”ஹலோ குமார்?உங்க பையன் ஹரிஹரன் எப்படியிருக்கான்?”
இப்ப அவன் பேர் ஹரிஹரன் இல்லை;ஹரிராம்
பேரை மாத்திட்டீங்களா?ஏன்?
அவன் சரியாப் படிக்காம இருந்தான்.நண்பர் சொன்னார்.நியூமராலஜி படிப் பேரை மாத்தினாச் சரியாப் போகும்னு.அதான்,எண்கணித வல்லுநர் ஒத்தரைப் பார்த்தேன்
. அவர்தான் பேரை ஹரிராம்னு மாத்தினாச் சரியாப் போகும்னு சொன்னார்.
ஹரிஹரன் அப்படிங்கறது அவன் தாத்தா,உங்கப்பா பேரு இல்லையா?அதை மாத்தலாமா?
என்ன செய்ய?
சரியாப்படிக்கலே;அதனாலே பேரை
மாத்த வேண்டியதாப் போச்சு.
(மனசுக்குள்)நல்ல வேளை,ஹரிராம்னு, வச்சார். சொரிகரன், சொரிராம் அப்படின்னெல்லாம் வைக்கலே
இப்ப நல்லாப் படிக்கறானா?
பரவாயில்ல நல்ல முன்னேற்றம் இருக்கு.
பேரை
மாத்தினா பையன் நல்லாப் படிக்க ஆரம்பிச்சுடுவானா?
படிக்கறானே.
இவருக்குப் புரிய வைக்க முடியாது.
இதெல்லாம் ஒரு மனோதத்துவம் சார்ந்த விஷயம்தான்.பேரை மாற்றினால் நன்றாகப் படிப்பான் என்று சொன்னதும்
பையனுக்கே ஒரு நம்பிக்கை வந்து அதிகம் படிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்திருப்பான்.அல்லது இது ஒரு தற்காலிக நிகழ்வாக இருக்கலாம்.
அவ்வளவுதான்.
குழந்தை பிறக்கும்போது,மூதாதையர் பெயரை வைக்கிறார்கள்.அல்லது பஞ்சாங்கம் பார்த்து பிறந்த நட்சத்திரத்துக்கு ஏற்ற முதல் எழுத்தைத் தேர்ந்தெடுத்து வைக்கிறார்கள்.
இதெல்லாம் பயனின்றிப் போகிறதா?
குழந்தை பிறக்கும்போது,மூதாதையர் பெயரை வைக்கிறார்கள்.அல்லது பஞ்சாங்கம் பார்த்து பிறந்த நட்சத்திரத்துக்கு ஏற்ற முதல் எழுத்தைத் தேர்ந்தெடுத்து வைக்கிறார்கள்.
இதெல்லாம் பயனின்றிப் போகிறதா?
பெயரையோ,எழுத்துக்களையோ மாற்றுவதால் ஒருவரின் அடிப்படை அறிவுத்திறன் மாறி விடுமா?
தலை எழுத்து என்று சொல்கிறோமே அது
மாறி விடுமா?
சொல்லாமல் இருக்க
முடியவில்லை,எனவே சொன்னேன்.
“மாமன் மகள் என்று ஒரு பழைய
படம்.அதில் ஜெமினி கோழையாக இருப்பார்.அவருக்கு வீரம் வரவேண்டும்
என்பதற்காக அவர் பாட்டி, அவர் தாத்தாவின் தாயத்து,அதனால்தான் அவர் வீரராக இருந்தார் என்று சொல்லி
ஒரு தாயத்தை கட்டி விட ஜெமினி வீரராக மாறி விடுவார். சண்டையிடும்போது நடுவில்
தாயத்துதொலைந்து போக ,ஜெமினி பயப்பட ஆரம்பித்து விடுவார். அது போலத்தான் இதுவும்.நீங்கள்
ஒரு தாயத்துக் கட்டியிருந்தாலும் பலன் இருந்திருக்கும் என நினைக்கிறேன்.”
நண்பர் கோபித்துக் கொண்டு போய்விட்டார்.
ஒரு ரோஜாவை வேறு பெயரால் அழைத்தால் மணம்
குறையுமா?
சாக்கடையை, சந்தனம் என்று அழைத்தால் நறுமணம் வந்து விடுமா?
சாக்கடையை, சந்தனம் என்று அழைத்தால் நறுமணம் வந்து விடுமா?
பெயர் மாறினால் ஊழ் மாறுமா?
தெரிந்தவர்கள் சொல்லுங்கள்!
அருமையான கேள்விகள் ?.
பதிலளிநீக்குநன்றி இராஜசேகர்
நீக்குஇதனால் முடியும் என்று உளமாற ஒருவர் நம்பினால்
பதிலளிநீக்குஎதனாலும் முடியும் என்பதுதான் என்னுடைய கருத்து
சிந்திக்கத் தூண்டிப்போகும் அருமையான பதிவு
தொடர வாழ்த்துக்கள்
உண்மை.நன்றி ரமணி
நீக்குtha.ma 3
பதிலளிநீக்குநன்றி
நீக்குநானும் உங்கள் கட்சிதான். மனதில் தன்னம்பிககை ஊற வைக்க இது ஒரு உந்துசக்தி. அவ்வளவே...
பதிலளிநீக்குநன்றி கணேஷ்
நீக்கு// பெயர் மாறினால் ஊழ் மாறுமா?// எல்லாம் மன நிம்மதிக்க்காகவே என்ற உங்கள் பலரின் வாதத்தோடு நானும் ஒத்துப் போகிறேன்
நீக்குநிறைய பேர்கள் இப்படி மாறுகிறார்கள்...
பதிலளிநீக்குஅவர்களின் ஆங்கில எழுத்துகளிலே கண்டுபிடித்து விடலாம்... (இவர்களை இப்படி மாற்றியவர் நல்ல நிலைமையில் இருப்பார்...)
வாழ்த்துக்கள்... நன்றி… (TM 6)
பெயர் ராசியை விடுங்க, வாஸ்து பார்த்து, குறிப்பிட்ட பக்கம் பார்த்து உட்கார்ந்தால் தரித்திரம் என்று சொல்லி வைக்கப்பட்ட நிலையில் கழிவறையில் திரும்பி உட்கார்ந்து கொள்பவர்களும் உண்டு,
பதிலளிநீக்குநன்றி கோவி கண்ணன்
நீக்குதலைப்பிலேயே சொல்லிவிட்டீர்கள் இது சர்ச்சைக்குரிய பதிவு என்று. நிச்சயம் பின்னூட்டம் அதிகம் இருக்கும். என்னைப் பொறுத்தவரை பெயரை மாற்றுவதால் எந்த வித மாற்றமும் நிகழ வாய்ப்பில்லை என்பதே எனது நிலைப்பாடு.
பதிலளிநீக்குநன்றி சபாபதி சார்
நீக்குபெயர் மாறினால் ஊழ் மாறுமா?ஃஃஃஃஃஃ
பதிலளிநீக்குநிச்சயமாக இல்லை.தனி மனித முயற்சிக்கு இதெல்லாம் காரணமல்ல.சந்தனம் சந்னம் தான்.சாக்கடை சாக்கடை தான்.
மந்திர மாயம் ஏதுமில்லை.மனம் நினைத்தால் சாதிக்கலாம்.சிந்திக்க வைக்கும் ◌பதிவு ஐயா வாழ்த்துக்கள்.
நன்றி அதிசயா
நீக்குஎனக்கு இதில் எல்லாம் நம்பிக்கை இல்லைங்க உழைக்கனும் வாழ்க்கையில முன்னுக்கு வரனும் என்று நினைப்பவர்கள் இதெல்லாம் யோசிக்க மாட்டாங்க.
பதிலளிநீக்குநன்றி சசிகலா
நீக்குஎனக்குத் தெரிந்த நபர் ஒருவர் பத்தாம் வகுப்பில் மதிப்பெண்கள் நிறைய வாங்க வேண்டுமென்று மகனின் பேரை மாற்றி பதிவே செய்துவிட்டார்.கொடுமை..
பதிலளிநீக்குநன்றி மதுமதி
நீக்குபெயரை மாற்றுவதால் எந்த வித மாற்றமும் நிகழ வாய்ப்பில்லை
பதிலளிநீக்குநன்றி சுவனப் பிரியன்
நீக்குஇதுவும் ஒரு மூட நம்பிக்கை தான். எனக்கு தெரிந்து பெயர் மாற்றியவர்கள். பாஸ்போர்ட் எடுக்கும் போது ஸ்கூல் சர்டிபிக்கேட்டில் ஒரு பெயர். ஐடி யில் ஒரு பேர். மேலும் பையன் பேர் மாத்தினா பத்தனுன்னு அப்பாவும் பேர் மாத்தி வைச்சு இன்னும் படு குழப்பம். இன்னொன்னு பெயர் மாத்தினா மட்டும் போதாம் அப்படியே கூப்பிடனும் அதே ஸ்பெல்லிங்கோட கையெழுத்து வேற போடனும் இதுக்கு நிறைய ரூல்ஸ் வேறு உண்டு.
பதிலளிநீக்குநன்றி கலாகுமரன்
நீக்குஎன்னால் முடியும் என நினைத்து செயல்பட்டால் முன்னேறலாம்.
பதிலளிநீக்குநன்றி மாதேவி
நீக்குசத்தமில்லாமல் நியூமராலஜிஸ்ட்டுக்கு வேட்டு வைக்க ஆரம்பிச்சுடீங்க போலிருக்கே? :)
பதிலளிநீக்கு:)) நன்றி வரலாற்று சுவடுகள்
நீக்குமுதல் வருகை...
பதிலளிநீக்குநன்றி இரவின் புன்னகை
நீக்குநானும் உங்கள் பக்கம்தான்..
பதிலளிநீக்குநன்றி கரண்
நீக்குமக்களின் மூடநம்பிகையில் ஒருவகை தான் இந்த பதிவின் சாரம், அருமை அய்யா! பெயர் ஒரு அடையாளமே, அவனின் உண்மையான அடையலாம் அவன் குணம் மட்டுமே!
பதிலளிநீக்குநன்றி ஆயிஷா ஃபரூக்
நீக்குAs you think You will be .This is so because that thought are the seeds for anything .Therefore the numermalogies ,astrologists are taking advantage.Once our kaviyarasu kannadasan said :VIDHUAI MATHAL VELLALAM,ANTHA VIDHAI ATHUVAANAL.by DK.
பதிலளிநீக்கு