தொடரும் தோழர்கள்

புதன், மார்ச் 25, 2015

கொலம்பஸ்.கொலம்பஸ்,விட்டாச்சு லீவு!



//அக்கரையில் தாயாய் என்னைப்பெற்றவள்!
இக்கரையில் என்னைத் தாயாய்ப் பெற்றவள்!
தலைமுறைப் புரிதல்களுக்கிடையில்
தடுமாறுகின்றன உறவுகள்!
கரைகளை இணைக்கும்
கவின்மிகுபாலமாய் இடையில் நான்!

நேற்று பாலமாயிருந்தவள்தான்
இன்று அக்கரையேகியுள்ளாள்
ஏனோ அதை மறந்துபோனாள்!
இன்று இக்கரையானவளே
நாளை பாலமாகுவாள்
பாவம் அதை அவள் அறியாள்!

இற்றுப்போகா வரம்பெற்றுவந்த பாலங்களால்
இறுக்கமாகும் இடைவெளிகள் யாவும்
இன்னும் பல தலைமுறைகள் கடந்தும்!//


இன்று முகநூலில் நான் படித்து ரசித்த திருமதி கீதா மதிவாணன் அவர்களின் கவிதை.
இரு தலைமுறைகளின் இடைவெளி நிரப்ப இடையில் உள்ள தலைமுறை பாலமாவதைப் பற்றி எழுதியிருக்கிறார்.

திங்கள், மார்ச் 23, 2015

இராமனின் பாப விமோசனம்

பாய்ந்தது ராமபாணம்

மாய்ந்தனள் அரக்கி தாடகை

மனதினுள் கலங்கினான் இராமன்

மாதைக் கொன்றது பாவமென்றெண்ணி

எப்படித் தொலைப்பது இப்பாவம்

இப்படி எண்ணி மருகினான் இராமன்

பாதையில் கல்லைக் கண்டான்

கோதையின் கதை சொன்னான் முனிவன்

பாதம் பதித்தான் ராமன்

கல் பெண்ணானதக் கணமே

பெண்ணைக் கொன்றவன் இன்று

பெண்ணுக்கு வாழ்வு தந்தான்-அகலிகை

சாப விமோசனம் அல்ல அது -ராமனின்

பாப விமோசனம்!

வெள்ளி, மார்ச் 06, 2015

தினம் ஒரு தினம்!



பெண்கள் தினம்

ஆண்கள் தினம்

அம்மா தினம்

அப்பா தினம்

குழந்தைகள் தினம்

சகோதரர் தினம்

சகோதரி தினம்

பாட்டி தாத்தா தினம்

காதலர் தினம்

உழைப்பாளர் தினம்

சொத்து தினம்

வறுமை தினம்

வக்கீல் தினம்

மருத்துவர் தினம்

ஆசிரியர் தினம்

மாணவர் தினம்

விவசாயி தினம்

சாப்பாடு தினம்

பசி தினம்

அநாதைகள் தினம்

பல நோய்கள் தினம்

தூக்க தினம்

கலை தினம்

இசை தினம்

நடன தினம்

தினம் தினம்

தினம் தினம்

தினம் தினம்...............

வாழ்த்துகள்  

எதிர்ப்புகள்

கவிதைகள்

கட்டுரைகள்

நடக்கட்டும் நாடகம்! 

(8 ஆம் தேதி வரை காத்திருப்பானேன்!இன்றே மகளிர் தின வாழ்த்துகளைத் தெரிவித்து விடுகிறேன்!)


திங்கள், மார்ச் 02, 2015

வலைச்சரக் காதல்!



நேற்று போய் விட்டது;நாளையை நினையுங்கள்

சரிதான்.

ஆனால் மனசு என்று ஒன்று இருக்கிறதே

ஆகவேதான் பழசையெல்லாம் நினைத்துப் பார்க்கிறேன்

தளிர்விட்ட காதலை மறக்க முடியுமா?

ஆனால் அவளோ பறந்து போனாளே!

என்னைத் தனிமரம் ஆக்கி விட்டு.
சிட்டுக்குருவியாய் சிறகடிக்கும் நினைவுகள்.

என் மன ஊஞ்சல் தனில் என்றும் ஆடும் அவள் உருவம்

நெஞ்சோடு கலந்த அவள் நினைவு

மின்னல் வரிகள் போல் தோன்றி மறைவதில்லை.

நிரந்தரமானது

திடங்கொண்டு போராடும் வலிமையின்றி

அவள் பிரிந்து போனாள்

அவள் மூச்சுக்காற்று எனக்கு மூங்கில்காற்றாகவே ஒலித்தது

அவள் நினைவுகள் என் நெஞ்சை 

மகிழ்நிறை  நெஞ்சாக்கி விட்டன.

மறக்க முடியுமா அவளை! 

பிற்சேர்க்கை: இது வலைப்பூக்களால் தொடுக்கப்பட்ட,காதலைப் பற்றிப் பேசும் ஒரு சரம்!அவ்வளவே..இதற்கும் வலைச்சரத்துக்கும் எந்த சம்பந்தமுமில்லை;நான் இந்த வார வலைச்சர ஆசிரியரும் இல்லை!இரு முறை அம்முட்கிரீடத்தைச் சுமந்து விட்டேன்! இச்சிட்டுக்குருவிக்கு இப்போது அப்பனங்காயைத் தாங்கும் வலிமையில்லை.
திங்களன்று இப்பதிவு வெளியானது சிறு குழப்பத்தை ஏற்படுத்தி விட்டதோ என அஞ்சுகிறேன்.மன்னித்தருள்க!