தொடரும் தோழர்கள்

திங்கள், மார்ச் 02, 2015

வலைச்சரக் காதல்!



நேற்று போய் விட்டது;நாளையை நினையுங்கள்

சரிதான்.

ஆனால் மனசு என்று ஒன்று இருக்கிறதே

ஆகவேதான் பழசையெல்லாம் நினைத்துப் பார்க்கிறேன்

தளிர்விட்ட காதலை மறக்க முடியுமா?

ஆனால் அவளோ பறந்து போனாளே!

என்னைத் தனிமரம் ஆக்கி விட்டு.
சிட்டுக்குருவியாய் சிறகடிக்கும் நினைவுகள்.

என் மன ஊஞ்சல் தனில் என்றும் ஆடும் அவள் உருவம்

நெஞ்சோடு கலந்த அவள் நினைவு

மின்னல் வரிகள் போல் தோன்றி மறைவதில்லை.

நிரந்தரமானது

திடங்கொண்டு போராடும் வலிமையின்றி

அவள் பிரிந்து போனாள்

அவள் மூச்சுக்காற்று எனக்கு மூங்கில்காற்றாகவே ஒலித்தது

அவள் நினைவுகள் என் நெஞ்சை 

மகிழ்நிறை  நெஞ்சாக்கி விட்டன.

மறக்க முடியுமா அவளை! 

பிற்சேர்க்கை: இது வலைப்பூக்களால் தொடுக்கப்பட்ட,காதலைப் பற்றிப் பேசும் ஒரு சரம்!அவ்வளவே..இதற்கும் வலைச்சரத்துக்கும் எந்த சம்பந்தமுமில்லை;நான் இந்த வார வலைச்சர ஆசிரியரும் இல்லை!இரு முறை அம்முட்கிரீடத்தைச் சுமந்து விட்டேன்! இச்சிட்டுக்குருவிக்கு இப்போது அப்பனங்காயைத் தாங்கும் வலிமையில்லை.
திங்களன்று இப்பதிவு வெளியானது சிறு குழப்பத்தை ஏற்படுத்தி விட்டதோ என அஞ்சுகிறேன்.மன்னித்தருள்க!

21 கருத்துகள்:

  1. வணக்கம்
    ஐயா
    வலைச்சர ஆசிரியர் பணிக்கு எனது வாழ்த்துக்கள் ஐயா தொடருகிறேன் பதிவுகளை. த.ம 2
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  2. அட...!

    அடுத்த ஆசிரியர் நீங்கள் தான்...

    ஹலோ சீனா ஐயா........

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. டி டி!அவ்வளவெல்லாம் நான் படிப்பதில்லை.பிற்சேர்க்கை பாருங்கள்
      நன்றி

      நீக்கு
  3. நெஞ்சம் நினைத்ததை வலைப்பூக்களில் சரம் தொடுத்து கொஞ்சமாக சொல்லிவிட்டீர்கள். இரசித்தேன்!

    பதிலளிநீக்கு
  4. வணக்கம்...
    வலைச்சரம் எழுத பதிவர்கள் பற்றாக்குறையா இருக்காங்க.....
    தேடி தேடிப்பிடித்து களைத்து போயிட்டோம்...
    அடுத்த வாரம் நீங்க ஆசிரியரா பொறுப்பேற்று எழுதுங்களேன் ஐயா???

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பிரகாஷ்!நன்றி .பதில் பதிவின் பிற்சேர்க்கையிலேயே இருக்கிறதே!

      நீக்கு
  5. வலைச்சரத்தில் எழுதுகிறீர்களோ என்று நினைத்தேன்! வலைப்பூக்களை கவிதையில் கோர்த்தமை சிறப்பு! நன்றி!

    பதிலளிநீக்கு
  6. வலைச் சரப் பின்னல் நன்று

    பதிலளிநீக்கு
  7. நண்பர்களின் பெயர்களில் பதிவு நன்று.

    பதிலளிநீக்கு
  8. ஜோக்காளியா இருந்த என்னை சீக்காளி ஆக்கிடுதே ,உன் நினைவு....கடைசி வரியா இதையும் சேர்த்துக்குங்க :)
    த ம 8

    பதிலளிநீக்கு
  9. இந்த கலைச்சரத்தில் மகிழ்நிறையும் இருப்பது என்னை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்துகிறது. மிக்க நன்றி சார்:)

    பதிலளிநீக்கு
  10. தங்களை வலைச்சரத்தில் பலரும் அறிமுகம் செய்தோரினை மறவாமல் ஒரு வலைச்சரம் தொடுத்துவிட்டீர்கள் ஐயா.அருமைக்கவி.

    பதிலளிநீக்கு
  11. வலைப்பூக்களின் பெயர்களை இணைத்து அழகான ஒரு பதிவு. அதில் எனது வலைப்பூவும் இடம் பெற்றிருப்பதில் மகிழ்ச்சி

    பதிலளிநீக்கு
  12. தங்களின் தளத்திற்கு முதல் முறையாக வருகிறேன் அய்யா, நானும் வலைச்சரம் என்று நினைத்துதான் உள்ளே வந்தேன்.
    கவிதை அருமை. அதிலும் வலைபூக்களை இணைத்தது பிரமாதம்.
    த ம 12

    பதிலளிநீக்கு