தொடரும் தோழர்கள்

திங்கள், ஆகஸ்ட் 20, 2012

இழந்த சொர்க்கங்கள்! மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்!!


நான் 1964 இல் சென்னை வந்தேன்.

சென்னையில் எனது பட்ட மேற்படிப்பு தொடங்கியது,

முதன்முதலாக விடுதி வாழ்க்கையும் தொடங்கியது

அப்போதெல்லாம் எங்கள் முக்கியமான பொழுதுபோக்குகளில் ஒன்று வாரம் ஒரு சினிமா பார்ப்பது.பார்த்த படங்கள் எத்தனை?சென்ற திரையரங்குகள் எத்தனை?

அத்திரையரங்குகளில் பல இன்றில்லாமல் போய்விட்டன.

காலச் சுழற்சியில் வணிக வளாகங்கள்,கல்யாண மண்டபங்கள் என உருவெடுத்து விட்டன.

ஆனால் அன்றைய சென்னையின் முக்கிய அங்கமான அவற்றை மறக்க முடியுமா?

அவற்றில் சிலவற்றைப் பற்றி நான் இங்கு சொல்ல ஆசைப்படுகிறேன். ஆங்கிலப் படங்களே திரையிடப்பட்டு வந்த தியேட்டர்கள்.

மினர்வா-ப்ராட்வேயில் இருந்த சிறிய திரையரங்கம்.ஆங்கிலப்படங்கள் மட்டுமே திரையிடப்படும்.ஏ.சி குளிர் நடுக்கும்.நான் பார்த்த மறக்க முடியாத திரைப்படம்” ஹடாரி’

அதில் வரும் “பேபி எலிஃபண்ட்’ஸ் வாக்” இசையை மறக்க முடியுமா?படம் பார்த்து விட்டு மைலாப்பூர் வரை டந்தும் உண்டு.

ராஜகுமாரி(சாஹ்னிஸ்)—தி.நகரில் இருந்தது.இப்போது அங்கு என்ன இருக்கிற்து?பிக்பஜார்?

நான் பார்த்த  முதல் ஜேம்ஸ்பாண்ட் படம்--அதுதான்  பாண்ட் சீரீஸின் முதல்படம்--டாக்டர்.நோ.

அந்த பாதிப்பில் என் அறைக்கதவில் பிஸ்டல் படம் போட்டு 007 என்று எழுதி வைத்திருந்தேன்!

மற்றொரு மறக்கமுடியாத திரைப்படம்,கேரி க்ராண்ட்,ஆட்ரி ஹெப்பர்ன் நடித்த” சரேட்”மிகச் சிறந்த த்ரில்லர்.

குளோப்—அந்நாள் மவுண்ட்ரோடில் இருந்தது.பின்னாளில் அலங்கார் எனப் பெயர் மாறியது.
சாந்தியில் திருவிளையாடல் சென்று டிக்கெட் கிடைக்காமல் குளோப் வந்து வரிசையில் நின்று முதற்காட்சி “ஃப்ரம் ரஷ்யா வித் லவ்” பார்த்த்தை மறக்க முடியுமா?L.I.C யில் தீப்பிடித்தபோது தீ குளோபுக்கும் பரவிற்றாம்.

நியூ எல்ஃபின்ஸ்டன்-மவுண்ட்ரோட்.சில ஹிட்ச்காக் படங்கள் பார்த்த ஞாபகம்.அங்கிருந்த ஜஃபார்கோ வில் பீச் மெல்பா ரொம்பப் பிரசித்தம்.என் நினைவுகளோடு கலந்து விட்ட இடம்.

ஓடியன்.—ராயப்பேட்டை-மவுண்ட்ரோட் வழி-ஜெனரல் பாட்டர்ஸ்  ரோடா?பல ஆங்கிலப்படங்கள் பார்த்திருக்கிறேன்.(இப்போதும் மெலடி என்ற பெயரில் இருக்கிறது)

சஃபையர்,ப்ளூ டைமண்ட்,எமரால்ட்--சென்னையின் முதல் மல்டிப்ளெக்ஸ், அப்போதெல்லாம் சஃபையர் போவதென்பதே ஒரு சுகமான அனுபவம். கிளியோபாட்ரா,மை ஃபேர் லேடி என்று எத்தனை படங்கள் பார்த்திருப்பேன்? என் வெளியூர் நண்பர்கள் எவரேனும் சென்னை வந்தால், செத்தகாலேஜ், உயிர்க்காலேஜ் ,பீச் இவற்றுடன் சஃபையருக்கும் தவறாமல் அழைத்துச் செல்வேன்!
தொடர்ந்து படம் ஓடும் ப்ளூடைமண்ட் காதலர்களின் சொர்க்கம்! ஹூ ...  ம்

ஆனந்த்-அண்ணாசாலை,ஆயிரம் விளக்கு..வகுப்பைக் கட் அடித்து விட்டு அனைவரும் சென்று ’பென்ஹர்’ பார்த்த தியேட்டர்.ஆங்கிலப்படங்களே திரையிட்டு வந்தஅவர்கள் திரையிட்ட முதல் தமிழ்ப்படம் ’வெண்ணிற ஆடை ’என நினைக்கிறேன்.

மேலும் சில திரையரங்குகள்(தமிழ்ப்படம்)  நாளை!



28 கருத்துகள்:

  1. ஆனந்த் திரையரங்கில் நானும் படம் பார்த்திருக்கிறேன்.
    அது ஒரு அழகிய காலம்.

    பதிலளிநீக்கு
  2. மலரும் நினைவுகள் அருமை!

    பதிலளிநீக்கு
  3. இனிய (திரையரங்க) பட அனுபவத்தை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி சார்... (5)

    பதிலளிநீக்கு
  4. இதில் எதிலுமே நான் தி.ப. பார்த்ததில்லை!

    பதிலளிநீக்கு
  5. காலத்தின் கோலத்தால் காணாமல் போன சென்னை திரை அரங்குகள் பற்றி தெரியாதவர்களுக்கு புதிய தகவல்களையும், தெரிந்தவர்களுக்கு பழைய நினைவுகளை திரும்பக் கொண்டுவரவும் உதவும் உங்கள் பதிவு. வெலிங்டன் திரை அரங்கம் பற்றி நிச்சயம் எழுதுவீர்கள் என எண்ணுகிறேன்.அதில் நான் 1961 ல் T.R.இராமச்சந்திரன் நடித்த ‘சபாபதி’ திரைப்படம் இரண்டாம் தடவையாக வெளியிடப்பட்டபோது பார்த்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  6. Nostalgic trip was fascinating.
    I have also seen most of the movies referred in the blog. However some of the movies were watched at Madurai. Watching English Movies at Regal(Which used to double as Library during day time) and Parameswari at Madurai, were memorable experiences which I cherish to this day. Similarly watching movies at Thangam at Madurai ( Second biggest theatre in India at that time) with a seating capacity of around 3500 was exciting experience especially movies released on Deepavali .Unfortunately this wonderful theatre wears a deserted look these days as it has been closed down.
    Despite all the multiplexes that are present today, they can not beat the experience of watching movies in theaters of the bygone days .

    Vasudevan

    பதிலளிநீக்கு
  7. மலரும் நினைவுகள் நல்லா இருக்கு

    பதிலளிநீக்கு
  8. அருமையான அனுபவப் பகிர்வு. படிக்கும் என் மனதும் பின்னோக்கி நகர்கிறது......

    பதிலளிநீக்கு
  9. மலரும் நினைவுகளில் எங்களையும் உடன் அழைத்து சென்ற அனுபவங்கள் வருகிறது.நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
  10. அலங்கார்-ல தான் நான் “ராம் லஷ்மண்” படம் பார்த்தேன்..

    பதிலளிநீக்கு
  11. திரையரங்க நினைவுகள் அருமையான பகிர்வு!நன்றி!

    இன்று என் தளத்தில்
    பேய்கள் ஓய்வதில்லை! பகுதி 5
    http://thalirssb.blogspot.in/2012/08/5.html

    பதிலளிநீக்கு
  12. நானும் 1964இல் ப்ரீ யுனிவர்சிட்டிக்காக்ச் சென்னை
    வந்தேன்..
    அந்த வருடம் தான் எத்தனை படங்கள்..க்ளியோபாட் ரா,
    சங்கம்,இருவர் உள்ளம்,நார்மன் விஸ்டம் ஸ்டிட்ச் இன் டைம்,,
    . மிக்க மகிழ்ச்சி இந்தப் பதிவை படித்தபோது. சஃபைர் மறக்க் முடியாத தியேட்டர்.

    உயிர்க்காட்சி சாலை, மியூசியம் தியேட்டரில் பார்த்த நாடகங்கள் மகிழ்ச்சி வானில் பறந்த காலங்கள்,
    மிக மிக நன்றி.. ஜி..

    பதிலளிநீக்கு
  13. மெட்ராசும் சென்னையானது!!
    மலரும் நினைவுகள் காலத்தின் சுழற்சியில்...சுவாரஸ்யமான பதிவு!

    பதிலளிநீக்கு