இது ஒரு சிறிய பதிவு!
நம் நாசியில் மூச்சு மாறி மாறி இயங்குவது உங்களுக்குத் தெரியும்.
வலது புறம் சிறிது நேரம்,இடது புறம் சிறிது
நேரம் என மாறி மாறியே சுவாசம் வருகிறது.
இதை அடிப்படையாகக் கொண்டு திருமூலர், பிறக்கும் குழந்தையின் பால் என்னவாக இருக்கும் எனத் தீர்மானிக்கிறார்,
புணர்ச்சியின்போது,ஆணின் மூச்சு
வலப்பக்க நாசியில் (இதை சூரிய கலை என்று சொல்வார்கள்)இயங்குமானால் பிறக்கும் குழந்தை
ஆணாகவும் இடப்பக்க நாசியில் இயங்கினால்(இதைச் சந்திர கலை என்று சொல்வார்கள்) பெண் குழந்தையாகவும் இருக்கும்!
பிராண வாயுவுடன் அபான வாயு எதித்தால்
சுக்கிலம் சிதைந்து இரட்டைக் குழந்தையாகும்!
அபூர்வமாக,இரு பக்கமும் மூச்சு இயங்கினால்
குழந்தை ஆணுமின்றிப் பெண்ணுமின்றிப் போகும் .
இது திருமூலர் கூற்று,
அந்தப் பாடல்.........
”குழவியும் ஆணாம் வலத்தது வாகில்
குழவியும் பெண்ணாம் இடத்தது வாகில்
குழவியும் இரண்டாம் அபானன் எதிர்க்கில்
குழவி அலிஆகும்கொண்ட காலொக்கிலே” (திருமந்திரம்-482)
பயனுள்ள பதிவு தேவைப்படுவோருக்கு .
பதிலளிநீக்குநன்றி ராஜி
நீக்குஇது போன்ற பதிவுகளைத் திருமூலர் மேல் உள்ள நம்பிக்கையால் போட்டீர்களா? இல்லை .. இது உண்மையாக இருக்கும் என்ற நம்பிக்கையில் போட்டீர்களா?
பதிலளிநீக்குதலைப்பிலும் ‘அனுபவம்’ என்று வேறு போட்டிருக்கிறீர்கள் ...!
“நல்ல” பதிவு !!
இப்பின்னூட்டத்திற்காக மன்னிக்கவும்.
தருமி ஐயா!இது திருமந்திரப்பாடலும் அதன் பொருளும் .என் கருத்து எதுவும் இல்லை;ஏற்றுக் கொள்வதோ ஒதுக்கித் தள்ளுவதோ,அவரவர் விருப்பம்;அனுபவம் என்றால் என் அனுபவம் அல்ல;திருமூலர் அனுபவம் எனக் கொள்ளலாம்!
நீக்குஇது ஒரு திருமந்திரப்பதிவு; அவ்வளவே.
நன்றி
ஓ! உங்கள் கருத்து இது இல்லையா ...?!
நீக்குநல்லது.
நன்றி, ஐயா.
உறுதி படுத்தியவர் பவாானி சித்த வைத்தியர் ஒருவர்... அவரின் இரு மகனும் இதை முயற்ச்சித்து பெற்றாராம்
நீக்குஇது உண்மை
அட இப்பிடியும் இருக்கா ஆச்சர்யமா இருக்கே தல...!
பதிலளிநீக்குதிருமூலர் சொல்லியிருக்கிறார்!
நீக்குநன்றி மனோ
இந்தக் காலத்தில் எந்தக் குழந்தையும் சமம் தான் ஐயா...
பதிலளிநீக்குஅது வேற விசயம்!
நீக்குநன்றி தனபாலன்
நீக்குஇது சரியா தவறா என மருத்துவ நிபுபுணர்கள் மட்டுமே சொல்லமுடியும். ஆனால் திருமூலர் இந்த காலத்து Scan / X Ray காட்டுவதை அந்த காலத்திலேயே பாடல் மூலம் சொல்லிவிட்டார் என்பது உண்மை!
பதிலளிநீக்குநன்றி சபாபதி சார்
நீக்குஇனி நமக்கு தேவைப்படாது பித்தரே...விரும்பிய படி பெண் பிள்ளை கிடைத்தது...I am blessed...
பதிலளிநீக்குநன்றி ரெவெரி
நீக்குதிருமூலருக்குத் திரும்பிட்டீங்களா.. வாங்க.
பதிலளிநீக்குநன்றி அப்பாதுரை.
நீக்குசொக்கனிடம் சொல்லியிருக்கிறேன்!
சொக்கா, எங்கிருந்தாலும் வருக.
நீக்குஇப்படில்லாம் ‘அந்த’ நேரத்தல யோசிச்சு செயல்பட்டுட்டிருக்க முடியுமா என்ன? உணர்ச்சிகள் பொங்கி வழியற அந்த நேரத்தைப் பத்தி திருமூலருக்கு அனுபவம் இல்லாம எழுதிட்டாருன்னு தோணுது. இந்தக் காலத்துல ஃபீமேல் சைல்டே மேல்! (திருமூலர்னு பாத்ததும் மதுரை சொக்கர் கிளம்பிட்டாருன்னு தெரியுது. வெல்கம்...!)
பதிலளிநீக்குஅது சரி
நீக்குநன்றி கணேஷ்
ஐயா, தலைப்பில் சொல் குற்றம் உள்ளது. “இது உங்கள் கையில்” அல்ல, “இது உங்கள் மூக்கில்!!!” என்று வரவேண்டும் என்பது அடியேனின் அவதானிப்பு......மன்னித்தருள்க!
பதிலளிநீக்குநான் முதலில் நினைத்த தலைப்பு அதுதான்(அறிஞர்கள் சிந்தனை ஒன்றுபடும்!).
நீக்குஉங்கள் அவதானம் சரியே!
நன்றி ஜூ....னியர்!
உங்க பதிவை படிச்சுட்டு, ஒரு பக்கம் முக்கை யாராவது அடைத்துக் கொண்டு குறிப்பிட்ட குழந்தைக்கு முயற்சிக்கப் போகிறார்கள்.:))
பதிலளிநீக்குஎனக்கு எப்போதும் ஒரு பக்கம் மூக்கு கிட்டதட்ட அடைப்பாகத் தான் இருக்கும், முதலில் பிறந்தது பெண், அடுத்தது ஆண்.
:)
//உங்க பதிவை படிச்சுட்டு, ஒரு பக்கம் முக்கை யாராவது அடைத்துக் கொண்டு குறிப்பிட்ட குழந்தைக்கு முயற்சிக்கப் போகிறார்கள்.:))//
நீக்குஹா ஹா ஹா!
நன்றி கோவி கண்ணன்
மூக்கில் இருக்கிறதா விஷயம்! :)
பதிலளிநீக்குதிருமூலர் பாடல் நன்றாக இருக்கிறது!
நன்று ஐயா இது ஆண்களுக்கு மட்டும் தான் பொறுந்துமா பெண்களுக்கு பொறுந்தாதா
பதிலளிநீக்குஉரையாசிரியர்கள் ஆண் என்றே கொண்டுள்ளனர்;விந்து ஆணிடமிருந்து வருவதால் இருக்கலாம்!
நீக்குவருகைக்கும் ,ஐயத்துக்கும் நன்றி மோகன்