தொடரும் தோழர்கள்

வியாழன், ஆகஸ்ட் 23, 2012

தல,தளபதி,ஆக்சன் கிங்,கேப்டன்!


அது ஒரு ஆயுர்வேத மசாஜ் நிலையம்.

அமைதியான ,ஆள் நடமாட்டம் அதிகமில்லாத இடத்தில் இருக்கிறது.

மாலை 4 மணி இருக்கும்.

நிலையத்தின் நிறுவனர்களான கணவனும், மனைவியும் உள்ளே நுழைகின்றனர்.

அதற்காகவே காத்துக் கொண்டிருந்தது போல்,நான்கு  பேர் அவர்களைத் தொடர்ந்து உள்ளே வருகின்றனர்.

“நாங்கள் போலீஸ்.விபசார ஒழிப்புப் பிரிவு.இங்கு மசாஜ் என்ற பெயரில் விபசாரம் நடப்பதாக அறிகிறோம்.”அவர்களில் ஒருவன் சொல்கிறான்.

அவர் “அப்படியா?உங்கள் அடையாளச்சீட்டைக் காட்டுங்கள்” என்று கேட்கிறார்.

சீட்டை எடுப்பது போல் இருவர் கத்தியை எடுக்கிறார்கள்.

அந்தப் பெண்ணைக் கழுத்தைச் சுற்றி ஒருவன் பிடித்துக் கொண்டு கழுத்தில் கத்தியை வைக்கிறான்.

”மரியாதையா,கல்லாவில இருக்கிற பணத்தை எடு!நகைகளையும் கழட்டு. இல்லாட்டா குத்தி கொன்னுடுவேன்.”

அந்த ஆண் அசரவில்லை.பேசாமல் நிற்கிறான்.

தாங்கள் சொன்னதைச் செய்வோம் எனக் காட்டுவதற்காக.அந்தப் பெண்ணைப் பிடித்திருந்தவன் கத்தியால் அந்தப்பெண்ணின் கையில் கீறுகிறான்.,

ரத்தம் கொப்பளித்து வரத் தொடங்குகிறது.

தன் மனைவி காயப்பட்டதைப் பார்த்த அந்த மனிதருக்குக் கோபம் தலைக் கேறுகிறது.

கண்கள் சிவக்கின்றன!

பாய்கிறார்.

“ஒரு அடி,ஒரு குத்து,ஒரு சவட்டு-ஒரு அடி ,ஒரு குத்து ,ஒரு சவட்டு.............” எனச் சுழன்று தாக்குகிறார்.

அவர் சிறுவயதில் கண்ணூரில் கற்ற களரிப்பயற்று  கை கொடுக்கிறது. 

கத்திகள் கீழே விழுகின்றன

அதைப் பிடித்திருந்தவர்கள் அடிபட்டுக் கீழே விழுகிறார்கள்

அதைப்  பார்த்த மற்ற இருவரும் ஓட்டமெடுக்கிறார்கள்

அவர் போலீசுக்குப் போன் செய்து வரவழைத்து அந்த இருவரையும் ஒப்படைக்கிறார்.

இது தமிழ் சினிமா ஷூட்டிங் அல்ல.

அவர் திரை ஹீரோ அல்ல.

50 வயதான அவர் நிஜ வாழ்க்கையின் ஹீரோ.

இவரே தல,தளபதி, ஆக்சன் கிங்,கேப்டன்!

இது கதையல்ல நிஜம்.

(நன்றி:டைம்ஸ் ஆஃப் இந்தியா-23-08-2012)

12 கருத்துகள்:

  1. உண்மையில் நிஜ ஹீரோ அவர் தான் ஐயா. துணிவே துணை(யை) காப்பாற்றியது.

    பதிலளிநீக்கு
  2. ராஜேஷ்குமார் நாவல் படிக்கிற மாதிரி இருந்துச்சு! (TM 3)

    பதிலளிநீக்கு
  3. இனி மசாஜ் நிலையத்திற்குள் யாரும் அந்த எண்ணத்தோடு நுழைய தயங்குவார்கள். அந்த நிஜ ஹீரோவிற்கு ஒரு வாழ்த்துடன் கூடிய வணக்கம்.

    பதிலளிநீக்கு
  4. தளத்தின் புதிய தோற்றம் நன்று தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  5. உண்மையான ஹீரோக்கள் இருக்கிறார்கள்...! அய்யா... பகிர்வுக்கு நன்றி.

    "அந்தி நேர பூக்கள்" - இது காமக்கதை அல்ல, இருளில் வாழும் விலைமாதர்கள் பற்றிய கதை.
    என் சிறுகதையை படிக்க உங்களை அன்புடன் அழைக்கிறேன், உங்கள் கருத்துகளையும் பதியவும்! நன்றி

    பதிலளிநீக்கு
  6. ஆஹா....இப்படியும் ஆக்சன் ஹீரோக்கள் இருப்பது நடிகர்களுக்கு ஆபத்துதான்...அவரின் வீரத்தை பாராட்டுகிறேன்...நன்றி ஐயா பகிர்ந்ததற்கு

    பதிலளிநீக்கு
  7. அடடா இப்படியும் ஒரு ஆக்ஷனா?ஃவாழ்த்துக்கள்....!

    பதிலளிநீக்கு
  8. அட இது உண்மைச் சம்பவமா வாசிக்கும் போதும் தலைப்பைப் பார்த்தும் இது ஒரு கதையாகவோ அல்லது ஆக்சன் கிங்க்கை கலாய்ப்பதாகவோ இருக்குமென்றிருந்தேன்...
    இந்த வயதிலும் இப்படி ஒரு வீரரா...

    பதிலளிநீக்கு