தொடரும் தோழர்கள்

வெள்ளி, ஆகஸ்ட் 24, 2012

தண்ணி தொட்டி தேடி வந்த...........(நிறைவு..)


ஓ! இவரா என்று அதிசயித்தார்

ஆம்!அவர்தான் என  உறுதி செய்தார்.

பாகவதரிடம் சென்று  தன்னை அறிமுகம் செய்து கொண்டு, தான் அவரது பரம ரசிகன் என்று கூறினார்.

பாகவதர் பேச ஆரம்பித்தார்.அவரது வாயிலிருந்து சிகரெட்,பான்பராக்,மதுபான வாடைகள் கலந்து பலமாக வீசின.

அவரது தோற்றத்துக்கும் தொழிலுக்கும் பொருத்தமில்லாதவாறு கெட்ட வார்த்தைகள் அவர் வாயிலிருந்து சரளமாகப் புறப்பட்டன.திருநீரை அவ் வார்த்தைகளால் வசை பாடி விட்டு ”ஐ வில் டீச் ஹிம் லெசன்” என்றார் அரசியலிலும்,அதிகார வர்க்கத்திலும் பலர் அவரது விசிறிகள்,ஒரு பெரிய புள்ளிக்கு ஏற்கனவே ஃபோன் செய்தாகி விட்டது ,இன்னும் 10 நிமிடத்தில் போலீஸ் வந்து விடும் என்றார்.

ஜெகன்னாதன் அவரிடம்”நீங்க பெரிய வித்வான்.ஆயிரக்கணக்கான ரசிகர்கள் உங்களுக்கு இருக்கா.இந்தச் சின்ன விஷயத்துக்குப் போய் எதுக்குப் பெரிய லெவலுக்குப் போறேள்” என்றார்.

அவருக்குப் போதை கொஞ்சம் தெளிய ஆரம்பிக்க ஜெகன்னாதன் போல் தன்னை அறிந்தவர்கள் வந்தால் அசிங்கமாகி விடும் என்றெண்ணியோ என்னவோ புறப்படத் தயாரானார்.

திருநீரின் கெட்ட நேரம் அப்போது போலீஸ் ஜீப் வந்து நின்றது.பாகவதரின் ட்ரைவர் அவனைப் போலீஸிடம் ஒப்படைக்க,ஆய்வாளர் அவனை ஜீப்பில் ஏற்றி விட்டுப் பாகவதரை நெருங்கினார். ”அந்தப் பொறுக்கி என்னைக் கெட்ட வார்த்தையால திட்டிட்டாம்பா.முட்டிக்கு முட்டி தட்டி ஒரு வாரம் உள்ளே  வச்சி அனுப்பு” என்று சொல்லிவிட்டு,ஜெகன்னாதனைப் பார்த்து அடுத்த வாரம் கச்சேரிக்கு அழைத்து விட்டுப் போய் விட்டார்.

இன்ஸ்பெக்டர் ஜெகன்னாதனிடம் என்ன சார் ஆச்சு என்று கேட்க ,அது  பாகவதர், ட்ரைவர், திருநீர் மூவரும் போதையில் இருந்ததால் ஒரு ஈகோ பிரச்சினை என்று சொன்னார்.,விஷயத்தை முடிக்க விரும்பிய ஆய்வாளர் என்ன செய்யலாம் என்று கேட்க,ஜெகன்னாதன்,திருநீரை,சீரியசாக் கண்டிச்சு விட்டு விடுங்கள் என்று சொன்னார்.

ஆய்வாளரும் அவன ஒரு அறை அறைந்து,இனிமேல் இதுபோல் ஏதாவது நடந்தால் உள்ளே தள்ளிவிடுவேன் என்று சொல்லி விட்டுக் கைபேசியில் யாரையோதொடர்பு கொண்டு ” சார், இன்ஸ்பெக்டர் கருணாநிதி பேசறேன், அந்த நியூசென்ஸ் கேஸ் முடிச்சாச்சு” என்று ரிபோர்ட் செய்து விட்டு ஜீப்பில் ஏறிச் சென்று விட்டார்.

ஜெகன்னாதன் நினைத்தார்”பாகவதர் வி.ஐ.பி பெயரெல்லாம் சொன்னார்,ஒரு வி.வி.ஐ பி யே இன்ஸ்பெக்டராக வந்து விட்டாரே!” சிரித்துக் கொண்டார்.

’குடி குடியைக் கெடுக்கும்.தன் நிலையிலிருந்து தாழ்த்தும், நகைப்புக் கிடமாக்கும், நடுரோட்டில் நிறுத்தும்  ஆனாலும் ஒழியாது,ஒழிக்கும் அதிகார முள்ளவர்கள் நினைத்தாலொழிய!” என்றெண்ணியவாறே  படியேறினார் ஜெகன்னாதன்.

ஆக்கம்:பார்த்தசாரதி

5 கருத்துகள்:

  1. நல்ல கதை. பெயரில் கருணை இருந்ததால் அந்த ஆய்வாளர் திருநீரை விட்டுவிட்டாரோ!

    பதிலளிநீக்கு
  2. நல்ல கதை... பதிவாகிப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி ஐயா... (TM 2)

    பதிலளிநீக்கு
  3. நல்ல கதை ஐயா ..தொடருங்கள் இது போன்ற கதைகளை

    பதிலளிநீக்கு
  4. சிறப்பான பகிர்வு! நன்றி!

    இன்று என் தளத்தில்
    அஷ்டமி நாயகன் பைரவர்!
    http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_24.html

    பதிலளிநீக்கு
  5. ’குடி குடியைக் கெடுக்கும்.தன் நிலையிலிருந்து தாழ்த்தும், நகைப்புக் கிடமாக்கும், நடுரோட்டில் நிறுத்தும் ஆனாலும் ஒழியாது,ஒழிக்கும் அதிகார முள்ளவர்கள் நினைத்தாலொழிய!”

    சரியான கருத்து
    பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு