ஓரிரு நாட்களுக்கு முன் ஆப்த நண்பர் ஒருவர்
என்னைக்கேட்டார்”என்ன பித்தன்? பதிவில் ஒன்றும் எழுதுவதில்லையா.?”
நான் சொன்னேன் ”உடல் நிலை சரியில்லை.
எழுதவேண்டும்.எழுதுவேன்”
அவர்”நிறைய எழுதங்கள் . அப்போதுதான்
தொடர்ந்து முதல் இடத்தில் இருக்கலாம்”
நான்” மணி,அதற்காகவென்று எல்லாம் என்னால் எழுத
முடியாது.இடம் என்பது ஒரு இடை நிகழ்வான விஷயம்.அவ்வளவே.எனக்கு
எப்போது தோன்றுகிறதோ,எப்போது முடிகிறதோ,அப்போது எழுதுவேன்.இப்போது தொடுக்கும் வேலை
வேறு.பார்க்கலாம்”
அவர்”சரி.எனக்காக ஒரு சின்ன ரசமான
பதிவு எழுதுங்களேன்”
அவருக்காக(உங்களுக்காகவும்தான்)
இந்த ரசமான பதிவு!
தேவையான பொருட்கள்:
து.பருப்பு-3 டீஸ்பூன்
தனியா- 1 ½ டீஸ்பூன்
மிளகு 1
டீஸ்பூன்
சீரகம் 1
டீஸ்பூன்
மிளகாய் வற்றல்-2
இவற்றைக் குக்கரில் வேகவிட்டு
எடுத்து நன்றாக அரைத்து விழுதாக எடுத்துக் கொள்ளுங்கள்
மஞ்சள்பொடி-1/2 டீ
பெருங்காயம் கொஞ்சம்
புளி ஒரு எலுமிச்சங்காய் அளவு
பழுத்த தக்காளிப் பழம்-1
உப்பு தேவையான அளவு.
தாளிக்க
கடுகு 1 டீ
நெய் 1டீ
சீரகம்-1/2 டீ
கருவேப்பிலை,கொத்துமல்லி கொஞ்சம்.
செய்முறை
புளியைத் தண்ணீரில் ஊறவைத்துப்
பிழிந்து சாறை எடுத்து இரண்டு கப் நீருடன் சேர்த்துக் கொள்ளவும்
தக்காளியைச் சிறு துண்டுகளாக்கி
சேர்த்துக் கொள்ளவும்.
பெருங்காயம்,மஞ்சள் பொடி ,உப்பு
சேர்த்துக் கொதிக்க விடவும்.
பச்சை வாசனை போன பின் அரைத்து வைத்த
விழுதைச் சேர்க்கவும்.
தேவையான அளவு நீர்
சேர்க்கவும்.கொதித்து நுரை வந்த பின் அடுப்பிலிருந்து இறக்கி வைத்து,நெய்யில் கடுகு
சீரகம் தாளித்துச் சேர்க்கவும்.
கருவேப்பிலை மல்லி சேர்க்கவும்.
சுவையான ரசம் தயார்.
சுவையாக இருந்தால் என்னிடம்
சொல்லுங்கள்!
இல்லையென்றால் என் பெண்ணிடம்
சொல்லுங்கள்!!(ஏனென்றால் இது அவளின் செய்முறை!)
எப்படி ரசமான பதிவு?! :)))))
ஆதி பகவனுக்கு முதலுமில்லை. முடிவுமில்லை.
பதிலளிநீக்கு!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
நீக்குநன்றி சிவா
ரசமான பதிவு?! :))))) !!!!!!!!!!
பதிலளிநீக்கு:)))))))))))))
நீக்குநன்றி.
சர்தான் ஒரு முடிவோடுதான் கிளம்பிருக்கீங்க போல் ரசமான பதிவுடன் :D
பதிலளிநீக்கு:))
நீக்குநன்றி
உண்மையில் ரசமான சுவையான கமகம பதிவு தான் CP sir !
பதிலளிநீக்கு[ எந்திர உயிர்ப்பு !
http://sravanitamilkavithaigal.blogspot.in/2012/07/blog-post.html ]
நன்றி
நீக்கு#இடம் என்பது ஒரு இடை நிகழ்வான விஷயம்.அவ்வளவே#
பதிலளிநீக்குவணக்கம் அய்யா...நாலு வரியாக இருந்தாலும் சும்மா நச்சுன்னு இருக்கு..
நன்றி
நீக்குதிரு VGK.(வை.கோபாலகிருஷ்ணன்) அவர்களிடமிருந்து தாங்கள்
பதிலளிநீக்கு“SUNSHINE BLOGGER AWARD “ என்ற விருதினை பெற்றமைக்கு வாழ்த்துக்கள்!
நன்றி
நீக்குரசமான பகிர்வுதான். நன்று.
பதிலளிநீக்குநன்றி
நீக்குஆஹா ரசமான பதிவுக்கு இப்படி ஒரு விளக்கப் பதிவா
பதிலளிநீக்குநல்லா இருக்குது ஐயா.........
நன்றி
நீக்குரசமான பதிவு????? நல்லா இருக்கு. அப்படியே நம்ம தளத்துக்கும் கொஞ்சம் வாங்களேன்?
பதிலளிநீக்குhttp://newsigaram.blogspot.com/2012/07/01.html
நன்றி
நீக்குமிகச்சரியான விளக்கம் ஐயா.
பதிலளிநீக்குநன்றி
நீக்குஅடடா..
பதிலளிநீக்குநன்றி
நீக்குஎளிய செய்முறை... ரசமான பதிவு.... கம...கம...
பதிலளிநீக்குதங்களின் மகளுக்கு வாழ்த்துக்கள்...
நன்றி...
(த.ம. 7)
நன்றி
நீக்குஉண்மையிலேயே ரசமான பதிவுதான்... நல்லா இருக்கு.
பதிலளிநீக்குநன்றி
நீக்குரசமான பதிவு கொஞ்சம் காரம் அதிகம் சார்
பதிலளிநீக்குநன்றி
நீக்குஅடுத்து "பாதரசமான" ஒரு பதிவு போடவும் :-))
பதிலளிநீக்குஹி ..ஹி பாதத்தில் ரசம் ஊத்திக்கொண்டு படம் போட்டு பதிவு போட சொல்லியாகொடுக்க வேண்டும்!!!
ஆலோசனைக்கு நன்றி.எனவே நீங்களின்றி அப்பதிவு முழுமையடையாது.உங்கள் காலில் ரசம் ஊத்திக் கொண்டு ஒரு படம் எடுத்து அனுப்புங்கள்;நான் பதிவு போடுகிறேன்.ஹிட்ஸ் ஆளுக்குப் பாதி.எப்புடி?!
நீக்குநன்றி.
தல, உங்க குசும்பு இன்னும் மாறவே இல்லை ஹா ஹா ஹா ஹா....!
பதிலளிநீக்குஅப்பாவும் மகளுமா கலக்குறீங்க ம்ம்ம்ம் வாழ்த்துகள்...!
உடம்பை நன்றாக கவனித்து கொல்லுங்க தல....
நன்றி மனோ.
நீக்குரசம் நன்று..
பதிலளிநீக்குநன்றி குணசீலன்
நீக்கு.இடம் என்பது ஒரு இடை நிகழ்வான விஷயம்.அவ்வளவே.
பதிலளிநீக்குஅழகாகச் சொன்னீர்கள் அன்பரே..
கிரீடங்கள் இடமாறக்கூடியவை...
ஆம்!
நீக்குநன்றி முனைவரே
ஓ...ரசமான பதிவுன்னா இதுதானா...! இந்த அறியாப்புள்ளைக்கு அறிய வைத்ததுக்கு டேங்ஸ்!
பதிலளிநீக்குபச்சப் புள்ளையா இருக்கீங்களே!
நீக்குநன்றி சுரேஸ்குமார்
நிஜமாகவே ரசமான பதிவுதான்... :)
பதிலளிநீக்குத.ம. 10.
நன்றி வெங்கட்
நீக்குVarugaikku nandri. Thodarchiyaana varugaiyai edhir paarkkiren.
பதிலளிநீக்குவாழ்த்துகள்
நீக்குரச பதிவா - அறிந்து கொண்டேன் மிக்க மகிழ்ச்சி நன்னி
பதிலளிநீக்குநன்றி மனசாட்சி
நீக்குநன்றி சங்கரலிங்கம்
பதிலளிநீக்கு