச் சொல்ல உனக்கென்ன உரிமையடி?"

என் நெஞ்சில் ,நெஞ்சத்துடிப்பில்,உயிர் மூச்சில் கலந்ததனால்
இன்னுயிரே உன்னை நான் இன்னும் மறக்கவில்லை!

“சந்தனக்காடுகள் பற்றியெரிகையில் சந்தனமே மணக்கும்
என் சடலம் எரிந்து எலும்பு தெறிக்கையில்(……)என்றே ஒலிக்கும்”
(கடைசி இரண்டு வரிகள் நன்றி சேவற்கொடியோன்)

(காதலில் தோற்ற,காதலியை மறக்காத நெஞ்சங்களே! (…… )இங்கு உங்கள் காதலியின் பெயரை எழுதிக் கொள்ளுங்கள்!)

27 கருத்துகள்:

  1. கவிதை - அருமையாக இருக்குதுங்க...

    பதிலளிநீக்கு
  2. Chitra கூறியது...

    //கவிதை - அருமையாக இருக்குதுங்க...//
    பதிவேற்றியவுடன் உங்கள் கருத்து! மிக்க நன்றி சித்ரா!

    பதிலளிநீக்கு
  3. காதல்
    சரியான உயிர் கொல்லி நோய்தான்..

    கவிதை அருமை வாழ்த்துக்கள் மற்றும் வாக்குகள்..

    பதிலளிநீக்கு
  4. அய்யா சாமீ, சென்னைக்காதலர்னு பெற மாத்தி வெச்சாலும் வெச்சேன் இந்த போடு போடூறீங்க. கவிதை பகிர்வு நல்லாத்தான் இருக்கு.
    ஒரு விஷயம், சாந்தோமிற்கும் உங்களுக்கும் ஏதோ தொடர்பு உண்டுபோல. வாழ்க உங்கள் காதல். :))

    பதிலளிநீக்கு
  5. //என் நெஞ்சில் ,நெஞ்சத்துடிப்பில்,உயிர் மூச்சில் கலந்ததனால்
    இன்னுயிரே உன்னை நான் இன்னும் மறக்கவில்லை!//

    உடனே உங்க பேரை மாத்துங்க மக்கா..."கவிதை பித்தன் " எப்பூடி...ஹா ஹா ஹா....
    அருமையா இருக்குய்யா....

    பதிலளிநீக்கு
  6. வேடந்தாங்கல் - கருன் கூறியது...
    //கவிதை மனசை ஏதோ பன்னுதுங்க..//
    காதலே அப்படித்தாங்க!
    நன்றி கருன்!

    பதிலளிநீக்கு
  7. # கவிதை வீதி # சௌந்தர் கூறியது...
    //காதல்
    சரியான உயிர் கொல்லி நோய்தான்..
    கவிதை அருமை வாழ்த்துக்கள் மற்றும் வாக்குகள்..//
    நன்றி சௌந்தர்!

    பதிலளிநீக்கு
  8. கக்கு - மாணிக்கம் கூறியது...
    //அய்யா சாமீ, சென்னைக்காதலர்னு பெற மாத்தி வெச்சாலும் வெச்சேன் இந்த போடு போடூறீங்க. கவிதை பகிர்வு நல்லாத்தான் இருக்கு.
    ஒரு விஷயம், சாந்தோமிற்கும் உங்களுக்கும் ஏதோ தொடர்பு உண்டுபோல. வாழ்க உங்கள் காதல்.:))//
    விட்டாப் போதும்னு ஆயிடுச்சோ?M.Sc படித்த இரண்டு ஆண்டுகளும் எத்தனை மாலைகள் கூட்டமாகப் போய்க் கலக்கி யிருக்கோம்,சாந்தோமை!அந்தத் தொடர்புதான்!
    இனிமேல் சப்ஜெக்டை மாற்றி விடுகிறேன்!(பழ மொழி என்ன?ரொம்ப டேமேஜிங்கோ!)
    நன்றி,மாணிக்கம்!

    பதிலளிநீக்கு
  9. ஆர்.கே.சதீஷ்குமார் கூறியது...

    // நல்லாருக்கு//
    நன்றி சதீஷ்குமார்!

    பதிலளிநீக்கு
  10. MANO நாஞ்சில் மனோ கூறியது...

    //உடனே உங்க பேரை மாத்துங்க மக்கா..."கவிதை பித்தன் " எப்பூடி...ஹா ஹா ஹா....
    அருமையா இருக்குய்யா....//
    சென்னை பித்தன் சென்னைக் காதலன் ஆகி இப்போது கவிதைப் பித்தனா!நல்லாத்தான் இருக்கு!
    நன்றி மனோ!

    பதிலளிநீக்கு
  11. காதலிக்காமலே கவிதை எழுதமுடியும் என நிரூபித்துவிட்டீர்கள்.
    ஒருவேளை காதலித்து இருந்தால்???

    பதிலளிநீக்கு
  12. வே.நடனசபாபதி கூறியது...
    //காதலிக்காமலே கவிதை எழுதமுடியும் என நிரூபித்துவிட்டீர்கள்.
    ஒருவேளை காதலித்து இருந்தால்???//
    உண்மையைப் புரிந்து கொண்டவர் நீங்கள் ஒருவர்தான்.
    காதலித்திருந்தால் கற்பனை இருந்திருக்காது;கவிதையும் பிறந்திருக்காது!
    நன்றி சபாபதி அவர்களே!

    பதிலளிநீக்கு
  13. கவிதைகளில் காதல் சோகம் ஒளிந்துக் கொண்டிருக்கிறது..
    அனுபவம் பேசுகிறது..
    இந்த கவிதை எனுக்கும் தான்..

    பதிலளிநீக்கு
  14. /////எவ்வளவு நாள் நாம் வாழ வேண்டும் என்ற தீர்மானம் இருக்கிறதோ அதுவரை இந்த உலகில்
    வாழ்ந்து விட்டு போவோம்/////

    விவரம் அறிய...

    http://tamilpaatu.blogspot.com/2011/02/blog-post_28.html

    பதிலளிநீக்கு
  15. பாட்டு ரசிகன் கூறியது...
    //கவிதைகளில் காதல் சோகம் ஒளிந்துக் கொண்டிருக்கிறது..
    அனுபவம் பேசுகிறது..
    இந்த கவிதை எனுக்கும் தான்..//
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    பதிலளிநீக்கு
  16. காதலில் தோற்ற,காதலியை மறக்காத நெஞ்சங்களே! (…… )இங்கு உங்கள் காதலியின் பெயரை எழுதிக் கொள்ளுங்கள்!)//
    மிக மிக அருமையான கற்பனை. .. காதலில் தோற்ற ஒரு இளைஞன் படும் அவதி... மிகவும் அனுபவித்து எழுதி பலரின் எண்ணங்களை
    பின்னோக்கி தள்ளி விட்டீர்கள் .. வாசுதேவன்

    பதிலளிநீக்கு
  17. காதல் என்கிற சப்ஜெக்டை அருமையா டீல் பண்றீங்க. அதை உணராமல் இப்படி எழுத முடியாதுன்னு நினைக்கிறேன். இன்னும் அதன் தாக்கம் குறையாமல் எப்படி எழுத முடிகிறது அதான் ஆச்சர்யம்.

    பதிலளிநீக்கு
  18. Vasu கூறியது...

    // மிக மிக அருமையான கற்பனை. .. காதலில் தோற்ற ஒரு இளைஞன் படும் அவதி... மிகவும் அனுபவித்து எழுதி பலரின் எண்ணங்களை
    பின்னோக்கி தள்ளி விட்டீர்கள் //
    நன்றி வாசு!

    பதிலளிநீக்கு
  19. கே. ஆர்.விஜயன் கூறியது...

    //காதல் என்கிற சப்ஜெக்டை அருமையா டீல் பண்றீங்க. அதை உணராமல் இப்படி எழுத முடியாதுன்னு நினைக்கிறேன். இன்னும் அதன் தாக்கம் குறையாமல் எப்படி எழுத முடிகிறது அதான் ஆச்சர்யம்.//
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி விஜயன்!

    பதிலளிநீக்கு
  20. ரஹீம் கஸாலி கூறியது...

    //லேட்டானாலும் வந்துட்டோம்ல...//
    வருகைக்கு நன்றி கஸாலி!

    பதிலளிநீக்கு
  21. அன்பின் பித்தன் - காதலில் தோவியுற்றான் காளை ஒருவன் .... ம்ம்ம் எம் எஸ் சி - சாந்தோம் தொடர்புகள் - அசை போடுகிறீர்களா ? ஆனந்தமாய் அனுபவியுங்கள் - மலரும் நினைவுகள் அழியாதவை. கவிதை நன்று - வாழ்க வளமுடன் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  22. ஓஹோ ! அப்போ இது

    காதலில் தோற்ற,காதலியை மறக்காத நெஞ்சங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டதோ !

    அது சரி, இதுவும் நல்லாவே இருக்கு! தங்களின் பரோபகாரச் சிந்தனை என்னை மெய்சிலிரிக்க வைத்து விட்டது, ஐயா. நன்றிகள்.

    பதிலளிநீக்கு