ஒருவர்
ஒரு செயலை,நாம் செய்ய நினைக்காத ஒரு வழியில் செய்கையில்,அதை நம்மால் ஏற்றுக்கொள்ள
முடியவில்லையெனில்.....நமக்குக் கோபம் வருகிறது
மாறாக,ஒருவர்
ஒரு செயலை நாம் செய்ய நினைக்காத ஒரு வழியில் செய்ய,அதை நம்மால் ஏற்றுக் கொள்ள முடிந்தால்...நாம்
பொறுத்துக் கொள்கிறோம்.
ஒருவரிடம்
நம்மிடம் இல்லாத ஒன்று இருந்து,அதை நம்மால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை
எனில்....பொறாமை பிறக்கிறது.
ஒருவரிடம்
நம்மிடம் இல்லாத ஒன்று இருந்து அதை நாம் ஏற்றுக் கொண்டால் நமக்கும் அதைப் போல
ஒன்று அடைய உத்வேகம் பிறக்கிறது.
நம்மால்
முடியாத ஒன்றை மற்றவர் செய்கையில்,நம்மால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்ல எனில் பொறாமை
பிறக்கிறது;எற்றுக்கொள்ள முடிந்தால் நாமும் அதைச் செய்ய ஊக்கம் பிறக்கிறது
ஒருவர்
நம் நினைவில் இருந்து நேரில் இல்லையெனில்,அதை நம்மால்
ஏற்றுக்கொள்ள முடியாவிடில் அவர் இராமை வருத்துகிறது ;
நாம்
ஏற்றுக்கொண்டால், நினைவே சுகம் தருகிறது.
கீழே
காண்பதுதான் உணர்ச்சிகளின் சமன்பாடு.....
1)
ஒரு பொருள்/செயல்/நிகழ்வு+ஏற்றுக்கொள்ளல்= நேர்மறையான ஆக்கபூர்வமான செயல்பாடு.
2)ஒரு
பொருள்/செயல்/நிகழ்வு+ஏற்றுக் கொள்ள இயலாமை=எதிர்மறையான உணர்வு,செயல்பாடு.
ஆம்
யாராவது ஒருவரோ,ஒரு செயலோ,ஒரு நிகழ்வோ நம்மை நேர்மறையாகவோ, எதிர்மறையாகவோ உணரச்
செயல்படத் தூண்டுவதில்லை.
மாறாக,அந்த
ஒருவரை,செயலை,நிகழ்வை ஏற்றுக்கொள்வதோ, ஏற்றுக்கொள்ளாம லிருப்பதோதான் நம்மை
நேர்மறையாகவோ எதிர்மறையாகவோ உணர வைக்கிறது!
நாம்
அடுத்தமுறை ஏதாவது எதிர்மறையான எண்ணங்களால் தாக்கப் படும்போது,எது அல்லது யார்
அதற்குக் காரணம் எனக் கருதாமல்,நமது உணர்வுத் தடையை(ஏற்றுக் கொள்ள
இயலாமையை),மாற்றி அதை ஏற்றுக்கொள்வோமானால்,நமது எதிர்மறையான சிந்தனை,ஆக்க
பூர்வமானதாக மாறும்.நன்மை பயக்கும்.
வாழ்க்கையில்
குறை காண்பதை விடுத்து,வருவதை ஏற்றுக் கொண்டு ஆக்க பூர்வமாகச் செயல் படுவதே
வாழ்வாங்கு வாழும் வழி!
வாழ்க்கையில் குறை காண்பதை விடுத்து,வருவதை ஏற்றுக் கொண்டு ஆக்க பூர்வமாகச் செயல் படுவதே வாழ்வாங்கு வாழும் வழி
பதிலளிநீக்கு>>
இதான் சிறாந்த வழியும் கூட. பகிர்வுக்கு நன்றி ஐயா!
நன்றி ராஜி!
நீக்குநமது எதிர்மறையான சிந்தனை,ஆக்க பூர்வமானதாக மாறும்.நன்மை பயக்கும்.
பதிலளிநீக்குசிறப்பான சிந்தனைகள்..பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்..
நன்றி இராஜராஜேஸ்வரி
நீக்கு// வாழ்க்கையில் குறை காண்பதை விடுத்து,வருவதை ஏற்றுக் கொண்டு ஆக்க பூர்வமாகச் செயல் படுவதே வாழ்வாங்கு வாழும் வழி!
பதிலளிநீக்கு//
100% உண்மை ஐயா ...
நன்றி ராஜா
நீக்கு// வாழ்க்கையில் குறை காண்பதை விடுத்து,வருவதை ஏற்றுக் கொண்டு ஆக்க பூர்வமாகச் செயல் படுவதே வாழ்வாங்கு வாழும் வழி!
பதிலளிநீக்கு//
100% உண்மை அய்யா ..
வாழ்க்கையில் குறை காண்பதை விடுத்து,வருவதை ஏற்றுக் கொண்டு ஆக்க பூர்வமாகச் செயல் படுவதே வாழ்வாங்கு வாழும் வழி!
பதிலளிநீக்குஅருமையான கருத்துடன் கூடிய
பகிர்வுக்கு வாழ்த்துக்கள்//
நன்றி ரமனி
நீக்குtha.ma 4
பதிலளிநீக்குநல்லது தலைவரே....
பதிலளிநீக்குநன்றி ஆசிரியரே
நீக்குவாழ்வாங்கு வாழும் வழிகள் அனைத்தும் சிறந்த வழிகள்...
பதிலளிநீக்குநன்றி தனபாலன்
நீக்குவாழ்க்கையில் குறை காண்பதை விடுத்து,வருவதை ஏற்றுக் கொண்டு ஆக்க பூர்வமாகச் செயல் படுவதே வாழ்வாங்கு வாழும் வழி! -- மிகச் சரி ...
பதிலளிநீக்குநன்றி கருண்
நீக்குநேர்மறையாகவே சிந்திக்கக் கற்றுக் கொள்கிறேன் ஐயா.நன்றி.
பதிலளிநீக்குநன்றி வல்லிசிம்ஹன்
நீக்குஎதிர்மறையான சிந்தனை,ஆக்க பூர்வமானதாக மாற தாங்கள் தந்த ஆலோசனைக் குறிப்பு அருமை. வாழ்த்துக்கள்!.
பதிலளிநீக்குநன்றி சபாபதி சார்
நீக்குaamaangayyaa....
பதிலளிநீக்குநன்றி சீனி
நீக்குசிறப்பான சிந்தனைகள். ஆக்கபூர்வமாக செயல்படுவோம்.
பதிலளிநீக்குநன்றி மாதேவி
நீக்குwell said.
பதிலளிநீக்குநன்றி அப்பாதுரை
நீக்குவாழ்க்கையில் குறை காண்பதை விட்டுவிட வேண்டும்
பதிலளிநீக்குநன்றி கண்ணதாசன்
நீக்கு
பதிலளிநீக்குஆக்க பூர்வமான பதிவு ..!
மீண்டும் நன்றி
பதிலளிநீக்குநேர்மறையான சிந்தனை இருந்தாலே நன்று....
பதிலளிநீக்குநல்ல பகிர்வுக்கு நன்றி சென்னை பித்தன் ஐயா.