”என்னன்னா!ஆத்துக்குள்ள நுழையறபோதே கடு கடுன்னு மூஞ்சியை வச்சிண்டி ருக்கேள்?”
”!பட்டு!ஆத்து வாசல்ல ஒரு பெரிய காளை மாடு
படுத்திண்டிருந்தது.உள்ளே நுழையவே எடம்
இல்ல..சூ சூ ன்னு விரட்டிப் பார்த்தேன்.நகரல.அப்பறம் அங்க இருந்த குச்சியால் ஒரு போடு போட்டேன்.ஓடிப்போயிடுத்து.”-கிட்டு மாமா
”அய்யய்யோ!ஏன்னா அப்படிப் பண்ணினேள்?அது நெனவு வச்சிண்டிருந்து
உங்களைப் பழி வாங்கிடப் போறது”
”போடி பைத்தியம்.யானைதான் அப்படியெல்லாம் செய்யும்.மாட்டுக்கு அவ்வளவு
அறிவெல்லாம் கிடையாது.”
“இல்லைன்னா!பேப்பர்ல போட்டிருந்தான்.ஏதோ ஒரு ஊர்ல இந்த மாதிரித்தான்
ஒருத்தர் மாட்டை அடிச்சாராம்..அது அவர் வெளியே போய்ட்டுத் திரும்பறச்சே
அவரைத் தொரத்திண்டே வந்து,ஆத்துக்குள்ளயே நுழஞ்சு முட்டிடுத்தாம். அவரை ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போகும்போது பின்னாலயே போச்சாம். அவர் செத்துப் போனப்பறம், சுடுகாட்டுக்குத் தூக்கிண்டு
போறப்போ, கூடவே போய்.எரிச்சு முடிச்சப்பறம்தான்
திரும்பித்தாம்!”
“”பட்டு,நெஜமாவா?ஏண்டி வயத்துல புளியைக்கரைக்கிறே?”
“விடுங்கோன்னா எல்லா மாடும்
ஒரே மாதிரியா இருக்கும்?எல்லாம் அவாவா தலவிதிப்படித்தான் நடக்கும்”
பட்டு!நேத்து உபன்னியாசம் போனியே ,எப்படிடீயிருந்தது?”
”ஆகா! கடைசில பொங்கல் பிரசாதம் பிரமாதம்னா”
???????
”ரகு பொண்டாட்டி பட்டுப்புடைவைல
வந்து மினுக்கினா!நீங்கதான் எனக்கு வாங்கித்தரவே மாட்டேங்கிறேள்.
”எனக்கு வர வேண்டிய பிரமோசன்
அவனுக்குப் போயிடுத்து.எனக்கு அதிர்ஷ்டமே இல்லடி”
”
ஆமாம்.நேத்து உபன்னியாசத்துல கூடச் சொன்னார்.சில பேர் ராசி
அப்படித்தான்னு!ஒரு அதிர்ஷ்டக்கட்டை மனுஷன் இருந்தானாம்.விஷ்ணு ,லட்சுமியைக் கேட்டாராம்,”நீ ஏன் அவனுக்கு உதவி பண்ண
மாட்டேங்கிறே?ன்னு.
லட்சுமி சொன்னாளாம்,பண்ணினாலும் அவனுக்குப்
போய்ச்சேராதுன்னு.
அவன்நடந்து போயிண்டே இருக்கும்போது அவன் பாதையில வைரம் ,வைடூரியம்,தங்கம் எல்லாம் ஒரு மூட்டையாக் கட்டிப் போட்டாளாம்.
போயிண்டிருந்த அவன் திடீர்னு யோசிச்சானாம்,எப்பவும்
கண்ணைத் தொறந்துண்டே நடக்கிறோம்,கொஞ்சம் கண்ணை மூடிண்டு நடக்கலா
மேன்னு.அப்படி நடந்து அந்த மூட்டையைப் பார்க்காமலே போயிட்டானாம்.
அப்படித்தான் உங்க அதிர்ஷ்டம்!”
”சரி ராத்திரிக்கு மோர்சாதம்
வச்சிருக்கேன்.சாப்பிடுங்கோ. பங்கஜத்தோட,நான் போயிட்டு வரேன்.”
”எங்கடி?”
”அதான் சொன்னேனே.நான்னு!”
வெகு சுவாரஸ்யமாக மாமி சொல்லிப்போன
பதிலளிநீக்குஇரண்டு விஷயங்களும் வெகு சுவாரஸ்யம்
மாமி நான் அவசரம் இல்லாவிட்டால்
இன்னும் இர்ண்டு ரசிக்கும்படியான்
தக்வல் கொடுத்திருப்பார் எனநினைக்கிறேன்
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
tha.ma 2
பதிலளிநீக்குஅந்தக் காளை மாடு நியூஸ் நானும் படித்தேன்! ஆச்சர்யம். இலவச டிவியில் ராமநாராயணன் படம் நிறைய பார்த்துருக்கும் போல! கொம்பேறிமூக்கன் என்ற பாம்பைப் பற்றித்தான் இப்படிக் கேள்விப் பட்டிருக்கேன்!
பதிலளிநீக்குநகை மிளிரும்
பதிலளிநீக்குசுவை மிக்க பதிவு
தொடருங்கள்
பட்டு மாமி- கிட்டு மாமா எவர்க்ரீன் ஜோடிகள் இங்கயும் நடத்தின அரட்டைக் கச்சேரி அமர்க்களம்தான்.
பதிலளிநீக்குஐயோ பாவம்.. துரதிஷ்டம்...
பதிலளிநீக்கு@ ரமணி
பதிலளிநீக்குபதிலளி பொத்தான் இயங்கவில்லை.
கருத்துக்கும்,ஓட்டுக்கும் நன்றி
@ஸ்ரீராம்
பதிலளிநீக்குஉண்மையிலேயெ ஆச்சரியமான செய்திதான்.
நன்றி.
@கோவை மு சரளா
பதிலளிநீக்குகருத்துக்கு நன்றி
@பால கணேஷ்
பதிலளிநீக்குகருத்துக்கு நன்றி
@கோவி
பதிலளிநீக்குகருத்துக்கு நன்றி
”அதான் சொன்னேனே.நான்னு!”
பதிலளிநீக்குசுவை..
பதிவர் சந்திப்பு - நேரடி ஒளிபரப்பு - அவரவர் தளத்திலேயே காண ஏற்பாடு
//அதான் சொன்னேனே.நான்னு!// ஹா ஹா ஹா முதலில் புரியவில்லை பிறகு புரிந்த்தது... கொஞ்ச நாட்களை நானில் இருகீர்கலே என்ன காரணமோ
பதிலளிநீக்குதினமும் காலையில் பட்டு மாமி கிட்டு மாமா பேசுற கேட்டுட்டே வருவேன் பதிவிலும் அவர்கள் பேசுவது போலவே படித்தேன் அருமை ஐயா.
பதிலளிநீக்குகடைசி வரியில் இருந்த சிலேடையை இரசித்தேன்.
பதிலளிநீக்குநகைச்சுவை மிக்க அருமையான பதிவு (TM 9)!
பதிலளிநீக்குசுவாரஸ்யமான உரையாடல்... ரசித்தேன் ஐயா... நன்றி... (TM 10)
பதிலளிநீக்குஎன்ன இருந்தாலும் பட்டு மாமி பட்டு மாமி தான் .
பதிலளிநீக்குகிட்டு மாமா ...... தான் ! ரசித்து சிரித்தேன்.
சிறப்பான பகிர்வு! நன்றி!
பதிலளிநீக்குஇன்று என் தளத்தில்
அஞ்சு ரூபாயில் 180 கிமீ செல்லும் ஸ்கூட்டர்
http://thalirssb.blogspot.in/2012/08/180.html
பொரியரிசி கல்யாணம் ! பாப்பா மலர்!
http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_18.html
நல்ல பகிர்வு... ரசித்தேன்..
பதிலளிநீக்கு