தொடரும் தோழர்கள்

வியாழன், டிசம்பர் 24, 2015

நையப்புடை!


நையப்புடை

இது பாரதி தன் புதிய ஆத்திசூடியில் சொல்லியிருப்பது.

நையப்புடை என்றால் நன்றாக அடி என்று பொருள்படும்.

இது அவன் ரௌத்திரம் பழகு என்று சொன்னதோடு இயைந்துள்ளது.

மேலும் பாப்பாவுக்கு மோதி மிதித்து விடு என்றும் சொல்கிறான்.எனவே இது பாதகர்களை நையப்புடை என்றே கொள்ளப்படுகிறது.

இந்தத் தலைப்பில் எழுத வேண்டுமென்று எண்ணம் வந்ததும்(காரணம் உங்களுக்கே தெரியும்!)  ஒரு  கருத்து தோன்றியது

புடைத்தல் என்றால் வேறு பொருளும் உண்டல்லவா?அரிசி புடைத்தல் என்கிறோம்; அதாவது அரிசியிலிருக்கும் உமி,தூசி முதலியவற்றை நீக்குதல்.

அதை இங்கு பொருத்திப் பார்த்தால்,எல்லாவற்றையும் நன்கு புடைத்து (அலசி ஆராய்ந்து) நல்லவற்றை எடுத்துக் கொண்டு அல்லவற்றை நீக்குதல் என்றும் கொள்ளலாம் அல்லவா?

இது எப்படி இருக்கு?!

முறத்தால்தானியங்களைப் புடைப்பது மட்டுமன்றி புலியையும் கூடப் புடைக்க முடியும்!

பண்டைத் தமிழ்ப்பெண் முறத்தால் புலியை அடித்துத் துரத்தினாளாம்




நண்பர் பார்த்தசாரதி இந்தப் படங்களை வாட்ஸப்பில் அனுப்பினார்

ஒன்றில் முறம் ;மற்றதில் சுளகு

இரண்டுக்கும் பயன்பாட்டில் ஏதாவது வேறுபாடு உண்டா?
.

டிஸ்கி .இந்த ஆளுக்கு இதே வேலையாப் போச்சு ,சினிமாத் தலைப்பில் எழுதி ஏமாற்றுவது;நாங்கள் ஏமாறவில்லை என்று சொல்பவர்களுக்கு, எனக்குத் தெரியும் நீங்கள் ஏமாற மாட்டீர்கள் என்று!

13 கருத்துகள்:


  1. நையப்புடை என்ற சொற்றொடர் தானியங்களைப் புடைத்தலுக்கும் பொருந்துமே என நினைத்துக்கொண்டே படித்தேன். என்ன ஆச்சரியம்! உங்களுக்கும் எனக்கும் ஒரே எண்ண அலை இருக்கிறது!

    உண்மைதான். இந்த தடைவை தலைப்பைப் பார்த்து நான் ஏமாறவில்லை!

    பதிலளிநீக்கு
  2. குறுக்கு சிந்தனை நன்றாகத்தான் இருக்கின்றது ஐயா

    பதிலளிநீக்கு
  3. ஏதேதோ சொல்லி வாசகர்களை நையப்புடைத்து விட்டீர்கள்.

    சிறிய பதிவாகப் பெரிய எழுத்துக்களில் கொடுத்து, மிகப்பெரிய பெரிய விஷயங்களை அழகாகச் சொல்லி விடுகிறீர்கள்.

    படங்களும் அழகாகப் பொருத்தமாக உள்ளன.

    பாராட்டுகள் + நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  4. நான் இப்போதெல்லாம் கட்டுரையை படித்துவிட்டு பிறகு தலைப்பை பொருத்தி பார்க்க ஆரம்பித்துவிட்டேன்

    பதிலளிநீக்கு
  5. நை நைனு பேசற அப்பு (அப்பா) வோட உடைன்னு நினைச்சுட்டேன்! நை அப்பு உடை! ஹிஹிஹிஹி...

    பதிலளிநீக்கு
  6. ஐயா வணக்கம் வாசகர்களையும் நையப் புடைக்கப் போறீங்க போல அவ்வ்வவ்வ் அருமை தொடர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  7. நையப்புடை! நல்லாவே புடைத்துவிட்டீர்க்ள் செபி சார்..//இந்த ஆளுக்கு இதே வேலையாப் போச்சு ,சினிமாத் தலைப்பில் எழுதி ஏமாற்றுவது// அட இப்படியொரு சினிமா வந்துதா என்ன? அதனால நாங்க ஏமாறல...

    பதிலளிநீக்கு
  8. பாரதியை படி திமிரும் தமிழின் பணிவும் தெரியும்

    பதிலளிநீக்கு
  9. மாஸ்டர் படத்துல "நையப்புடைத்த!என்ற சொல் விஜய் பயன்படுத்திய சொல் இது தான்!

    பதிலளிநீக்கு