தொடரும் தோழர்கள்

திங்கள், மார்ச் 23, 2015

இராமனின் பாப விமோசனம்

பாய்ந்தது ராமபாணம்

மாய்ந்தனள் அரக்கி தாடகை

மனதினுள் கலங்கினான் இராமன்

மாதைக் கொன்றது பாவமென்றெண்ணி

எப்படித் தொலைப்பது இப்பாவம்

இப்படி எண்ணி மருகினான் இராமன்

பாதையில் கல்லைக் கண்டான்

கோதையின் கதை சொன்னான் முனிவன்

பாதம் பதித்தான் ராமன்

கல் பெண்ணானதக் கணமே

பெண்ணைக் கொன்றவன் இன்று

பெண்ணுக்கு வாழ்வு தந்தான்-அகலிகை

சாப விமோசனம் அல்ல அது -ராமனின்

பாப விமோசனம்!

10 கருத்துகள்:

  1. அருமை ஐயா நல்ல வர்ணனை.
    தமிழ் மணம் 2

    பதிலளிநீக்கு
  2. வணக்கம்
    ஐயா.

    சொல்லிய விதம் சிறப்பு பகிர்வுக்கு நன்றி த.ம4

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  3. அருமை.

    அடுத்து சீதையைத் தீக்குளிக்கச் சொன்னதற்கு என்ன பாப விமோசனமோ!

    பதிலளிநீக்கு
  4. விளக்கம் பொருத்தமே! நலமா !?

    பதிலளிநீக்கு
  5. அருமையான விளக்கம்! சிறப்பான பார்வை! நன்றி!

    பதிலளிநீக்கு
  6. கதை சொல்லிய கவிதை அருமை

    பதிலளிநீக்கு