தொடரும் தோழர்கள்

சனி, மார்ச் 31, 2012

பிலாசபியின் வேலை என்ன?!


இது நிச்சயமாகப் ’பிலாசபி பிரபாகரன்’ பற்றிய பதிவு அல்ல!

பாவம் அவர் ஏற்கனவே நொந்து போயிருக்கிறார்.

ஏன் என்று பலருக்குத் தெரியலாம்;சிலருக்குத் தெரியாதிருக்கலாம்.

அவர்களுக்காக இந்தத்  தகவல்.

சென்ற வார(28-3-12) என் விகடனில் வலையோசை பகுதியில் பிரபாகரனின் வலைப்பூ  அறிமுகம் என்று சொல்லி அவரது புகைப்படத்துடன்(பிடரி  மயிர் இல்லாத சிங்கம் பார்த்திருக் கிறீர்களா?), அறிமுகக் குறிப்புக்களுடன், பதிவிலிருந்து சில பகுதிகள் வெளியிட்டிருந்தார்கள்.

ஆனால் துரதிர்ஷ்ட வசமாக அந்தப் பதிவு அவருடையதல்ல.வேறு ஒரு ’யூத்’ பதிவருடையது!
(’யூத்’ என்பதை அடிக்கோடிட்டுக் கொள்ளுங்கள்!)

அதில் ஒரு பதிவு “அங்கிள்,இது லேடீஸ் டாய்லெட்” என்ற தலைப்பிட்ட பதிவு.அதைப் படித்துவிட்டுப் பல நண்பர்கள் பிரபாகரனுக்குப் போன் செய்து”என்னப்பா,ஒரு பேரிளம்பெண் உன்னை அங்கிள் என்று அழைத்து விட்டாளா  ” என்று கலாய்த்து விட்டார்களாம்.

பாவம் பிரபாகரன்.மாற்றிப் போட்துதான் போட்டார்கள்;ஒரு உண்மையான ’யூத்’ பதிவரின் பதிவைப் போட்டிருக்கக் கூடாதோ?

எனவே இது அவரைப் பற்றிய பதிவு அல்ல.

அறிவியல் சில அடிப்படைகளை ஆதாரமாகக் கொண்டுள்ளது.

“எல்லாவற்றுக்கும் ஒரு காரணம் இருக்க வேண்டும் “ என்பது ஒன்று.

அப்படியானால்,இந்தசுழலும் உலகத்துக்குக் காரணம் என்ன என்ற கேள்வி எழுகிறது.

கடவுள் எனப் பதில் சொன்னால்,அடுத்த கேள்வி அந்தக் கடவுளுக்குக் காரணம் என்ன?

கடவுள் தானாகவே உண்டானவர் என்றால்,ஏன் உலகம் தானாகவே உண்டாயிருக்கக்   கூடாது என்ற கேள்வி எழுகிறது.

எனவே ஒரு கட்டத்தில் அடிப்படைக் கோட்பாடு உடைந்து போகிறது.

இதைத்தான் பிலாசபி செய்கிறது

(பட்டவகுப்பில் -1961—64- ஒரு  சிறிய  பாடம்,”நவீன அறிவியலின் அடிப்படைகள்,தத்துவத்தின் பிரச்சினைகள்” என்பது.எனது முக்கிய பாடமான கணிதத்துக்கும் இதற்கும் என்ன தொடர்பு?!என்னவோ பாடத்திட்டம்!)

இது போலத்தான் தர்க்கவியல் என்று ஒன்று உண்டு.அதில் தவறான வாதம் என்று  ஒன்று சொல்வார்கள்
உதாரணம்,--விஸ்கியும் தண்ணீரும் சேர்த்துக் குடித்தால் போதை வருகிறது
                     பிராந்தியும் தண்ணீரும் சேர்த்துக் குடித்தால் போதை வருகிறது
                     ரம்மும்   தண்ணீரும் சேர்த்துக் குடித்தால் போதை வருகிறது
                    இவை மூன்றிலும் பொதுவானது தண்ணீர்.
                    எனவே தண்ணீர் குடித்தால் போதை வரும்!
இது ஒரு தவறான வாதம்.(ஃபேலஸி)

ஒரு சர்தார்ஜி கரப்பை வைத்துப் பரிசோதனை செய்து கொண்டிருந்தாராம்
     ஒரு காலை வெட்டி விட்டு நகர் என்றால் நகர்ந்தது.
      இன்னோரு காலை வெட்டி விட்டு நகர் என்றால் நகர்ந்த்து
     மூன்றாவது காலை வெட்டி விட்டு நகர் என்றால் நகர்ந்த்து.
     நான்காவது காலையும் வெட்டி விட்டு எத்தனை முறை நகர் என்று சொல்லியும் நகரவில்லை!
உடனே அவர் எழுதினார்”கரப்புக்கு நான்கு கால்களையும் வெட்டி விட்டால் காது கேட்காது”

வெள்ளி, மார்ச் 30, 2012

தேடல்!!


களைத்து விட்டேன் நான்!
தேடித்தேடி!

தேடாத இடமில்லை

காற்று மழை கடுங்குளிர்
எதையும் பாராமல்

தேடிக் களைத்து விட்டேன்.

மெய் வருத்தம் பாராமல்
பசி நோக்காமல்
கண் துஞ்சாமல்

தேடிக் களைத்து விட்டேன்!

எங்கு தொலைத்தேன்
எப்படித் தொலைத்தேன்

எதுவும் புரியவில்லை.

எத்தனை தேடியும்
எங்கெங்கோ தேடியும் 

இன்னும்  கிடைக்கவில்லை!

ஏன் கிடைக்கும்?
எப்படிக் கிடைக்கும் ?


எதைத் தேடுகிறேன் என்று
எனக்கே தெரியாதபோது?!

வியாழன், மார்ச் 29, 2012

ஓடிப்போன மகன்!

அன்புள்ள அப்பா,

இக்கடிதம் உங்களுக்கு அதிர்ச்சியை அளிக்கும்.என்ன செய்வது ?வேறு வழியின்றி நான் இந்த முடிவுக்கு வந்தேன்.இதை நீங்கள் படிக்கும்போது நான் என் காதலியுடன் ஊரை விட்டுச் சென்றிருப்பேன். அவள் அழகானவள்.நல்ல குணங்களின் இருப்பிடம். எல்லோருக்கும் அவளைப் பிடிக்கும்.ஆனால் அவள் நம் சாதி அல்ல.


எனவே உங்களிடமும் அம்மாவிடமும் பேசினால் வீண் வாக்குவாதம்தான் வளரும் ;ஒரு முடிவு கிடைக்காது .நீங்கள் ஒருபோதும் இந்தத் திருமணத்துக்கு ஒப்புக்கொள்ளப் போவதில்லை என்பதால் இந்த முடிவை எடுத்தேன். எங்களை வாழ்த்தா விட்டாலும் ,தயவு செய்து வசை படாதீர்கள்.நாங்கள் நிச்சயம் சிறப்பாக வாழ்வோம்.எனக்கு வயது 21.அவளை வைத்துக் காப்பாறி  நல்ல வாழ்க்கை அமைத்துக் கொள்ள முடியும்.என்றாவது உங்களை உங்கள் பேரக் குழந்தைகளுடன் வந்து பார்க்கிறோம்.


அப்பா,இது வரை நான் எழுதியது எல்லாம் பொய்!நான் என் நண்பன் குமார் வீட்டில்தான் இருக்கிறேன்.தேர்வு முடிவுகள் வந்து விட்டன.வாழ்க்கையில் தேர்வில் தோற்பதை விட மோசமான,அதிர்ச்சி அளிக்கக்கூடிய விஷயங்கள் இருக்கின்றன என்பதை உங்களுக்குச் உணர்த்தவேஅவ்வாறு எழுதினேன். தேர்வு இன்னொரு முறை கூட எழுதிக்கொள்ளலாம்.


நீங்கள் இருவரும் இதைப் புரிந்து கொண்டு,என் மீது கோபம் இல்லை என்ற உறுதி அளித்தவுடன் நான் திரும்பி வருகிறேன்.

உங்கள் அன்பு மகன்

(ஒரு மின்னஞ்சல் அடிப்படையில் எழுதியது)

புதன், மார்ச் 28, 2012

தவறுகளின் தொகுப்பு என்ன செய்யும்?


@தவறுகள் நடக்கும்போது வேதனை ஏற்படுத்தும்;ஆனால் சில ஆண்டுகளுக்குப் பின் அத்தவறுகளின் தொகுப்பான அனுபவம் எனப்படுவது நம்மை வெற்றிக்கு இட்டுச் செல்லும்.

@வாழ்க்கை பல விதங்களில் பதில் தருகிறது.உங்களுக்குச் சரி என்று சொல்லி நீங்கள் விரும்புவதைத்  தருகிறது.இல்லை என்று சொல்லி அதை  விடச் சிறந்ததை அளிக்கிறது.    காத்திரு என்று சொல்லி அனைத்திலும் சிறந்ததை அளிக்கிறது.

@எல்லோருக்கும் எல்லாமே கிடைப்பதில்லை.அதுவே வாழ்க்கைச் சட்டம். உங்களுடையதல்லாததை அடைய முயலாதீர்கள்.ஆனால் உங்களுடையது எதையும்  இழக்கத் துணியாதீர்கள்!

@வாழ்க்கையில் தோல்வியடையும் மனிதர்கள் இரு விதம்.---
        யார் சொல்வதையும் கேட்காதவர்கள்
        யார் சொன்னாலும் கேட்பவர்கள்!

@புன்னகை என்ற வளைவு  பல விஷயங்களை நேராக்க உதவும்.

@நீங்கள் சரியாய் நடந்தால் யாரும் அதை நினைவில் வைப்பதில்லை
நீங்கள் தவறாக நடந்தால் யாரும் அதை மறப்பதில்லை.

பூட்டு செய்பவர்கள் சாவியில்லாத  பூட்டு செய்வதில்லை;கடவுளும் தீர்வு இல்லாத பிரச்சினைகளை உருவாக்குவதில்லை.தேடுங்கள்.சாவி கிடைக்கும்!

ஒரு நாளில் இரண்டு பேரையாவது மகிழ்ச்சியடையச் செய்யுங்கள். அதில் ஒருவர் நீங்களாக இருப்பதை உறுதி செய்யுங்கள்.

நீங்கள் ஏழையாகப் பிறந்தால் உங்கள் தவறல்ல.ஆனால் நீங்கள் ஏழையாகவே இறந்தால் அது உங்கள் தவறே  (பில்ல் கேட்ஸ்)

வாழ்க்கையில் எதையும் எவரிடமிருந்தும் எதிர்பார்க்காதீர்கள். எதிர்பார்த்தது  கிடைக்க வில்லையெனில் வருத்தம் ஏற்படும். எதிர்பாராதது கிடைத்தால் மகிழ்ச்சி மிகும்.உங்கள் கடமையைச் செய்யுங்கள்.மீதியைக் கடவுளிடம் விட்டு விடுங்கள்..


செவ்வாய், மார்ச் 27, 2012

காலத்துக்குக் காலம் கொடுங்கள்!


@காலம் எல்லாக் காயங்களையும் ஆற்றவல்லது.காலத்துக்குக் கொஞ்சம்  காலம் கொடுங்கள், செயலாற்றுவதற்கு.

@எல்லா விவாதங்களையும் வெல்ல வேண்டும் என்பதில்லை. உடன் பாடின்மைக்கும் உடன்படத் தெரிந்து கொள்ளுங்கள்.

@ஒவ்வொரு இரவும் படுக்கப் போகும் முன்  கீழ்க்கண்ட வாக்கியங் களை   முழுமையாக்குங்கள்

1.நான் இறைவனுக்கு (இதற்காக) நன்றி செலுத்துகிறேன்.

2.இன்று நான் (இச்செயலைச்) சாதித்தேன்.

@ஒவ்வொரு நாளும் காலை எழுந்ததும்  இந்த வாக்கியத்தை முழுமை யாக்குங்கள்
    *இன்று நான் செய்ய வேண்டியது  (இது)...........”

@மற்றவர்கள் உங்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என நினைப்பது உங்கள் வேலையல்ல.

@நிலைமை எவ்வளவு நல்லதாகவோ/மோசமானதாகவோ இருந்தாலும், அதுவும்  மாறும்

@வாழ்க்கை என்பது ஒரு பள்ளிக்கூடம்.நீங்கள் அதில் பயில வந்திருக் கிறீர்கள்.தேர்வுகளில் வெற்றி பெறுங்கள்.பிரச்சினைகள் பாடத் திட்டத்தின் பகுதியே.அவை வகுப்புகள் போல் வந்து போகும் .ஆனால் கற்றுக்கொண்டவை உங்களுடன் நிற்கும்.

@உங்களது மகிழ்ச்சி உங்கள் கையில்தான் இருக்கிறது.மற்றவர்களிடம் இல்லை.

@உங்கள் வாழ்க்கையை மற்றவர் வாழ்க்கையோடு ஒப்பிடாதீர்கள். அவர்கள் பயணம் எதை நோக்கி என்பது உங்களுக்குத் தெரியாது.

@வாழும் நாள் கொஞ்சமே.அதில் பிறரை வெறுப்பதற்குச் செலவிட நேரமேது?

@அனைத்திலும் சிறந்தது  இனிமேல்தான் வர இருக்கிறது....நம்புங்கள்