தொடரும் தோழர்கள்

வெள்ளி, ஆகஸ்ட் 24, 2012

மனிதன் கடித்து இறந்த பாம்பு!


எது செய்தியாகிறது?

நாய் மனிதனைக் கடித்தால் அது செய்தியாகாது.

மனிதன் நாயைக் கடித்தால் அது செய்தி!

அது போலவே,பாம்பு மனிதனைக் கடித்தால் செய்தியாகாது.

மனிதன் பாம்பைக் கடித்தால் அது செய்தி.

அதுவே இன்றைய   சிறப்புச் செய்தி.

நேபாளத்தில் பாம்புகள் அதிகமாம்.

காத்மாண்டு வில் இருந்து 200 கி.மீ தொலைவில் உள்ள கிராமத்தில் வயலில் வேலை செய்து கொண்டிருந்த மியா என்ற விவசாயியை நல்ல பாம்பொன்று கடித்து விட்டது.

கடித்து விட்டு ஓடிய பாம்பைப் பிடித்து அவர் கடித்தே கொன்று விட்டார்.

“அது என்னைக் கடித்ததும் எனக்கு அதிகக் கோபம் வந்து விட்டது.அதைத் துரத்திச் சென்று பிடித்துப் பற்களால் கடித்தே கொன்று விட்டேன்.ஒரு தடியால் அடித்துக் கூடக் கொன்றி ருக்கலாம்.ஆனால் அது என்னைக் கடித்ததால், பழிவாங்க நான் அதைக் கடித்தே கொன்றேன்” என்று சொன்னார் அவர்..

மருத்துவ உதவிக்குப் பின் அவர் நலமாக உள்ளார்.

இனி இவரிடம் யாரும் வம்பு வைத்துக் கொள்ள மாட்டார்கள்தானே!

......................................................................

பாகிஸ்தானில் பஞ்சாப் மாநிலத்தில் பிறன் மனையுடன் தொடர்பு கொண்டி ருந்த ஒருவரை, அப்பெண்ணின் உறவினர்கள் பிடித்து அவரது, மூக்கு, உதடு, நாக்கு ஆகியவற்றை அறுத்து விட்டார்களாம்!

நாட்டாமை!தீர்ப்பை மாத்திச் சொல்லு! 

 ................................................

போலீஸ் கட்டுப்பாட்டு அறை.

ஒரு போன்.

“சார்,ஒரு போன் வந்தது.ராத்திரி ஒரு மணிக்கும்  3 மணிக்கும் நடுவில் தூங்குபவர்கள் எல்லாம் இறந்து விடுவார்களாம்.ஒரு குழந்தை,பிறக்கும்போதே பேச ஆரம்பித்து விட்ட குழந்தை, இந்த செய்தியைச் சொல்லியிருக்கிறது.”

அதன் பின் நூற்றுகணக்கான கால்கள்.

இரவு ஒரு மணிக்குச் சாலைகளில்  மரண பயத்தில்   பதறும் மக்கள் கூட்டம்!

அது நடந்தது ஹைதராபாத்தில்.

இது போன்றே சூரத் அருகில் பல இடங்களிலும் நடந்துள்ளது!

//அஞ்சி யஞ்சிச் சாவார்- இவர்
அஞ்சாதபொருளில்லை அவனியிலே//---(பாரதி)

என்று மாறுவார் இம்மக்கள்?

------------------------------

இவைதாம் செய்திகள்!!

(செய்திகள் :டைம்ஸ் ஆஃப் இந்தியா 24-08-2012)


13 கருத்துகள்:

  1. செய்திக்கான விளக்கமும்
    அதற்கு உதாரண்மாகக் கொடுத்த
    செய்திகளும் அருமை
    சுவாரஸ்யமான பதிவு
    தொடரவாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. \\பிறக்கும்போதே பேச ஆரம்பித்து விட்ட குழந்தை, இந்த செய்தியைச் சொல்லியிருக்கிறது.\\

    நல்ல வேளை..
    பிறந்த பிறகு தான் பேசியிருக்கு!

    பதிலளிநீக்கு
  3. கலக்கல் தகவல்கள் ஐயா...

    பதிவாகிப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி... (TM 7)

    பதிலளிநீக்கு
  4. செய்திகளை சுவைபடத் தொகுத்து தந்தமைக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  5. நல்லதொரு தொகுப்பு இருந்தும் மியாவுக்கு ரொம்ப தைரியம் தான் ....பகிர்வுக்கு நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
  6. சுலையான செய்திகள் தொகுத்த் வழங்கினீர் மிக்க நன்றி

    பதிலளிநீக்கு
  7. {{ இரவு ஒரு மணிக்குச் சாலைகளில் மரண பயத்தில் பதறும் மக்கள் கூட்டம்! }}

    நம் மக்கள் அறிவாளிகள் அண்ணே...

    *** த.ம. 337

    பதிலளிநீக்கு
  8. எது செய்தியாகிறது?

    நாய் மனிதனைக் கடித்தால் அது செய்தியாகாது.

    மனிதன் நாயைக் கடித்தால் அது செய்தி!

    அது போலவே,பாம்பு மனிதனைக் கடித்தால் செய்தியாகாது.

    மனிதன் பாம்பைக் கடித்தால் அது செய்தி.

    அதுவே இன்றைய சிறப்புச் செய்தி.


    சிந்திக்க தூண்டுகிறது

    பதிலளிநீக்கு
  9. உண்மை ஊர் போய் சேருவதற்கு முன் புரளி உலகத்தை சுற்றிவிடுமாம். உதாரணம்... மெஹந்தி.
    அய்யோ அய்யோ
    நல்லா கிள்ப்புறாங்கையா புறளியை

    பதிலளிநீக்கு
  10. சுவையான தகவல்கள்! நன்றி!

    இன்று என் தளத்தில்
    சித்துண்ணி கதை!
    http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_25.html
    பிறந்த குழந்தை பேசியது! பரவிய வதந்தி!
    http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_1427.html

    பதிலளிநீக்கு