தொடரும் தோழர்கள்

திங்கள், ஆகஸ்ட் 27, 2012

மன நிறைவுடன் விடை பெறுகிறேன்!


 
வாழ்க்கையில் சில நேரங்களில் சில தவிர்க்க முடியாத முடிவுகள் எடுக்க வேண்டியதாகிறது.

அலகாபாத்தில் நான் பணி புரிந்து வந்த நேரத்தில் ,அக்டோபர் 2000 இல் பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்று விடலாம் என அந்த ஆண்டுத் தொடக்கத்திலேயே முடிவு செய்து ஏற்பாடுகளைத் தொடங்கி விட்டேன். அதற்குக் காரணம் பணியில் ஏற்பட்ட சலிப்போ வெறுப்போ அல்ல.நான் எப்போதுமே என் வேலையை நேசித்தே வந்தேன்.பணியில் மன நிறைவுடன் தான் இருந்தேன். ஆனால் வட இந்தியாவின் கடுங்குளிர் என் அன்னைக்கு  ஒத்துக் கொள்ளவில்லை. உறவுகளைப் பிரிந்து தனிமையில் அங்கு இருப்பது அவர்களுக்குக் கடினமாக இருந்தது.எனவே பணி ஓய்வு என முடிவெடுத்தேன். என் நல்லூழ்,நான் அதைச் செயல் படுத்தும் முன்னரே,வங்கியில் ஒரு சிறப்பான விருப்ப ஓய்வுத்திட்டம் வரப்போகிறது என்ற தகவல் கிடைத்து விட்டது.எனவே அத்திட்டத்தின் கீழ் விருப்ப ஓய்வு பெற்று,மே 2001 இல் இனிய சென்னைக்குத் திரும்பினேன்.மன நிறைவுடன் தான்   ஓய்வு பெற்றேன் .நான் செய்ய எண்ணிய பல செயல்களை அதன் பின்தான் என்னால் செய்ய முடிந்தது.

அது போல் ஒரு கால கட்டம் இப்போது.ஒரு முடிவு எடுக்க வேண்டிய நிர்ப்பந்தம்.இப்போதும் மிகுந்த மனநிறைவுடன் ஒரு முடிவு எடுத்துள்ளேன்.என் பதிவுலக வாழ்க்கையில் மிக மகிழ்ச்சியான  ஒரு நாள் நேற்று.வெற்றிகரமாக நடந்து முடிந்த பதிவர் சந்திப்பில் கலந்து கொள்ளும் வாய்ப்புக் கிடைத்ததை நான் மிகப் பெரிய பாக்கியமாக நினைக்கிறேன்.அதையே என் பதிவு வாழ்க்கையின் உச்சமாக நினைக்கிறேன்.

           

அந்த மன நிறைவுடன் பதிவிலிருந்து ஓய்வு பெறுகிறேன்.இது ஒரே நாளில் எடுத்த முடிவல்ல.. கிட்டத்தட்ட ஒரு மாதத்துக்கும் மேலாக யோசித்து எடுத்த முடிவு.சரியான நேரம் இப்போதுதான் வந்திருக்கிறது.

எனக்கு  ஆதரவு தந்து,என்னை ஊக்குவித்து,என்னைப் பாராட்டி,எனக்கு வாழ்த்துச் சொல்லி என்னை வளர்த்து விட்ட அனைத்துப் பதிவுலக உறவுகளுக்கும் நன்றி.

இனி எழுதப்போவதில்லையே தவிர,நிச்சயம் தொடர்பில் இருப்பேன்.உங்கள் பதிவுகளைப் படிப்பேன்;வாக்களிப்பேன். கருத்துச் சொல்வேன்.

ஒரு வேளை,சில காலம் கடந்தபின் மீண்டு வரலாம்;மீண்டும் வரலாம்.

அது அவன் கையில்.

நன்றி.

(விழா வெற்றிக்குப் பின் பலர் என்னிடம் பாரட்டுச் சொல்லி விட்டார்கள். எல்லோருக்கும் ஒன்று சொல்வேன்.என் பங்களிப்பு,இந்தியா உலகத்துக்கு என்ன கொடுத்ததோ அதுதான்—பூஜ்யம்.புலவர் இராமானுசம் என்ற மூத்த இளைஞரின்  எண்ணம்,அவரது உழைப்பு,ஆரம்ப முதல் அவருடன் இணைந்து உழைத்த மதுமதி,பாலகணேஷ்,பின்னர் கைகோத்த இளைஞர் படை, இவர்களது திட்டமிடல்,வாராந்திர ஆலோசனைக் கூட்டங்கள்,அயராத உழைப்பு இவையே வெற்றிக்குக் காரணம்.கடைசிக் கூட்டம் தவிர எந்த ஆலோசனைக் கூட்டத்திலும் நான் கலந்து கொள்ளவில்லை;எனக்கான காரணங்கள் ஆயிரம் இருக்கலாம்.ஆனால் இதுவே உண்மை. ஆயினும் இத்தகைய ஒரு விழாவின் ஒரு அங்கமாக இருந்தோம் என்பதே எனக்கு மகிழ்ச்சி, பெருமை,மனநிறைவு.இனி வரப்போகும் சந்திப்புகளுக்கெல்லாம் இதுவே ஒரு முன்னுதாரணமாக இருக்கப்போகிறது)

வாழ்த்துகளுடன்

சென்னை பித்தன்

56 கருத்துகள்:

  1. என்ன திடீர்னு இப்படி ஒரு விடைபெறல்? உங்களுக்கான காரணங்கள் இல்லாமல் இப்படி ஒரு முடிவுக்கு வரமாட்டீர்கள் என்பதை அறிவேன். காலம மீண்டும் உங்களை ஒருதினம் எழுதச் செய்யும். எப்போதும் தொடர்பில் இருப்பீர்கள் என்பதில் மிக்க மகிழ்ச்சி,

    பதிலளிநீக்கு
  2. உங்களை முதன் முதலில் சந்தித்தது நேற்றைய விழாவில் தான்... உங்களது பதிவுகளை படித்து ரசித்து இருக்கிறேன் ஆனால் பின்னுட்டம் இட்டதில்லை... என்னுடைய முதல் பின்னூட்டம் உங்களின் ஒய்வு முடிவை அறிவிற்கும் போது தான அமைய வேண்டும். கனக்கிறது மனது உங்களின் இந்த ஒய்வு முடிவால். உங்கள் பதிவிற்கு இது ஒரு இடைகால குளிர் விடுமுறை (கோடை முடிந்ததால்).... உங்கள் விருப்ப ஓய்விற்கு என்னுடைய வாழ்த்துக்கள்... ஒய்வு முடிந்து மீண்டு வர மீண்டும் வர விழைகிறேன்..... அன்புடன் சமீரா...

    பதிலளிநீக்கு
  3. விடை பெறுவது தற்காலிகம் என நினைக்கிறேன். திரும்பவும் வந்து தினம் பதிவில் பதிந்து எல்லோரையும் மகிழ்விக்க வேண்டுகிறேன்.

    பதிலளிநீக்கு
  4. என்ன ஐயா! இப்புடி சொல்லிட்டீங்க! இப்பத்தான் நான் உங்க படைப்புகளை வாசிக்க ஆரம்பிச்சு இருக்கேன்! இதுக்குள்ளே ஓய்வா? வெல்கம் பேக் வெரி சூன்! பதிவர் திருவிழா சிறப்பாக நடத்தியமைக்கு எனது நன்றிகள்! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  5. //ஒரு வேளை,சில காலம் கடந்தபின் மீண்டு வரலாம்;மீண்டும் வரலாம்.//
    விரைவில் மீண்டும் வாருங்கள் ஐயா! அதுவரையில் இந்த தளத்தை அப்படியே விடாமல், நீங்கள் இது வரை பதிவிட்டவற்றில் இருந்து உங்கள் மனதுக்கு நெருக்கமான பதிவுகளை மீள்பதிவிடலாமே?!

    பதிலளிநீக்கு
  6. நான் இதனை ஒரு தற்காலிக மற்றும் ஒரு நீண்ட விடுப்பு

    என்ற அளவிலே தான் எடுத்துக்கொள்கிறேன்.

    தாங்கள் எப்போது வேண்டுமானாலும் மீண்டு [ ம் ]

    இரண்டாவது ரவுண்டு வந்து எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளலாம்.

    ஏனெனில் தற்போது இது அனைவருக்கும்

    ஒரு சக்கரம் போன்ற சுழற்சிக்காலமாகவே உள்ளது.

    நன்றி!

    பதிலளிநீக்கு
  7. வேண்டாம் அய்யா இந்த முடிவு .. முடிவை மறு பரிசிலினை செய்யுங்கள்

    பதிலளிநீக்கு
  8. வேண்டாம் பித்தரே! ஒத்துக் கொள்ள மாட்டோம்! முடிவை மாற்றியே ஆக வேண்டும் சற்று தள்ளிப்போடுங்கள் நானும் உங்களோடு வருவேன் வலை உலகிற்கு, நாம செய்ய வேண்டிய பணிகள் இன்னும் சில உள்ளன

    பதிலளிநீக்கு
  9. பதிவர் சந்திப்பு வெற்றிபெற்றதிற்க்கு வாழ்த்துக்கள்!

    நிறைய எழுதாவிட்டாலும் அவ்வப்போது எழுதுங்கள் ஐயா!

    பதிலளிநீக்கு
  10. சிறிது காலம் ஓய்வு எடுத்துவிட்டு மீண்டும் வாருங்கள் அய்யா ... நாங்க காத்திருக்கிறோம் ...

    பதிலளிநீக்கு
  11. உங்களை இழக்க அதிகம் பேர் விரும்ப மாட்டார்கள்.. பதிவுலகுக்கு நான் புதியவன்.. என் (போன்றவர்கள்) ரசனை வேறு என்றாலும், உங்கள் போன்ற மூத்த அன்புள்ளம் கொண்ட பதிவர்கள் தான் கண்டிப்பாக எல்லோர் மனதிலும் இருக்கும் ஆணிவேர்கள்..

    ஆணிவேருக்கு சிறிது நேரம் மட்டுமே ஓய்வு எடுக்க நேரம் உங்கள் குடும்பத்தில் இருந்து தருகிறோம்.. சீக்கிரம் வாருங்கள்.. நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
  12. ஆமாம் ஐயா எங்களுக்கு எல்லாம் உற்சாகமளிக்கும் தங்கள் பதிவுலக நாட்களுக்கு சற்று குறைவாகவே விடுப்பு எடுத்துக் கொள்ளுங்கள் தயவுசெய்து தங்களை சந்தித்ததில் மிக்க மிகிழ்வடைந்தேன்.

    பதிலளிநீக்கு
  13. ஏன் ஐயா இப்படி சொல்கிறீர்கள்..வேண்டாமே இந்த விபரீத முடிவு...எழுதுங்கள் எழுதுங்க...ஓய்வு என்பது இளைஞர்கள் எடுக்கும் ஒன்று..அதனால் உங்களுக்கு தேவைப்படாது இந்த தேவையில்லா ஒரு ஓய்வு. உங்களின் ஓய்வினால் பாதிக்கப்படுவது தாங்கள் அல்ல...எங்களை போல் உள்ள அப்பாவிகள் தான்..அதை மனதில் வைத்து எங்கள் மேல் இறக்கம் காட்டுங்கள் ஐயா...

    ஈரநெஞ்சம் உள்ளவர் தாங்கள் அது எங்கள் அனைவருக்கும் தெரிந்ததே.. தாங்கள் சொன்னதை தயவுசெய்து திரும்ப பெற்றுக்கொள்ளுங்கள்... இல்லையென்றால் நாங்கள் ஓயமாட்டோம்... பதிலாக ஒன்றுசேர்ந்து வருவோம் உங்களை நாடி...

    பதிலளிநீக்கு
  14. ஐ ஆம் பேக் என்று அடையாறு அஜித் வருவார் என நம்புவோம்!!

    பதிலளிநீக்கு
  15. உங்களைப் போன்ற அனுபவமிக்கவர்களின் பதிவுகளில் தான் சில சில அறிவுறைகளையும் அனுபவங்க்களையும் பெற்றுக் கொண்டோம்...

    உங்களின் ஓய்வு மிகவும் மனதினை வேதனைப் படுத்துகிறது தமிழ் வலையுலகில் இருந்த ஒரு சில அனுபவசாலிகளில் இருந்து நீங்களும் விடை பெற்றால் வலையுலகம் தனித்துவிடும் என நினைக்கிறேன்

    உங்கள் ஆலோசனைகளும் கருத்துக்களும் இப்போதிருக்கும் பதிவர்களுக்கு மிகவும் அவசியம் கருத்திடுவேன் என்று சொன்னதில் மிக்க சந்தோஷம்..

    ஆனாலும் என்னுடைய சிறிய விண்ணப்பம் இப்போது போன்று ஒவ்வொரு நாளும் பதிவிடாமல் இரண்டு வாரத்துக்கு ஒரு முறை அல்லது மாதத்துக்கு ஒரு முறையாவது பதிவிடுங்கள் ஐயா...

    எதுக்கும் உங்கள் முடிவினை மறு பரிசீலை செய்தால் இன்னுமொரு சிறந்த முடிவு கிடைக்கும் என நினைக்கிறேன்

    பதிலளிநீக்கு
  16. பதிவர் நிகழ்வு தொடர்பாக நிறைய விளக்கங்கள் கூறி படங்கள் இணைப்பீர்கள் என எதிர்பார்த்தேன் ஐயா... ஏமாற்றமே மிஞ்சியது பார்ப்போம் ஏனைய நண்பர்களின் பதிவுகளிலாவது கிடக்குமா என...

    பதிலளிநீக்கு
  17. அய்யா உங்களது முடிவை தயவுசெய்து மறுபரிசீலனை செய்யுங்கள்.

    பதிலளிநீக்கு
  18. அன்புள்ள அய்யா! உங்களின் முடிவு எனக்கு வருத்தம் அளிக்கிறது... முடிவு பற்றி சற்று யோசிக்கவும் அய்யா... இருந்தும் உங்கள் முடிவு தற்காலிக நிறுத்தம் என்பது ஆறுதல்.. பதிவு விழா சிறப்பாக அமைந்தமைக்கு மகிழ்ச்சி. நான் அயல்நாட்டில் பணியில் இருப்பதால் என்னால் கலந்து கொள்ள இயலவில்லை. வருந்துகிறேன். இருந்தும் மகிழ்ச்சியும் ஆனந்தமும் நல்ல நிறைவுடன் இனிதே நிகழ்வு முடிந்தமைக்கு.. அனைவருக்கும் பாராட்டுக்கள்!

    என் பதிவில் "வேண்டாம் தூக்கு கயிறு"..

    பதிலளிநீக்கு
  19. உங்களை சந்தித்ததில் பெரும் மகிழ்ச்சி ஐயா...
    மேலே தாங்கள் இணைத்திருக்கும் படம் நான் எடுத்தது என்பதில் எனக்கொரு சந்தோசம்...

    மற்றபடி, மெட்ராஸ் பவனை வழிமொழிகிறேன்....

    பதிலளிநீக்கு
  20. //ஒரு வேளை,சில காலம் கடந்தபின் மீண்டு வரலாம்;மீண்டும் வரலாம்.

    அது அவன் கையில்.//

    நிச்சயமாக வருவீர்கள் ஐயா, வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  21. திரும்பவும் வந்து தினம் பதிவில் பதிந்து எல்லோரையும் மகிழ்விக்க வேண்டுகிறேன்.

    பதிலளிநீக்கு
  22. ஓய்வு தேவை என்பதில் சந்தேகமில்லை. நல்ல ஓய்வு எடுத்துக் கொண்டாலும் அவ்வப்போது எழுதுங்கள் . அபபடி விலகி விட முடியாது என்றே நினைக்கிறேன். எழுதிய கைகளுக்கு சும்மா இருக்கப் பிடிக்காது!

    பதிலளிநீக்கு
  23. என்னங்கய்யா திடீர்ன்னு இப்படி சொல்லிட்டீங்க. நேற்று தங்களை சந்திச்சதில் ரொம்ப மகிழ்ச்சியா இருந்தேன், என மக தூயாகூட, எனக்கொரு தாத்தா கிடைச்சிருக்கார்ன்னு தங்களை பற்றி சொல்லிக்கிட்டு இருக்கும் நேரத்தில் இப்படி முடிவெடுத்துட்டீங்களே. சரியான காரனம் இல்லாமல் இப்படி ஒரு முடிவெடுக்க மாட்டீங்க. சீக்கிரம் திரும்பி வாங்க அடையாறு அசல் அஜீத்தே.

    பதிலளிநீக்கு
  24. பதிவுலக அஜித் அவர்களே! திரும்ப வர வேண்டும்.


    சந்திப்பை அருமையாக நடத்தி முடித்ததில் தங்கள் பங்கு பெரும்பான்மையானது ஐயா..... வாழ்த்துக்கள்..


    நன்றி....

    பதிலளிநீக்கு
  25. தங்களை சந்தித்ததில் பெரு மகிழ்ச்சி

    பதிலளிநீக்கு
  26. அண்ணே என்ன ஆச்சு. ஒரு மாதமா இது பற்றி யோசித்து முடிவெடுத்ததாக சொல்கிறீர்கள். கொஞ்சம் சலிப்பு ஏற்பட்டிருந்தால், இடைவெளி விடலாமே...

    தொடர்பில் இருக்கவும்.

    பதிலளிநீக்கு
  27. வணக்கம் அய்யா...நீங்கள் தொடர்ந்து எழுத வேண்டும் என்பது என்னைபோன்ற பல பதிவர்களின் விருப்பம்...நீங்கள் விடைபெறும் முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும் அய்யா...

    பதிலளிநீக்கு
  28. அவ்வப்போது கண்டிப்பாக எழுதுவீர்கள் என்னும் நம்பிக்கை எனக்கு உள்ளது ஐயா... நன்றி...

    பதிலளிநீக்கு
  29. அய்யா..தங்களைப் போன்றோர் தொடர்ந்து எழுத வேண்டும்..இளைய தலைமுறையை உங்களைப் போன்றோர் வழிநடத்தி அழைத்து செல்ல வேண்டும்..

    பதிலளிநீக்கு
  30. வாழ்த்துக்கள்! அடுத்த சென்னைப் பயணத்தில் உங்களை சந்திக்கும் எண்ணத்தோடு.

    பதிலளிநீக்கு
  31. வணக்கம் பாஸ் உங்கள் முடிவு பற்றி கருத்து கூற எனக்கு தகுதியிருப்பதாக தெரியவில்லை.ஆனால் இது ஒரு கடினமான முடிவு நானும் முன்பு ஒரு முறை ஓய்வு அறிவித்து சிலவாரங்களிளே திரும்பி வந்துவிட்டேன்.

    மீண்டும் நீங்கள் எழுதவருவீர்கள் என்ற நம்பிக்கையில் ஒரு வாசகனாக காத்திருக்கின்றேன்
    அன்புடன்
    கே.எஸ்.எஸ்.ராஜ்

    பதிலளிநீக்கு
  32. தற்காலிக ஓய்வு தானே...! தொடர்ந்து உங்கள் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் தந்து கொண்டிருக்க வேண்டுகிறேன். எல்லா அனுபவங்களையும் எல்லோராலும் பெற இயலாது.

    பதிலளிநீக்கு
  33. பின்னூட்டங்கள்தான் நம்ம ஏரியா!திரும்ப கண்ணில் படுவீர்கள் என்ற எதிர்பார்ப்புடன் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  34. முடிவை மறு பரிசீலிக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
  35. வாழ்த்துக்கள்! அடுத்த சென்னைப் பயணத்தில் உங்களை சந்திக்கும் எண்ணத்தோடு.


    சரியான வார்த்தைகள், உங்கள் உழைப்புக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  36. சற்று ஓய்வுக்குப் பின் வாருங்கள்.

    பதிலளிநீக்கு
  37. Season of retirements. Before I could recover from the shock of VVSs retirement another unpleasant shock. I have thoroughly enjoyed all your contributions with varied themes . Your versatility is remarkable . You could excel in short stories / poems in equal measure . Humor was your forte . I enjoyed especially some of the blogs with subtle political overtones like " two leaves"/ Manjal thundu kaanavillai // annavirku mutham kodutha nadigai/karunanithian nadippu detc etc. I also enjoyed the way titles were given to some of the blogs that were tantalising/seductive and which ultimately had something different to offer. You were a poet/writer/philosopher/saint/accomplished artist all rolled into one.
    You have chosen to take sabbatical (hopefully)
    after a hectic schedule and probably you need a well deserved rest.
    I am sure you would review your decision soon and don a different avatar to enthrall all.
    With best wishes for introspection,
    An envious friend , Vasudevan

    பதிலளிநீக்கு
  38. என்னால் வர முடிய வில்லை என்ற வருத்தம் தான். உங்கள் அனைவரையும் நேரலையில் கண்டது மகிழ்ச்சி, உங்கள் புகைப்படம் கண்டேன், வாழ்த்துக்கள் தோழா, என் தளத்திற்கும் கொஞ்சம் vangalen
    நான் பதிவுலகிற்கு ஒன்ற மாத குழந்தை.

    நன்றி

    பதிலளிநீக்கு
  39. அண்மையில்தான் நான் “ விடைபெறும் பதிவர்கள் “ என்று ஒரு பதிவு ( Friday, 10 August 2012 ) எழுதினேன். ஒரு மாதம் கூட ஆகவில்லை. எனது வலைப் பதிவுகளின் பக்கங்களில் வந்து எனக்கு ஊக்கம் தந்த நீங்களே விடைபெறுவது எனக்கு நெருடலாக உள்ளது. உங்கள் சூழ்நிலை! உடல்நிலை! இவைகளில் கவனம் செலுத்தவும்.

    // இனி எழுதப்போவதில்லையே தவிர,நிச்சயம் தொடர்பில் இருப்பேன்.உங்கள் பதிவுகளைப் படிப்பேன்;வாக்களிப்பேன். கருத்துச் சொல்வேன்.ஒரு வேளை,சில காலம் கடந்தபின் மீண்டு வரலாம்;மீண்டும் வரலாம். //

    என்ற தாங்கள் சொன்ன வார்த்தைகளில் உள்ள “ மீண்டும் வரலாம் “ என்ற வரிகளின்படி மீண்டும் வரவேண்டும் என்பதே அனைவரது எண்ணமும் ஆகும்.


    பதிலளிநீக்கு
  40. ayya!

    naan sinna paiyal ungalai -
    varpuruththa koodaathu...?

    meendum ezhuthanum!

    பதிலளிநீக்கு
  41. எல்லோரும் எதிர்ப்பார்ப்பது போல் மீண்டும் நீங்கள் வரணும்..

    பதிலளிநீக்கு
  42. விழா சிறப்பாக நடந்ததற்கு வாழ்த்துகள்.

    சற்றே ஓய்வெடுத்துக்கொள்ளுங்கள் வேண்டாமெனச் சொல்லவில்லை. ஆனால் திரும்பவும் பதிவுகள் எழுதியே ஆகவேண்டும்! இது வேண்டுகோளில்லை... அன்புக் கட்டளை!

    பதிலளிநீக்கு
  43. ஸலாம் சகோ.சென்னை பித்தன்,

    ///இனி எழுதப்போவதில்லையே தவிர,நிச்சயம் தொடர்பில் இருப்பேன்.உங்கள் பதிவுகளைப் படிப்பேன்;வாக்களிப்பேன். கருத்துச் சொல்வேன்.

    ஒரு வேளை,சில காலம் கடந்தபின் மீண்டு வரலாம்;மீண்டும் வரலாம்.

    அது அவன் கையில்.///

    ---அப்படின்னா, நிச்சயம் திரும்பி வருவீங்க என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது..! இறைநாடினால்... மீண்டும் வந்து வழக்கம்போல கலக்குங்க சகோ..!

    பதிலளிநீக்கு
  44. வருங்கால வருகைக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  45. எல்லோரும் தங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டதாலும் அதுவே என் கருத்தாக இருப்பாதாலும் அதையே மீண்டும் சொல்லாமல், மீண்டும் நீங்கள் இணையதளம் வந்து பதிவுகளை இடுவீர்கள் என்ற நம்பிக்கையோடு உங்களை வாழ்த்தி வணங்கி விடை கொடுக்கிறேன். வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  46. ஐயா உங்களை போல சுறுசுறுப்பான, மகிழ்வான ஜாலியான எங்களுடன் சரிக்கு சமமாய் ஒரு தோழர் போல் பழகும் பெரியவர் எங்களுக்கு கிடைப்பது கடினம். உங்களோடு இதுவரை பழகலை ; இனி நிறைய பழகனும் என நினைக்கும் போது இப்படி அறிவிப்பது சரியா? அப்புறம் போனில் பேசுகிறேன்

    பதிலளிநீக்கு
  47. பின்னூட்டமிட்ட அனைத்து அன்பு உறவுகளுக்கும் நன்றி. தனித்தனியாகப் பதில் அளித்து நன்றி சொல்லியிருக்க வேண்டும்;ஆனால் நேற்று மதியம் முதல் சிரமப்படுத்தும் கழுத்து வலியால் அவ்வாறு செய்ய இயலாமல் போய் விட்டது. மன்னிக்கவும்.

    சில தவிர்க்க இயலாத காரணங்களால் இந்த முடிவு எடுக்க வேண்டியதாயிற்று.ஆயினும் நானே சொன்னது போல் நிலைமை சீரான பின் ,இறை அருளால் மீண்டும் எழுதத் துவங்கலாம் அதுவே நான் அவனிடம் வேண்டுவதும்.

    அனைவரின் எண்னங்களையும் படித்து நான் மிக நெகிழ்ந்து போயிருக்கிறேன்.வெளியூரிலிருந்து தொலைபேசி வாயிலாகவும் சிலர் தொடர்பு கொண்டு தங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டார்கள்.இத்தகைய பயன் கருதா அன்பு உறவுகளைப் பெறுவதற்கு நான் என்ன தவம் செய்தேனோ?

    நன்றி,நன்றி ,நன்றி

    நிச்சயம் தொடர்பில் இருப்பேன்!

    பதிலளிநீக்கு
  48. அனுபவங்களை
    அழகாய் பதிந்து
    அடுத்தவருக்கு உதவுதல்
    அருமையன்றோ

    அதையேன் நிறுத்துவது
    ஆட்சேபனை

    விழாவில் இனிய சந்திப்பு

    நன்றி

    பதிலளிநீக்கு
  49. இனி புதிதாய்ப்பிறந்து வருவீர்களென்ற நம்பிக்கைகளுடன் நா(ன்)ங்கள்.

    பதிலளிநீக்கு
  50. உடல் நிலைய பாருங்கன்ணே முதல்ல...அப்புறம் இதை பாத்துக்களாம்...நீங்க மீண்டும் வரும் நாளை எதிர் பார்த்துக்கொண்டு இருக்கிறோம்..

    பதிலளிநீக்கு
  51. அன்புடையீர்,
    உங்களை பதிவர் விழாவில் சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சி.
    மீண்டும் பதிவுலகத்திற்கு சீக்கிரமே திரும்ப எல்லோருடனும் சேர்ந்து நானும் உங்களை அழைக்கிறேன்.
    பதிவர் விழா பற்றி எனது பதிவு:
    ranjaninarayanan.wordpress.com

    பதிலளிநீக்கு
  52. செல்லாது!செல்லாது!சென்னை பித்தன் அய்யா!தீர்ப்பை மாத்தி சொல்லுங்க

    பதிலளிநீக்கு
  53. நீண்ட நாளாக வலைப்பக்கமே காணோம் என்று எதிர்பாராமல் தான் வந்தேன்..

    இப்படியொரு முடிவை நான் எதிர்பார்க்கவில்லை ஐயா.

    என்ன இருந்தாலும் தமிழ்வலையுலகில் தங்கள் பணி பாராட்டுதலுக்குரியது.

    பதிலளிநீக்கு